சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Russia and Iran deepen political and military cooperation

ரஷ்யாவும் ஈரானும் அரசியல், இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துகின்றன

By Clara Weiss 
8 August 2013

use this version to print | Send feedback

சிரியாவில் மோதல்கள் தொடர்ந்து இருக்கும் பின்னணியில், ரஷ்யாவும் ஈரானும் அவற்றின் அரசியல், இராணுவ உறவுகளை சமீப மாதங்களில் கணிசமாக விரிவாக்கியுள்ளன. அமெரிக்காவும் அதன் தலைமையில் அதன் நட்பு நாடுகளும் மத்திய கிழக்கில் நடத்தும் தாக்குதல், முழுப் பிராந்தியத்திலும் உறுதியைக் குலைத்துள்ளதோடு ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் பரவும்போல் உள்ளது – இது இவ்விரு நாடுகளையும் ஒரு கூட்டில் கொண்டுவருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யா, மேற்கத்தைய நட்பு நாடுகள் ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்பை மேற்கொள்வதை எதிர்த்தாலும், தெஹ்ரானுடன் வெளிப்படையான நோக்குநிலையை மாஸ்கோ தவிர்த்து வந்தது. அவருக்கு முன் இருந்த போரிஸ் ஜெல்ட்சினைப் போலவே விளாடிமிர் புட்டினும் பலமுறை அரசாங்க வருகைகளுக்கான அழைப்புக்களை நிராகரித்து வந்தார். 2011ல் இரு நாடுகளுடைய உறவுகளில் ஒரு சரிவு ஏற்பட்டது—அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த டிமிட்ரி மெட்வடேவ், ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும்கூட S-300 பாதுகாப்பு முறையை ஈரானுக்கு அளிக்க மறுத்தார்.

ரஷ்யாவும் ஈரானும் காஸ்பியன் பிராந்தியம் மற்றும் மத்திய ஆசியாவில் பொருளாதார, அரசியல் செல்வாக்கிற்காக போட்டியிடுகின்றன. எனினும் புட்டினின் மூன்றாம் ஜனாதிபதி பதவிக்காலத்தில் இருந்து, சிரியாப் போர் தீவிரத்திற்கு மத்தியில், ரஷ்ய-ஈரானிய உறவுகளில் ஒரு மாற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன.

2012ல் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர பிரதிநிதிகள் பரிமாற்றம் மிக உயர்ந்த எண்ணிக்கையான 170ஐ அடைந்தது. இவற்றுள் பல கூட்டங்கள் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளிடையே இருந்தன. இக்கூட்டங்களில் மிக முக்கிய பிரச்சினையாக மத்திய ஆசியா, காகசஸ், எல்லாவற்றிற்கும் மேலாக சிரிய நெருக்கடியில் பாதுகாப்பு  ஒத்துழைப்பு பிரச்சினைகள் இருந்தன.

ஜனவரி 2013ல் விளாடிமிர் கோலோகொல்ட்சேவ் முதல் ரஷ்ய உள்துறை மந்திரியாக ஈரானுக்கு 1979க்குப் பின் பயணித்தார். இரு நாடுகளும் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டன, இதில் சர்வதேச பிரச்சினைகள் பற்றிய புலனாய்வு தகவல் பரிமாற்றமும் அடங்கியிருந்தது. மாஸ்கோ, ரஷ்ய உள்துறை அமைச்சரகத் துருப்புக்கள் மாதிரியிலான 500,000 வலுவான துணை இராணுவப் பிரிவை கட்டமைக்க தெஹ்ரானுக்கு ஆதரவையும் கொடுக்க உள்ளது; இது உள்நாட்டு அமைதியின்மையை சமாளிக்கும்.

இரு நாடுகளும் ஈரானில் புதிய அணுசக்தி மின் நிலையங்கள் கட்டமைப்பதில் ஒத்துழைப்பிற்கு உடன்பாட்டைக் கொண்டன. இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகள் குறைந்துதான் உள்ளன. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள 100 பில்லியன் டாலர்கள் மற்றும் சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையே உள்ள 40 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடுகையில், இரண்டிற்கும் இடையேயான வணிகம் 2011ல் 3 பில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது. அமெரிக்க தலைமையில்  ஏகாதிபத்திய ஐரோப்பா, வட அமெரிக்கா விதித்த கொடூரமான பொருளாதார தடைகளினாலும் ரஷ்ய-ஈரானிய வணிகம் கடந்தாண்டு 40% சரிந்து 2 பில்லியன் டாலர்களாக ஆயிற்று.

இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை, குறிப்பாக காஸ்பியன் கடல் பகுதியில் இராணுவ விவகாரங்களில் விரிவாக்கியுள்ளன. ஜூன் மாத இறுதியில், உயர்மட்ட ஈரானிய இராணுவ அதிகாரிகள் ஆண்டின் இரண்டாம் பகுதியில் காஸ்பியன் கடல் பகுதியில் கூட்டு இராணுவப் பயிற்சிக்கான திட்டங்களை அறிவித்தனர். ஈரானின் வடக்குக் கடற்படைத் தளபதியின் கருத்துப்படி, இப்பயிற்சிகள் ஜூலை 8-12ல் நடைபெற்றன; ரஷ்ய பக்கத்தில் இருந்து இது உறுதி செய்யப்படவில்லை.

ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையே முதல் கூட்டு இராணுவப் பயிற்சிகள் காஸ்பியன் கடல் பகுதியில் 2009ல் நடைபெற்றன. ரஷ்ய கடற்படை பங்கு பெற்றது ஒரே ஒரு கப்பலுடன் நின்றது, ஆனால் ரஷ்ய இராணுவம், ஈரானிய அதிகாரிகளின் செயற்பாடுகள் கூட்டு இராணுவப்பயிற்சிகளுக்கு ஒப்பானது என்ற கூற்றை, இச்சொல்லுக்கு நிகராக நடைபெறவில்லை என நிராகரித்தது.

கடந்த ஆண்டு ரஷ்யா மற்றும் ஈரான் கணிசமாக தங்கள் கடற்படைகளை காஸ்பியின் பகுதியில் நடந்த ஒத்துழைப்பில் தீவிரமாக்கி, பல நேரமும் போர்க்கப்பல்களையும் பறிமாற்றம் செய்து கொண்டன. ஈரானிய கடற்படையின் அட்மைரல் கொலம் ரேஜே கடெம் பேக்கம் அறிவித்தார்: “இந்த போக்கு பேணப்பட வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும், மேலும் அதிக கடற்படை கப்பல்கள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.”

ரஷ்யா மற்றும் ஈரானுக்கிடையே இராணுவ ஒத்துழைப்பு தீவிரமாகியுள்ளது, பிராந்தியத்தில் வளர்ந்து வரும் தேசிய பதட்டங்களை எதிர்கொள்ளும் வழிவகையாக உள்ளது. அருகில் இருக்கும் மத்திய கிழக்கில் அமெரிக்கர்களின் தலையீடுகள், மற்றும் ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்புக்கள் சமீபத்திய ஆண்டுகளில் காஸ்பியன் கடலை ஒட்டியுள்ள நாடுகளிடையே பல மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

2011ல் இருந்து ரஷ்யா, காஸ்பியன் கடல் பகுதி, கருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடல் ஆகியவற்றில் இருக்கும் அதன் துருப்புக்களையும் கடற்படை பிரிவுகளையும் வலுப்படுத்தியுள்ளது. ரஷ்ய கடற்படை விரிவாக்கம் செய்யப்படுதலை இராணுவ மறு ஆயுத மயப்படுத்துவதின் மையமாக ஆக்கியுள்ளது. அதேபோல் ஈரானும் அதன் கடற்படையை வலுப்படுத்தியுள்ளது, இந்த ஆண்டு மார்ச் மாதம் அது ஒரு Jamaran II நீண்ட தூர அழிப்புக் கப்பலை முதல் தடவையாக காஸ்பியன் கடலில் நிறுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் இராணுவத் தாக்குதல் வரக்கூடும் என்று பெருகியுள்ள ஆபத்துடன், ஈரான் மேலும் அஜர்பைஜான் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் மோதல் திறன்களுக்காகவும் தன் ஆயுதங்களை விரிவாக்கியுள்ளது; இவை காஸ்பியன் கடற்பகுதியில் மூலப்பொருட்கள் குறித்து எழலாம். சோவியத் ஒன்றியம் சரிந்ததில் இருந்து அண்டை நாடுகளுக்கு இடையே எல்லை குறிப்பதில் இருக்கும் சட்டபூர்வ நிலைமையும் பூசலுக்கு உட்பட்டுள்ளது, இது மூலப்பொருட்கள் இருப்புக்களுக்கு எந்த நாடு சொந்தம் என்பது குறித்து நிரந்தர மோதல்களை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்பியன் கடல் எல்லையில் இருக்கும் மற்ற நாடுகளும் பெரிய அளவில் தங்கள் இராணுவங்களை சமீபத்திய ஆண்டுகளில் உயர்த்தியுள்ளன. அஜர்பைஜானின் கடற்படை விரிவாக்கம் முக்கியமாக அமெரிக்கா, மற்றும் இஸ்ரேலின் ஆதரவைக் கொண்டுள்ளது.

“காஸ்பியன் கடலில் நேட்டோ எதிர்ப்புக் கூட்டணி” என்ற தலைப்பில் தாராளவாத Nezavizimaya Gazeta இல் ஜூலை தொடக்கத்தில் விளாடிமிர் மூச்சின் எழுதிய கட்டுரை ஒன்றில், “ரஷ்யாவும் ஈரானும் தேசியப் பாதுகாப்புப் பகுதியில் அரசியல் அக்கறையைக் கொண்டுள்ளன; காஸ்பியன் கடலில் வெளிச் செல்வாக்கை எதிர்க்கும் நிலையில் உள்ளன.”

கஜக்ஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இரண்டும் இப்பிராந்தியத்தில் நேட்டோவுடன் இராணுவ உறவுகளைக் கட்டமைக்கின்றன என்று மூச்சின் எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் தங்கள் துறைமுகங்களை பக்கு மற்றும் அக்டௌவில் கொண்டுள்ளன; ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ துருப்புக்களை இங்கே திரும்பப் பெற முடியும்.

அமெரிக்காவால் அனைத்துப் பக்கங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஈரான், ரஷ்யாவுடன் கூட்டு கொண்டு, சிரிய நிலைமீது கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு, தன்னையும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்கும் அச்சுறுத்தலுக்கான ஆயுதத் தயாரிப்புக்களையும் மேற்கொண்டுள்ளது; அதே நேரத்தில் கிரெம்ளின் இப்பிராந்தியத்தில் ஒரு மோதலைத் தவிர்க்க முற்படுகிறது. ரஷ்ய ஆளும் உயரடுக்கிற்குள் சீனா மற்றும் ஈரானுடன் நெருங்கிய உறவுகள் குறித்துத் தீவிர வேறுபாடுகள் இருந்தாலும், கிரெம்ளினுடைய வெளியுறவுக் கொள்கை தற்பொழுது மத்தியகிழக்கு, காகசஸ் பகுதியில் இருக்கும் இராணுவ மற்றும் இனவழி மோதல்கள் என ஒரு வெடிப்புத்தன்மை நிறைந்த அச்சத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது.

ஜனவரி மாதத்தில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி டிமிட்ரி ரோகோஜின், “ஈரானுக்கு ஏதேனும் நேர்ந்தால், ஈரான் ஏதேனும் அரசியல் அல்லது இராணுவ இடர்பாடுகளில் இழுக்கப்பட்டால், அது ரஷ்ய தேசிய பாதுகாப்பிற்கு நேரடி அச்சறுத்தல் ஆகும்.” என எச்சரித்தார்.

செல்வாக்கு மிக்க சிந்தனைக்குழுவான Strategic Culture Foundation  உடைய துணை இயக்குனர் ஆண்ட்ரே அரஷேவ், ஜூன் இறுதியில் மத்திய ஆசியா, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு ரஷ்யா, சீனா, ஈரான் ஆகியவற்றின் நிலப்பகுதி ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அரஷேவ் எனவே ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே “ஒரு மூலோபாயக்கூட்டு” தேவை என அழைப்பு விடுத்தார்: “ஈரானுக்கு வெகு அருகில் இருக்கும் அரபு நாடுகள் அழிக்கப்படுதல், அது ரஷ்யா, சீனா ஆகியவற்றிடம் இருந்து தொலை தூரத்தில் இருந்தாலும், இராணுவத் தலையீடு மற்றும் சிரிய நாட்டு சரிவு, சிரியா பெருங்குழப்பத்தில் ஆழக்கூடும் என்னும் முன்னோக்கு, நம் நாடுகளின் தேசியப் பாதுகாப்பில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும். வேறுவிதமாகக் கூறினால், ஈரான் தெருக்களில் போரைத் தடுக்கவும் அதன் பின் ரஷ்யத் தெருக்களில் போரைத் தடுக்கவும், நாம் நம் நட்பு நாடான சிரியாவிற்குத் துணையாக இருக்க வேண்டும்.”