சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Five years after the financial crash, global economy continues to weaken

நிதியச் சரிவிற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் உலகப் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைகின்றது

Nick Beams
19 August 2013

use this version to print | Send feedback

செப்டம்பர் 2008 உலக நிதிய நெருக்கடியின் வெடிப்பை உடனடியாகத் தொடர்ந்து சீனா, இந்தியா, பிரேசில் உட்பட “எழுச்சி பெறும் சந்தைகள்” என அழைக்கப்படுபவை முக்கிய முதலாளித்துவப் பொருளாதாரங்களில் இருந்து விடுபட்டு உலகப் பொருளாதாரம் முழுவதற்கும் வளர்ச்சிக்கு புதிய அஸ்திவாரத்தை வழங்கும் எனக் கூறப்பட்டது.

அந்த பொருளாதாரக் கட்டுக்கதை அம்பலமாகிவிட்டது. “எழுச்சி பெறும் சந்தைகள்” வளர்ச்சிக்கு ஏற்றம் கொடுக்க முடியவில்லை என்பது மட்டும் இல்லாமல், அவையே விரைவில் உலக உறுதியற்ற தன்மைக்குப் புதிய மூலமாகிவிட்டன.

கடந்த வாரம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் உலகின் மிகப் பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமான பிரிட்ஜ்வாட்டரின் அறிக்கை ஒன்றை மேற்கோளிட்டது. அது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உட்பட பெரிய பொருளாதாரங்கள் இப்பொழுது உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு எழுச்சி பெறும் நாடுகளை விட அதிக பங்களிப்பு செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அந்த விளைவு முன்னேறிய நாடுகளில் புத்துயிர்ப்பிற்கு வழிகாட்டவில்லை, மாறாக, அது உலகப் பொருளாதாரம் முழுவதும் பலவீனமடைகிறது என்பதைக் குறிக்கிறது. அனைத்து முக்கிய நாடுகளினதும் வளர்ச்சி விகிதங்கள் 2007-08ல் அடையப்பட்ட தரங்களைவிட குறைவாகவே உள்ளதுடன், நெருக்கடிக்கு முந்தைய விகிதங்கங்களை மீண்டும் காணக்கூடும் என்னும் சாத்தியங்களும்  தெரியவில்லை.

பிலடெல்பியாவின் மத்திய வங்கி வெளியிட்ட பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடு அவர்கள் அமெரிக்கப் பொருளாதாரம் 2013ல் 1.5% வளர்ச்சி அடையலாம் என எதிர்பார்ப்பதாக கண்டறிந்துள்ளது. இது மே மாதம் அவர்கள் கணித்திருந்த 2.0% ஐவிடக் குறைவாகும். வளர்ச்சி நீண்டகாலத்திற்கு வரப்போவதில்லை என்று ஜே.பி.மோர்கனுடைய முக்கிய பொருளாதார வல்லுனரின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அது அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்திறன் 3.5% என இருந்தது பாதியாகிவிட்டது என்றும் கூறுகிறது.

இப்பொழுது நிலைமை இன்னும் மோசமாக மற்ற இடங்களில் உள்ளது. ஐரோப்பா தொடர்ந்து தேக்க நிலையில் உள்ளது. ஐரோப்பிய பகுதிப் பொருளாதாரங்கள் ஜூன் முடிந்த காலாண்டில் 0.3% விகிதம்தான் வளர்ச்சியுற்றன. இது ஆண்டு ஒன்றிற்கு 1.1% எனக் கூறப்படலாம். சாதகமான வளர்ச்சிக்கு மீண்டும் திரும்புதல், அதுவும் ஆறு தொடர்ந்த காலண்டுகள் சுருக்கத்திற்குப்பின், என்பது ஐரோப்பா “திருப்பத்தை கடந்துவிட்டது” என்பதைக் காட்டாது. யூரோப்பகுதி பொருளாதாரம் முற்றிலும் இன்னமும் 2008ல் இருந்ததைவிட 3% சிறிதாகத்தான் உள்ளது.  பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் வேலையின்மை விகிதத்தை குறைக்க வருடாந்த விகித வளர்ச்சி குறைந்தப்பட்சம் 2-3 % ஆக அடுத்த மூன்று ஆண்டுகளில் இருக்க வேண்டும் என்றும் அதற்கான சாத்தியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

“எப்படி ஐரோப்பா இந் நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் என்பதை கண்டுபிடிப்பது கடினம்” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியுள்ளது. செய்தித்தாள் “தொடர்ந்த சிக்கன நடவடிக்கைள், கட்டுபடியாக கூடிய வங்கிக் கடன்களை பெற முடியாமல் இருப்பது, உயரும் வேலையின்மை மற்றும் நலிந்த வருமானங்கள் மற்றும் திறனுக்குக் குறைந்த வகையில் செயல்படும் நிறுவனங்கள் முதலீடு செய்யாத நிலை ஆகியவை மீட்பிற்கு தடைகளாக உள்ளன.” எனக் கூறுகின்றது.

ஜப்பான் வங்கியின் திட்டமான பணப்புழக்கத்தை இரு மடங்காக்குவது ஜப்பானின் பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுத்தது போல் தோன்றுகிறது. மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி ஆண்டிற்கு 2.6% என உள்ளது. ஆனால் இது எதிர்பார்த்த 3.6% உயர்வு என்பதை விட மிகவும் குறைவாகும்.

பொருளாதார வளர்ச்சிக்கு “எழுச்சி பெறும் சந்தைகளில்” பலவீனமான பங்களிப்பின் முக்கிய காரணம் சீனாவில் வளர்ச்சிக் குறைவு ஆகும். அங்கு இந்த ஆண்டு உத்தியோகபூர்வ கணிப்பு 7.5%, ஆகும். அது 1990ல் இருந்து குறைவான வளர்ச்சியாகும். ஆனால் இதையும்விடக் குறையலாம் என்பதற்கு எச்சரிக்கைகள் உள்ளன.

வீழ்ச்சியடையும் சீன வளர்ச்சி என்பது தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற மூலப் பொருட்களை வழங்கும் நாடுகளில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிற்கு சோயா பீன்ஸ் மற்றும் இரும்புத் தாதுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பிரேசில் 7.6% வளர்ச்சியைக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு அது 2.3% தான் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இரும்புத் தாதுப் பொருட்களை முக்கியமாக வழங்கும் ஆஸ்திரேலியா சீன முதலீட்டு உள்கட்டுமானத்தின் விரைவுச் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ கருவூலக் கணிப்பு ஆஸ்திரேலியாவின் வர்த்தகத்தில் ஏற்றமதி இறக்குமதி விலைகளின் விகிதத்தில் கணிசமான சரிவைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது ரூட்டின் தொழிற்கட்சி அரசாங்கம் இரும்புத்தாதுப் பொருட்களில் முக்கிய முதலீடுகளுக்கு உந்துதல் கொடுத்த “சீனாவின் ஏற்றம்” முடிந்துவிட்டது எனக் கூறுகிறது.

குறைந்த வளர்ச்சி என்பது மட்டும் ஒரே பிரச்சினை அல்ல. சீனாவின் உயர் கடன் தரங்கள் பெருகியிருப்பதால் கவலைகள் வந்துள்ளன. இதன் விளைவாக உலக நிதிய நெருக்கடி 2008-09க்குப் பின் வந்த கடன் நிதிய ஊக்கம் அளித்தல் என்பவை ஒரு நிதிய நெருக்கடியை உருவாக்கலாம்  என்ற நிலை உள்ளது.

கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் Fitch Ratings பகுப்பாய்வாளர் சார்லேன் சூ கருத்துப்படி, சீனாவின் நிழல் வங்கித்துறை என அழைக்கப்படுவது பற்றிய ஆய்வு நாட்டின் மொத்தக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 200% அதிகம் இருக்கலாம் என வெளிப்படுத்தியுள்ளது. பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளதைவிட அதிகமாக வங்கித்துறை முழுவதுமே நிழல் வங்கித் துறைக் கடன்களை நம்பியுள்ளன என்று சூ எச்சரித்துள்ளார். சீனாவின் வங்கி முறைச் சொத்துக்கள் 208 முதல் 2013 வரை 14 டிரில்லியன் டாலர்கள் விரிவடைந்துள்ளது என்றும் அவர் மதிப்பீடு செய்துள்ளார். இது முழு அமெரிக்க வங்கிமுறையின் அளவிற்குச் சமம் ஆகும்.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் சீன வங்கிகள் வைத்துள்ள செலுத்தப்படாத கடன்கள் இரண்டாம் காலாண்டில் 2 பில்லியன் டாலர்கள் உயர்ந்தன. இது வரிசையாக ஏழாம் காலாண்டில் நடந்துள்ளது என்று காட்டுகின்றன.

உலக வளர்ச்சிக்கு மத்திய திறனுடையது எனக்கருதப்பட்ட மற்றொரு பொருளாதாரமான இந்தியாவில் பெருகும் நிதியப் பிரச்சினைகள் மற்ற இடங்களில் வரவிருக்கும் நிலைமைக்கு அடையாளமாக இருக்கலாம். இதன் பொருளாதார வளர்ச்சிக் குறைவு, இந்த ஆண்டு 5% வளர்ச்சிதான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவில் பாதியாக நாட்டின் மிகப் பெரிய தொழில்துறை நிறுவனங்களின் கடன் சுமையை அதிகப்படுத்தக்கூடும்.

இந்திய நிதிய முறை மூலதன வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் இதையொட்டி மூலதனக்கட்டுப்பாடுகள் மறுபடி சுமத்தப்பட்டன. இது ரூபாயின் மதிப்பு சரிவைத் தடுக்கும் முயற்சியாகும். பைனான்சியல் டைம்ஸ் விளக்கியுள்ளபடி இந்தியப் பொருளாதாரம் “சரியும் ரூபாய், வளர்ச்சியில் தீவிரவீழ்ச்சி, பெருத்து விட்ட செலுத்தமதியின்மை மற்றும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள், தொடர்ந்து உயரும் பணவீக்கம் என்னும் நச்சுக்களில் கூட்டு” ஏற்படுத்தியுள்ள விளைவு  ஆகும்.

அதிகரித்துவரும் நிதியப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள எழுச்சி பெறும் பொருளாதாரம் இந்தியா மட்டும் அல்ல. அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு விரைவில் “பணத்தை அச்சடித்துவிடும் திட்டத்தின் மையமாக இருக்கும்” அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை வாங்குவதை அநேகமாக அடுத்தமாதம் குறைக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு மற்ற பிராந்தியங்களில் இருந்தும் மூலதனம் வெளியேறுவதை தூண்டியுள்ளது. இந்தியாவைத் தவிர, புதிய வளர்ச்சி மையம்  எனப் பெருமைப்படுத்தப்படும் இந்தோனேசியாவும் பெருகும் நிதியப் பிரச்சினைகளை அனுபவிக்கிறது.

மத்திய வங்கிக் கூட்டமைப்பு “பத்திரங்கள் வாங்குவதை குறைக்கக்கூடும்” என்னும் அச்சத்தில் ஆசியா முழுவதும் சந்தைகள் கடந்த வாரம் சரிவை கண்டன. அது அமெரிக்காவில் வட்டிவிகிதங்களை உயர்த்தும், மூலதன இயக்கம் மீண்டும் அமெரிக்க சொத்துக்களில் சேர வகை செய்யும். ஆனால் இதிலுள்ள ஆபத்து தற்போதைய மூலதன வெளியேற்றம் “கொள்கை திருத்தம்” ஆரம்பித்தால் ஒரு வெள்ளமென பெருகலாம் என்பதாகும்.

1997-98ல் தாய் பாஹ்த் மதிப்புச் சரிவு நிதியக் குமிழ் ஒன்றை ஆசியா முழுவதும் ஏற்படுத்தியது. பிராந்தியப் பொருளாதார விளைவுகள் முக்கிய முதலாளித்துவ பொருளாதாரங்களில் பெருமந்தநிலைக்கால பாதிப்பிற்குச் சமமாக இருந்தன.

நிதியச் சந்தைகள் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ள நிலையில் உலகப் பொருளாதாரம் சமீபத்திய ஆண்டுகளில் “எழுச்சி பெறும் சந்தைகளில்” அதிகளவில் தங்கியிருப்பதால் இன்னொரு நிதிய நெருக்கடி என்பது இன்னும் மோசமாகத்தான் இருக்கும்.