சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The working class and the defense of the Detroit Institute of Arts

தொழிலாள வர்க்கமும் டெட்ரோயிட் கலைக்கூட பாதுகாப்பும்

David Walsh
14 August 2013

use this version to print | Send feedback

சமீபத்தில் நகரவையானது கிறிஸ்டியின் ஏல நிறுவனத்தை அணுகி டெட்ரோயிட் கலைக்கூடச் சேகரிப்புக்களை மதிப்பீடு செய்ய இருப்பதாக டெட்ரோயிட்டின் அவசரகால மேலாளரான கெவின் ஓர் அறிவித்துள்ளார் —இது நகரவைக்குக் கடன் கொடுத்தோரின் நலனுக்காக விற்பனை செய்வதற்கான சாத்தியமான ஒரு கண்வைப்பாகும் இந்த அறிவிப்பு பல மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீற்றம் என்பது ஒரு ஆரோக்கியமான விடையிறுப்புத்தான்; ஆனால் டெட்ரோயிட் கலை அருங்காட்சியகத்திற்கான அச்சுறுத்தலின் பாரிய தேசிய மற்றும் சர்வதேச உட்குறிப்புக்களை தேவையான முடிவுகளினூடாக சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும்.

டெட்ரோயிட் கலைக்கூடமானது (DIA) கலைத்துவ விம்பங்கள் வடிவில் உலக உணர்வை உருவாக்கும் அதனுடைய முயற்சியில் மனிதகுலத்தின் வியத்தகு சாதனைகளை ஒன்றாகக் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளது. இந்த விலைமதிப்பற்ற படைப்புக்களின் விதி கறைபடிந்த நிதிக் கொள்ளையர்களினதும் அவர்களின் எடுபிடிகளின் கரங்களில் உள்ளது என்பதை உணருகையில் நாம் வெறுப்புத்தான் அடையமுடியும்.

DIA க்கான அச்சுறுத்தல், இறுதியில் செயற்படுத்தப்பட்டாலும், செயற்படாவிட்டாலும், கலாச்சாரத்திற்கான அச்சுறுத்தல் குறித்தும், தற்பொழுது நிலவும் சமூக ஒழுங்கில் உழைக்கும் மக்களின் அனைத்துவித சமூக உரிமைகளுக்கு காட்டும் அச்சுறுத்தல் பற்றியும்தான் பேசுகிறது.

ட்ரொட்ஸ்கி ஒருமுறை விளக்கியபடி, “கலையினதும் மற்றும் முதலாளித்துவ சமூக உறவுகளினதும் சகவாழ்வு சாத்தியமாக இருப்பது அரசியலளவிலும் அறநெறியளவிலும் பூர்சுவாசி ‘ஜனநாயகத்தை ஆட்சியில் வைத்திருக்கும் வரை மட்டும்தான்”. ஆளும் உயரடுக்கு அதே சகாப்தத்திலேயே கலைஞர்களையும் குறிப்பிட்ட சில அமைப்புக்களையும் பராமரித்து, அதற்கு தொழிலாள வர்க்கத்தின் உயரடுக்கிற்கு “சிறப்புச் சலுகைகளை கொடுத்து தக்கவைத்துக் கொண்டது”, மேலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களையும் தொழிலாளர்கள் கட்சிகளையும் தேர்ச்சியடையச் செய்தும் அடக்கி தன் கீழும் வைத்திருந்தது என அவர் தொடர்ந்து கூறினார். “இந்த நிகழ்வுப்போக்குகள் அனைத்தும் ஒரே வரலாற்றுத் தளத்தில் நிலவுகிறது.”

உலக மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியானது அந்த சகவாழ்வுத்  தன்மையை கடந்த காலத்திற்கு உரியதாக்கிவிட்டது. DIA க்கான அச்சுறுத்தல் “அதே வரலாற்றுத் தளத்தில்” உள்ளது; அதாவது தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளில் பேரழிவு, ஓய்வூதியங்கள் பிற நலன்கள் அழிக்கப்படல் மற்றும் மில்லியன் கணக்கான மக்களை சமூகத் துயருக்குள் தள்ளி வைத்திருத்தல் என்பவற்றில்.

சலுகைபடைத்த பிரபுக்களும் கடந்த காலத்திய தொழிற்துறை தொழிலதிபர்களினதும் உயர்ந்த குறிக்கோளின்றி, தற்போதைய நெருக்கடி ஆளும் உயரடுக்கிற்குள் ஆழ்ந்த புத்திஜீவித, கலாச்சார சரிவை வெளிப்படுத்தியுள்ளது. டெட்ரோயிட்டின் செல்வந்தர்கள் 19ம் நூற்றாண்டுக் கடைசியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதிகளிலும், DIA உடைய சேகரிப்புக்களை கட்டமைத்து, முணுமுணுப்புடனோ மற்றபடியோ, பொதுமக்கள் அவற்றை அணுக வாய்ப்பளித்தனர். ரஷ்யப் புரட்சியின் உதாரணம் மற்றும் 1930ல் தொழிலாளர் எழுச்சிகள் நகரவையின் உயரடுக்கை தொழிலாள வர்க்கத்தின் கலாச்சாரக் கோரிக்கைகளுக்கு சில சலுகைகளை அது அளிக்க வேண்டியிருந்தது.

டெட்ரோயிட்டின் அசெம்பிளி லைன் தயாரிப்பின் பிறப்பிடத்திற்கும், DIA உடைய தன்மை மற்றும் அதனுடைய முறையீடு இவற்றிற்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பு உள்ளது. இதன் பாரிய கார்த் தொழில் ஆலைகளால் மெக்சிக்கன் கலைஞர் டீயேகோ ரிவேரா இப்பகுதிக்கு 1932-33ல் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய கலைத்துவ பார்வையின் அழிக்கமுடியாத நிரூபணத்தையும், புதுப்பிக்கப்பட்ட அவருடைய சமூக உறுதிப்பாட்டையும் சுவர்ச் சித்திர ஒப்பனையையும் அரங்கின் மையப் பகுதியில் விட்டுச் சென்றார். அந்நிகழ்வும் நகரவையின் எழுச்சி கொண்ட தொழிலாள வர்க்கத்தின் வரலாறும் ஆளும் வர்க்கத்தை தொடர்ந்து உறுத்துகின்றன, பொதுவாக டெட்ரோயிட், குறிப்பாக DIA மீது பழிவாங்கும் தன்மைக்கு பெரும் காரணத்தையும் அளித்துள்ளன.

1965ல் தேசிய கலைக்கான அறக்கட்டளை (NEA) தோற்றுவிக்கப்பட்ட நேரத்தில், ஜனாதிபதி லிண்டன் பி. ஜோன்சன் அறிவித்தார்: “கலை என்பது ஒரு தேசத்தின் மிக விலையுயர்ந்த மரபியம். நம்முடைய கலைப்படைப்புக்களில்தான் நாம் நம்மை வெளிப்படுத்துகிறோம், நம்மை ஒரு தேசம் என்று இயக்கும் உட்பார்வையை பிறருக்கு வெளிப்படுத்துகிறோம். எங்கே பார்வை இல்லையோ அங்கே மக்கள் அழிந்து விடுவர்.”

இத்தகைய கருத்து ஒரு வாடிக்கையான, கட்டாய கூறுபாட்டையும் கொண்டிருந்தது என்பது உண்மையே. ஆனால் அது கலை அமைப்புக்கள் மீது மாறுபட்ட அணுகுமுறையை பிரதிபலித்தது, குறிப்பாக பனிப்போர் சூழலில்; அப்பொழுது அமெரிக்க ஸ்தாபனம் குறைந்தபட்சம் அது உதட்டளவு மரியாதையை கலைப் புதுமைக்கு கொடுத்தல் மற்றும் ஓரளவு அரசாங்க ஆதரவை கலைகளுக்குக் கொடுக்கும் கட்டாயத்தை உணர்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் சரிவு மிக மேம்போக்கான மற்றும் குற்றம்சார்ந்த போக்குகளை, அமெரிக்க ஆளும் வட்டங்களுள் இருப்பதை செழிப்பதற்கு ஊக்கப்படுத்திவிட்டது.

DIA அனுபவமானது எல்லா இடங்களிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை ஆகும். முதலாளித்துவத்தின் கீழ், கலை என்பது பிறவற்றைப்போல் வாங்கி, விற்கும் ஒரு பண்டமாகும். மனிதகுலத்தின் கலாச்சார சாதனைகள், மனிதகுலத்திற்கு உரியவை என்னும் கருத்துருவினால் சக்திகள் வழிகாட்டப்படவில்லை. மாறாக, பிரபுத்துவக் கொள்கை, —நாம் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளதுபோல்— தற்போது நிலவும் சமூக ஒழுங்கின் சிதைவினதும் வீழ்ச்சியினதும் பகுதியாக ஒரு மீள்வருகையாக உருவாகிவிட்டது.

மூர்க்கமான நிதிய நோக்கங்களுடன், DIA க்கு எதிரான அச்சுறுத்தலானது ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் வலுவான உணர்வான பெரும் கலை என்பது உயரடுக்கின் களிப்பிற்கும் திருப்திக்கும்தான் இருக்கிறது, பெரும்பாலும் வறிய மக்கள் வசிக்கும் ஒரு நகரம் அத்தகைய நிறுவனத்தை வைத்திருக்க சிறிதும் உரிமை இல்லை என்பதாக உள்ளது. ப்ளூம்பேர்க், கட்டுரையாளர் வேர்ஜீனியா போஸ்ட்ரெல் ஜூன் மாதம் குறிப்பிட்டார்: “பெரும் கலைப்படைப்புக்கள் ஒப்புமையில் செல்வாக்கற்ற அருங்காட்சியகத்தால் பணயமாக வைக்கப்படக்கூடாது, அதுவும் சரிந்துவரும் ஒரு பிரதேசத்தில். அது வளர்ந்துவரும் நகரங்களுக்கு விற்கப்பட்டால், கலையின் நோக்கம் நல்ல முறையில் நடைபெறும், அங்குதான் அருங்காட்சியகத்திற்கு மக்கள் வருகை கணிசமாக உள்ளது, காட்சிக் கலை டெட்ரோயிட்டில் எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாகப் போற்றப்படும்.”

இத்தகைய ஜனநாயக விரோத கருத்துருக்களுடன் பிணைந்துள்ளதுதான், தொழிலாள வர்க்கத்திற்கு கலாச்சாரம், புத்திஜீவித விழிப்புணர்வை மறுக்கும் கருத்தியலாகும். இதையொட்டி அதன் உரிமைகள், நிலைமைகள் இன்னும் தாக்குதலுக்கு உள்ளாகும். “கடந்த நூற்றாண்டுகளின் கலை மனிதனுக்கு மிகவும் சிக்கலாகவும் நெகிழ்வுத் தன்மையையும் கொண்டிருந்தது, மனிதனுடைய உள்ளத்தை பலவகைகளிலும் செழிப்புறச் செய்ததுடன், அவனுடைய ஆன்மாவை ஒரு உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்துகிறது” என்னும் ட்ரொட்ஸ்கியின் கூற்று சரி என்றால், “பழைய கலை மீதான சிறப்பாளுமை, ஒரு புதிய கலையைத் தோற்றுவிக்க தேவையான முன்னிபந்தனை என்பது மட்டுமல்லாமல், புதிய சமூகம் ஒன்றைக் கட்டமைப்பதற்கும் தேவையாகும்”; அப்படியானால் அதிகாரத்தில் இருப்பவர்கள் கலை மீது கொண்டிருக்கும் விரோதப் போக்கு மற்றும் அச்சம் என்பது இன்னும் நல்ல முறையில் அனைத்தும் புரியக்கூடியதாகும்.

நியூ யோர்க் டைம்ஸ் சமீபத்தில் “கலை கடின நேரத்தில்” என்னும் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தது; இதில் பல பங்களிப்பாளர்கள் “டெட்ரோயின் கலைக்கூடத்திலிருந்து நகரவையின் கடன்களை தீர்க்க படைப்புக்களை விற்பது நல்லதா, உதவுமா” என்று பேசினர். ஓர் மற்றும் பிற டெட்ரோயின் அதிகாரிகள், DIA சேகரித்து வைத்துள்ளவை காப்பாற்றப்படுவது, “ஆயிரக்கணக்கான தீயணைப்பு படையினர்கள், செவிலியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள் இன்னும் பிற ஆட்சித்துறை ஊழியர்களின் ஓய்வுதியங்களுக்கு” எதிராக நிறுத்திப் பார்க்கப்பட வேண்டும் எனக்கூறிய அளவில் விவாதம் தீவிரமானது.

இந்த தவறான, தீய “விருப்பத் தேர்வு” DIA மற்றும் தொழிலாளர்கள் ஓய்வூதியங்களை அழிக்க முற்படுவோரால் முதலிலேயே கொடுக்கப்படுகிறது. டெட்ரோயிட் மக்களுக்கு 1885ல் இருந்து அணுகும் வாய்ப்பைக் கொண்ட கலைப் படைப்புக்களை விற்றுவிடும் திறனுடைய ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மற்றவற்றை திருடுவது குறித்து இருமுறை சிந்திக்காது. ஏற்கனவே இது அத்திசையில் பெரும் முன்னேடுப்பைக் கண்டுள்ளது, கார்த் தொழிலாளர்களுடைய ஊதியத்தைப் பாதியாகச் செய்ததின் மூலம், நகரவையில் ஆயிரக்கணக்கான வேலைகளை அகற்றிய வகையில், முக்கிய பணிகளை தனியார்மயமாக்கிய விதத்தில், மற்றும் பொதுவாக நகரத்தின் மக்களை வறுமையில் தள்ளிய தன்மையில். இதற்குப் பொறுப்புக் கூறாமல் செல்ல இவர்கள் அனுமதிக்கப்பட்டால், ஓரும் பிறரும் DIA படைப்புக்களை விற்று, தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள், சுகாதார நலன்களையும் அழிப்பார்கள்.

ஓரும் பிற அதிகாரிகளும் நெருக்கடியில் இருக்கும் ஒரு நகரவையை காப்பாற்ற உண்மையான முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்னும் கருத்தை, நல்ல நாணயம் எனக் கொள்பவர்கள், தங்களைத்தான் ஏமாற்றிக் கொள்ளுவர், தெரிந்தோ, தெரியாமலோ பிறரையும் தவறான வழியில் இயக்குவர். வங்கிகள் மற்றும் சொத்துக்களைப் பறிப்போரின் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதிதான் அவசரகால மேலாளர், அவருடைய நோக்கங்கள் அமைப்புமுறை நெருக்கடியின் செலவை தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் சுமத்துவது என்னும் இலக்குத்தான்.

DIA க்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலானது முதலாளித்துவ சமூகத்தில் நிதிய, புத்திஜீவித, அறநெறித்தன்மை தீர்ந்துவிட்டதைத்தான் வெளிப்படுத்துகிறது. அருங்காட்சியகத்தில் இருக்கும் கலைப்படைப்புக்களை விற்றல் என்பது சமூக காட்டுமிராண்டித்தனத்தின் புதிய அலையை மடைதிறப்பது போல் ஆகும். DIA வைப் பாதுகாக்கக்கூடிய திறன் கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான்: இதற்குத்தான் கலாச்சாரம், அறிவு இவைகளை பெற்றுக்கொள்ளும் கேள்வி வாழ்வா, சாவா என்னும் விடயமாகும்.