சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Detroit election

டெட்ராயிட் தேர்தல்

Barry Grey and Andre Damon
9 August 2013

use this version to print | Send feedback

செவ்வாயன்று நடந்த டெட்ராயிட் மேயர் பதவிக்கான ஆரம்ப தேர்தலில் மைக் டுக்கன் மற்றும் பென்னி நெப்போலியன் ஆகிய இரண்டு வலது-சாரி வேட்பாளர்கள் நவம்பரில் நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு முன்னேறினர். இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சமாக வாக்களிப்பு எண்ணிக்கை மிக மிகக் குறைந்த விகிதத்தில் இருந்தது.

தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்குட்பட்ட ஒரு நிதி நெருக்கடியின் மத்தியில் டெட்ராயிட் நிற்கிறது. ஒப்பந்தங்களை உடைத்தெறிந்து தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார நல உதவிகளில் மிருகத்தனமான வெட்டுகளை திணிக்கும் பொருட்டும், சமூக சேவைகளை தனியார்மயமாக்கி வெட்டுவதற்காகவும், டெட்ராயிட் கலை நிறுவனத்தில் இருக்கக் கூடிய உலகப் புகழ்பெற்ற கலை சேகரங்கள் உட்பட்ட பொதுச் சொத்துகளை விற்பதற்கும் நோக்கம் கொண்டு வெகுஜனங்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்படாத “அவசரநிலை மேலாளர்”, நகரத்தை திவால்நிலைக்குள் தள்ளியிருக்கிறார். எல்லாம் எதற்காக என்றால் நகரின் பத்திரங்களை கையில் கொண்டிருக்கும் வங்கிகள் மற்றும் ஊக வணிகங்களின் முதலீடுகளை பாதுகாப்பதற்காக.

பதிவுசெய்த வாக்காளர்களில் வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே தேர்தலில் வாக்களித்தனர். இந்த பாரிய புறக்கணிப்பு என்பது தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையில் இருந்தும் அந்நியப்பட்டிருப்பதன் வெளிப்பாடாகும். தாங்கள் வாக்களிப்பதில் பிரயோசனமில்லை, யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அரசாங்கத்தின் கொள்கைகளை அது மாற்றப் போவதில்லை என்பதே பரந்த பெரும்பான்மையான டெட்ராயிட்வாசிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த விடயத்தில் அவர்களின் எண்ணம் முற்றிலும் சரியானதேயாகும்.

இதே எண்ணம் தான் நாடு முழுவதும் இருக்கும் எல்லாத் தொழிலாளர்களுக்குமே இருக்கிறது. நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜனநாயகமானது பெருநிறுவன-நிதிய மிகச்சிலவரின் ஒரு இரும்பு ஆட்சியை இனியும் மறைத்து விட முடியாது. ஜனாதிபதி ஒபாமாவும் சரி ஜனநாயகக் கட்சியும் சரி “நடுத்தர வர்க்கத்தின்” காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள முயன்ற போதிலும் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் இடையில் கணிசமான வித்தியாசங்கள் இருப்பது போல் நாடகத்தனம் காட்டுவது நாளுக்கு நாள் அபத்தம் என்றாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 2008 இல் வோல் ஸ்ட்ரீட் பொறிவு நடந்தது முதலாக, அத்தனை மட்டங்களிலான அரசாங்கங்களுமே - அவை தேசிய, மாநில அல்லது உள்ளூர் மட்டத்தில் என்றாலும் சரி, ஆட்சியில் அமர்ந்திருப்பது குடியரசுக் கட்சியினரானாலும் அல்லது ஜனநாயகக் கட்சியினர் ஆனாலும் சரி - தங்களை வசதி படைத்த ஒரு சதவீதத்தினரின் கருவியாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பெருமந்தநிலைக்கு பிந்தைய காலத்தின் மிக ஆழமான இந்தப் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பான நிதிய மற்றும் பெருநிறுவன கிரிமினல்களைப் பிணையெடுப்பதற்கும் அவர்களை மேலும் வளப்படுத்துவதற்கும் கணக்கில்லாத நிதி கிடைக்க முடிகிறது. அதே சமயத்தில் “பணமில்லை” என்ற பொய்யைச் சொல்லி பாரிய ஆட்குறைப்புகளும், ஊதிய வெட்டுகளும், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் சமூக சேவைகளின் அழிப்பும் நியாயப்படுத்தப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்தை தாக்குவதில் இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டு வேலை செய்கின்றன. டெட்ராயிட்டில் திவால்நிலையும் நகரத் தொழிலாளர்கள் மற்றும் சமூக சேவைகள் மீதான தாக்குதலும் ஜனநாயகக் கட்சியின் மேயர் மற்றும் குடியரசுக் கட்சியின் கவர்னர் ஆகியோரது ஆதரவுடன் தான் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறைக்கும் பரந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் குரோதத்தின் உருவடிவமாக ஒபாமா திகழ்கிறார். வெறுப்புக்கு உள்ளான ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகம் மற்றும் போர், சமூகப் பிற்போக்குத்தனம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகிய அதன் கொள்கைகள் ஆகியவற்றுக்கான ஒரு முற்போக்கான மாற்றாக தன்னை முன்நிறுத்தியே 2008 இல் ஒபாமா தேர்தலில் வென்றார். பதவியில் அமர்ந்த உடனேயே அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் மறுதலிக்கத் தொடங்கினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்களை தொடர்ந்தது, லிபியா மற்றும் சிரியாவில் புதிய போர்களை தொடக்கியது, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்தியது, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலை அதிகரித்தது என ஒபாமா, புஷ்ஷின் வலது சாரிக் கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறார். டெட்ராயிட்டுக்கு கூட்டரசின் உதவி எதனையும் அவர் நிராகரித்திருப்பதானது, நாடெங்கிலும் தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் வெட்டப்படுவதற்கான ஒரு முன்மாதிரியாக டெட்ராயிட்டின் திவால்நிலை நேர்வை பயன்படுத்திக் கொள்வதற்கு அவரது நிர்வாகம் ஆதரவளிக்கிறது என்பதையே குறித்துக் காட்டுகிறது.

ஒபாமா மீண்டும் தேந்தெடுக்கப்பட்டதானது - வோல் ஸ்ட்ரீட்டில் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி பெருத்த இலாபத்திற்கு விற்பதில் செல்வம் குவித்த கோடீஸ்வரர் ஒருவருக்கு எதிராக - நான்கு வருடங்களுக்கு முன்பாக அவரை அதிகாரத்திற்கு உயர்த்தியிருந்த வெகுஜனப் பிரமைகள் நிலைகுலைந்து போயிருந்ததை பிரதிபலித்தது. 2012 ஆம் ஆண்டின் வாக்குப் பதிவு 2008 இல் நடந்ததைக் காட்டிலும் 10 மில்லியன் வாக்குகள் குறைவாகப் பதிவாகியிருந்தது. ஒபாமாவுக்குக் கிடைத்த வாக்குகளும் கடுமையாய் சரிந்திருந்தன. 60க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் முதல் தடவையை விட இரண்டாவது தடவையில் குறைவான வாக்குவித்தியாசத்தில் வென்ற முதல் ஜனாதிபதியாக ஒபாமா ஆனார்.

2012 தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை எட்டியிருந்தோரில் வெறும் 57.5 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இது 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலையும் விடக் குறைவான வாக்குப் பதிவாகும். அமெரிக்காவில் வாக்காளர்களின் பங்கேற்பு நீண்டகாலமாகச் சரிந்து வருவதன் தொடர்ச்சியாக இது இருந்தது. இடைத்தேர்தல்களை பொறுத்தவரை 1970களின் ஆரம்பத்தில் இருந்ததைக் காட்டிலும் சுமார் 10 சதவீதப் புள்ளிகள் வரை சரிந்திருந்தன.

ஒவ்வொரு இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை, இரண்டு வலது-சாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையே தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தெரிவு மட்டுமே அமெரிக்க மக்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டு கட்சிகளுமே வோல் ஸ்ட்ரீட்டினால் நிதியாதாரம் அளிக்கப்படுவதும் கட்டுப்படுத்தப்படுவதும் ஆனவை என்பதோடு இராணுவ/உளவுத் துறை எந்திரந்தோடு ஒருங்கிணைந்தவை. தேர்தல்கள் பெருநிறுவனப் பணத்தினால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன என்பதோடு பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களால் கைப்புரட்டு செய்யப்படுகின்றன.

டெட்ராயிட் மேயர் தேர்தலைப் பொறுத்தவரை, இந்த ஒட்டுமொத்த நிகழ்முறையின் அடிப்படையான மோசடியும் வெளிப்படையாக இருக்கிறது. செவ்வாய் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய பெருநிறுவன மில்லியனர் டுக்கன் அல்லது போலிஸ் துறை முன்னாள் தலைவரும் இப்போது கவுண்டி ஷெரிபாக இருப்பவருமான நெப்போலியன் இருவரில் நவம்பர் தேர்தலில் யார் வென்றாலும், வங்கிகளின் சார்பாக சர்வாதிகாரத்தை செலுத்தக் கூடிய கெவின் ஓர் அவசர நிலை மேலாளராக பதவியில் நீடிக்கும் வரை புதிய மேயருக்கு எந்த அதிகாரத்தையும் செலுத்த முடியப் போவதில்லை.

முதனிலை வாக்கெடுப்பில் தொழிற்சங்கங்கள், போலிசாக இருந்து சட்ட ஒழுங்கு அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் நெப்போலியனை ஆதரித்ததன் மூலம் திவால்நிலைக்கும் டெட்ராயிட் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்குமான அவர்களின் ஆதரவை சமிக்கை செய்தன. டுக்கன் தொழில்நுட்பக் காரணங்களினால் வாக்குச்சீட்டில் இடம்பெற முடியாமல் பேரெழுதி வாக்களிப்பதற்கான வேட்பாளராகப் போட்டியிட்டார் என்ற நிலையிலும் கூட அவர் இந்த முன்னாள் போலிஸ் அதிகாரியைக் காட்டிலும் மிக அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பதில் இருந்தே தொழிலாளர்களுக்கு இந்த தொழிற்சங்க அமைப்புகளில் எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

நடப்பு நிலைமைக்கு உண்மையானதொரு மாற்றினை டுக்கன் பிரதிநிதித்துவப்படுத்துவதாக டெட்ராயிட்வாசிகளிடம் ஏதேனும் பிரமைகள் இருந்தாலும் கூட நவம்பரில் அவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் துரிதமாகவும் முரட்டுத்தனமாகவும் நொருங்கிப் போகும். எப்படியிருந்தபோதிலும், அவர் அதிகமான வாக்குகளைப் பெற்றவராக எழுந்திருப்பதில் ஒரு எதிர்ப்பு வாக்குகளின் கூறும் இருக்கிறது. ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளின் ஒரு ஊழலடைந்த வசதியானதொரு அடுக்கினால் நிர்வகிக்கப்பட்ட இந்த 40 ஆண்டுகளில் டெட்ராயிட் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ந்து சரிவு கண்டு வந்துள்ளதில் அத்தொழிலாளர்கள் சலித்துப் போய் விட்டனர்.

ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஆளும் உயரடுக்கின் சார்பாக டெட்ராயிட் மற்றும் பிற நகரங்களை நிர்வகித்துக் கொண்டிருக்கும் தொழிற்சங்க அதிகாரிகள், உத்தியோகபூர்வ குடிமை உரிமைகளின் பிரதிநிதிகள், மதகுருக்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் அடங்கிய இந்த அரசியல் ஸ்தாபகத்துடன் தொழிலாளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.  ஒரு பக்கம் இனவாத அரசியலின் அடிப்படையில் ஒரு சிறிய அடுக்கு தன்னை உயர்த்திக் கொண்டதின் விளைவாகவும் மற்றும் பிரதிநிதித்துவம் குறைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதான (Affirmative Action) வேலைத்திட்டங்களினாலும், இன்னொரு பக்கத்தில் ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலாளர்களின் பரந்த மக்களின் வாழ்க்கைத் தரங்களில் நாசகரமான ஒரு சரிவு நிகழ்ந்ததாலும் சமூகத் துருவமயமாக்கல் என்பது ஒட்டுமொத்த மக்களில் இருப்பதை விடவும் அதிகமாக ஆபிரிக்க-அமெரிக்கர்களுக்குள்ளாக இருக்கிறது.

2011 ஆம் ஆண்டில், ஆபிரிக்க அமெரிக்கர்களில் மிகச் செல்வம் படைத்த 10 சதவீதம் தான் அனைத்து ஆபிரிக்க-அமெரிக்கர்களின் மொத்த செல்வத்தில் 67 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இது 59 சதவீதமாக இருந்தது.

டெட்ராயிட்டிலும் மற்றும் நாடெங்கிலும் இருக்கும் உழைக்கும் மக்கள் மாற்றுகளை எதிர்நோக்குகின்றனர். அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பிரிவிலுமோ அல்லது அதன் இரண்டு பெருவணிகக் கட்சிகளிடமோ அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து உழைக்கும் மக்கள் அந்நியப்படுத்தப்படுவதென்பது மாபெரும் சமூக எழுச்சிகளுக்கு தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்லக் கூடிய ஒரு நிகழ்ச்சிப்போக்கின் பாகமாகும். இந்த புள்ளியில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரமயமாக்கம் என்பது பெருமளவில் ஒரு செயலற்ற வடிவத்தையே எடுத்திருக்கிறது. இது மாறும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் மேயர் வேட்பாளரான டி’ஆர்டக்னன் கோலியரும் மட்டும் தான் தொழிலாள வர்க்கத்திற்காக பேசினர், தேர்தல் பிரச்சாரத்தில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காய் போராடினர். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே திவால்நிலையை எதிர்த்ததோடு வெட்டுகளுக்கும் சலுகைகளுக்குமான எந்தக் கோரிக்கையையும் அல்லது அத்தனை கோரிக்கைகளையும் நிராகரிக்க தொழிலாளர்களை வலியுறுத்தியது.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் கண்ணியமான ஊதியமளிக்கும் ஒரு வேலை, சுகாதாரப் பராமரிப்பு, ஓய்வூதியம், தரமான பொதுக் கல்வி மற்றும் கண்ணியமான வீட்டு வசதி ஆகியவற்றை உத்தரவாதமளிக்கும் விதத்தில் அவசரநிலை மேலாளரை அகற்றுவது, சிட்டி கவுன்சிலை தொழிலாளர்களது கவுன்சிலைக் கொண்டு இடம்பெயர்ப்பது, பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை பொது உடைமைகளாக மாற்றுதல் உள்ளிட்ட சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவது ஆகிய இலக்குடன் டெட்ராயிட் பகுதியில் தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை அபிவிருத்தி செய்வதையே கோலியரின் பிரச்சாரம் மையமாகக் கொண்டிருந்தது.

ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் ஒழுங்கமைப்பதற்கும் டெட்ராயிட் பகுதியில் தொழிலாளர்களின் ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்கான இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கும் வேலையிடங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் அண்டை அருகாமைப் பகுதிகளிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியில் இருந்து சுயாதீனமாகி, தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் புதிய, ஜனநாயக அமைப்புகளை ஸ்தாபிக்க வேண்டும் என்று அவர் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வெட்டுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு முன்முயற்சியளித்த தீயணைப்பு துறையினர் மற்றும் ரியல் எஸ்டேட் ஊகவணிகத் துறையினருக்கு வழியமைத்துத் தரும் விதமாய் இடத்தைக் காலி செய்யக் கூறும் திட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்ற வாடகைக்கு குடியிருப்போர் உட்பட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் பெரும் வரவேற்பையும் நல்ல ஆதரவையும் பெற்றது.

செவ்வாய் தேர்தலைத் தொடர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய தலைமையைக் கட்டியெழுப்பும் பொருட்டு டெட்ராயிட்டிலும் தேசிய அளவிலும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான தனது போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த சோசலிச சமத்துவக் கட்சி நோக்கம் கொண்டுள்ளது. எப்படி ஆளும் வர்க்கம் அமெரிக்கா முழுவதிலும் உழைக்கும் மக்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கான முன்மாதிரியாக டெட்ராயிட்டை ஆக்க முனைகிறதோ, அதேபோல தொழிலாள வர்க்கமும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு முன்னுதாரணமாக ஆகும் வகையில் டெட்ராயிட் யுத்தத்தை தொடங்க வேண்டும்.