சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s New Anti-capitalist Party seeks to cover up its support for Middle East wars

பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மத்திய கிழக்கு போர்களுக்கான அதன் ஆதரவை மூடி மறைக்க முற்படுகிறது

By Alex Lantier 
13 August 2013

use this version to print | Send feedback

பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) உடன் நீண்டகால தொடர்புடைய பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார், தன் “சோசலிச” தகுதிகளில் எஞ்சியிருப்பவற்றை காப்பாற்றும் முயற்சியில், “சிறு குறுங்குழுவாதத்தின் மத்தியில், கண்டறியும் குணமுடைய கல்வியறிவற்ற நிலை” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

லண்டனின் கிழக்கத்திய மற்றும் ஆபிரிக்க ஆய்வுகள் பள்ளியில் பணிபுரியும், NPA தொடர்புடைய பிரித்தானியாவின் சோசலிச எதிர்ப்புக் குழுவிலும் உள்ள அஷ்கார், சிரியா மற்றும் லிபியப் போர்களுக்கு முக்கிய பிரச்சாரகராக இருந்துள்ளார்; இவை மனித உரிமைகளை  பாதுகாக்க முன்னெடுத்தது என்று கூறியிருந்தார். போர் ஆதரவுப் பிரச்சாரம், அவருடைய அரசியல் தோற்றத்தை அகற்றமுடியாத துற்நாற்றத்தில் ஆழ்த்திவிட்டது என்ற உண்மை இருந்தபோதிலும் அஷ்கார் இப்பொழுது மத்திய கிழக்குப் போர்களில் அவருடைய நிலைப்பாடு தவறாகத் திரித்துக் கூறப்படுகின்றன என்று கூறுகிறார். இவ்வகையில் அவர் Weekly Worker என்னும் கிரேட் பிரிட்டனின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CPGB) வெளியீட்டில், சரா மக்டோனால்ட் எழுதிய கட்டுரை ஒன்றை தாக்குகிறார்; அதில் அஷ்கார் ஒரு “சமூக-ஏகாதிபத்தியவாதி” எனக் கூறப்பட்டுள்ளது.

மக்டோனால்டின் அடைமொழியை உதறித்தள்ளுகையில் அஷ்கார் தன்னுடைய சீற்றத்தை “எண்ணற்ற அரசியல் படிப்பறிவில்லாத மக்களுக்கு” எதிராக, “அவரை நேட்டோ, லிபியாவில் தலையிட்டதற்கு ஆதரித்ததாக குற்றம் சாட்டியிருப்பவர்களுக்கு” எதிராக காட்டியுள்ளார். வரட்டுத்தனமாக அவர் சேர்த்துக் கொள்கிறார்: “என்னுடைய, வாசகர்களுடைய நேரத்தை நான் உண்மையில் எதற்கு நிலைப்பாடு கொண்டுள்ளேன் என்று நினைவுபடுத்தி வீணடிக்க விரும்பவில்லை.”

திரு. அஷ்கார் அவருடைய லிபியா, சிரியாவில் நவ-காலனித்துவ வகை முயற்சிகளுக்கான அரசியல் ஆதரவுச் சான்றுகளை பரிசீலிக்க அக்கறை கொண்டிராவிட்டாலும், அவர் தன் சொந்த வரலாற்றை மீண்டும் எழுத அனுமதிக்கப்படக்கூடாது. சான்று தெளிவாக உள்ளது: அஷ்கார் பகிரங்கமாக ஏகாதிபத்திய போர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார், அவை அமெரிக்க, பிரெஞ்சு உளவுத்துறை சொத்துக்களுடன் தொடரப்பட வேண்டும் என விவாதித்துள்ளார். நூறாயிரக்கணக்கான மக்களுடைய இறப்புக்களுக்கு அவர் அரசியல் ரீதியாக பொறுப்பைக் கொண்டுள்ளார்.

லிபிய நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, அஷ்கார் மத்திரதர வர்க்கத்தின் வசதி படைத்த இடது குழுக்குள் போர் ஆதரவுத் தளத்தை கட்டமைக்க ஏகாதிபத்தியத்திற்கு தேவைப்பட்ட பிரச்சாரத்தை நடத்தினார். மார்ச் 2011ல், ஐ.நா. பாதுகாப்புக்குழுத் தீர்மானம் 1973, லிபியாவில் போருக்கு ஒப்புதல் கொடுத்த இரண்டு நாட்களுக்குப்பின், அஷ்கார் போரை ஒரு மனிதாபிமான நடவடிக்கை, கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சி பெங்காசி எதிர்த்தரப்புக் குழுக்களை தாக்குவதை தடுக்க நடக்கிறது என்று பேட்டி ஒன்றில் பாராட்டினார்.

அஷ்கார்,  “தீர்மானத்தின் சொல்லாட்சியில் அதை ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு போதுமான பாதுகாப்பு முறைகள் இல்லை” என்றார். “ஆனால் படுகொலையை தடுக்கும் அவசரத் தன்மையில், அது தவிர்க்க முடியாமல் பெங்காசி மீது கடாபி சக்திகள் தாக்குதல் நடத்துவதை விளைவித்திருக்கும்; பாதுகாப்பு இலக்கை அடைவதற்கு மாற்றீடு ஏதும் இல்லாத நிலையில், எவரும் இதை நியாயமாக எதிர்க்க முடியாது... ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கை என்ற பெயரில் நீங்கள் குடிமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையை எதிர்க்க முடியாது.”

நேட்டோ ஆதரவுடைய எதிர்த்தரப்பின் வலதுசாரி அரசியலை அவர் ஒப்புக் கொண்டார்; ஆனால் போரை, எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை ஒரு மாதம் முன்பு வீழ்த்திய தொழிலாள வர்க்கப் புரட்சிகர போராட்டங்களுக்கு ஒப்ப உள்ளது என்று பாராட்டினார். நேட்டோவின் லிபிய நட்புகளை “மனித உரிமைகள் செயலர்கள், ஜனநாயகத்திற்கு வாதிடுபவர்கள், அறிவுஜீவிகள், பழங்குடிக் கூறுபாடுகள் மற்றும் இஸ்லாமிய சக்திகள் இவற்றின் கலவை என்றார்... இது ஒரு பரந்த கூட்டணி. முக்கியமான கருத்து, பிராந்தியத்தின் வெகுஜன எழுச்சி என்பதைத் தவிர வேறு ஏதும் அவர்கள் பற்றிக் கூறப்படத் தேவையில்லை.”

இரண்டு ஆண்டுகளுக்குப்பின், அஷ்கார் ஏற்றுக்கொண்ட போர், ஒரு ஏகாதிபத்திய கொள்ளைச் செயல் என்பது தெளிவாயிற்று. நேட்டோ சக்திகள் லிபியாவின் எண்ணெய் வருமானங்களையும் எண்ணெய் வயல்களையும் பற்றிக் கொண்டன, நகரங்களை அழித்தன, திரிப்போலி, சிர்ட்டே உட்பட, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றன அல்லது காயப்படுத்தின. நேட்டோவின் முக்கிய பினாமிப்படையாக செயல்பட்டு கடாபியை அகற்றிக் கொலை செய்த இஸ்லாமியவாத போராளிகளின் தற்காலிக இணைப்பு மூலம் ஒரு நேட்டோ எடுபிடியை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தது.

நேட்டோ இன்னும்அதிக ஆயுதங்களை லிபிய எதிர்ப்புப் போராளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று பலமுறை கோரினார். இவ்வகையில் போர் பற்றிய ஒபாமாவின் ஏப்ரல் 2011 உரைக்கு ஆதரவுக் கருத்தாக அவர், “லிபிய மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஏற்ப, எழுச்சி வெற்றி பெறுவதற்கு, பாசாங்குத்தன மேற்கத்தைய அரசாங்கங்கள் எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும்—அவை நிறைய ஆயுதங்களை அக்டோபர் 2004 இதே ஆயுதத் தடை அகற்றப்பட்டபோது கடாபிக்கு விற்றன.”

2011 ஆகஸ்ட்டில் அஷ்கார், லிபியாவை இன்னும் கடுமையாகத் தாக்காததற்கு நேட்டோவை குறை கூறினார். வலதுசாரி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கட்டுரையாளர் மாக் பூட்டின் கருத்தை மேற்கோளிட்டு நேட்டோ போர் விமானங்கள் 11,107 தடவை லிபியாவிற்கு எதிராகப் பறந்துள்ளன, ஆனால் 1999 போரில் கொசோவோவிற்கு மேல் சேர்பியாவிற்கு எதிராக 38,004 தடவை பறந்துள்ளன என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்

அவர் எழுதினார், “பின் முக்கியமான கேள்வி இதுதான்: லிபியாவில் ஏன் நேட்டோ குறைந்த தன்மையுடடைய வான் தாக்குதலை நடத்திவருகிறது; இது எண்ணெய் வளம் உடைய ஈராக்கை கைப்பற்ற நடத்தப்பட்ட போரில் இருந்த வான் தாக்குதலை விடக் குறைவு, ஏன் பொருளாதார அளவில் அவ்வளவு முக்கியமற்ற கோசோவோப் போரை விடக்குறைவு? ஏன் அதே நேரத்தில் கூட்டணி எழுச்சியாளர்களுக்கு தொடர்ந்து அவை வலியுறுத்திக் கோரும் ஆயுதங்களை அளிக்க மறுக்கிறது?”

அஷ்கார் போருக்குக் கொடுக்கும் ஆதரவு, ஏகாதிபத்திய முகாமில் போலி இடது மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளின் தடையற்ற இயக்கம் இருப்பதின் உச்சக் கட்டத்தை குறிக்கிறது. போருக்கு செய்தி ஊடக விளம்பரதாரர் போல் அவர் செயல்பட்டது மட்டுமின்றி, மூலோபாயம் இயற்றுபவராகவும் செயல்பட்டு, அமெரிக்க, பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரிகளுடன் மற்றும் ஒத்துழைப்பாளர்களுடன் போர்களை எவ்வளவு சிறந்த முறையில் அளிக்கலாம் அதையொட்டி அவற்றிற்கான மக்கள் எதிர்ப்பைக் குறைக்கலாம் என்பதை நெருக்கமாகப் பழகி எடுத்துரைத்தார். 

அவருடைய சமீபத்திய கட்டுரையில் அஷ்கார், அக்டோபர் 2011 ல் அவர் ஸ்வீடனில் சிரிய தேசியக் குழு (SNC) என்னும் எதிர்த்தரப்பின் தலைவர் பர்கன் காலியோனைச் சந்தித்த சூழ்நிலையை சுற்றி இருந்த உண்மைகளை சிதைக்கப் பார்க்கிறார். இப்பேச்சுக்களின்போது அவர், காலியோனிடம் சிரியாவில் நேட்டோ படையெடுப்பிற்கு அழைப்புவிடக்கூடாது என்றும்—அது பரந்த மக்கள் எதிர்ப்பைத் தூண்டும்—எதிர்த்தரப்பிற்கு ஆயுதங்கள் அளிக்கும் மறைமுக தலையீட்டை நாடுமாறு ஆலோசனை கூறினார்.

எப்படிப்பார்த்தாலும், இக்கொள்கையைத்தான் நேட்டோ இறுதியில் பின்பற்றியது. SNC, இன்னும் பிற இஸ்லாமியவாத சக்திகள் அவற்றுள் சில அல்குவேடாவுடன் பிணைந்தவை ஆயுதங்களை பெற்றன. இது பேரழிவு தரும் பினாமிப் போரை சிரியாவில் நடத்த வகை செய்தது, இரண்டு ஆண்டுகளில் போர் 100,000 உயிர்களை கவர்ந்துவிட்டது, மில்லியன் கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு ஓடச்செய்து விட்டது.

தற்போதைய கட்டுரையில் அஷ்கார், “நான் சிரிய தேசியக் குழுவில் பங்கு பெற்றேன் (உண்மையில் அது தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் இடதுசாரிகளின் கூட்டம்), அவர்களை ஏகாதிபத்திய தலையீடு சிரியாவிற்கு தேவை என வலியுறுத்துவதற்கு என்பதற்காக (கூட்டத்தில் என் பங்களிப்பு முற்றிலும் எதிரானதாக அமைந்தது)” என்னும் கூற்றுக்கள் புரளி என்று கண்டித்தார்.

அஷ்கார் மறுப்பது அபத்தமானதாகும். அவரே பகிரங்கமாக காலியோனைச் சந்தித்ததாகவும், நவம்பர் 2011ல் லெபனிய நாளேடான அல் அக்பரில் வெளியிட்ட கட்டுரையில் SNC க்கு கொடுத்த ஆலோசனையையும் விளக்கியுள்ளார். NPA இக்கட்டுரையை, அதன் ஆங்கில வலைத் தளமான Inernational Viewpoint ல் மீண்டும் வெளியிட்டது.

இக்கட்டுரையில் அவர் எழுதியிருந்தார்: “அக்டோபர் 8-9ல் ஸ்வீடனில் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு அருகே நடைபெற்ற சிரிய எதிர்ப்புக் கூட்டத்தில் நான் பங்கு கொள்ள முடிந்தது. சிரியாவில் மற்றும் வெளிநாட்டில் தீவிர செயலர்களாக இருக்கும் பல ஆடவரும் பெண்டிரும், சிரிய  ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய நபர்களுடன் வந்திருத்தனர்—இதில் சிரிய தேசியக் குழுவின் மிக முக்கிய உறுப்பினர், அதன் தலைவர் பர்ஹன் காலியோனும் இருந்தார்.”

பேராசிரியர் அஷ்கார் தன் மனத்திருப்திக்கு பொய்கூறலாம், ஆனால் அவருடைய பிற்போக்குத்தன அரசியல் பங்கின் புறநிலையான சான்று இணைய தளம் முழுவதும் கறைகளை விட்டுச் சென்றுள்ளது.