சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Dustin Hoffman’s Quartet: Aging and the artist

முதுமையும் கலைஞனும்: டஸ்டின் ஹாஃவ்மானின் Quartet

By Joanne Laurier
1 February 2013

use this version to print | Send feedback

ரொனால்ட் ஹார்வூட்டின் நாடகத்தைத் தழுவிய திரைக்கதையில், டஸ்டின் ஹாஃவ்மான் இயக்கியது


Quartet

சிறந்த படைப்பான The Pianist (2002) முதல் துயரகரமான Australia (2008) வரையிலான திரைப்படங்களின் கதாசிரியரான ரொனால்ட் ஹார்வுட்டின் (Ronald Harwood) திரைக்கதையில், டஸ்டின் ஹாஃவ்மான் முதலாவதாக இயக்கியிருக்கும் திரைப்படமான Quartet இல் வயோதிபம் உறுதியுள்ளவர்களுக்கானது அல்ல என்று ஒரு கதாபாத்திரம் கையாளப்படுகின்றது. இது பிரிட்டனின் நாட்டுப்புறப் பகுதியின் நடுவே, ஆடம்பரமான Beecham House இல் குடியிருக்கும் ஓய்வுபெற்ற நடனநாடக நட்சத்திரங்கள், பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் மனதிற்கினிய ஆனால் பலவீனமான நகைச்சுவை நாடகமாகவுள்ளது.

கதையில் அதிக முக்கியத்துவமின்றி, திரையில் தங்களது கலையினை திரையில் வெளிப்படுத்துகிற யதார்த்தமான-இசைக்கலைஞர்களின் படைப்பான, அழகான இசையினை இத்திரைப்படம் அதிகம் சார்ந்துள்ளது. இத்திரைப்படத்தின் நான்கு பிரதான கதாபாத்திரங்களின் நிறைவான நடிப்பிற்கு இசை ஒரு தேர்ந்த கட்டமைப்பினை உண்டாக்குகிறது.

ஒரு முன்னாள் மிகத்திறமையான நடனநாடக இசைப்பாடகரான ரெகி பேகெட் (Tom Courtenay) தன் சக நடனநாடக இசைக் கலைஞர்களான வில்ஃவ் பொன்ட் (Billy Connolly) மற்றும் சிசி ராப்சன் (Pauline Collins) ஆகியோருடன் வசதியான மற்றும் கலாச்சாரரீதியில் மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார். நடனநாடக பாடகராக இருந்ததிலிருந்து தன்னம்பிக்கையோடு வயது முதிர்ந்தவராக மாறியிருப்பதாக அவர் திருப்தியுடன் விவரிக்கிறார்.

Beecham House இற்கு பேருந்தில் வந்திருக்கும் இளைஞர்களுக்கு ரெகி வாராந்தர விரிவுரைகள் வழங்குகிறார். செல்வந்தர்கள் அதனை தங்களுக்கென எடுத்துக் கொள்ளும் வரையில், நடனநாடகம்   சாதாரண மக்களுக்கு உரியதாக இருந்தது என்று மூத்த கலைஞர் ஒருவர் விளக்குவதை அங்கிருக்கும் ராப் மற்றும் ஹிப் ஹாப் இசையை ரசிப்போர் தீவிர கவனத்துடன் (அனைவரும்கூட) கேட்கின்றனர்.

முன்பு ரெகியை திருமணம் செய்து கொண்டு.... பின் மனமுறிவு ஏற்பட்டிருந்த.... புகழ்பெற்ற முன்னாள் நடனநாடக கலைஞரான ஜீன் ஹோர்டான் (Maggie Smith) அங்கு வரும் வரையில், Beecham House இல் மூவருக்கும் தங்களது வாழ்க்கை ஒரு செழிப்பான தருணத்திலிருந்து இன்னொன்றுக்கு என நகர்ந்து கொண்டிருக்கிறது.

நெருக்கடிக்கு பின்னர், நம்பும்படி மிக சுருக்கமாக, ரெகியும் ஜீனும் தங்களது பல வருட முரண்பாட்டில் முடிவுக்கு வருகின்றனர். ஆயினும் விரைவில், ஜீன் சிறந்த பாடகி என்ற ஒரு மனப்போக்கில் சிக்கியிருப்பதாகத் தெரிவதுடன், Beecham House இன் வருடாந்தர நிதிதிரட்டும் நிகழ்ச்சியில், வேர்டியின் Rigoletto விலிருந்து நான்காம் தொகுதியின் மூன்றாவது கட்டத்தை (“Bella Figlia dell’amore”)  நடிக்க மறுக்கும்போது அவள் மற்றொரு புயலை கிளப்புகிறாள். ஜீன், ரெகி, வில்ஃப் மற்றும் சிசி போன்ற பிரபலங்களின் படைப்புகளின் ஒரு பகுதியின் இசைப்பதிவு சமீபத்தில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் பிரச்சினை விரைவாக தீர்க்கப்படுவதோடு, இத்திரைப்படம் எதிர்பார்க்கும்படியான சம்பவங்களோடு கிளர்ச்சியுடன் முடிகிறது. ஒப்பிடத்தக்கவாறு Quartet  ஒரு மகிழ்ச்சியான திரைப்படமாகவும், அதே நேரம் தங்களது தொழில்வாழ்க்கையில் உயர்ந்த சிகரங்களை அடைந்து மீண்டும் பாதாளத்தில் தள்ளப்படுகின்ற கலைஞர்களின் விதியை அக்கறையுடன் எதிர்க்கிறது. இது சிக்கலான விஷயத்தைப் பற்றிய ஒரு லேசான நகைச்சுவை. முதியோர் பற்றிய தீவிர திரைப்படங்களை வர்த்தக வெற்றி நிலைகளுடன் ஒப்பிடும்பொழுது, இத்திரைப்படத்தின் நேர்மை நிதித் தோல்விகளைத் தவிர்க்கும் ஒரு பகுதி முயற்சியாக இருக்கலாம்.

மிட்செல் கேம்பன் சொல்வது (ஒரு நிமிஷம், என்னிடம் ஒரு சிறந்த கருத்து உள்ளதுஎன்றதும் உடனே, “ஓ, நான் அதை மறந்துவிட்டேன்!”) மற்றும் குறிப்பாக திறம் வாய்ந்த ஸ்காட்டிஷ் நகைச்சுவை / நடிகரான பில்லி கானல்லி (நான் உங்களை கார்மெனில் பார்த்திருக்கிறேன். அதை என்னால் மறக்க முடியாது... ஆனால், மறக்க முயற்சிக்கிறேன்) போன்ற நகைச்சுவை அம்சங்கள் இல்லாதிருந்திருந்தால், இத்திரைப்படம் ஜீரணிக்க கடினமானதாக இருந்திருக்கும். மேலும் இதில் வயோதிபம் என்பது “சுடுகாட்டில் சிறப்பு விருந்தினராக இருப்பதற்கு ஒரே ஒரு மாற்று வழி என்று குற்றம்கூறுவோருக்கும் ஒரு நகைச்சுவையான நினைவூட்டலும் இருக்கிறது. பின்வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு தருணத்திலும் இடங்களிலும் இசைப்பதில் மாபெரும் மகிழ்ச்சியடைகின்ற இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை உள்ளடக்கிய வழக்கத்திற்கு மாறான காட்சிகள் Quartet திரைப்படத்தின் வலுவான தருணங்கள். இத்திரைப்படத்தின் இறுதியில் பெயர் ஓடும் பொழுது, இக்கலைஞர்கள் பற்றிய சிறு வாழ்க்கைக் குறிப்புகள் காட்டப்படுகின்றது, அவர்களுள் பிரபல பாடகியான Gwyneth Jones உள்ளார்.

தங்களது உடல் திறம் குன்ற ஆரம்பிக்கும்போது, கலைஞர்களை தொற்றும் மனப் பிரச்சினைகளான, தன் கதையினை விவரிப்பதில் ஹாஃப்மேன் வெற்றி பெறுகிறார் என்பது, முக்கியமான ஒன்று. திரைப்படத்தின் தயாரிப்பு குறிப்புகளில், ஏறக்குறைய 75 வயதான இயக்குனரும் / நடிகருமான “உடலுக்கு வயதாகும்போது, நீங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகிறீர்கள், ஆனால் நமது ஆத்மா விரிவடையும் என்று நான் எப்பொழுதும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், “‘third act’ இல் வழங்குவதற்கு இன்னும் நிறைய வைத்திருக்கும் கலைஞர்களைப் பற்றியது Quartet திரைப்படம் என்று ஹாஃப்மேன் தெரிவிக்கிறார்... நீங்கள் இறக்கும் வரையில் இறக்காதீர்கள். கடைசி நிமிடம் வரை ஆர்வத்துடன் இருங்கள். நான் அது போன்றுதான் இருப்பேன் என்று நினைக்க விரும்புகிறேன். ஆர்வமுடன் இருங்கள்; அதற்குள் இருங்கள். அவை உங்களுக்கு உணவளிக்க விடாதீர்கள்; உங்களுக்கு நீங்களே உணவளித்துக் கொள்ளுங்கள். உங்களது கீழாடைகளுக்குள் எட்டிப் பார்க்காதீர்கள்என்று கானல்லி இத்திரைப்படத்திற்கான செய்தியினை சுருங்கச் சொல்கிறார். மேடை அல்லது காமெராவின் முன்பு இனியும் நிற்க முடியாத நிலையிலுள்ளவர்கள் கொண்டுள்ள அறிவின் தீவிர முக்கியத்துவம் மற்றும் ஆழத்தை Quartet திரைப்படம் தொடுகிறது. பெரிதும் தேவையற்ற விவகாரங்களுக்குள் துயரத்தின் அம்சத்தினை கொண்டுசெல்லும் காட்சிகளில் இத்திரைப்படத்தின் சிறப்பான முடிவு ஜெயிக்கிறது.

வயோதிபம் குறித்து சமீபத்தில் நிறைய திரைப்படங்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மைக்கேல் ஹானகேயின் Amour (2012) திரைப்படம் 8081 வயதிலிருக்கும் இசை ஆசிரியர்களை மங்கலாக வெளிப்படுத்தும் வேளையில், மிகவும் வரவேற்கப்பட்ட The Best Exotic Marigold Hotel (2011) திரைப்படம், இந்தியாவில் புதுப்பிக்கபட்டிருப்பதாக கருதிய ஒரு உணவகத்தினை எடுத்துக் கொள்கிற ஓய்வு பெற்ற பிரிட்டிஷார் குழுவைப் பற்றியது. மசாசுசெட் செவிலியர் இல்லத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட, உலகெங்கும் பயணிக்கிற ஒரு இசைக் குழுவினைப் பற்றி 2007ல் எடுக்கப்பட்ட முக்கிய ஆவணப்படமான Young@Heart. மற்றும் சிடுசிடுப்பான ஒய்வுபெற்றவரான டெரென்ஸ் ஸ்டேம்ப் மற்றும் அவரது மனைவியாக வனேசா ரெட்கிரேவ் நடிப்பில் வரவிருக்கும் Unfinished Song.

இத்திரைபப்டங்களின் பெயர்களை கவனிக்கும்பொழுது, 1960 களில் பிரபலமாக இருந்த கலைஞர்களின் தலைமுறை உடலியல்ரீதியாக மற்றும் சமுதாய-கலாச்சார அடிப்படையில் நெருக்கடியான கட்டத்தை அடைந்திருப்பது தெளிவாகிறது. மூத்த கலைஞர்கள், குறிப்பிட்ட வயதினை அடைகின்றபோது, மற்ற மனிதர்களைப் போலவே அவனோ அல்லது அவளோ தமக்கு ஏற்றமாதிரி மிகவும் முற்போக்கான மற்றும் குறிக்கோள் சார்ந்த பாணியில் அணுகுவது மேற்சொன்னவற்றில் வாழ்க்கையில் மறுக்க முடியாத உண்மை. அவர்களை பார்க்கும்போது, சமுதாய-கலை அம்சம் சில விஷயங்கள் முன்னணியில் தெரிகிறது.

முதலாவதாக, இந்த தலைமுறை நடிகர்கள், குறைந்தபட்சம் இப்பொழுதும் நடிப்பவர்கள். உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். உதாரணமாக, 1930 மற்றும் 1940களின் ஹாலிவுட் நட்சத்திரங்களான Humphrey Bogart (57 வயதில் இறந்தார்), Clark Gable (59 வயதில் இறந்தார்), Gary Cooper (60 வயதில் இறந்தார்) ஆகியோருடன் இந்த சூழல் முரண்படலாம். Cary Grant 82 வயது வரை வாழ்ந்தார், ஆனால் இருபதாண்டுகளுக்கு முன்பாகவே திரைப்பட உருவாக்கத்திலிருந்து ஓய்வு பெற்றார். தான் இறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களிலிருந்து ஒதுங்கி, 86 வயதில் இறந்தவர் James Cagney. James Stewart, மற்றும் சிலர் விதிவிலக்கு, 70 வயதாகும் வரை முக்கிய கதாப்பாத்திரங்களாக நடிப்பதைத் (குறைந்தபட்சம் எண்ணிக்கை அளவிலாவது) தொடர்ந்தார்கள். நடிகைகள், நீண்ட காலம் உயிர் வாழ்ந்தாலும், வினோத விகார வேடங்களை தரித்த (Joan Crawford, Bette Davis) போன்றவர்களைத் தவிர்த்து  மற்றவர்கள் குறுகியகாலமே நடித்தனர்.

மற்றும் வயதான Robert Duvall இன்னும் பலரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தலைமுறை தாங்கள் குப்பையில் தூக்கியெறியப்படுவதை பொருத்தமாகவே எதிர்க்கிறார்கள். இதுபோன்ற நடிகர்கள் தமது மரியாதைக்காக, வயதான கலைஞர்களின் மதிப்புதெரியாத மற்றும் பொதுவாகவே அவர்களை மதிக்காத செயற்கைத்தனமாக இளைஞர்களை வசீகரிக்கும் கலாச்சாரத்தை  நிராகரிக்கின்றனர்.

இது பெருமளவில் பொதுவாக, தங்களது தொழிலில் ஆரம்பத்தில் இருப்பவர்கள் அல்லது தங்களது தொழிலில் மிக முக்கிய நிலையில் இருப்பவர்கள் கலையில் நவீனமாகவும் சமுதாயரீதியில் தீவிர-தாக்கமுடையதாகவும் இருந்த மேடை அல்லது திரைப்படத்தால் கவரப்பட்டவர்களின் ஒரு குழுவாகும். உதாரணத்திற்கு, ஹாஃவ்மான் குறிப்பாக The Graduate (1967) மற்றும் Midnight Cowboy (1969) மூலமாக, கோர்ட்டினி -The Loneliness of the Long Distance Runner (1962) மற்றும் Billy Liar (1963) மூலமாக, ஸ்மித்- The Prime of Miss Jean Brodie (1969) மூலமாக, ரெட்கிரேவ் -Morgan! (1966) மற்றும் Blow-Up (1966) மூலமாக, நிகோல்சன்- Easy Rider மற்றும் Five Easy Pieces (இரண்டும் 1970-ல் வந்தவை) மூலமாக, கிரிஸ்டி -Billy Liar and Darling (1965) மூலமாக, ஸ்டேம்ப் -Billy Budd (1962) மற்றும் Far From the Madding Crowd (1967) மூலமாக, ஃபாக்ஸ்- The Servant (1963) மற்றும் King Rat (1965) மூலமாக மற்றும் ஃபாண்டா- They Shoot Horses, Don’t They? (1969) மற்றும் Klute (1971) மூலமாக அடையாளம் காணப்படுகின்றனர். 

இத்திரைப்படங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அரசியல்ரீதியில் கொந்தளிப்பான காலகட்டத்துடன் சம்பந்தப்படுவதோடு, பல வழிகளில், வறுமை மற்றும் போருக்கெதிராக, சமூக உரிமைகள் போன்ற பலவற்றுக்காக பரந்த சமுதாய இயக்கங்களின் வெளிப்பாடாக அல்லது கலைப்பிரிவாக செயல்படுத்தப்பட்டன. 

தொடரும் அரை நூற்றாண்டில், இக்கலைஞர்கள் பார்த்தது மற்றும் அதிலிருந்து புரிந்து கொள்வது என்ன? அவர்கள் சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சாத்தியக்கூறுகளையும், முக்கியமாக வேலை மற்றும் வாய்ப்புகள் குறைந்ததன் விளைவாக, கலாச்சார சிதைவையும் கண்டிருக்கிறார்கள். அவர்கள் பெருமளவு எதிர்பார்ப்புமின்றி 1960 மற்றும் 1970களில் தங்களின் நிலையான பதிவுகளை ஏற்படுத்தினர். ஏமாற்றங்கள், குழப்பங்கள் மற்றும் மனவுளைச்சலுக்கு, மற்றவர்களுடன், மிக மகிழ்ச்சியான நெகிழ்வான விஷயங்களுடன், ஹாஃவ்மான் மற்றும் அவரைப் போன்ற முதிய கலைஞர்களின் கவலை உண்மையில் உணரப்பட வேண்டுமென்ற செய்தியை Quartet திரைப்படம் நியாயப்படுத்தவில்லை. பல நேரங்களில் இது அவர்களிடமிருந்து விலக்கப்பட்டது போலவும், ஒரு இயந்திரத்தனமான கட்டமைப்புக்குள் இருப்பதுபோலவும் பேசுகிறது. இது மகிழ்ச்சி மற்றும் துயரமான குணாதிசயங்களை சற்று மிகைப்படுத்தி காட்டலாமே தவிர,  இத்திரைப்படம் உண்மையில் எதையும் எதிர்கொள்ளவில்லை, மாறாக, இவ்வாறு எதிர்கொள்ளவேண்டியதன் பாதி தேவைகளையும், பாதி தெரிந்தவைகளையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது.