சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

A debate on the US-Australia alliance

SEP candidates challenge US ambassador

அமெரிக்க-ஆஸ்திரேலியக் கூட்டணி பற்றிய ஒரு விவாதம்

சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர்கள் அமெரிக்க தூதருக்கு சவால்

By Oliver Campbell 
10 August 2013

use this version to print | Send feedback

IQ2 எனப்படும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் மீது விவாதங்களை நடத்தும் அமைப்பு, ஆகஸ்ட் 1ல் சிட்னி அரங்கில் அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டணி குறித்து ஏற்பாடு செய்தது. “அமெரிக்க கூட்டு நம் (ஆஸ்திரேலியாவின்) மிகச் சிறந்த பாதுகாப்பு” என்ற கருத்திற்கு ஆதரவாக வெளியேறும் அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச் பேசினார்.

வரவிருக்கும் கூட்டாட்சி தேர்தல்களில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் இருந்து பேசி, ப்ளீச்சின் முயற்சிகளான கூட்டணியின் இராணுவவாதத் தன்மையை மறைப்பதை சவால் விடுத்து, இது சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் போருக்கான உந்துதலில் ஆஸ்திரேலிய மக்களையும் இணைக்கும் கருவி என்றனர்.

ப்ளீச் 2009ல் ஒபாமா நிர்வாகத்தால் தூதராக நியமிக்கப்பட்டதில் இருந்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், சீனா மீதான அதன் தாக்குதல் தயாரிப்புக்களில் முக்கிய கூறுபாடான அமெரிக்க இராணுவக் கட்டமைப்பில் ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைப்பில் மத்திய பங்கை ஆற்றியுள்ளார். அமெரிக்க தூதரகத்தின் வலைத் தளம், ப்ளீச் சமீபத்தில், வரலாற்றிலேயே மிகப் பெரிய அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவப் பயிற்சியை கண்டார் என்று குறிப்பிடுகிறது. டாலிஸ்மன் சாபெர் என்று பெயரிடப்பட்ட இப்பயிற்சி, கடந்த மாதம் க்வீன்ஸ்லாந்தில் நடைபெற்றது; இதில் 20,000 அமெரிக்க இராணுவ துருப்புக்கள், 10,000 ஆஸ்திரேலிய துருப்புக்கள், 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் என்ற தொடர்பு இருந்தது. சீனாவிற்கு எதிரான கடற்படை முற்றுகைக்கு இது ஒரு ஒத்திகையாக இருந்தது.

ஓர் அமெரிக்க கடற்படை தளத்தை டார்வினில் நிறுவுவதிலும் ப்ளீச் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்; அதைத்தவிர ஆஸ்திரேலிய அமெரிக்க ஆயுதப் படைகளிடையே ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு தொடர் நடவடிக்கைகளிலும் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது; இவை ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இருவரும் 2011ல் செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையின்கீழ் வந்துள்ளன.

விவாதத்திற்கான தன் ஆரம்ப பேச்சில் ப்ளீச் இச்சான்றை பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக, ஆஸ்திரேலியாவை எதிர்நோக்கியிருக்கும் முக்கிய அச்சுறுத்தல்கள், வளங்கள் பற்றாக்குறை, சைபர் குற்றங்கள் மற்றும் சர்வதேச குற்ற இணைய தளங்கள் குறித்துப் பேசினார். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ மோதல் குறித்து அவர் கவலையற்ற முறையில் மறுத்து, இழிந்த முறையில் அமெரிக்கா பிராந்தியத்தில் தன் இராணுவக் கட்டமைப்பின் மூலம் சீனாவைக் கட்டுப்படுத்த முயல்கிறது என்றும் கூற்றுக்களை கண்டித்தார்; இவை செய்தியாளர்களின் கற்பனைக் கருத்துக்கள், புஸ்தகங்களை விற்க உதவும் என்றார்.

சைபர் குற்றங்கள் பற்றி விவாதிக்கையில், ப்ளீச் ஆஸ்திரேலிய அரசாங்கம் உலகின் மக்களுக்கு எதிராக இயக்கப்படும் பாரிய அமெரிக்க ஒற்று நடவடிக்கையில் தொடர்பு குறித்து மறைமுகமான குறிப்புக்களைக் காட்டினார். சில சைபர் குற்றங்களில் ஈடுபடும் தளங்களை நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்: அவற்றில் சில அரசாங்கங்களை வீழ்த்த வேண்டும் என விரும்புகின்றன என்றார்; இது அமெரிக்க அரசாங்கம், செய்தி தெரிவிப்பவர்களான பிராட்லி மானிங், எட்வார்ட் ஸ்னோவ்டென் மற்றும் ஜூலியன் அசாஞ்சை குற்றம் சாட்டியிருப்பதை நியாயப்படுத்தும் உட்குறிப்பாகும்.

உத்தியோகபூர்வ அரங்கில் இருந்து ப்ளீச்சின் பொய்கள் பெரும்பாலும் சவால் அற்றுப் போயின.

தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு எதிராகப் பேசிய பேராசிரியர் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் ஜூ பெங், ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் வாஷிங்டனின் இராணுவக் கட்டமைப்புக் குறித்து, இது சீன தேசியத்திற்கு எரியூட்டும், சீனா இராணுவ வாதத்தில் ஈடுபட ஊக்கமளிக்கும் என எச்சரித்தார். ஜூ, அமெரிக்காவுடன் ஒரு மோதல் ஏற்படும் என்ற சீன ஆட்சியின் பரந்த பிரிவுகளின் அச்சத்தை வெளிப்படுத்தி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஒன்றாகச் செயல்பட வேண்டும் என பயனற்ற முறையில் ஒரு அழைப்பை விட்டார்.

பெயரளவிற்கேனும் கருத்தை எதிர்த்த வகையில், மேஜர் ஜெனரல் ஜிம் மோலன், முன்னாள் அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய ஆக்கிரமிப்பை நடத்திய சர்வதேச படைகளின் தளபதியும் இருந்தார். அவர் அடிப்படையில் அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டிற்கு ஆதரவு கொடுத்தார், ஆனால் ஆஸ்திரேலியா அமெரிக்காவை நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும் என்று வாதிட்டார். ஆஸ்திரேலியா வியத்தகு முறையில் இராணுவத்திற்கு செலவழிக்க வேண்டும், ஆஸ்திரேலிய ஏகாபத்தியத்தின் நலன்களை அதன் சொந்த உரிமையிலேயே தொடரும் திறனைக் கொண்ட இராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என்றார்.

அரங்கில் இருந்து ப்ளீச் எதிர்ப்பு எதையும் பெறவில்லை என்றாலும். பார்வையாளர்களில் நிறைய உறுப்பினர்கள் வினாக்களைத் தொடுத்து, அமெரிக்க இராணுவ வாதத்திற்கு எதிராகவும், அமெரிக்க-ஆஸ்திரேலியக் கூட்டின் பிற்போக்குத் தன்மை பற்றியும் கூறினர். அவர்களுக்கு ஒரு நிமிட நேரம்தான் கொடுக்கப்பட்டது.

தெற்கு சௌத் வேல்ஸில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரும், கட்சியின் தேசிய செயலாளருமான நிக் பீம்ஸ், கெவின் ரூட்டின் முதல் பிரதம மந்திரி பதவிக்காலத்தில் ஒபாமா இருமுறை ஆஸ்திரேலியாவிற்கு திட்டமிடப்பட்ட வருகைகளை இரத்து செய்தார் என்று குறிப்பிட்டார். ரூட் அகற்றப்பட்டபின், கில்லார்ட் பிரதம மந்திரியாக இருத்தப்பட்டபின்தான் அவர் வருகை புரிந்தார் என்றும் கூறினார்.

விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க தூதரகத் தந்திகளை பற்றிக் குறிப்பிட்டு பீம்ஸ் விளக்கினார்: அந்த நேரத்தில் அமெரிக்கா ரூட்டின் கருத்தான ஆசிய-பசிபிக் சமூகம் பற்றி விரோதப் போக்கைக் கொண்டிருந்தது என்பது இப்பொழுது நன்கு அறியப்பட்டுள்ளது; இதில் அமெரிக்கா, பிராந்தியத்தில் சீனாவின் அபிலாசைகள் சிலவற்றை ஏற்க வேண்டும், அப்பொழுதுதான் முதல் உலகப் போருக்கு முன் பிரித்தானியாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே ஏற்பட்ட நிலைமையை ஒத்த நிலைமை தவிர்க்கப்படலாம்.

2010ல் ரூட், தொழிற் கட்சி தலைவர்களாலும் தொழிற் சங்க அதிகாரத்துவத்தாலும் அகற்றப்பட்டது குறித்து பீம்ஸ் குறிப்பிட்டு, அவர்களில் பலரும் அமெரிக்க தூதரகத் தந்திகளில் பாதுகாப்பான அமெரிக்க சொத்துக்கள் என விளக்கப்பட்டதை கூறினார். ஒபாமாவின் முடிவான வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மாற்றத்தை, ஆசியாவில் மையம் என்பதை ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அறிவித்ததின் முன்னோடியற்ற தன்மையையும் அவர் கோடிட்டுக்காட்டினார்; இது மக்களின் முதுகுக்கு பின்னே, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் சீனாவிற்கு எதிரான போரைத் தயாரிக்கின்றன என்றார்.

ப்ளீச், பீம்ஸிற்கும், அரங்கில் இருந்து வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பட்டமான பொய்கள் மற்றும் இழிந்த தவிர்ப்புக்களின் கலவையாக பதிலளித்தார். ஒபாமா, ரூட்டின் முதல் பிரதமர் பதவிக்காலத்தின் வருகைகளை இரத்து செய்தது அமெரிக்காவில் இருந்த அரசியல் அபிவிருத்திகளை ஒட்டி என்றும், ஆசிய-பசிபிக்கில் ரூட்டின் கருத்துக்கள் குறித்து வாஷிங்டன் மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறினார். அக்கூற்று ப்ளீச்சின் சொந்தத் தூதரகத்தில் இருந்து வெளிப்பட்ட தூதரக தந்திகளாலேயே முரண்பாட்டிற்கு உட்பட்டது. (See: WikiLeaks cables expose US hostility to Rudds Asia Pacific Community plan)

மேற்கு ஆஸ்திரேலியாவிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரும், உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய தலைமை ஆசிரியருமான பீட்டர் சைமண்ட், கூட்டத்தில் இருந்து பேசினார். அமெரிக்க இராணுவத் தலையீடுகள் மனிதாபிமான நோக்கங்களுக்காக செய்யப்பட்டன என்ற ப்ளீச்சின் கூற்றின் மோசடித்தன்மையை அவர் அம்பலப்படுத்தினார். சைமண்ட், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கொள்ளை முறைகளைக் கண்டித்தார்; லிபியா மற்றும் இப்பொழுது சிரியாவில் ஆட்சி மாற்றங்களுக்கான செயல்களையும் கண்டித்தார்.

மத்திய ஆஸ்திரேலியாவில் இருக்கும், அமெரிக்க பைன் காப் தளம் (Pine Gap base) பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் யேமனில் நடக்கும் அமெரிக்க டிரோன் தாக்குதல்களை ஒருங்கிணப்பது குறித்த முக்கிய செயலையும் சைமண்ட் கோடிட்டுக் காட்டினார்; அதேபோல் இத்தளம் அனைத்து கிழக்குப் பகுதிகளிலும் அமெரிக்க இராணுவ செயல்களுக்கு மையம் என்னும் சமீபத்திய வெளிப்பாடுகளையும் சுட்டிக் காட்டினார். எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளிப்பாடுகளை சுட்டிக்காட்டி, அவர் அமெரிக்க அரசாங்கம் உலகின் மிகப் பெரிய சைபர் குற்ற இணையத்தைக் கொண்டு சட்டவிரோதமாக அமெரிக்கக் குடிமக்களையும் சர்வதேச அளவில் மக்களையும் கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளது என்றார். ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய நபர்கள் பெரும் போர்க்குற்றங்கள், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான முன்னோடியில்லாத தாக்குதல்கள் இவற்றிற்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சைமண்ட் கூறினார்.

சைமண்ட் இன் குற்றச்சாட்டுக்கள் எதற்கும் ப்ளீச் விடை தரவில்லை.

பிற பார்வையாளர்களும் அமெரிக்க, ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் குறித்த விமர்சனங்களை வெளிப்படுத்தினர். ஒருவர் ஒபாமா நிர்வாகம், ஜூலியன் அசாஞ்சை குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மற்றவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சான்றான ஆட்சிகளை உறுதிகுலைத்தல், அகற்றுதல் எனத் தன் நலனுக்காகச் செய்வதற்கு விரோதப் போக்கைக் காட்டினர். அதே போல் தொழிற்கட்சி அரசாங்கத்தின் முடிவான அமெரிக்க அணுச்சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், ஆஸ்திரேலிய துறைமுகங்களில் நிலை கொள்வதற்கும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஒரு வினா எழுப்பியவர், வாஷிங்டனின் ஆசிய மையம் என்பது சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும், இன்னும் சிலர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சர்வதேச நடவடிக்கைகளை, அதன் நலன்களை பெருக்குவதைத்தான் நோக்கம் கொண்டவை என்றனர்.

விமர்சனங்களை ஒதுக்கி வைத்த ப்ளீச், மேற்கூறிய கருத்துக்களுக்கு விடையளிக்கவில்லை; இழிந்த முறையில் தன் கருத்துக்களை முடிக்கும் வகையில் பார்வையாளர்களுடைய ஆத்திமூட்டும் வினாக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விவாதத்திற்கு முன் நடந்த வாக்கெடுப்பில், கிட்டத்தட்ட பார்வையாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்க ஆஸ்திரேலிய உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுத்தனர்; மூன்றில் ஒரு பகுதியினர் எதிர்த்தனர், மற்றும் மூன்றில் ஒரு பகுதி முடிவெடுக்கவில்லை. விவாதம் முடிந்த பின் எடுத்த வாக்கெடுப்பில் 54% கூட்டிற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர், ஆதரவு கொடுத்த சதவிகிதம் மாறவில்லை.

கூட்டத்தின் உணர்வில் ஏற்பட்ட கணிசமான மாற்றம் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் பிற பார்வையாளர்களின் தலையீட்டின் விளைவால் வந்தது என்பதில் ஐயம் இல்லை ஆஸ்திரேலிய அரசியல் நடைமுறை தகவலை நசுக்குவதில் அக்கறை கொண்டுள்ளது, ஆஸ்திரேலிய அரசாங்கம் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர்த்தயாரிப்புக்கள் குறித்த பரந்த மக்களின் விவாதங்களை தடுக்க முற்படுகிறது என்பதைக் காட்டுகிறது.