சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Clashes spread in Egypt amid rising death toll from army massacre

இராணுவ படுகொலையை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் எகிப்தில் மோதல்கள் பரவுகின்றன

By Alex Lantier 
16 August 2013

use this version to print | Send feedback

எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு, எதிர்ப்புக்களை இரத்தத்தில் மூழ்கடித்து அடக்குவது என்னும் முயற்சிகளை தொடர்ந்து நேற்று எகிப்து முழுவதும் மோதல்கள் வெடித்தன. புதன் படுகொலையையடுத்து, அகற்றப்பட்ட இஸ்லாமியவாத ஜனாதிபதி முகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கிலுமுள்ள அரசாங்கக் கட்டிடங்களை தாக்கினர்.

ஜூலை 3இல் நடைபெற்ற ஆட்சி சதியில் இராணுவம், முர்சியின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கும் ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக 2011ல் நடந்த எழுச்சிக்கு முன் இருந்த இராணுவ ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து பரந்த தொழிலாள வர்க்கம் எழுச்சி பெறுவதை முன்கூட்டியே தவிர்க்கும் நோக்கத்தில் முர்சியை பதவியகற்றியது. புதன் இரத்த வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகி, மோதல்கள் பரவிய நிலையில், இந்த ஆட்சி சதியானது எகிப்தை உள்நாட்டுப் போரின் பாதையிலும், வெகுஜன மக்கள் எழுச்சியினுள்ளும் தள்ளியுள்ளது.

புதன் படுகொலைகளில் பலியானவர்களுடைய உறவினர்கள் ஆயிரக்கணக்கில் இறந்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பிரேதச்சாலைகளுக்கும் மசூதிகளுக்கும் சென்றனர். அவர்கள்இராணுவமும் பொலிசும் ஒரே கறைபடிந்த கரங்கள்தான்என்று கோஷமிட்டனர்.

சுகாதார அமைச்சரக தகவல்கள் நேற்று பலியானவர்களின் எண்ணிக்கை புதன் வன்முறையை அடுத்து 638 என உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளன.  குறைந்தபட்சம் 4,200 பேர் காயமுற்றனர்இது ஆரம்ப உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும். முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலுள்ள இறந்தவர்கள் எண்ணிக்கை இதில் அடங்கவில்லை. அப்படியும்கூட இவைகள் மிகவும் குறைந்த மதிப்பீடுகள்தான். ராய்ட்டர்ஸ் நிருபர்கள் இன்னும் 228 சடலங்களை கெய்ரோவின் வடகிழக்கிலுள்ள அல்-இமாம் மசூதியில் மட்டும் எண்ணியுள்ளனர். முஸ்லிம் சகோதரத்துவம் 2,000க்கும் மேற்பட்டவர்கள் கொலையுண்டனர் என்றும், 10,000 பேர் புதன் அடக்குமுறையில் காயமுற்றுள்ளனர் என்று அறிக்கை விடுத்துள்ளது.

பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகையில், எகிப்திய பிரதம மந்திரி ஹசிம் எல்-பெப்லாவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிசை அதன்சுயக் கட்டுப்பாட்டிற்குபாராட்டி படுகொலையை நியாப்படுத்தியுள்ளார். “பாதுகாப்பு மற்றும் எகிப்தியர்களின் அமைதியை மீட்க அரசு தலையிட நேர்ந்துள்ளதுஎன்றார்.

முர்சி ஆதரவாளர்களின் குழுக்கள் கிசா, போர்ட் செயிட், அசுட், ஹெல்வன், மின்யா மற்றும் பாயௌம் ஆகிய இடங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களை தாக்கினார்கள். அவர்கள் கிசாவின் ஆளுனருடைய அலுவலகத்திற்கும் நேற்று தாக்கி தீ வைத்தனர். கெய்ரோவின் முக்கிய சுற்றுச் சாலையின் இரு புறங்களையும் தடுப்பிற்கு உட்படுத்தி தலைநகரத்தில் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்திவிட்டனர்.

அலெக்சாந்திரியாவிலுள்ள கடற்கரைப்பகுதியில் சில ஆயிரக்கணக்கான முர்சி ஆதரவாளர்களின் எதிர்ப்பை போலிஸ் தாக்கி மூன்று பேரைக் கொன்றனர், டஜன் கணக்கானவர்களை காயப்படுத்தினர்.

ஸ்கைப் வழியாக ராய்ட்டர்ஸிடம் பேசிய முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) செய்தித் தொடர்பாளர் கெஹெட் எல்-ஹடாட் புதன் வன்முறை தன்னுடைய அமைப்பிற்குமிகப் பெரிய அடிஎன்றார். இறப்பு எண்ணிக்கை உத்தியோகப்பூர்வ எண்ணிக்கையைவிட எட்டு மடங்காவது அதிகம் இருக்கும் என்றார். பல முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைவர்களைக் காணவில்லை என்றும் அவர் கூறினார். “அவர்கள் எங்குள்ளார்கள் என்பதை இப்பொழுது எங்களால் உறுதி செய்யப்பட முடியவில்லை. இரு உயர்மட்டத் தலைவர்கள் சுடப்பட்டனர், இன்னும் எனக்குத் தெரிந்தவரை அவர்கள் இறக்கவில்லை. ஆறு பேர் தங்கள் மகன்களையும் மகள்களையும் இழந்துள்ளனர்.” என்றார்.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் முக்கிய கவலை ஆட்சிக் குழுவிற்கு எதிரான எதிர்ப்புக்கள் பெருகி தங்கள் கட்டுப்பாட்டை விட்டு விலகிவிடலாம் என்பதுதான். கைதுகளும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைவர்களின் கொலைகளும் முஸ்லிம் சகோதரத்துவத்தின்மத்திய ஒருங்கிணைப்புஇழந்துவிட்டது என்ற பொருளைத்தரும் என்ற அவர், “நாங்கள் முகங்கொடுக்கும் அடிகளுக்கும் கைதுகளுக்கும் பின்னர் எவரும் வழிகாட்டமுடியாதபடி உணர்ச்சிகள் உச்சகட்டத்தை அடைந்துவிட்டனஎன்றார் அவர்.

 இப்பொழுது இது எங்கள் கைகளை மீறிவிட்டது. அக்கவலை எப்பொழுதும் இருந்தது. ஒவ்வொரு படுகொலையை அடுத்தும் அது அதிகமாயிற்றுஎன்றார் ஹாடாட், ஆட்சிக் குழுவின் விரோதிகளிடையே இருக்கும் சீற்றத்தைப் பற்றிப் பேசுகையில். “உண்மையான ஆபத்து தங்கள் பிரியமானவர்களை இழந்து நிற்கும் மக்கள் குழுக்களிடமிருந்து வருகிறது; அவர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.” என்றார்.

முஸ்லிம் சகோதரத்துவம், இராணுவ ஆட்சிக் குழு மற்றும் அதனுடைய ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் அஞ்சும் முக்கிய ஆபத்து பெருகும் வன்முறையும் எதிர்ப்புக்களும் தொழிலாள வர்க்கத்திடையே ஒரு இயக்கத்தை தூண்டிவிடலாம் என்பதுதான். அது முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் இராணுவ ஆட்சிக் குழு இரண்டின் பிற்போக்குக் கொள்கைகளையும் எதிர்க்கிறது. எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பாவில் அதனுடைய நட்புக் கூட்டணிகள் செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகளை சுமத்த உறுதியாக உள்ளன. அதில் முக்கியமான எரிபொருள், உணவுப் பொருட்களுக்கான மானிய உதவித் தொகை வெட்டுகளும் தொழிலாளர்களை தாக்குவதும், புரட்சியை நசுக்குவதும் உண்டு.

 

உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் படுகொலையின் வெடிப்புத் தன்மை மிகுந்த விளைவை அஞ்சி இழிந்த முறையில் ஆட்சிக் குழுவுடனான தங்கள் பிணைப்புக்களை குறைத்துக் காட்டுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, நேற்று ஒரு சுருக்கமான அறிக்கை வெளியிட்டு, கூட்டு எகிப்திய அமெரிக்க இராணுவப் பயிற்சிகளை இரத்து செய்தார். ஆனால் ஆட்சிக் குழுவிற்கு அமெரிக்க உதவியை மாற்றவில்லை. இன்னும் இராணுவத்தின் ஜூலை 3இல் முர்சி அகற்றலைஇராணுவ ஆட்சி சதிஎன்று முத்திரையிட மறுக்கிறது. இதனால் அது தொடர்ந்து வருடாந்த உதவித் தொகைகளாக எகிப்திய இராணுவத்திற்கு 1.3 பில்லியன் டொலர்களை வழங்கமுடியும். (பார்க்கவும்: Obama and the Egyptian massacre”)

பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அலுவலகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்நாட்டுப் போரைத் தவிர்க்க அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்என அறிவித்தது. இது வன்முறையை அடுத்து எகிப்து தூதரை ஹாலண்ட் அழைத்துப் பேசிய பின் வெளியிடப்பட்டது.

ஜூன் மாதம் தன்னுடைய ஆட்சிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களை மிருகத்தனமாக அடக்கியதுடன், முர்சியை அகற்றிய ஆட்சிக் கவிழ்ப்பு போல் வருமோ என அஞ்சும் துருக்கியின் இஸ்லாமியவாத பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன், எகிப்தின் படுகொலையைக் குறைகூறி, எகிப்திய இராணுவத்திற்கு அமெரிக்க ஆதரவையும் குறைகூறினார்.

 சதி நடந்ததை மறந்து, “சதியைஒருசதிஎன்று கூட அழைக்கும் கௌரவமான நடத்தை இல்லாதவர்கள், இக் குழந்தைகளின் படுகொலைகள் குறித்த குற்றத்தில் பங்கு உடையவர்கள்என்றார் எர்டோகன். “இக்கட்டத்தில், உங்களுக்கு ஜனநாயகம், அனைத்து மதிப்புக்கள், மனித உரிமைகள், சுதந்திரங்கள் பற்றிப் பேச என்ன உரிமை உள்ளது?”.

ஆனால் எகிப்திற்குள் தாராளவாத முதலாளித்துவமும் மத்தியதர வர்க்கத்தின் வசதி படைத்த பிரிவுகளும் அதற்கு நெருக்கமாக இருப்பவையும், ஆட்சிசதி மற்றும் படுகொலை ஆகியவற்றிற்கும் பெரும் ஆதரவு கொடுத்துள்ளன.

இராணுவ ஆட்சிக் குழுவானது, முஸ்லிம் சகோதரத்துவத்தை  துன்புறுத்துவது அதனை நீண்டகாலத்தில் வலுப்படுத்தும் என்ற உண்மையைப் புறக்கணித்து, அதை இராணுவ ஆட்சிக் குழுவின் கொள்கைகளுக்கு ஒரே எதிரி என்று காட்டும் வகையில் இப்பொழுது அவர்கள் ஆட்சிக் குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து எகிப்தில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை மீட்க உதவுகின்றன. இதற்கு காரணம் இந்த ஆண்டு முன்னதாக வெகுஜன வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் தோன்றியதுதான். அவர்கள் முஸ்லிம் சகோதரத்துவத்தை தங்கள் முக்கிய எதிரியாக கருதவில்லை. மாறாக அவர்கள் முழு ஆளும் உயரடுக்கிற்கும் எதிராக இயக்கப்படும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்கள் வெளிப்படுவது குறித்து பயமடைந்துள்ளனர்.

இது, துணை ஜனாதிபதி முகம்மது எல் பரடேய் புதன் படுகொலைக்குப் பின் ராஜிநாமா செய்யும் முடிவை கண்டித்திருப்பதில் பிரதிபலிப்பாகியுள்ளது. அது அவர் தான் ஆதரவு கொடுத்திருந்த வன்முறையில் இருந்து ஒதுக்கி வைத்துக் கொள்ளும் முயற்சி ஆகும்.

அவருடைய அரசியலில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சப் புகழைத் தக்கவைத்துக் கொள்ளும் இழிந்த தந்திரோபாய உத்தியாகும். ஜூலை 3இல் ஆட்சி சதி திட்டத்திற்கு எல்பரடேய் உதவியதுடன், முஸ்லிம் சகோதரத்துவத்தின் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான பலமுறை நடந்த இரத்தம் தோய்ந்த வன்முறைகளுக்கும் ஆதரவு கொடுத்தார். சமீபத்திய வெளிப்பாடுகளான ஆட்சிக் குழுவின் உள்விவாதங்கள்போதும், புதன் இரத்த வெள்ளத் தயாரிப்புக்களின் விவாதங்களின்போதும், அவர்சட்டத்தின் வரம்பிற்குள் இருக்கும் சக்தியை பயன்படுத்துமாறுஅழைப்பு விடுத்தார் என்பதில் அவருடைய தந்திர உத்தி அம்பலமாகிறது.

ஆனால் தமரோட் (“Rebel”-கிளர்ச்சி) கூட்டணியிலுள்ள ஆட்சிக் குழு ஆதரவாளர்களுக்கு எல்பரடேயின் இழிந்த தந்திர உத்திகள் அதிகமாகப்படுகின்றன. இக்குழுவின் மூலம் எல்பரடேயின் ஆதரவாளர்கள், பல இளைஞர் குழுக்கள், போலி இடதுகளான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் ஜூலை 3இல் ஆட்சிசதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஒத்துழைத்தனர். அவர்கள் அவரை ஆட்சிசதிக்கும்  வன்முறைக்கும் உறுதியான விசுவாசத்தை காட்டவில்லை என்று கண்டித்துள்ளனர்.

எல்பரடேய் நிலைமையை உலகப் பொது அபிப்பிராயம், சர்வதேச சமூகம் ஆகியவைகளுக்கு எடுத்துரைத்து, எகிப்து முறையான பயங்கரவாதத்தை எதிர்கொள்கிறது என்று விளக்குவார் என நாங்கள் நம்பியிருந்தோம்; இது எகிப்தின் பாதுகாப்பை பெரிதும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளதுஎன்று தமரோட் ஒரு பேஸ்புக் அறிக்கையில் அறிவித்துள்ளது.

எல்பரடேக்கு விடுத்த அறிக்கையில், தமரோட்டின் செய்தித் தொடர்பாளரான மஹ்முத் பட்ர் கூறினார்:  “ஐயா, துரதிருஷ்டவசமாக.... எகிப்திய மக்கள் முன் இருக்கும் உங்கள் தோற்றத்தின் இழப்பில், உங்கள் பங்கின் இழப்பில் (அதாவது துணைத் தலைவர் என்னும் முறையில் இருப்பதை) நீங்கள் உலகெங்கிலும் இருக்கும் உங்கள் நண்பர்கள் முன் உங்கள் சர்வதேச தோற்றத்தை அழகுபடுத்த விரும்புகிறீர்கள்.

எல்பரடேயின் தந்திர உத்தி அவருடைய அரசியலமைப்புக் கட்சியாலும் மற்றும் அவர் தலைமை தாங்கும் குடை அமைப்பான தேசிய மீட்பு முன்னணி அதிகாரிகளாலும் தாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புக் கட்சியின் அஹ்மத் டரக் எல்பரடேயின் முடிவைஎகிப்து தற்போதைய நிலைமையை கடக்க அவர் மிகவும் தேவையாக இருக்கையில் நாட்டைக் கைவிட்டுவிட்டார்... எல்பரடேயின் நிலைப்பாடு அரசியலமைப்புக் கட்சியையோ என்னையோ பிரதிபலிக்கவில்லை.”