சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One quarter of world’s youth without jobs or education

உலகின் இளைஞர்களில் கால்வாசியினர் வேலைகளோ கல்வியோ அற்று உள்ளனர்.

Andre Damon
21 August 2013

use this version to print | Send feedback

இந்த ஆண்டு ஆரம்பத்தில், பிரித்தானிய எகானமிஸ்ட் இதழ் அதன் பகுப்பாய்வின்படி உலகின் இளைஞர்களில் முற்றிலும் கால்வாசிப்பேர் வேலையிலும் இல்லை, கல்வி பயிலவும் இல்லை என்று தகவல் கொடுத்துள்ளது. இந்த ஒரு உண்மை, முதலாளித்துவ முறையில் இளைஞர்களுக்கு பரந்த வறிய நிலை, சமூக இழிவு தவிர வேறெதையும் கொடுக்கும் வருங்காலம் இல்லை என்பதைத்தான் உச்சக்கட்டமாக வலியுறுத்துகிறது.

உலகில் 26 மில்லியன் இளைஞர்கள் வளர்ச்சியுற்ற நாடுகளில் “NEETS” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்: அதாவது வேலை, கல்வி, பயிற்சி எதிலும் இல்லை என்று Organization for Economic Cooperation and Development (OECD) தகவல்கள் கூறுகின்றன. இது எகானமிஸ்ட் ஆல் மேற்கோளிடப்பட்டுள்ளது; இத்துடன் வளர்ச்சி பெறும் நாடுகளில் 260 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர்.

“கிட்டத்தட்ட 290 மில்லியன் இளைஞர்கள் வேலை செய்யவோ, படிப்போ இல்லை: கிட்டத்தட்ட உலகின் இளைஞர்களில் கால்வாசி எண்ணிக்கை இது மற்றும் அமெரிக்க மக்களுடைய மொத்தத் தொகை போல்.” என்று இதழ் முடிவுரையாக கூறுகிறது.

இக்குழுவின் மிகக் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் வளர்ச்சியுற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளது; அங்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி (ILO), “NEETS”  என வகைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்கள் விகிதம், 2008ல் இருந்து, 2.1% அதிகம் ஆகி,15.8% ஐ தொட்டுள்ளது. “இதன் அர்த்தம் ஆறு இளைஞரில் ஒருவர் [வளர்ச்சியுற்ற நாடுகளில்] வேலையின்றி, கல்வி, பயிற்சி பெறாமலும் உள்ளனர்” என்று ILO  முடித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, 2008 சரிவினாலும் பின்னர் ஐரோப்பிய கடன் நெருக்கடியினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் இப்பிரிவில் மிகவும் அதிகரிப்புக்களை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளது. “எஸ்தோனியா, ஐஸ்லாந்து, ஸ்பெயினில், NEET விகிதம் 2008ல் இருந்து 2010க்குள் 5 சதவிகிதப் புள்ளிகள் அதிகரித்தன” என்று அமைப்பு எழுதியுள்ளது.

ஏராளமான இளைஞர்கள் “வேலையில் உள்ளனர்” என வகைப்படுத்தப்பட்டுள்ளனர் எனினும் இவர்கள் தற்காலிக அல்லது முறைசாரா வேலைகளில் உள்ளனர். கடந்த ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இளைஞர்களிடையே தற்காலிக வேலைகளில் அதிகரிப்பு என்பது “கிட்டத்தட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இரு மடங்காகிவிட்டது” என எழுதியுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு இளைஞரிடையே பகுதி நேர வேலை 2000த்தில் 20%ல் இருந்து 2011ல் மூன்றில் ஒரு பகுதியென உயர்ந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

பகுதி நேர வேலையில் வளர்ச்சி என்பது அதிகரித்துக் கொண்டு மட்டுமே செல்கிறது. ஓர் அளவையின்படி, உண்மையில் அமெரிக்கா கடந்த மூன்று மாதங்களில், 150,000 முழுநேரப் பணியை பகுதிநேரப் பணிகளாக மாற்றியுள்ளது. தொழிலாளர் துறை வீட்டு கணக்கெடுப்பு படி, ஏப்ரலுக்கும் ஜூலைக்கும் இடையே வேலையில் இருப்போர் எண்ணிக்கை 526,000 என உயர்ந்தது; பகுதி நேர வேலை செய்வோர் எண்ணிக்கை 684,000 என உயர்ந்தது.

இந்த ஆண்டு இதுவரை வேலை வளர்ச்சியில், பகுதி நேர வேலை 77% என உள்ளது; அமெரிக்காவில் பகுதிநேரத் தொழிலாளர் எண்ணிக்கை மிக அதிக பட்ச சாதனையாக 8.2 மில்லியனை அடைந்துள்ளது. ஒபாமாவின் பொருளாதார மீட்பு என அழைக்கப்படுவதின் கீழ் வந்துள்ள புதிய சாதாரண நிலை இப்பொழுது குறைவூதிய வேலைகள் சில்லறைத் துறை, உணவு விடுதிகள், வீட்டுச் சுகாதார பாதுகாப்பு நிறுவனங்களிலும் தற்காலிக வேலைகள் என்று உள்ளன; இவை 2013ல் கிட்டத்தட்ட பாதி புதிய வேலைகளாக உள்ளன.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூற்றுப்படி, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில், உலக இளைஞர்களில் 90%க்கும் மேற்பட்டவர்களுக்கு தாயகமாக இருப்பவற்றில், பாதிக்கும் மேலான இளைஞர்கள் முறைசாராப் பொருளாதாரத்தில் வேலையில் உள்ளனர். இந்த வகை “பாதிப்பிற்கு உட்படக்கூடிய” இளம் தொழிலாளர்கள், சுய வேலையில் இருப்பவர்கள் அல்லது தங்கள் குடும்பங்களுக்காக உழைப்பவர்கள், 2011 ன் வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியங்களில் வேலையில் இருப்போரில் 56.2% என உள்ளனர்” என்று அறிக்கை கூறுகிறது.

கிரேக்கத்தில், இளைஞர் வேலையின்மை மார்ச் 2012ல் இருந்த 54.1 இல் இருந்து மிக அதிக அதிர்ச்சிதரும் அளவான 64.9% ஆக கடந்த மாதம் உயர்ந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் இளைஞர் வேலையின்மை 23.2% என உயர்ந்துள்ளது. ILO கூற்றுப்படி, இளைஞர் வேலையின்மை 2008க்கும் 2012க்கும் இடையே 25% என வளர்ச்சியுற்ற உலகில் அதிகரித்துள்ளது.

இப்படி இளைஞர்கள் எதிர்கொள்ளும் இருண்ட வாய்ப்புக்கள் என்பது, முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வி பற்றிய மிகப் பெரிய வெளிப்பாடாகும்; ஒரு திட்டமிட்ட மற்றும் முடிவிலா நெருக்கடியை முகங்கொடுக்கும் இவ்வமைப்பு இன்னும் அதிகமான தொழிலாளர்களை வறுமையிலும் இழிசரிவு நிலையிலும் தள்ளும் வகையில்தான் தப்பி நிற்கும்.

உண்மையில், இளந்தொழிலாளர்களிடையே பெரும் வறுமை என்பது ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு செய்யப்படும் மூலோபாயம் ஆகும்; அது பரந்த வேலையின்மை மற்றும் பெரும் ஏமாற்றத்தை பயன்படுத்தி வயதான தொழிலாளர்கள் மீது விரைவில் பணிநீக்கம், சலுகைகள் குறைப்பு, ஊதிய வெட்டுக்களை ஏற்க அழுத்தம் கொடுக்க உதவுகிறது.

இக்கொள்கைகளின் நோக்கம்,  உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் வரலாற்றுத் தன்மை கொண்ட பின்னடைவாகும்; இது கடிகாரத்தை 19ம் நூற்றாண்டிற்கு பின்னோக்கி திரும்பி வைப்பதற்கு சமமாகும். மார்க்ஸ் சரியாக வலியுறுத்தியுள்ளபடி, தொழிலாள வர்க்கத்தை வறிய நிலைக்குத் தள்ளுவது, முதலாளித்துவத்தின் பொதுப் போக்காகும். 20ம் நூற்றாண்டின் பரந்த அரசியல், புரட்சிகரப் போராட்டங்கள்தான்—முக்கியமாக அக்டோபர் 1917 ரஷ்யப் புரட்சி—ஐரோப்பிய, அமெரிக்க ஆளும் வர்க்கங்களை தொழிலாள வர்க்கத்திற்கு குறைந்தப்பட்ச சலுகைகளை அளிக்க வைத்தது; எட்டு மணி நேர வேலை, வாழ்க்கைக்குப் போதுமான ஊதியங்கள், ஓய்வூதிய நலன்கள் என.

மக்கள் தொகையில் பெரும்பான்மையோரின் நிலை பின்தள்ளப்பட்டது, தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் போலி இடது அமைப்புக்களால் வர்க்க போராட்டத்தை தசாப்த காலமாக அடக்கியதால் முடிந்தது. இவை முதலாளித்துவ அமைப்பு முறையின் முழு வடிவமைப்பையும் ஏற்கின்றன, அதன் விளைவாக தொழிலாள வர்க்கத்தின் வறுமையையும் ஏற்கின்றன.

இளைஞர்கள் முகம் கொடுக்கும் இழிந்த சமூக நிலைமை, —மற்றும் போர், சர்வாதிகாரம் என்னும் ஆபத்துக்களுடன்— தேசியவாதத்தின் அடிப்படையில் உள்ள அனைத்து அரசியல் வேலைத்திட்டங்களின் தோல்வியின் வெளிப்பாடும், அதேபோல் சமூகத்தின் பெரும்பாலான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முதலாளித்துவ அமைப்புமுறை திருத்தப்பட முடியும் என்ற கருத்தாய்வையும் அடித்தளமாக கொண்டது. சோசலிச அரசியல் மற்றும் அதற்காக போராட புரட்சிகரக் கட்சி ஒன்று இல்லாவிட்டால், ட்ரொட்ஸ்கி கூறியதுபோல், தொழிலாள வர்க்கம் “சுரண்டுவதற்கான வெறும் மூலப்பொருள்தான்.”

இளைஞர்களுக்கு ஒரு எதிர்காலத்தை அளிப்பதில் இந்த அமைப்பு முறையின் தோல்வி என்பது, ஏற்கனவே துனிசியா, எகிப்தில் இருந்து கிரேக்கம், ஸ்பெயின் வரை வெகுஜன சமூக எழுச்சிகளுக்கு எரியூட்டியுள்ளது. ஆனால் இளைஞர்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை அரசியல் தலைமை நெருக்கடியை தீர்ப்பதாகும். இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க, சமூகத்தை தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல், மனித தேவைகளின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினுடைய புரட்சிகர வெகுஜனக் கட்சியை மறுகட்டமைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்;