சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வியட்னாம்,கம்போடியா & தாய்லாந்து

Vietnam’s president visits White House

வியட்நாம் ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்கு விஜயம்

By John Roberts 
30 July 2013

use this version to print | Send feedback

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் வியட்நாமின் ஜனாதிபதி ரௌங்க் டான் சாங்கிற்கும் வாஷிங்டனில் ஜூலை 25 நடந்த பேச்சுக்கள் இரு தலைவர்களினதும் கூடுதலாக சீனாவிற்கு எதிராக தங்கள் பொருளாதார, அரசியல், இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தை வலியுறுத்தின.

வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற தனிப்பட்ட பேச்சுக்கள் எதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாக ஒன்றேகால் மணி நேரம் நடைபெற்றன. இது இராஜதந்திர உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட 1995ல் இருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டாவது சந்திப்பாகும். அந்த ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தசாப்தகாலமாக நீடித்த வியட்நாமிற்கு எதிரான போர் முடிவின் 20வது ஆண்டு நிறைவைக் குறித்தது. அதில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டதுடன், இந்தோசீனாவில் பல பகுதிகளை பேரழிவிற்கு உள்ளாக்கியது.

அக்கொடூர மரபியம் இருந்தபோதிலும்கூட, ஹனோயில் இருந்த ஸ்ராலினிச ஆட்சி மூலோபாய மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக வாஷிங்டனுடன் தன் உறவுகளை வளர்க்க விரும்பியது. அது சீனாவிற்கு ஒரு எதிர் எடையாக இருப்பதற்காக தன் இராணுவ உறவுகளை அமெரிக்காவுடன் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த உறவுகள் ஒபாமா நிர்வாகத்தின் சீனாவின் செல்வாக்கை எதிர்க்கும் ஆக்கிரோஷமான ஆசியாவிற்கு “முன்னுரிமை வழங்குதல்” என்பதன் கீழ் இன்னும் ஆழமடைந்துள்ளன. அதே நேரத்தில் பெய்ஜிங்கில் இருக்கும் அரசாங்கம் போல், வியட்நாமிய அரசாங்கமும் நாட்டை உலக மூலதனத்திற்கான ஒரு குறைவூதிய தொழிலாளர் அரங்காக மாற்றியுள்ளதுடன், அதிகரித்தளவில் வணிகம், முதலீடு, பொருளாதார உதவி ஆகியவற்றிற்கு அமெரிக்காவை நம்பியுள்ளது.

ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஒருகூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில், ஒபாமா “படிப்படியாக உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்மை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு விரிவான பங்காளித்துவத்தை அறிவிக்க வைக்கிறது. இது பண்ட பரிமாற்றம், வணிகத்தில் இருந்து இராணுவரீதியான ஒத்துழைப்பு வரை பலவகைப் பிரச்சினைகளில் கூடுதல் ஒத்துழைப்பை இரு நாடுகளுக்கும் இடையே அனுமதிக்கும்.” என்றார்.

சாங்கின் வருகை ஹனோயால் அரசியல் எதிர்ப்பாளர்கள் நடத்தப்படுவது பற்றி சில அமெரிக்க வியட்நாமியக் குழுக்களின் எதிர்ப்புக்களை உருவாக்கியுள்ளது. அமெரிக்கக் காங்கிரசின் சில உறுப்பினர்கள் ஹனோய் மீது அழுத்தம் கொடுப்பதற்காக இழிந்த முறையில் “மனித உரிமைகள்” பிரச்சினையை எழுப்புகின்றனர். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி சில  சலுகைகளைக் கொடுத்தால் ஒழிய புதிய வணிக ஒப்பந்தங்களுக்கு இசைவு கிடையாது என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

ஆனால் இப்போராட்டத்தை ஒபாமா உதறித்தள்ளினார். நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி மனித உரிமைகள் பற்றி “ஒரு நட்புரீதியான குறிப்பைத்தான்” கொடுத்தார். இச்செய்தித்தாள் “ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரை பரவும் நிழல் இதில் சீனாதான். அதன் படரும் இழைகள் ஆசியா முழுவதையும் அடைந்துள்ளன.”

2011ல் இருந்து ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவிற்கு “முன்னுரிமை வழங்குதல்” வியட்நாமை பொறுத்தவரை அமெரிக்கக் கொள்கையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தில் முற்றுமுழுதான நோக்கம் பெய்ஜிங்கை மூலோபாயரீதியாக தனிமைப்படுத்த அரசியல், இராணுவக் கூட்டுக்களை உருவாக்குவது ஆகும். இதில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் அடங்கும். அவை சீனாவிற்கு எதிரான தங்கள் பிராந்திய உரிமைகளை தென் சீனக் கடலிலுள்ள சிறியதீவுகளிலும் மற்றும் எரிபொருள் மூலவளங்களிலும் வலியுறுத்துகின்றன.

சாங்குடனான தன் விவாதங்கள் தென்சீனக் கடலில் நிலமோதல்களை “சமாதான முறையில்” தீர்க்கும் முயற்சிகளைப பற்றியது என்றார் ஒபாமா. இது சீனா “பன்முக” பேச்சுக்களுக்கு நிலமோதல்கள் குறித்து ஒப்புக் கொள்ள வேண்டும் என்னும் அமெரிக்க நிலைப்பாட்டுக் கோரிக்கையின் மறைப்பு ஆகும். அவ்வாறான பன்முகப் பேச்சுக்களில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும். இது அமெரிக்கத் தலையீடு இல்லாமல் மோதல்களை இருதரப்பினாலும் தீர்க்கப்படும் என்னும் பெய்ஜிங்கின் வலியுறுத்தலுக்கு எதிரானதாகும்.

வியட்நாமின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுப்பதற்கு சாங் வாஷிங்டனுக்கு நன்றி தெரிவித்தார். உத்தியோகபூர்வமாக ஹனோயின் நிலை அமெரிக்காவிற்கும் சீனாவிகும் இடையே உள்ள போட்டியில் எப்பக்கமும் சேர விரும்பவில்லை என்பதாகும். இது அமெரிக்கா வியட்நாம் இன்னும் பிற தெற்கு ஆசிய நாடுகளுக்கு பாதுகாப்புக் கொடுக்க தயாராக உள்ளது என்று கூறும்போது அமெரிக்க கூற்றான தான் நடுநிலையாக உள்ளது என்பதின் பாசாங்குத்தனத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்க போர்க்கப்பல்கள் சீனாவுடன் போட்டியாக ஸ்பார்ட்லி தீவுகளில் பெருங்கூட்டத்தை கொண்டுள்ள வியட்நாமிற்கு வந்துள்ளமை ஹனோய்க்கு வாஷிங்டனுடைய ஆதரவை காட்டுகிறது. இராணுவப் பிணைப்புக்கள் சீராக கட்டியமைக்கப்பட்டுள்ளன. ஜூலை மாதம், வியட்நாமின் தலைமைப் படைத் தலைவர் மற்றும் துணைப் பாதுகாப்பு மந்திரி இருவரும் பென்டகனுக்கு முதல் தடவையாக வந்து உயர்மட்ட அமெரிக்க தலைமை இராணுவ அதிகாரிகளைச் சந்தித்தனர்.

கடந்த செவ்வாயன்று, ஓவல் அலுவலகக் கூட்டத்திற்கு முன், சாங் இருதரப்பு உறவுகளுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தி, இயல்பான உறவுகள் இருக்க வேண்டும் என்றார். அமெரிக்கா வியட்நாமிற்கு நவீன ஆயுதங்களை விற்பனைத் தடையை அகற்ற வேண்டும் என்றார்.

பொருளாதார உறவுகளை பொறுத்தவரை, ஒபாமாவும் சாங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் பசிபிக் கடந்த கூட்டிற்கான (TPP) வணிக விதிகள் குறித்த உடன்பாட்டில் முழு ஈடுபாடு கொள்ளும் என வலியுறுத்தின. இந்த அமெரிக்கா வலியுறுத்தும் திட்டம் இதுவரை 12 ஆசிய பசிபிக் நாடுகள் பிராந்தியத்தில் இருப்பவற்றை ஈடுபடுத்தியுள்ளன. ஆனால் சீனா ஒதுக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பசிபிக் கடந்த கூட்டை இப்பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கை குறைக்க பயனபடுத்த விரும்புகிறது. கடந்த தசாப்தத்தில் சீனா பெரும்பாலான ஆசிய நாடுகளின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாகியுள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவு 2008ல் இருந்து, வாஷிங்டனுக்கு ஹனோயைத் தன் சுற்றுக்கோளில் ஈர்க்க அதிக வாய்ப்புக்களைக் கொடுத்துள்ளது.

உலக வங்கி வியட்நாமிய பொருளாதாரம் இந்த ஆண்டு 13 ஆண்டுகளில் அதன் மிகவும் குறைவான அளவான 5%தான் உயரும் என்று கணித்துள்ளது. ஸ்ராலினிச ஆட்சி, சந்தைச் சார்புடைய doi moi கொள்கையை 1986ல் ஏற்றதில் இருந்து, அது வேலைகளை தோற்றுவிக்கவும், கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகார ஆட்சிக்கான எதிர்ப்பை அடக்கவும் அதிக வளர்ச்சி விகிதத்தில் தங்கியுள்ளது.

பலதேசிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஏற்றுமதி தொழிற்துறை வியட்நாமிற்குள் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தொழிலாளர்கள் மிருகத்தனமா குறைவூதியத் தொழிலாளர் பிரிவாக சுரண்டப்படுகின்றனர். பெருகும் தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தி பொருளாதாரம் மெதுவாகி வேலையின்மை பெருகுகையில் வெடிக்கக்கூடும்.

ஆளும் அதிகாரத்துவத்தின் பிரிவுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உடன்பாடு பெருகும் சீனாவுடனான மூலாதார நலன்கள் மற்றும் பொருளாதாரப் போட்டிக்கு விடை என்று காண்கிறது.

சீனா வியட்நாமின் மிகப் பெரிய வணிகப் பங்காளி ஆகும். ஆனால் வியட்நாமோ மிகப் பெரிய வணிகப்பற்றாக்குறையை சீனாவுடன் கொண்டுள்ளது. இது 2012ல், 16.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என எட்டியுள்ளது. சீனா விவசாயப் பொருட்களான எண்ணெய், இரப்பர், வெட்டுமரம், நிலக்கரி போன்றவற்றிற்கு வியட்நாமை நம்பியுள்ளது. ஆனால் அதன் உற்பத்திப் பொருட்கள் எதையும் வாங்குவதில்லை. மாறாக மலிவான சீனப் பொருட்கள் வியட்நாமின் ஏற்றமதியைப் பாதிக்கின்றன. சீனா வியட்நாமில் செய்துள்ள முதலீடு சுரங்கத் தொழில், எரிசக்தி மற்றும் கட்டுமானத் துறையில் உள்ளன. இராணுவ வட்டங்களில் சீனா இந்த மூலோபாயப் பிரிவுகளில் கூடுதல் தங்கியிருப்பது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

இதற்கு மாறாக அமெரிக்கா இப்பொழுது வியட்நாமின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தை ஆகும். அமெரிக்காவுடன் வியட்நாமின் வணிகம் 2011ல் $22.57 பில்லியனில் இருந்து கடந்த ஆண்டு $24.45 பில்லியன் என உயர்ந்தது. வியட்நாம் உபரியாக $15.76 பில்லியனைக் கொண்டுள்ளது. அமெரிக்கா வியட்நாமில் ஏழாம் வெளிநாட்டு நேரடி முதலீட்டு நாடாகும். 658 திட்டங்கள், $10.5 பில்லியன் மதிப்பிற்கு அது கொண்டுள்ளது.

பசிபிக் கடந்த கூட்டிற்கு அமெரிக்காவிற்கு ஆதரவாக இருப்பதால், உடைகள் மற்றும் ஏனைய இறக்குமதிகளுக்கும் அமெரிக்காவிற்குள் தளர்ச்சியான விதிகளைக் வியட்நாம் கொண்டிருக்கும். இது உலகில் மிக அதிக உடைகள் உற்பத்திசெய்யும் நாடனா சீனாவின் இழப்பில் பெறப்படும் நன்மையாகும்.

அமெரிக்கக காங்கிரசின் ஆராய்ச்சி பிரிவால் தயாரிக்கப்பட்டுள்ள ஜூன் 2013 அறிக்கை ஒன்றின்படி, பசிபிக் கடந்த கூட்டில் வியட்நாம் பங்கு பெற்றிருப்பதற்கு வியட்நாமிற்கான அமெரிக்க ஆதரவாளர்கள் ஹனோயிடம் இருந்து “சந்தைச் சீர்திருத்தங்களை” எதிர்காலத்தில் பெறலாம் என நம்புகின்றனர். இது வியட்நாமில் கனரகத் தொழில்களில் அரசாங்கச் சொந்த நிறுவனங்கள் உடைய மேலாதிக்கத்தைக் குறைக்கும். பசிபிக் கடந்த கூட்டு அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. இது சீனாவை தடை செய்ய பெரிதும் இயற்றப்பட்டவை. அதுதான் கணிசமான அரச துறைகளை இன்னமும் கொண்டுள்ளது.

வாஷிங்டன் ஏற்கனவே சீனாவை விலக்கி Lower Mokong Initiative (LMI)  எனப்படும் வியட்நாம், பர்மா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகியவை உள்ளடக்கியிருக்கும் அமைப்பை உருவாக்கியதன் மூலம் சீன முதலீடு பற்றிய பிராந்திய பாதுகாப்புக் கவலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது. 2010ல் உருவாக்கிய LMI ஊடாக, சீனா மேற்கு மெகோங்கில் கட்டும் அணைகள், இன்னும் லாவோஸை நோக்கிவரும் நதிகளில் 11 அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளமை ஒவ்வொரு ஆண்டும் மெகோங் ஆற்றுப்படுகை பகுதியின் வளத்திற்கு முக்கியமான வருடாந்த நீர்ப்பாச்சலை பாதிக்கும் என்று அச்சத்தை அமெரிக்கா வியட்நாமிற்குள் கிளப்பியுள்ளது.

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்.

US-Vietnam nuclear talks heighten frictions with China
[9 August 2010]

The Vietnam War and the decline of American imperialism
[8 July 2009]