சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

A further discussion on human evolution

மனித பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு மேலதிக விவாதம்

3 January 2012

use this version to print | Send feedback

வாசகர் பிரயான் டி. புதிய ஆராய்ச்சிகள் நியாந்தர்தாலர்கள் மரபற்றழிந்து போகவில்லை என்பதைக் காட்டலாம் எனும் கட்டுரை மீதான பின்வரும் ஆய்வுகளை அனுப்பியுள்ளார்:

காலம் மற்றும் மாற்றங்களின் போக்குகளுக்கு மனிதஇனம் இன்றியமையாது  இணைந்துபோக ஆரம்பித்தபோது, மனிதன் கருவிகள் பயன்படுத்துவதை முதன்முதலாக ஆரம்பித்தபோது கலாச்சாரத்திற்கும் உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கும் மாற்றத்தை கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது. நெருப்பு மற்றும் சக்கரம், மற்றும் குகை ஓவியங்களின் உருவாக்கம் ஆகியவை பெரும்பாலும் மனித சமூகத்தை உயிரியல் மற்றும் கலாச்சார பரிணாமம் ஆதிக்கம் செலுத்தியதற்கு இடைப்பட்ட முழுமையான எல்லை என்பதாக அல்லாமல், கலாச்சார பரிமாணம் உருவாகிக் கொண்டிருந்தது என்பதோடு இறுதியாக மனித வளர்ச்சியில் ஆதிக்கம்செலுத்தும் உந்துதலாகும் என்பதற்கான தெளிவான சுட்டிக்காட்டியாகவும் இருக்கிறது. அல்லது அநேகமாக இதுபோன்ற கருதுகோள்கள் இனங்களுக்கு இடையேயான எல்லையைக் குறிக்கின்றனவா? ஒருவேளை ஹோமோ நியாந்தர்தாலுக்கும் மற்றும் ஹோமோ சேபியன்ஸ் ஆகியோருக்கு இடையேயான வேறுபாடு உயிரியல் ரீதியாக அல்லாமல் கலாச்சார ரீதியான பரிணாமமாக இருக்கலாம்.  

இந்த முடிவுகள் கூடுதல் ஆராய்ச்சியிலிருந்து தோன்றியுள்ளன என்றாலும், மனித இனத்தின் ஒருதுணை-இனம்இருப்பதாக அதற்கு அர்த்தமில்லை என்றும் இந்த ஆராய்ச்சியை இனவெறி திசையில் எடுத்துக் கொள்பவர்களுக்கு நேரடி பதிலாக நான் சொல்வேன். இந்த மக்கள், வேறுபட்ட முக அமைப்புகள் போன்ற நியாந்தர்தாலர்களின் குறிப்பிட்ட உடற் பண்புகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் அப்பொழுதும் அவர்களுக்கு மற்ற அனைத்து மனிதர்களுக்கும் இருக்கிற அதே மாதிரியான மேம்பட்ட உணர்மையுள்ள சிந்தனைத் திறம்தான் இருக்கிறது. ஒரு வித்தியாசமான எலும்பு கட்டமைப்புகளுடன் இருப்பவர்களைமனிதனை விடக் கீழானவர்களாக விமர்சிப்பது ஒரு வித்தியாசமான தோல் நிறத்தை கொண்டவர்களைப் பற்றியும் அதே மாதிரி தெரிவிப்பதற்கு இணையானது.

ஃபிலிப் குல்பா தெரிவிக்கிறார்:

நான் உங்களது இரண்டாவது கருத்து குறித்து விவரிக்க விரும்புகிறேன். கட்டுரையில் குறிப்பிட்டதுபோல், நியாந்தர்தாலர்கள் மற்றும் டெனிசோவன்களிடமிருந்து நவீன மனித மரபணு தளத்திற்கு வரும் மரபணு பொருட்களின் கலவை ஒரு நன்மை பயக்கும் முன்னேற்றமாக இருந்தது. மற்ற விஷயங்களுக்கு மத்தியில், கலப்பின தனிபர்களின் குளிரைத் தாங்கும் மற்றும் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த பகுதிகளின் உள்பகுதி நோய்களை எதிர்க்கும் திறந்தை மேம்படுத்தியிருக்கக் கூடும். இது ஒரு பக்கத்தில் பாசிசவாதிகளினதும்  மற்றும் இனவாத கருத்துக்களுக்கும் இடையேயான அடிப்படையான வேறுபாட்டையும், மறுபக்கத்தில் நவீன பரிணாமக் கோட்பாட்டையும் விளக்குகிறது.

இன தூய்மைமற்றும் மற்ற இனத்தை விட ஒரு இனத்தின் மேம்பட்டதன்மையின் முக்கியத்துவத்தை (கவனிக்கவும்: ”இனம்என்கிற கருத்தே உயிரியல் ரீதியாக அர்த்தமற்ற கட்டமைப்பு) விளம்பரப்படுத்தும் இனவெறியர்களுக்கு முரணாக, ஒரு இனம் தப்பிவாழ்வதற்கான மரபணு வேறுபாடு ஒரு திறவுகோலாக இருக்கிறது. இனங்கள் தங்களுக்குள்ளேயே அலகுகளாக இருக்கவில்லை. மாறாக, அவை தங்களின் சூழ்நிலையுடன் நிலையான, சக்திவாய்ந்த, இயங்கியல் சமநிலையில் இருக்கின்றன, ஒரு பக்கம் ஒரு இனத்தின் மரபணு சேர்மம் ஒரு பக்கம் அதன் சூழ்நிலையும் மறுபக்கம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இனங்களின் தொடர்ச்சியாக மாறுபடும் ஒன்றானதன்மையை உருவாக்கும் ஆய்வறிக்கையாகவும் ஆய்வறிக்கைக்கு எதிரானவையாகவும் இருக்கின்றன.

இயங்கியல் உலகம் மற்றும் பிற இனங்கள் இரண்டையும் உள்ளடக்கும் எடுத்துக்கொண்ட எந்த இனத்தின் சூழ்நிலையும் நிலையாக இனங்களால்முன்கணிக்கமுடியாதவாறு பல வழிகளில் மாறிக் கொண்டிருப்பதால், இனங்களின் மரபணு சேர்மத்திற்குள் கிடைக்கூடியதாக இருக்கும் மரபணு மாற்றத்தின் எல்லைமரபணுமூலப் பொருள் சார்ந்திருக்கும் திறம்வாய்ந்த தகவமைந்துபோகும் தன்மையை மேம்படுத்துவதற்காக (.ம். வெளிப்படுவதற்கான) இனங்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. மரபணுக்கள் குறைந்தளவில் மாற்றத்தை கொண்டிருப்பது, மாற்றீடுகளுக்கான சாதகத்தன்மையை, அதாவது  அழிந்துபோவதை அதிகரிக்கும்.

மரபணு வேறுபட்டிருப்பதன் முக்கியத்துவத்திற்கான தெளிவான உதாரணம் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி காலகட்டத்திலான பல விட்டிற்பூச்சிகளின் ஆராய்ச்சியிலிருந்து வருகிறது. சில பறவைகள் குறிப்பிட்ட வகையிலான விட்டிற்பூச்சிகளை இரையாகக் கொண்டுள்ளன. தொழிற்துறைக்கு-முந்தைய சூழ்நிலையில் இந்த விட்டிற்பூச்சிகள் அவை அடிக்கடி ஓய்வெடுத்த மரப் பட்டைகளின் ஆதிக்கமுள்ள நிறத்துடன் கலப்பதற்காக தொடர்புடைய வெளிர்-நிறத்தை வெளிப்படுத்தின. இவை வெளிர்-நிறமுடைய விட்டிற்பூச்சிகளை கண்ணிற்கு புலப்படாததாக்கியதுடன், அதனால், அவைகள் வாழ்வதை மேம்படுத்தின. கடும்-நிறமுடைய வித்தியாசமானவையும் இருந்தன. ஆனால் எதிராக (.ம். சாப்பிடுவதற்கு) தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. தொழிற்சாலையிலிருந்து புகை மாசு அதிகரித்ததால், புகைக்கரி அடிமரத்தில் சேகாரமாகி, அவற்றை கருப்பாக தோன்ற வைத்தது. இதன் விளைவாக, வெளிர்-நிறமுடைய விட்டிற்பூச்சிகள் அதிகம் கண்ணிற்கு புலப்படும்படியாகவும் கடும்-நிறமுடையவை குறைவாக கண்ணிற்கு புலப்படும்படியாகவும் ஆனது. இதன் விளைவாக, இரு நிறமுடைய மாறிகளின் தொடர்புடைய பங்களிப்புகளில் மாற்றம் இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், விட்டிற்பூச்சிகள்அவை வெளிப்பட்ட- மாறுகின்ற சுற்றுப்புறத்திற்கு இயைந்து போயின. கடும்-நிறமுடையவைகளுக்கான மரபியல் மூலப்பொருள் இல்லாமல் இருந்திருந்தால், விட்டிற்பூச்சிகள் அதிக வேட்டையாடல்களால் பாதிக்கப்பட்டு, அநேகமாக இல்லாமல் போயிருக்கும்.

குறைவான மரபணு வேறுபாட்டின் ஆபத்துக்களையும் ஐரிஷ் உருளைக்கிழங்கு பஞ்சத்தால் புரிந்துகொள்ளலாம். கொலம்பியர்களுக்கு-முந்தைய காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கவாசிகளால் உருளைக்கிழங்குகள் வீட்டு உபயோகப் பொருட்களாக்கப்பட்டன. பல்வேறு வேறுபட்ட வகை உருளைக்கிழங்குகள் மேம்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நுண்காலநிலைக்கும் பொருந்திப்போனது. இந்த வழியில், மக்கள் பல்வேறு வகையான உருளைக்கிழங்குகளை வளர்க்க முடிந்தது, காலநிலை மாற்றங்கள் இருந்த போதிலும் அல்லது சில வகைகளை தீவிரமாக நோய்கள் தாக்கியபோதும் இவ்வாறு சாத்தியக்கூறுகள் அதிகரித்தது; மற்ற வகைகள் அநேகமாக மக்களின் உணவிற்காக ஓரளவுக்கு அளித்து வந்தது. முரணாக, உருளைக்கிழங்கு அயர்லாந்துக்கு கொண்டுவரப்பட்டபோது, ஒரு வகை மிக அதிகமாகப் பயிரிடப்பட்டது. அதனால், அந்த குறிப்பிட்ட வகையை நோய் தாக்கியபோது, ஐரிஷ் மக்களுக்கு பயங்கர விளைவுகளுடன் உற்பத்தி பாதிக்கப்பட்டது

அதே கொள்கைகள் மனித இனத்திற்கும் பொருந்துகின்றது. நவீன மனிதனின் பிரதான இயைந்துபோதல் முறை கலாச்சார ரீதியாக இருக்கும் வேளையில், உதாரணமாக நோய்களுக்கு காரணம் என்றெடுத்துக் கொண்டால், உயிரியல் ரீதியான இயைந்துபோதல்கள் இப்போதும் முக்கிய பங்காற்றுகின்றன. நவீன மருத்துவம் ஒரு வெகு சமீபத்திய முன்னேற்றம் என்பதுடன் உலகின் மக்களுள் பலருக்கு குறைந்த அளவுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. இது பரிகாரம் செய்ய முடிந்த மற்றும் செய்ய வேண்டிய சூழ்நிலையாக இருந்தாலும், மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் மரபணு வேறுபாடு இன்னொரு அடுக்கு பாதுகாப்பினை அளிக்கிறது.

மக்கள்தொகைக்காக என்று மட்டுமல்லாமல், மாறாக ஒவ்வொரு தனிநபருக்கும் மரபணு வேறுபாட்டின் முக்கியத்துவம் தொடர்புடையது. நாமெல்லோரும் ஒருமரபியல்- பொருளைசுமக்கிறோம், குறிப்பிட்ட மரபணு கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் எதிரான விளைவுகளைக் கொண்டிருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, உயிரினங்கள் தங்களின் DNA சேர்க்கையில் இரண்டு பதிப்பு மரபணுக்களைக் கொண்டிருக்கின்றன, ஒன்று பெற்றோரிடமிருந்து, அது வேறுபட்டதாக இருக்கலாம். பெரும்பாலும், ”நேர்மறை” (positive) அமைப்பு பகுதியளவு அல்லது முழுமையாகஎதிர்மறை” (negative) அமைப்பின் விளைவுகளை மறைத்துவிடுகிறது. இது ஒரு நகல் எதிர்மறை மாறிகளை கொண்டிருக்கும் தனிநபர்களை வாழ அனுமதிக்கிறது, அதனால் இந்த பிந்தைய அமைப்பு மரபணு சேர்மத்தில் ஒரு குறைவான அதிர்வெண்ணில் தொடர்ந்து இருக்கிறது. முன்னர் சுட்டிக்காட்டியபடி ஒரு சூழ்நிலையில் பாதகமான மரபணுவகைகள் வேறொரு சூழ்நிலையில் பிரயோசனமானதாக இருக்கலாம். இப்படி, பயனுள்ள மரபணுக்களின் கையிருப்பானது சூழ்நிலைகள் மாறுபட்டால் பயன்படுத்தப்படுவதற்காக பராமரிக்கப்படுகிறது.

தனிநபர்களில் மரபணு வேறுபாடுகலப்பின வீரியம்என்று அறியப்படுவதிலும் முடிவடையலாம். பெரும்பாலான நேரங்களில் பெற்றோர்கள் மரபு ரீதியில் பொதுவாக வேறுபட்டிருக்கும் தனிநபர்கள், மரபு ரீதியில் அதிக ஒற்றுமையுடைய பெற்றோர்களால் உருவாக்கப்பட்டவர்களின் தனிநபர்களைவிட பலதடவைகளில் சிறந்தஉடலுறுதியை” (.ம். நீண்ட வாழ்க்கை மற்றும் இனப்பெருக்க வெற்றி) கொண்டிருக்கின்றனர் என்பதை இந்த அவதானமாகும். இதுநெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்ளுதல்எனபொதுவாக கூறப்படும் எதிர்மறை விளைவுகளுக்கு எதிரானது. வேறுபட்ட பெற்றோருடைய தனிநபர்கள் மரபுரீதியாக இரு மடங்கு எதிர்மறை மரபணுவை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது கூடுதலாக சாத்தியமற்றது.

இனங்களின் உயிர்வாழ்க்கைக்கு மரபியல் வேறுபாடு மிகச்சிறந்த நேர்மறையான முக்கியத்துவம் கொண்டிருக்கிறது என்பதே அடிப்படையான கருத்து. அதே நேரம், நவீன மருந்து மற்றும் தொழில்நுட்பம் மரபியல் நோய்களின் எதிர்மறை விளைவுகளை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அறிவியலில் எந்த அடித்தளமும் இல்லாத மற்றும் அரசியல் பேச்சுக்களிலும் இடமில்லாத இதுபோன்ற நோய்கள் மரபியல் தூய்மை அல்லது தாழ்வு மனப்பான்மை போன்ற இனவெறி கருத்துக்களுடன் எந்த வகையிலும் தொடர்புள்ளவை அல்ல.

தற்போது வசித்துவரும் அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். மரபியல் வேறுபாடு இருக்கிறது, அது அதிக அளவு நன்மைபயக்கக் கூடியது. ஆயினும், குறிப்பிட்ட மரபியல் குறைபீடுள்ளவர்களை தவிர்த்து எல்லா மனிதர்களுக்கும், ஹோமோ சேப்பியன்களின் அடிப்படை குணாதிசயமாக இருக்கும் முற்றிலும் பிரித்துப்பார்க்க கூடிய, உருவக வடிவிலான சிந்தனைகளுக்கான திறம் இருக்கிறது. இது வர்க்க சமுதாயத்தின் எதிர்மறையான விளைவு அல்லாது மரபணு தொடர்பற்றது. இந்த சமூக அமைப்பே மக்களை அவர்கள் முழு ஆற்றல் அடைவதை தடுக்கிறது.