சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Low-wage America

மலிவு ஊதிய அமெரிக்கா

Kristina Betinis and Andre Damon
7 August 2013

use this version to print | Send feedback

அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு சில வேலைகளை மட்டுமே அதிகரித்து பாரிய வேலைவாய்ப்பின்மைக்கு கணிசமான துயரத்தை கூட்டிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, புதிய வேலைகளில் மிகப் பெரும்பான்மையானவை பகுதி நேர வேலைகளாகவோ அல்லது தற்காலிக வேலைகளாகவோ, அல்லது 2008-2009 சரிவு காலத்தின்போது அகற்றப்பட்ட சம்பளங்களை விட மிகக் குறைவாக ஊதியமளிக்கும் வேலைகளாகவோ இருக்கின்றன.

சென்ற மாதத்தில் கூடுதலாகச் சேர்ந்த மொத்தம் 162,000 வேலைகளில் மலைக்க வைக்கும்படி மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் பகுதி நேர வேலைகளாக இருந்தன. இவற்றில் அநேகமானவை மலிவூதியத் துறைகளைச் சேர்ந்தவையாக இருந்தன என்று சென்ற வெள்ளியன்று தொழிலாளர் நலத் துறையால் வெளியிடப்பட்ட சமீபத்திய அமெரிக்க வேலைகள் குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த நான்கு மாத காலங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் 791,000 புதிய பகுதி-நேர வேலைகளை சேர்த்துள்ளது, ஆனால் 187,000 முழு நேர வேலைகளை மட்டுமே சேர்த்துள்ளது. அமெரிக்காவில் இப்போதிருக்கும் மொத்த வேலைகளில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் பகுதி-நேர வேலையால் பூர்த்தியாகிறது என்றபோதிலும் இந்த நிலையாகும்.

இந்த ஆண்டில் இதுவரை உருவாக்கப்பட்டிருப்பதில் 61 சதவீத வேலைகள் மலிவூதியத் துறைகளில் - இந்தத் துறைகளிலான வேலைவாய்ப்புகள் அமெரிக்காவில் இருக்கும் மொத்த வேலைகளின் எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் குறைவு தான் என்ற நிலையிலும் கூட - இருக்கின்றன என்று மூடிஸ் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன. சில்லறை விற்பனை, உணவுத் தயாரிப்பு, சரக்கு மற்றும் கிடங்கு வேலைகள், சிப்பந்திகள், மற்றும் வீட்டு ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய ஒரு மணி நேரத்துக்கு 12 டாலருக்கும் குறைவாக ஊதியம் பெற்றுத் தரக்கூடிய வேலைகளில் மட்டும் தான் மிக அதிகமான வேலைகளின் பெருக்கம் இருந்திருக்கிறது.

இந்த ஆண்டில் அதிகரித்த வேலைகளின் எண்ணிக்கையில் நடுத்தர வருவாய் தரக் கூடிய வேலைகள் 22 சதவீதத்துக்கும் குறைவானவை என்றும் உயர் ஊதியம் அளிக்கக் கூடிய வேலைகள் 17 சதவீதத்திற்கும் குறைவு என்றும் மூடிஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.

மலிவூதிய வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைய, சராசரி மணி நேர ஊதிய விகிதங்கள் சென்ற மாதத்தில் 2 சென்டுகள் சரிந்து 23.98 டாலர்களாய் ஆயின. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊதியங்கள் பெருமளவில் தேய்ந்து சென்றதன் உச்ச அளவாக இது இருக்கிறது. 2007 ஆம் ஆண்டிற்கும் 2011 ஆம் ஆண்டிற்கும் இடையில் அமெரிக்காவின் வீட்டு வருவாயில் நடுவில் இருக்கக் கூடிய அளவு 11.6 சதவீதம் சரிந்து 57,143 டாலர்களில் இருந்து 50,152 டாலர்களாக சரிந்து விட்டிருந்ததாக புள்ளிவிவரத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட வேலைகளில் பெரும்பான்மையானவை மணிக்கு 7.69 டாலர்கள் முதல் 13.83 டாலர்கள் ஊதியமளிக்கக் கூடிய மலிவூதிய வேலைகளாக இருந்தன என்பதை தேசிய வேலைவாய்ப்புச் சட்ட திட்டத்தின்(National Employment Law Project)2012 ஆம் ஆண்டின் ஒரு அறிக்கை கண்டறிந்தது. இதற்கு நேரெதிராக பொருளாதாரச் சரிவின் சமயத்து வேலையிழப்புகளில் தொலைந்த நடுத்தர ஊதிய வேலைகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக இருக்க பொருளாதார மீட்சி சமயத்திலான வேலை வளர்ச்சியில் 22 சதவீதம் மட்டுமே அத்தகைய நடுத்தர ஊதிய வேலைகளாக உள்ளன.

மலிவூதிய மற்றும் பகுதி-நேர வேலைவாய்ப்பின் மிதமிஞ்சிய பெருக்கம், வறுமை மற்றும் சமூகத் துயரத்தில் ஒரு கணிசமான அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளது.

ஐந்தில் நான்கு அமெரிக்கர்கள் பொருளாதாரரீதியாக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக சென்ற மாதத்தில் அசோசியேடட் பிரஸ் செய்தி கூறியது. இதன் பொருள் அவர்கள் வறுமைக்கோட்டின் 150 சதவீதத்திற்கு கீழான ஒரு வருவாயைக் கொண்டிருந்தனர், வேலைவாய்ப்பின்றி இருந்தனர், ஒரு வருடத்திற்கோ அல்லது அதற்கும் மேலான வருடங்களுக்கோ உணவுக் கூப்பன்கள் போன்ற வறுமை நிவாரணத்  திட்டங்களை நம்பி வாழ்ந்து வந்தனர் என்பதாகும்.

ஜெனரல் மோட்டார்ஸ், வோல்க்ஸ்வாகன், மற்றும் BMW உள்ளிட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் 2008 பொருளாதாரச் சரிவுக்கான பதிலிறுப்பாக தற்காலிக தொழிலாளர்களின் பயன்பாட்டை பெருமளவில் விரிவுபடுத்தின. குறிப்பாக டென்னெஸி  மாகாணத்தில் இருக்கும் வோல்க்ஸ்வாகனின் சட்டானூகா ஆலை உட்பட அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் பகுதிகளில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி வேலைகளுக்கான புதிய பணியமர்த்தல்கள் அனைத்தையுமே தற்காலிக தொழிலாளர் முகமைகள் மூலமாகவே செய்கின்றன. இந்த தொழிலாளர்கள் எல்லோரும், விருப்பம் போல எந்தக் காரணமும் இன்றியும் கூட வெளியேற்றப்படக் கூடிய நிலையில் உள்ளவர்களாவர்.

அமெரிக்காவின் உழைக்கும் மக்களில் முழுமையாக 12 சதவீதம் பேர் தற்காலிக வேலைகளிலேயே பணியமர்த்தப்பட்டிருப்பதாக சென்ற ஆண்டில் அசோசியேடட் பிரஸ் செய்தி கூறியது. 2009க்குப் பின்னர் தற்காலிக வேலைகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாய் உயர்வு கண்டிருப்பதாக தொழிலாளர் நலத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தற்காலிக வேலைவாய்ப்புகளின் அசாதாரண பெருக்கம் என்பது முழுக்க முழுக்க அமெரிக்காவில் மட்டுமே நடக்கின்றதொரு நிகழ்வுப்போக்கு அல்ல. ஐக்கிய இராச்சியத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூச்சிய நேர வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுவதான ஒன்றில், அதாவது தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு மணி நேரம் வேலை கிடைக்கும் என்பதற்குக் கூட உத்தரவாதம் கிடையாது, பணிபுரிந்து வருவதாக இங்கிலாந்தின் மனிதவளம் மற்றும் அபிவிருத்தி ஸ்தாபனம்(England’s Chartered Institute of Personnel and Development) அளித்த ஒரு அறிக்கை கூறியது.

அமெரிக்காவில் மலிவூதிய வேலைகள் பரந்த அளவில் விரிவாக்கம் காண்பதென்பது தற்செயலாகவோ அல்லது எதேச்சையானதாகவோ இருப்பதற்கு அப்பாற்பட்டு, ஒபாமா நிர்வாகம் மற்றும் இரண்டு அரசியல் கட்சிகளின் திட்டமிட்ட கொள்கையாகும். தொழிலாளர்கள் செலவுகளைக் குறைத்து பெருநிறுவனங்களின் இலாபங்களை உயர்த்துவதற்கு இந்த இரண்டு கட்சிகளும் வேலை செய்கின்றன.

ஒரு முக்கியமான பொருளாதாரக் கொள்கை உரையை டென்னெஸி மாகாணத்தின் சட்டானூகா நகரில் இருக்கும் அமேசான்.காம் நிறுவனத்தின் சேமிப்புக்கிடங்கு பகுதியில் நிகழ்த்துவதற்கு ஒபாமா நிர்வாகம் முடிவு செய்ததில் இது தெளிவாகியிருக்கிறது. இந்த நிறுவனம் தனது நிறைவேற்று மைய ஊழியர்களை மிருகத்தனமான மலிவூதியங்கள் மற்றும் கொத்தடிமை நிலைமைகளுக்கு ஆட்படுத்துவதற்கு அவப்பெயர் பெற்றதாகும்.

அமேசான் நிறுவனத்தின் நிறைவேற்று மையங்களில் தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 11 டாலர்கள் என்னும் விகிதத்தில் இருக்கிறது. பரபரப்பான விற்பனைக் காலங்களுக்கான தொழிலாளர் படையில் சுமார் பாதிப் பேர் தற்காலிக வேலைவாய்ப்பு முகமைகளில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் மிகை வெப்பநிலைகளில் வேலைபார்க்க  தள்ளப்படுகிறார்கள் என்பதோடு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில் இருந்தும் கூட தடுக்கப்படுகிறார்கள். உடுப்பு சோதனைகள் மற்றும் வேலையை விட்டு நீக்கவிருப்பதாக  அடிக்கடி மிரட்டுவது ஆகியவையும் நடக்கிறது.

தனது உரையில் இந்நிறுவனத்தின் வேலை உருவாக்கத்தைப் பாராட்டிய ஒபாமா என்ன சாத்தியம் என்பதற்கு அமேசான் ஒரு சிறந்த உதாரணம் என்று அறிவித்தார். ஆலை மூடல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் புதிய முதலீடுகளைப் பெறும் வகையில் புதிய வரிச் சலுகைகளுக்கு ஒபாமா அழைப்பு விடுத்தார். ஒபாமா உரை நிகழ்த்திய அமேசான் நிறைவேற்று மையம் தான் ஒபாமா குறிப்பிட்ட புதிய முதலீட்டு வகை ஆகும். நாட்டின் மிக அதிகமாய் வேலைவாய்ப்பின்மையை கொண்டிருக்கக் கூடிய மாகாணங்களில் ஒன்றான டென்னெஸியில், இரண்டு கிட்டங்கிகளை திறந்ததற்கு பிரதிபலனாக, அம்மாகாணத்தின் வரிச் சலுகைகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

கண்ணியமான ஊதியமளிக்கும் வேலைகள் என்றும் நடுத்தர வர்க்க வேலைகள் என்றும் ஒபாமா வார்த்தைஜாலம் காட்டினாலும், தொழிலாளர்களின் ஊதியங்களை வெட்டுவதையே ஒபாமா நிர்வாகம் தனது திட்டமிட்ட இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதே உண்மையாக இருக்கிறது. 2009 இல் கிறைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் மறுசீரமைப்பின் போது இது தொடங்கியது. இதன்போது அமெரிக்காவின் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பிணையெடுப்பு நிதிகளை அளிப்பதற்கான நிபந்தனையாக புதிதாக பணியமர்த்தப்படுபவர்களுக்கு 50 சதவீத ஊதிய வெட்டுகளை திணிக்கும்படி ஒபாமாவின் வாகனத் துறை செயற்படை செய்தது.

இந்தக் கொள்கையானது அமெரிக்காவில் இருக்கும் இரண்டு கட்சிகளால் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் இருக்கும் ஆளும் வர்க்கங்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஐரோப்பிய ஆணையத்திற்கான கிரீஸின் பிரதிநிதியான மரியா டமானாகி கிரீஸின் விமா பண்பலை வானொலியில் பேசும்போது சொன்னார், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருக்கும் போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டித் திறனை மேம்படுத்தும் பொருட்டு எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதே கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாக ஐரோப்பிய ஆணையத்தின் யுக்தியாக இருக்கிறது.

மலிவூதியங்கள், சுரண்டல் வேலை நிலைமைகள், மற்றும் நீங்காத வேலைப் பாதுகாப்பின்மை இவை தான் முதலாளித்துவம் உழைக்கும் மக்களுக்கு அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. விரல் விட்டு எண்ணக் கூடிய மில்லியனர்களாலும் பில்லியனர்களாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற இந்த காலாவதியாகிப் போன சமூக ஒழுங்கை, ஒரு சிலரை வளப்படுத்துவதற்காய் இல்லாமல் சமூகத் தேவைகளை பூர்த்தி  செய்வதற்காய் இயங்குகின்ற அமைப்புமுறையான சோசலிசத்தைக் கொண்டு இடம்பெயர்ப்பதே கண்ணியமான ஊதியங்களையும் வாழ்க்கைத் தரங்களையும் உத்தரவாதப்படுத்துவதற்கான ஒரேவழியாகும்.