சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian rupee and economy in free fall

இந்திய ரூபாயும் பொருளாதாரமும் தொடர்ந்து சரிந்து செல்கின்றன

By Kranti Kumara and Keith Jones
21 August 2013

use this version to print | Send feedback

செவ்வாயன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64 பைசா வீழ்ச்சி கண்டதை அடுத்து - மே  மாதத்தில் இருந்து ரூபாயின் மதிப்பு 15 சதவீதத்திற்கும் அதிகமாய் சரிவு கண்டிருக்கிறது - இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி அந்நியச் செலவாணிச் சந்தைகளில் பெரியதொரு தலையீட்டை செய்தது.

இந்தத் தலையீட்டுக்குப் பின்னரும் கூட டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக 63.25 ரூபாயில் முடிந்தது. அதாவது திங்களன்று 2.3 சதவீதம் சரிந்து முடிந்த அளவை விடவும் அரை ரூபாய் அளவுக்கு குறைந்து முடிந்திருந்தது. மே மாத ஆரம்ப காலம் வரை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 54 ரூபாயைச் சுற்றியே வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.

இதனிடையே இந்தியாவின் பிரதான பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு செவ்வாயன்று 1.2 சதவீதம் சரிந்து 11 மாதத்தின் மிகக் குறைந்தபட்ச அளவில் முடிவடைந்தது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ரூபாயின் வீழ்ச்சியை ஒரு தற்காலிக கறை என்று பகிரங்கமாக நிராகரிப்பதோடு, மேம்பட்ட பொருளாதார வளர்ச்சி மிக விரைவில் வரவிருக்கிறது என்பதையே தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. என்றபோதிலும் அரசாங்க மற்றும் ஆளும் வர்க்க வட்டாரங்களில் கைவிடப்பட்ட நிலை அல்லது நிர்க்கதியான நிலை போன்றதொரு உணர்வு பெருகி வருகிறது.

1991 இல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒரு அவசரநிலை பிணையெடுப்பை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது போன்றதை ஒத்த நடப்புக் கணக்கு நெருக்கடி ஒன்றுக்கு இந்தியா முகம் கொடுக்கக் கூடுமோ என்ற விவாதம் பெருநிறுவன ஊடகங்களில் பரவலாய் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு வந்திருக்கின்ற கடந்த மூன்று மாத காலத்தின் சமயத்தில் அரசாங்கம் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாக அறிவித்து வந்திருக்கிறது. அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்புகளை அகற்றுவது அல்லது குறைப்பது மற்றும் அரசாங்க செலவினத்தை மேலும் குறைப்பது ஆகிய நடவடிக்கைகள் உழைக்கும் மக்களின் செலவில் செய்யப்பட்டன. ஆனால் இவையெல்லாம் ரூபாயின் சரிவை தடுக்க முடியவில்லை.

அமெரிக்க மத்திய வங்கி மாதத்திற்கு 85 பில்லியன் டாலர் அளவுக்கு பத்திரங்கள் வாங்கும் தனது திட்ட அளவை வெகுவிரைவில் குறைக்கக் கூடும் என்று அமெரிக்க கூட்டரசு வங்கியின் தலைவரான பென் பெர்னான்கே மே 22 அன்று உதிர்த்த கருத்துகள் தான் இந்தியாவின் நாணயமதிப்பு நெருக்கடிக்கான உடனடித் தூண்டுதலாக அமைந்தன. அதையடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எல்லாம் பதறிப் போய் 11 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இந்தியப் பங்குகள் மற்றும் பத்திரங்களில் இருந்து வெளியில் எடுத்து விட்டனர்.

மிக அடிப்படையாகப் பார்த்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பேரளவில் மெதுவாகி விட்டதிலும் மற்றும் அதன் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சரிக்கட்ட அந்நிய மூலதனத்தின் உள்பாய்வில் பெருமளவில் தங்கியிருக்கும் நிலை அதிகமாகி வருவதிலும் தான் இந்த நெருக்கடி வேரூன்றியிருக்கிறது. மார்ச் 31 உடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் இந்தியா 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. இது ஒரு தசாப்தத்தின் மிகக் குறைந்த அளவு என்பதோடு, வேலைவாய்ப்பின்மை துரிதமாய் பெருகாமல் இருப்பதற்கு அவசியமான குறைந்தபட்ச அளவான 8 சதவீதத்திற்கு மிகவும் குறைவானதும் ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை குறைப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பதை கைவிட  வேண்டும் என்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்றும் இந்தியாவின் பெருநிறுவன பிரிவுகள் நெருக்குதலளிக்கின்றன. பணவீக்கம் இப்போது சில்லறை அளவில் 10 சதவீதத்திற்கு நெருக்கமாய் இருக்கிறது.

ரிசர்வ் வங்கியோ அதற்குப் பதிலாய், ரூபாயின் வீழ்ச்சியை நிறுத்துவதற்காக, பணப்புழக்கத்தை குறைத்ததன்மூலம் கடனுக்காகும் செலவை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை மேலும் கீழறுத்திருப்பதோடு, டாலர்களை விற்பனை செய்ததன் மூலம் அதன் சொந்த அந்நியச் செலாவாணி கையிருப்பையும் சுமார் 277 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு கீழிறக்கி விட்டிருக்கிறது.

செவ்வாயன்று, இந்தியாவின் 10 ஆண்டுக்கான அரசாங்கப் பத்திரத்தில் இருந்தான வருவாய் 9.42 சதவீதத்தை எட்டி, பின் இறுதியில் 8.92 சதவீதத்திற்கு வீழ்ந்தது. இந்த வருவாயின் அளவு ஆகஸ்டு 1, 2008 அதாவது உலகப் பொருளாதார நெருக்கடி வெடிப்பதற்கு ஒன்றரை மாதம் முன்பாக எட்டப்பட்ட மிக உயர்ந்த அளவை தொட்டிருக்கிறது. இதன் பொருள் ஏற்கனவே நிதித்திண்டாட்டத்தில் இருக்கும்  அரசாங்கம் பணத்தைக் கடனாகப் பெறுவதற்கு மேலும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். சமீப வாரங்களில் அந்நிய நாட்டினர் இந்திய அரசாங்கத்தின் கடன்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர். இப்போது அவர்களிடம் அரசாங்க வரம்பான 30 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் வெறும் 43 சதவீதம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரூபாயின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறிப்பாக டாலர் கையிருப்பு கரைவதைத் தடுக்கவும், இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 14 அன்று மூலதனக் கட்டுப்பாடுகளை திணித்தது. இனிமேல் இந்திய நிறுவனங்கள் எந்தவொரு ஆண்டிலும் அவற்றின் நிகர மதிப்பில்(சொத்துகளின் மதிப்பில் இருந்து கடப்பாடுகளின் மதிப்பைக் கழிக்கக் கிடைப்பது 100 சதவீதத்திற்கும் அதிகமாய் நாட்டிற்கு வெளியில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படமாட்டா. பெரிய அரசாங்க நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் இதற்கு முக்கியமான விதிவிலக்கு. தனிநபர்களாக இருந்தால் அதிகப்பட்சம் 75,000 டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய முடியாது. இதற்கு முன்னதாக இந்த வருடாந்திர வரம்புகள் முறையே 400 சதவீதம் என்றும் 200,000 டாலர்கள் என்றும் இருந்தன. தங்க நாணயங்களை இறக்குமதி செய்வதும் - நடப்பு நெருக்கடிக்கு இதுவும் பங்களிப்பு செய்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது - தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சென்ற வாரத்தில் பேசியபோது நடப்புக் கணக்கு நெருக்கடி குறித்து கவலைகள் பெருகுவதை நிராகரித்தார். 1991 இல் ஒரு சில வாரங்களின் இறக்குமதிக்கு தேவையான அந்நியச் செலாவணிக் கையிருப்பே இந்தியாவிடம் இருந்ததாகக் கூறிய அவர், ”ஆனால் இப்போது நம்மிடம்ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு தேவையான கையிருப்பு இருக்கிறது. ஆகவே ஒப்பீடு தவறானது என்றார்.

யதார்த்தமோ முற்றிலும் மாறானதாய் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரமானது 22 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இன்று உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் அடுக்குக்குறி ரீதியாக அதிகமாக பிணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலக முதலாளித்துவமும் சமநிலையின்மைகளாலும், பெருமந்தநிலைக்குப் பிந்தைய மிகப்பெரும் நெருக்கடியை மேலெழச் செய்திருக்கும் முரண்பாடுகளாலும் பின்னப்பட்டிருக்கிறது - 2008 இல் வெடித்து ஐந்து வருடங்களாகியும் இந்த நெருக்கடிக்கு தீர்வு எதுவும் மிக அருகில் தென்படவில்லை.

இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது 2004-2005 இல் வெறும் 2.5 பில்லியன் டாலர்களாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் இருந்ததில் இருந்து)  2012-13 ஆம் நிதியாண்டில் 87.8 பில்லியன் டாலர்களை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதம்) எட்டியிருக்கிறது. எகனாமிக் அன் பொலிடிகல் வீக்லி சமீபத்தில் ஒரு கட்டுரையில் கூறியிருந்தது போல, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2004-2005 இல் 33.7 பில்லியன் டாலர்களாக இருந்ததில் இருந்து(மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதம்)2012-13 இல் மிகப் பிரம்மாண்டமாய் 190.9 பில்லியன் டாலர்களாக(மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.6 சதவீதம்)அதிகரித்தது தான் நடப்பு கணக்குப் பற்றாக்குறையின் அதிகரிப்புக்கும் பங்களித்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பொருட்களுக்கும் சேவைகளுக்குமான தேவையில் பெரும் வீழ்ச்சி நேர்ந்ததை அடுத்து கடந்த ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி தேக்கம் கண்டிருக்கிறது. இதனிடையே பெட்ரோலியம் மற்றும் தங்கம் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்படும் இந்திய இறக்குமதிகளுக்கான செலவு ஏற்கனவே அதிகரித்திருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அவற்றை இன்னும் மேலே தள்ளும்.

கடந்த பல ஆண்டுகளில், இந்தியா நடப்புக் கணக்கு பற்றாக்குறையின் பெருமளவை குறுகிய காலக் கடன்களின் மூலமாகத்தான் சரிக்கட்டி வந்திருக்கிறது. ஹிந்து பத்திரிகை கடந்த ஜூன் மாதத்தில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல, 2014 மார்ச் 31க்கு முன்னர் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த குறுகிய காலக் கடனின் அளவு இப்போது மலைக்க வைக்குமளவு 172 பில்லியன் டாலரை எட்டியிருக்கிறது. இந்தக் கடனை  செலுத்துவதென்பது அந்நிய செலாவணிக் கையிருப்புகளில் 62 சதவீதத்திற்கும் அதிகமாக கரைத்து விடும். 2008 மார்ச் மாதத்திற்கு ஒரு வருடம் முன்னதாக இதே அளவு வெறும் 54.7 பில்லியன் டாலர் மட்டுமே. அதாவது அப்போதைய கையிருப்பில் சுமார் 17 சதவீதம்.

இந்தியப் பொருளாதாரத்தை சூழ்ந்திருக்கும் நெருக்கடியானது மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையில் உரசலை அதிகப்படுத்தியிருக்கிறது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு வட்டி விகிதங்களை வெட்டுவதையே தனது விருப்பமாக அரசாங்கம் தொடர்ந்து அறியச் செய்து வந்திருக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியோ அதற்கு எதிராக, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும், ரூபாயின் மதிப்பு மேலதிக வீழ்ச்சி கண்டால் அது எரிசக்திக்கு ஆகும் செலவுகளை வளர்ச்சியை கடுமையாகக் குறைத்து விடும் என்றும் வாதிடுகிறது அதிகரித்து - இந்தியா தனது பெட்ரோலியத் தேவையில் முக்கால்வாசியை இறக்குமதி செய்கிறது. ரிசர்வ் வங்கி மிகப் பகிரங்கமாகச் சொல்லத் துணியவில்லை என்றபோதிலும் கூட, அது ரூபாயின் நாணயமதிப்பை உறுதியுடன் பாதுகாத்து நிற்பதாகத் தோற்றமளிக்கா விட்டால், அதன் மதிப்பு சரிந்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தலைசுற்ற வைத்து விடும் என்ற கவலை அதற்கு இருப்பது தெளிவு. அத்துடன் 2008க்குப் பின்னர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவி வருகின்ற மிகக் குறைந்த வட்டி வகிதங்களை அனுகூலமாய் எடுத்துக் கொண்டு இந்தியாவின் பெருநிறுவனங்கள் பெருமளவுக்கான அந்நியக் கடன்களைப்  பெற்றுள்ளன என்பதும் அதற்கு நன்கு தெரியும். ரூபாயின் மதிப்பு துரிதமாக வீழ்ச்சி காண்கின்றதொரு நிலைமைகளின் கீழ், இந்தமலிவுப் பண கடன்கள் விரைவிலேயே அதன் நேரெதிர் நிலைக்குச் சென்று விடும்.

வெள்ளத்திற்கும் நெருப்புக்கும் இடையில் என்பதைப் போல இந்தியப் பொருளாதாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையே இந்திய ரிசர்வ் வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் பிரதிபலிக்கிறது. ரூபாயை இன்னும் மேலதிகமாய் சரிய விட்டு அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து அதன் மூலமாக வளர்ச்சியுடனான பணவீக்கத்தை அனுமதிப்பதா அல்லது கடனைச் சுருக்கி ரூபாயைப் பாதுகாத்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை நெருக்குவதா என்ற இரண்டு தெரிவுகள் இந்திய ஆளும் உயரடுக்கினர் முன் நிற்கின்றன நெருக்கடி நிறைந்த பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்கு ஆகாது என்பதால் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்புகள் துரிதமாகக் கரையும் அச்சுறுத்தலும்  பின்புலத்தில் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.

இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மேலதிகபொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்த, அதாவது, சமூகச் செலவினங்களை வெட்டுவது மற்றும் முதலீட்டாளரின் இலாபத்திற்கு குறுக்கே நிற்கின்ற தொழிலாளர் நல மற்றும் பிற நெறிமுறைகளை அகற்றுவது ஆகியவற்றின் மூலம் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதைத் தீவிரப்படுத்த, ஃபைனான்சியல் டைம்ஸ் போன்ற வெளிநாட்டு நிதி  மூலதனத்தின் ஊதுகுழல்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவைப் பாதித்து வருகின்ற பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த ஒரு சமீபத்திய கட்டுரையில், இந்த செய்தித்தாள் கூறியது: “மானியங்களைக் குறைத்து விட்டு எரிபொருள் விலைகளை லிட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் அதிகரிப்பதென்பது, நாணய மதிப்பிற்கு இப்போது நெருக்கடி அளித்து வருகின்ற நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியஇரட்டைப் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா முழு உறுதி பூண்டிருப்பதற்கான ஒரு திட்டவட்டமான சமிக்கையாக அது இருக்கும்.”

இந்தியாவில் தங்கியிருந்து வேலை செய்கின்ற சர்வதேச நாணய நிதியத்தின் முகவரை  மேற்கோள்காட்டி இதே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதன் படி, மேற்கூறிய நடவடிக்கையானது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஊக்குவிப்பாக அமையும். தேர்தல் காலத்துக்கு முந்தைய பிரச்சாரத்தின் நடுவிலும் கூட [பொதுத் தேர்தல் 2014 ஏப்ரல்-மே மாதத்திற்காய் திட்டமிடப்பட்டுள்ளது] சரியான விடயங்களை செய்வதற்கான துணிச்சல் உங்களிடம் இருக்கிறது என்பதை அது எடுத்துக்காட்டும்.”