சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The great unmentionable: Mass unemployment in America

பெரியளவில் குறிப்பிடப்படாதது: அமெரிக்கவில் பாரிய வேலையின்மை

Andre Damon
15 April 2013

use this version to print | Send feedback

அமெரிக்காவில், உத்தியோகபூர்வ அரசியல் விவாதம் மற்றும் அது குறித்த செய்தி ஊடக பிரதிபலிப்பு இவற்றை வைத்து மதிப்பிடுகையில், ஒருவரால் நாடு பெருமந்த நிலைக்குப்பின் மிக ஆழ்ந்த வேலையில்லா நெருக்கடியில் உள்ளது என்பது பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடியாது. உண்மையில் அனைத்துக் கவனமும் ஒருபுறம் வலுவான பொருளாதார மீட்பிற்கு நிரூபணம் என அறிவிக்கப்படும் முன்னொருபோதுமில்லாத பங்கு விலைகளையும் மற்றும் பெருநிறுவன இலாபங்களில் இருக்கையில், மறுபுறம் பல மில்லியன் மக்கள் நம்பியிருக்கும் சமூகநலத் திட்டங்களில் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களுக்கான தேவை என்பதும் எடுத்துக்காட்டப்படுகிறது.

ஒபாமா நிர்வாகம் முந்தைய நூற்றாண்டின் சமூகச் சீர்திருத்தங்களான சமூகப்பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு என்பவற்றின் மீது ஒரு வரலாற்றுரீதியான, முன்னோடியில்லாத தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. குடியரசுக் கட்சியுடன் இணைந்து செயல்படும் முறையில், இது ஏற்கனவே நாடு முழுவதும் சமூகநல சேவைகள் மற்றும் வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டு என்றழைப்பதனூடாக தொழிலாளர்கள் வருமானத்தில் மிருகத்தன வெட்டுக்களுக்கு வகை செய்துவிட்டது. இதற்கிடையில், பள்ளி மூடல்கள், ஆசிரியர் பணிநீக்கங்கள் மற்றும ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பில் தாக்குதல்கள் ஆகியவை சற்றும் குறைவில்லாது மத்திய, மாநில மட்டத்தில் தொடர்கின்றன.

பரந்துபட்ட மக்களின் நலன்கள் குறித்து, “செய்திகள்” எனக்கூறப்படுபவை எந்த பிரதிபலிப்பையும் காட்டுவதில்லை, அதேபோல் அரசியல் ஆளும்வர்க்கத்தினை ஆதிக்கம்செலுத்தும் விவாதங்களிலும் இதுபற்றிப் பேச்சு இல்லை. மக்களோ நீடித்த பாரிய வேலையின்மையின் பேரழிவு தரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்த உத்தியோகபூர்வ மௌனச் சுவருக்குப் பின், பெருநிறுவன உயரடுக்கு ஊதியங்களை வெட்டவும், 1930களுக்கு பின்னர் காணப்படாத மோசமான சுரண்டல் நிலையை சுமத்தவும் வேலை நெருக்கடியை ஒரு கைத்தடிபோல் பயன்படுத்துகிறது 

இம்மாதம் முன்னதாக வெளியிடப்பட்ட தொழில்துறையின் வேலை பற்றிய மார்ச் மாத அறிக்கை, வோல் ஸ்ட்ரீட், பெருநிறுவன அமெரிக்கா இவற்றின் வரம்புகளுக்கு அப்பால் இருக்கும் பொருளாதார வாழ்வின் உண்மையான நிலையை பற்றிய குறிப்பை வழங்குகின்றது. இது மார்ச் மாதம் 88,000 வேலைகள்தான் தோற்றுவிக்கப்பட்டன என்றும், இது முந்தைய மாதத்தில் மூன்றில் ஒரு பகுதியைவிடக்குறைவு என்றும், பொருளாதார வல்லுனர்கள் கணித்த எண்ணிக்கையில் பாதியளவுதான் என்றும் காட்டுகின்றன.

மிக முக்கியமானது தொழிலாளர் பிரிவு பங்குகொள்ளும் விகிதத்தில் தீவிர சரிவாகும். இது தொழில்பார்க்கும் அல்லது தொழிலை தேடும் மக்களின் விகிதமாகும். இந்த எண்ணிக்கை 63.3% எனக் குறைந்துள்ளது. இது 1979க்குப்பின் மிகவும் குறைந்த விகிதம் ஆகும். அரை மில்லியன் மக்கள் மார்ச் மாதத்தில் மட்டும் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர்.

தொழிலாளர் பிரிவில் சரிவு என்பது நீண்டகால வேலையின்மை தொடர்ந்து இருப்பதின் ஒரு பகுதியாக விளக்கப்படுத்தப்படலாம். சராசரி வேலையின்மைக் காலம் மார்ச் மாதம் 37 வாரங்களுக்கும் அதிகம் என்று உயர்ந்தது.

கடந்த மாதம் ஒபாமாவால் சட்டமாகக் கையெழுத்திடப்பட்ட “வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டு” நிகழ்ச்சிப்போக்கின் கீழ், 4 மில்லியன் நீண்டகால வேலையில்லாதவர்கள் ஏற்கனவே பெற்றுவரும் அற்ப வேலையின்மை நலன்களில் இன்னும் 11% வெட்டைக் காண்பர். விபரீதமான தர்க்க முறையில், ஊக்கமிழந்து விட்ட தொழிலாளர்கள் வேலையை நாடுவதை விட்டுவிட்டதால் ஏற்படும் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதச் சரிவு, நாட்டின் மாநிலங்கள் முழுவதும் வேலையின்மை நலன்கள் பெறும் கால அளவை வெட்டுவதை நியாப்படுத்தப் பயன்படுகிறது.

பொருளாதார நெருக்கடியினால் அழிக்கப்பட்டுவிட்ட வேலைகளை பதிலீடு செய்த புதிய வேலைகளில் பெரும்பாலானவற்றிற்கு மிகக்குறைந்த ஊதியங்களே வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவில் இளைஞர்கள் முகங்கொடுக்கும் நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் மோசமாக உள்ளது. 25 வயதிற்கு குறைந்த தொழிலாளர் பிரிவினரிடையே தொழிலாளர்கள் பங்கு பெறும் சதவிகிதம் மார்ச் மாதம் 54.5 ஐ தொட்டது. இது நான்கு தசாப்தங்களில் மிகவும் குறைந்த அளவு ஆகும். கணக்கீட்டின்படி உண்மையான இளைஞர் வேலையின்மை, தொழிலாளர் பிரிவில் இருந்து நீங்கியவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 22.9 சதவிகிதம் ஆகின்றது. இது இப்போது யூரோப் பகுதியில் இருப்பதுடன் ஒப்பிடக்கூடியது.

எதிர்காலத்தை இழந்துவிட்ட மில்லியன் கணக்கான இளைஞர்கள் அவர்களுக்கு ஒரு வேலை கிடைத்தாலும் மிகவும் குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான வயதான தொழிலாளர்களும் மோசமான வறுமையினுள்  தள்ளப்படுகின்றனர்.

முந்தைய காலத்தில் தற்போதைய வேலையின்மை விகிதம் ஒரு தேசிய இழிவாக கருதப்பட்டிருக்கும். 1965ம் ஆண்டு Medicare அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில், ஜனாதிபதி லிண்டன் பி. ஜோன்சன், “வேலை செய்ய இயலுமான மற்றும் விரும்பும் மக்கள் அனைவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்படும் என்ற வேலைவழங்கும் சட்டத்தின் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. அது நிறைவேற்றப்படும் வரை நாம் செயலற்று இருத்தல் கூடாது” என்றார். அந்த நேரத்தில் வேலையின்மை 5% ஆக இருந்தது. அப்போது உத்தியோகபூர்வமாக 3.7 மில்லியன் மக்கள் வேலையில்லாதிருந்தனர். அது, இப்போது உத்தியோகபூர்வமாக இருப்பதை விட மூன்றில் ஒரு பகுதியாகும்.

உண்மையில், ஜோன்சனின் வார்த்தைஜாலங்கள் யதார்த்தமாக்கப்படவில்லை. அவருடைய “வறுமையின் மீதான போர்” என்பது அரைகுறைப் பிரசவம் ஆகியது. ஆயினும்கூட குடி உரிமைகள் இயக்கம், தொழிற்துறை தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள், நகரத்தில் பெரும்பான்மையான யூதர்கள் வாழும் பகுதிகளில் எழுச்சிகள் ஆகிய சமூகப் போராட்டங்களின் வளர்ச்சி ஒரு அச்சமுற்ற ஆளும் வர்க்கத்தை தொழிலாள வர்க்கத்திற்கு குறிப்பிட்ட சில சலுகைகளைக் கொடுக்க நிர்ப்பந்தித்தது.

அது இரண்டாம் உலகப்போரின் பின்னான பொருளாதார ஏற்றம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா கொண்டிருந்த மேலாதிக்கத்தின் உச்சக்கட்ட நிலையாகும். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப்பின், அமெரிக்க முதலாளித்துவம் ஒரு பெரும் உள் சீரழிவானால் அவதியுற்று, அதன் உலகப் பொருளாதார நிலையில் சரிவைக் கண்டபின், ஒபாமா நிர்வாகம் வேலையின்மை என்ற தொற்றுநோயை மறுதலையாக ஒப்புக்கொண்டு, “நம் வணிகங்கள்” தோற்றுவித்துள்ள வேலைகள் எண்ணிக்கையை புகழ்கிறது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு சமூக சமத்துவமின்மையின் நிலைகேடான தொடர்ந்த அதிகரிப்பில் தனது நச்சுத்தன்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது. இது அமெரிக்காவின் தொழில்துறை உள்கட்டுமானத்தின் அரிப்புடனும் மற்றும் ஒட்டுண்ணித் தனமான நிதியப் பிரபுத்துவத்தின் ஏற்றத்துடனும் பிணைந்துள்ளது. இப்பிரபுத்துவம் செல்வத்தை பிரயோசனமான பொருட்களை உற்பத்தி செய்வதின் மூலம் பெறாது, மாறாக குற்றம் சார்ந்த, சமூக அழிவுத் தன்மையுடைய நிதியத் திரித்தல்களின் மூலம் பெறுகிறது.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை வோல் ஸ்ட்ரீட் மாபியா மற்றும் இராணுவ/ உளவுதுறைக் அமைப்புடன் இணைந்து நிற்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இதன் கொள்கைகளை சமூக எதிர்ப்புரட்சியினதும், உள்நாட்டில் பாரிய அடக்குமுறை மற்றும் வெளிநாட்டில் போர் மற்றும் நவகாலனித்துவ படையெடுப்புகளுக்கான தயாரிப்பு என்பதன் கூட்டு என்று கூறலாம்.

அமெரிக்காவின் ஜனநாயக விரோத இருகட்சி முறையின் கீழ் முற்றிலும் வாக்குரிமை அற்றதும் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரே வாக்காளர் தளம் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள்தான்! இது ஒன்றும் ஐரோப்பா, ஜப்பான், சீனா இன்னும் உலகின் பிற பகுதிகளில் இருந்து மாறுபட்டிருக்கவில்லை. அங்கும் ஆளும் உயரடுக்குகள் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளை மக்களின் விருப்பத்தை மீறித்தான் செயல்படுத்துகின்றன.

ஒரு தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்திற்கு அப்பால், அமெரிக்காவில் பாரிய வேலையின்மை, வறுமையின் அதிகரிப்பிற்கு பதிலேதும் கிடையாது. அத்தகைய போராட்டம் தவிர்க்க முடியாதது. ஆனால் இது நனவாக தயாரிக்கப்பட வேண்டியதுடன், ஒரு சோசலிச, புரட்சிகர வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

இன்று முதலாளித்துவத்திற்குள் சீர்திருத்த பிரிவு என ஒன்றும் கிடையாது. இரண்டு பெரிய வணிகக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றிற்கு அழைப்புவிடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. போதுமான வேலைகள், கௌரவமான ஊதியம், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள், கல்வி, மற்றும் வீடு இவற்றை வழங்குவதற்குத் தேவையான வளங்கள் நிதியத் தன்னலக்குழுவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதன் மூலம் பெறப்பட்டு பொருளாதார வாழ்வின் நெம்புகோல்களை தனியார் கரங்களில் இருந்து அகற்றி, தனியார் இலாபத் தேவைகளுக்காக அல்லாமல், சமூகத் தேவையை அடித்தளமாக கொண்ட ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்தை நிறுவுவதின் மூலம்தான் முடியும்.