சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

Mass protests erupt in Bangladesh over factory collapse

வங்காள தேசத்தில் தொழிற்சாலை உடைவு குறித்து பாரிய எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன

By Patrick OConnor 
26 April 2013

use this version to print | Send feedback

தலைநகர் டாக்காவிற்கு அருகே ஒரு ஆடைத் தொழிற்சாலை உடைவு குறித்து வங்காளதேசத்தில் பாரிய எதிரப்புக்கள் வெடித்துள்ளன. இவ்வுடைவு இந்த வறிய நாட்டின் ஒருதொடர் தொழில்துறை பேரழிவுகளில் சமீபத்தியது ஆகும்.

ஆர்ப்பாட்டம் செய்த பல தொழிலாளர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி குறைந்தப்பட்சம் மூன்று தொழில்துறைப் புறநகரங்களில் நெடுஞ்சாலைகளை தடுப்பிற்கு உட்படுத்தினர். உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் நிர்வாகம் உற்பத்தியை நிறுத்த மறுத்து விட்ட பல ஆலைகளை தொழிலாளர்கள் தாக்கினர் என்றும் கூறினார்.

நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்புக்கள் வெடித்தன. பிரித்தானிய கார்டியன் பத்திரிகை  பல ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் தலைநகருக்கு 20 மைல்கள் தொலைவில் உள்ள சவார் தொழில்துறைப் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக  கூறியுள்ளது.

கிட்டத்தட்ட1,500 தொழிலாளர்கள் பங்களாதேச ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (BGMEA)  தலைமையகத்திற்கு அணிவகுத்துச் சென்று உடைந்த ஆலைகளின் முதலாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கோரினர். டாக்காப் பொலிசின் துணை ஆணையாளர் சில தொழிலாளர்கள் பொலிசாரால்துரத்தப்படுமுன் சன்னல்களையும் வாகனங்களையும் உடைத்தனர் என்று கூறினார்.

Huffington Post   உடைந்த கட்டிடத்திலுருந்து 200 யார் தூரத்தில் உணர்வு மிக்க நினைவுப் பிரார்த்தனை கூட்டத்தை தடியடியால் கலைத்ததில்” 25 எதிர்ப்புத் தெரிவித்த தொழிலாளர்கள் காயமுற்றனர் என்று தகவல் கொடுத்துள்ளது.

தொடர்ச்சியாக பதவிக்குவந்த பங்களாதேச அரசாங்கங்கள் ஏற்கனவே வன்முறையைப் பயன்படுத்தி தங்கள் நலன்களைக் பாதுகாக்க முற்படும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் எந்த நடவடிக்கையையும் நசுக்கியுள்ளன. டிசம்பர் 2010ல் தற்பொழுதைய நிர்வாகம் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசாரை பயன்படுத்தி நான்கு நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக் கொன்றது.

உடைவில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை 261 என உயர்ந்துள்ளது. தப்பிப் பிழைத்தவர்களில் பலர் உறுப்புக்கள் இழப்பு உட்பட கொடூரமான காயமடைந்துள்ளனர். சிலர் தொழிலாளர்களை கட்டிடம் சரிந்தபோது கேடயம் போல் இருந்த பெரிய தைக்கும் இயந்திரங்களால் ஓரளவு பாதுகாக்கப்பட்டனர். அவை காற்றுநிறைந்த இடங்களையும தோற்றுவித்ததால், இன்னும் அதிக தொழிலாளிகள் இடிபாடுகளில் இருந்து இழுக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டனர்.

காணாமற்போய்விட்ட குழந்தைகளைப் பற்றிய தகவல்களும் வந்துள்ளன. அவர்கள் ஏழு மாடிக்கட்டிட வளாகத்தின் உயர் மாடியிலுள்ள பராமரிப்பு நிலையத்தில் சரிந்தபோது இருந்தனர். இக்கட்டமைப்பு ஐந்து ஆடை தொழிற்சாலைகள் மற்றும் ஒரு வங்கி, 300 கடைகளைக் கொண்டிருந்தது.

ஆனால் இன்னும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன. ஆனால், 900 ஆடைத் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை  என்ற நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,000 கடக்கும் என்ற அச்சங்கள் உள்ளன.

உடைந்த தொழிற்சாலை வளாகத்தின் சொந்தக்காரரான முகம்மத் சோஹெல் ரானா, ஆளும் அவாமி லீக்குடன் நெருக்மான தொடர்புகளை உடையவர் ஆவார். பங்களாதேசச் செய்தி ஊடகம் ரானா அவாமி லீக்கின் உள்ளூர் இளைஞர் பிரிவான ஜுபோ லீக்கின் Jubo League மூத்த தலைவர் என்று தெரிவிக்கின்றது.

பிரதம மந்திரி ஷேக் ஹசினா நேற்று தேசியப் பாராளுமன்றத்தில் இந்த அறிக்கைகளை மறுத்து, தான் நேரடியாக ஜுபோ லிக்கின் அங்கத்தவர்கள் பட்டியலை ஆய்வு செய்ததாகவும், ரானாவின் பெயர் அதில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

 பெரும் சோக நிகழ்விற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் தப்ப முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தண்டனை இன்றி தப்ப முடியாதுஎன்றும் அவர் மேலும் கூறினார்.

உண்மையில், முழு பங்களாதேச அரசியல் ஆளும்பிரிவும் இந்தத் தொழில்துறை பேரழிவிற்கு வழிவகுத்த சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டதற்கு உடந்தை ஆகும். ஏராளமான அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் ஆடைத்தொழிற்சாலைகளைக் கட்டுதல் மற்றும் உரிமையாளர்களாக இருத்தல் என்னும் முறையில் தங்களைச் செல்வக் கொழிப்பு உடையவர்களாக ஆக்கிக் கொண்டுள்ளனர். அத்துறை இப்பொழுது நாட்டின் வருடாந்த ஏற்றுமதி நிதியில் 80% பங்கான $24 பில்லியனை  கொண்டுள்ளது.

நாட்டின் ஆளும் கட்சி சர்வதேச ஆடைகள் பெருநிறுவனங்களுக்கு ஊழல் மிகுந்த ஒப்பந்தக்காரர்களாகச் செயல்படுகிறது. அவற்றின் இடைவிடா அதிக இலாபங்களுக்கான உந்துதல்தான் உள்ளூர் ஆலைச் சொந்தக்காரர்களுக்கு செலவுக் குறைப்புக்கள் செய்யவும், பாதுகாப்புக்களைப் புறக்கணிக்கவும் ஊக்கம் கொடுக்கிறது. புதனன்று நடந்த கட்டிட உடைவு பங்களாதேசத்தில் மிக மோசமாக ஆலை நெருப்பு விபத்தான டாக்காவில் ராஸ்ரின் பாஷனில் நடந்து ஐந்து மாதங்களுக்குள் ஏற்பட்டுள்ளது. அதில் 112 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர்.

பங்களாதேசம் சீனாவிற்கு அடுத்த்தாக உலகின் இரண்டாம் மிகப் பெரிய ஆடைகள் உற்பத்தி நாடாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்ளுக்கும் அவர்களுடைய உள்ளூர் துணை நிறுவனங்கள், விநியோகஸ்தர்களுக்கும்  தடையற்ற சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகமாக பெண்கள் உள்ளடங்கலான கிட்டத்தட்ட 4 மில்லியன் ஆடைத் துறைத் தொழிலாளர்கள் இப்பொழுது மிக அதிக சுரண்டப்படும் உலகின் தொழிலாளர் வர்க்கப் பிரிவினராக உள்ளனர். இவர்கள் வறுமைத்தர ஊதியங்கள் மற்றும் கொடூரமான பணி நிலைமைகளை எதிர்கொள்ளுகின்றனர். பல தொழிலாளர்கள் நாள் ஒன்றிற்கு 15மணி நேர உழைப்பிற்குப் மாதம் ஒன்றிற்கு அமெரிக்க டொலர் 37ஐத்தான் பெறுகின்றனர்.

பாதுகாப்புக் ஒழுங்குமுறைகள் கிட்டத்தட்ட இல்லை எனலாம், தொழில்துறைச் சட்டங்கள் வாடிக்கையாக மீறப்படுகின்றன. பங்களா தேசத்தின் தொழிலாளர் அமைச்சரகம் 100,000 இற்கு மேல் டாக்காவில் இருக்கும் ஆலைகளின் நிலைமைகளை கண்காணிக்க 18 அதிகாரிகளைத்தான் நியமித்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

உடைந்த தொழிற்சாலையைச் சுரண்டிய சர்வதேச ஆடைகள் நிறுவனங்கள் இப்பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிவு காட்டும் போலித்தனத்தில் ஈடுபட்டு தமது பொறுப்பை மறுக்கின்றன.

பல  அரசு சார்பற்ற அமைப்புக்கள் மீண்டும் பெரிய சில்லறை விற்பனையாளர்களைக் கண்டித்துள்ளன பிரித்தானியத் தளமுடைய  வறுமை எதிர்ப்புக் குழுவான War on Want இன் தலைவரான ஜோன் கில்லாரி பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டங்கள் என்று கூறுபவடுபவற்றை கண்டித்துள்ளார்; அவர்கள் பரிசோதகர்கள் வரும்போது, “தொழிலாளர்கள் என்ன கூறவேண்டும் என்ற பயிற்சி கொடுக்கப்படுகின்றனர், ஆலைகள் பற்றிய சாதகமான கணக்குகளைக் காட்டுகின்றன, சரியான கணக்குகளை மறைக்கின்றன.” என்றார்.

உடைந்த வளாகத்தில் குறைந்தப்பட்சம் இரண்டு ஆலைகளாவது சமீபத்திய BSCI என்னும் வணிக சமூக உடன்பாட்டு அமைப்பின் ஒரு கண்காணிப்பு அறிக்கையில் பிரச்சனையற்றதாக அறிவிக்கப்ப்பட்டன  என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறுகிறது. இந்த அமைப்பு Adidas, Esprit, Hugo Boss உள்ளடங்கலான கிட்டத்தட்ட 1,000 ஐரோப்பியச் சில்லறை விற்பனையாளர்களை கொண்ட ஒரு ஒரு தொழில்துறை அமைப்பாகும்.

கண்காணிப்பாளர்கள் தாங்கள் ஒன்றும்கட்டிடப் பொறியாளர்கள்அல்ல என்றும்உள்ளூர் அதிகாரிகள்தான் கட்டிடம் மற்றும் உள்கட்டுமானம் ஆகியவை பாதுகாப்பானவை என்று உறுதிப்படுத்த வேண்டும்என்று அறிவித்துள்ளனர். BSCI உடைய நிர்வாக இயக்குனர் லோரென்ஸ் பெர்ஸாவ் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலிடம்தமது சமூக கண்காணிப்பிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்பது மிகவும் முக்கியமாகும்.” எனக்கூறினார்:

பங்களாதேசத்தில் பணிநிலைமைகளை முன்னேற்றுவிக்கும் வாய்ப்பு ஏதும் இல்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அப்பட்டமாகத் தெரிவித்துள்ளது. “ஊழல், மிகச் சக்தி வாய்ந்த ஆடைத் தொழில் மற்றும் மேற்குநாடுகளின் நுகர்வோரின் குறைந்த விலைக்கான  வலியுறுத்தல் ஆகியவை பணி நிலைமைகளை மோசமானதாகத்தான் வைத்திருக்கும்  என்று தொழில்துறை, வணிக வல்லுனர்கள் கூறுகின்றனர்.”

உடைந்த வளாகம் பற்றித் தகவல்கள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் உரிமையாளர் முகம்மது சோஹெல் ரானா, மையத்தை 2007ல் ஒரு குளத்தை வற்றச் செய்தபின், சதுப்பு நிலத்தில் காங்க்ரீட் அஸ்திவாரங்ளைப் போட்டுக் கட்டினார். கட்டுவதற்கு பொறுப்பாக இருந்த அமைப்பிடம் இருந்து புதிய ஆலைகளுக்கு அனுமதி பெறுவதில் அவர் தோல்வியடைந்து, மாறாக உள்ளூர் நகரசபையில் அவருடைய அரசியல் நண்பர்களில் ஒருவரிடம் இருந்து ஒப்புதல் பெற்றார் என்று கூறப்படுகிறது.

புதன் அன்று காலை மிகப் பெரிய விரிசல்கள் கட்டிடத்தில் செவ்வாயன்று ஏற்பட்டதற்குப் பின்னும் அவர் ஆலைகளுக்கு தொழிலாளர்களைப் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதால் ரானா தொழிலாளர்களின் சீற்றத்தின் மத்தியில் உள்ளார். பேரழிவிற்குச் சற்று முன் இந்த வணிகர் ஒரு தொழிலாளர்கள் கூட்டத்தில் வளாகம்மற்றும் ஒரு நூறாண்டுகளுக்குநிற்கும் என்று கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பேரழிவு நடைபெற்ற இடத்தில் இருந்து 1கி.மீ. தொலைவிற்குள் இருக்கும் ரானாவின் மற்றொரு ஆலை வளாகத்தில் பெரும் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டபின், அங்கிருந்தவர்கள் அகற்றப்பட்னர் என்று இன்று பங்களாதேச செய்தி அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.