சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Australian SEP candidate arrives in Colombo

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர் கொழும்பு வருகை

By our correspondent
15 August 2013

use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) துணை தேசியச் செயலாளரும் ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடும் தென் ஆஸ்திரேலியாவுக்கான செனட் வேட்பாளருமான ஜேம்ஸ் கோகன், தனது இலங்கை பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஆகஸ்ட் 14 அதிகாலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த கோகனை, முன்னணி சோசலிச சமத்துவ கட்சி (இலங்கை) உறுப்பினர்கள் வரவேற்றனர்.


ஜேம்ஸ் கோகன்
உடன் இலங்கை
சோசலிச சமத்துவ கட்சியின் துணை தேசிய செயலாளர் தீபால் ஜெயசேகரா

கோகன் முறையே ஆகஸ்ட் 15 மற்றும் 17ம் தேதிகளில் கொழும்பு மற்றும் காலியில் கூட்டங்களில் உரையாற்றுவதோடு, ஆகஸ்ட் 16 அன்று கொழும்பில் நிப்பான் ஹோட்டலில் ஒரு செய்தியாளர் கூட்டத்திலும் பங்கேற்பார். அவரது சுற்றுப்பயணம், செப்டம்பர் 7 அன்று நடக்கவுள்ள ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலுக்கான சோ...யின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே ஆகும். சீனாவிற்கு விரோதமாக அமெரிக்கத் தலைமையில் வளர்ந்து வரும் யுத்த ஆபத்துக்கு எதிராக, ஆசியா-பசிபிக் பிராந்தியத்திலும் சர்வதேசம் முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதே சோ.ச.க.யின் தேர்தல் பிரச்சாரத்தின் மைய இலக்காகும்.

"நான் கொழும்பு மற்றும் காலியில் பொது கூட்டங்களில் உரையாற்ற ஆவலோடு உள்ளேன். ஆஸ்திரேலியாவில் எமது தேர்தல் தலையீடானது போர், வாழ்க்கை தரங்கள் அழிப்பு மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் நடவடிக்கையின் ஒரு பாகமே ஆகும், என கோகன் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் ஒவ்வொரு நாடும் வாஷிங்டனின் போர் திட்டங்களுக்குள் இழுபட்டு வருகின்றன என்று கோகன் கூறினார். "அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் ஆஸ்திரேலிய அரசியலிலை முற்றிலும் ஒழுங்குபடுத்தும் பொருட்டு, வாஷிங்டனின் தலையீட்டுடன் 2010ல் ஒரு ஜனநாயக-விரோத ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கெவின் ரூட் பதவி நீக்கப்பட்டார். இதன் விளைவாக, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் மற்றைய தளங்களிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்க கடற்தரைப் படை, இப்போது செயற்கைக்கோள் மூலம் உளவு பார்ப்பதற்கும் பாக்கிஸ்தான் மற்றும்
ஆப்கானிஸ்தானில் நேரடி ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தவும் அமெரிக்கவால் பயன்படுத்தப்படுகிறது. இந்த விடயங்கள் அமெரிக்க செய்தி வெளிவிடுபவவரான எட்வார்ட் ஸ்நோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன."

போருக்கான எதிர்ப்பு, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கோகன் கூறினார். ஐ.நா. மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு அடிபணிந்து போனதால், 2003ல் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பிற்கு எதிராகத் தோன்றிய போர் எதிர்ப்பு இயக்கம், அரசியல் ரீதியில் பலவீனமாகிப் போனது. "தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் இதுவேயாகும்," என்று அவர் கூறினார்.

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பூகோள-அரசியல் அழுத்தங்களுக்குள் இலங்கையும் அகப்பட்டுக்கொண்டுள்ள நிலைமையிலேயே கோகன் வருகை தந்துள்ளார். ஒபாமா நிர்வாகம், சீனாவை தனிமைப்படுத்தும் அதன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெய்ஜிங்கிடம் இருந்து தூர விலகுமாறு இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது. பெய்ஜிங், தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்துக்கு முக்கிய ஆயுத மற்றும் நிதி வழங்குனராக ஆகியிருந்தது. பண பற்றாக்குறை கொண்ட இலங்கை அரசாங்கம், சீனாவின் கடன் உதவியிலேயே பெரிதும் சார்ந்து இருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் பிரிவான, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள், பொது கூட்டங்களுக்காக கொழும்பில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் பல பல்கலைக்கழகங்களிலும் பிரச்சாரம் செய்தனர். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்களுடன் பேசியவர்கள், கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ள உலக நிதி நெருக்கடி, அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஏகாதிபத்திய போருக்கான உந்துதல், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் அவசியம் போன்ற விடயங்கள் பற்றி ஆர்வங் காட்டினர்.