சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian workers and students defend Edward Snowden

இந்திய தொழிலாளர்களும், மாணவர்களும் எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகாக்கின்றனர்

By our reporters
29 November 2013

Use this version to printSend feedback

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையால் (NSA) நடத்தப்பட்ட பரந்த சட்டவிரோத உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டெனைப் பாதுகாக்க உலக சோசலிச வலைத் தளத்தால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச பிரச்சாரத்திற்கு தென்னிந்திய தொழிலாளர்களும், மாணவர்களும் அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்தியாவில் WSWS ஆதரவாளர்கள் கடந்த மாதத்தில் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சென்னை, நெய்வேலி மற்றும் பெங்களூரில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்வல்லுனர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். ஸ்னோவ்டெனுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான மறைமுக வேட்டையைக் கண்டிக்கும் ஓர் அறிக்கையில் பலர் கையெழுத்திட்டனர், இது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் தாக்குதல்கள் குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் கவலைகளைப் பிரதிபலிப்பதாய் இருந்தது.

இந்தியாவின் இராஜாங்க நடவடிக்கைகள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை இலக்கில் வைத்து, இந்தியா மீதான அமெரிக்காவின் பாரிய உளவு வேலைகளை ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தினார் என்ற உண்மைக்கு இடையிலும், ஸ்னோவ்டெனின் தஞ்சம் கோரிய முறையீட்டை இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிராகரித்தது. ஸ்ராலினிச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்) ஸ்னோவ்டெனைப் பாதுகாக்க மறுத்துள்ளது.

சென்னையில், WSWS ஆதரவாளர்கள் இரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) மற்றும் சென்னை ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் (MEPZ) தொழிலாளர்களுடன், அத்துடன் கல்லூரி மாணவர்களுடன் பேசினர். பெங்களூரில், மாணவர்களும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களும் அந்த பிரச்சாரத்திற்கு அவர்களின் ஆதரவை வழங்கினர். நெய்வேலியில், நாங்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி கார்பரேஷன் (NLC) தொழிலாளர்களுடன் பேசினோம்.

"மில்லியன் கணக்கான அமெரிக்க மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களை நோக்கி ... அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் இரகசிய மற்றும் சட்டவிரோத உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதில் ஸ்னோவ்டென் ஒரு தைரியமான படியை எடுத்திருந்தார்" என்று மக்கள் கையெழுத்திட்ட அந்த அறிக்கை விவரித்தது. அது ஸ்னோவ்டெனுக்கு எதிரான மறைமுக வேட்டையை உடனடியாக நிறுத்தக் கோரியதோடு, அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க மறுத்த இந்திய அரசாங்கத்தையும் கண்டித்தது.

"இந்திய அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு உளவு நடவடிக்கையான மத்திய கண்காணிப்பு அமைப்புமுறையையும் (CMS) அந்த அறிக்கை எதிர்த்தது. அந்த நடவடிக்கையானது இந்தியாவின் 900 மில்லியன் தரைவழி (லேண்ட்லைன்) மற்றும் மொபைல் தொலைபேசி பயனர்களை மற்றும் 120 மில்லியன் இணைய பயனர்களை உளவுத்துறை முகமைகள் தடையின்றி அணுக வசதியை வழங்குகிறது.

நெய்வேலியில், மூன்று சக்கர வாகன ஓட்டுனர் ஜேம்ஸ் WSWSக்கு கூறியதாவது: “அங்கே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மத்தியில் ஜனநாயகத்திற்கு ஆதரவில்லை என்பதில் உங்களோடு நானும் உடன்படுகிறேன். இருந்தபோதினும், சாமானிய அமெரிக்க மக்களிடமிருந்து ஸ்னோவ்டெனுக்கு கிடைத்து வரும் ஆதரவு, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அம்மக்கள் மத்தியில் ஓர் அடித்தளம் இருப்பதையே காட்டுகிறது," என்றார்.

ஸ்னோவ்டெனின் செயல்கள் தைரியமானவை. எவ்வாறிருந்த போதினும், தனிநபரின் செயல்கள் மூலமாக ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. அதற்கொரு சமூக இயக்கம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கம் மக்களை ஒரு விரோத சக்தியாக பார்க்கிறது. இது ஏனென்றால் பெருவணிகங்களுக்கான அவற்றின் ஆதரவு கொள்கைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிட்டன."

ஒரு NLC நிரந்தர தொழிலாளர் ஜாபர் அலி கூறியது: “பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவே மக்கள் மீது பாரிய உளவு வேலைகள் செய்யப்படுகின்றன என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வாதம் ஒரு பொய். மக்களின் உரிமைகள் மீதுள்ள நிஜமான அபாயம் பயங்கரவாதிகளிடமிருந்து வரவில்லை மாறாக அமெரிக்க முதலாளித்துவ அரசிடம் இருந்து வருகிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர், பேரழிவு ஆயுதங்களை ஈராக் கொண்டிருக்கிறது என்ற முழு பொய்யின் அடிப்படையில், ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடுத்தது."

மற்றொரு NLC தொழிலாளர் கூறியதாவது: “அமெரிக்க அரசு அதன் மக்களுக்கு எதிராக நடத்திய பாரிய உளவுபார்ப்பு வேலைகளை மட்டும் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தவில்லை மாறாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மீது நடத்தப்பட்டதையும் அம்பலப்படுத்தினார். அவரை பாதுகாக்க முன்வருவது உலக மக்களின் கடமையாகும், ஏனென்றால் அவர் அவர்களுக்காக தான் பேசினார். நான் உங்களைச் சந்திக்கும் வரையில் எனக்கு ஸ்னோவ்டெனைக் குறித்து தெரியாமல் இருந்தது," என்றார்.

சென்னையில், ஒரு ஐசிஎப் தொழிலாளர் கண்ணன் கூறியது: “நான் ஸ்னோவ்டெனைக் குறித்து கேள்விபட்டிருக்கிறேன். இப்போது இந்த பிரச்சினை குறித்து உங்கள் மூலமாக நிறைய தெரிய வந்திருக்கிறது. அவருக்கு எதிரான மறைமுக வேட்டையை நான் எதிர்க்கிறேன். தொழிலாளர்களின் பக்கம் நிற்பதற்கு உலகில் எங்கேயும் ஒரு அரசாங்கமும் இல்லை என்பதையும் நான் அறிவேன். இப்போது இந்திய அரசாங்கம் அரசுக்கு சொந்தமான ICFஐ தனியார்மயமாக்க வேலை செய்து வருகிறது. அதன் விளைவாக, எங்கள் வேலைகள் அழிக்கப்படும். அவர்கள் ஒரு ஒப்பந்த வேலை முறையை அறிமுகப்படுத்தினால், எங்களின் சம்பள விகிதம் கணிசமான அளவிற்கு குறைந்துவிடும்."

ஒரு ஐசிஎப் தொழிலாளரின் மனைவி மோனிசா விவரித்தார்: “ஸ்னோவ்டெனின் தைரியமான நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அவர் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அவரது வாழ்வையே பணயமாக வைத்துள்ளார், அது பாராட்டப்பட வேண்டியதாகும்." அவர் ICF இன் தனியார்மயமாக்கல் நிகழ்முறை குறித்தும் கருத்து தெரிவித்தார்: “எனது கணவரிடமிருந்து இது குறித்து எனக்கு தெரிய வந்தது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எங்களுடைய வாழ்க்கை தரங்கள் மோசமாக தான் நிற்கிறது. உழைக்கும் மக்களுக்காக உழைக்கும் ஒரு அரசாங்கத்தை நான் பார்க்க விரும்புகிறேன்," என்றார்.

ஒரு MEPZ தொழிலாளர் கணேஷ், ஸ்னோவ்டெனுக்காக உலக சோசலிச வலைத் தளம் இந்தியாவில் ஏன் ஒரு பாதுகாப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது, மற்றும் அதனால் ஏதாவது தாக்கம் உள்ளதா என அறிய விரும்பினார். அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஸ்னோவ்டெனின் அம்பலப்படுத்தல்களின் ஆழ்ந்த முக்கியத்துவத்தை WSWS ஆதரவாளர்கள் விளங்கப்படுத்தினர். பணயத்தல் இருப்பது, அமெரிக்கா மற்றும் அதனோடு சேர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள ஏனைய முதலாளித்துவ அரசாங்கங்களால் மீறப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பாகும். இத்தகைய கோட்பாடுகளை பாதுகாப்பதில் ஸ்னோவ்டென் ஒரு தைரியமான நிலைப்பாட்டை எடுத்தார், சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் அவர் ஆதரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும்.

கணேஷ் குறிப்பிட்டார்: “உண்மையில் ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் அமெரிக்க அரசை அச்சுறுத்தி உள்ளதோடு, அதை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி உள்ளது. இதேபோன்று, இந்திய அரசாங்கத்தையும் அவமதிக்க வேண்டியுள்ளது. அதற்காக தான் அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள் இரண்டும் பரந்த உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. நான் இதை எதிர்க்கிறேன். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், ஸ்னோவ்டெனை பாதுகாக்கவும் நமக்கு ஒரு சர்வதேச இயக்கம் தேவை என்பதில் நான் உடன்படுகிறேன்."

சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியின் அரசியல் விஞ்ஞானத்துறை மாணவர் லோகேஷ் WSWSக்கு கூறியது: “தாம் சட்டத்தை மீறவில்லை என்றும், தமது வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்றும் ஸ்னோவ்டெனின் கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டதல்ல. உண்மையில் அவரை ஒரு தேசதுரோகியாக கூறும் அந்த செனட்டர்களும், ஊடகங்களும் தான் தேசதுரோகிகள். அமெரிக்க அரசின் அதிகப்படியான சர்வாதிகார குணாம்சம், அது ஸ்னோவ்டெனை மௌனமாக்க முயற்சிக்கும் அதன் வழிமுறைகளிலே மேலும் கூடுதலாக வெளிப்பட்டுள்ளது."

பெங்களூரில் BTM அருகில் உள்ள மாரதஹல்லி பகுதி மற்றும் மின்னணு நகரில், WSWS ஆதரவாளர்கள் சில ஆந்திர பிரதேசத்தினர் உட்பட தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் மாணவர்களோடு உரையாடினர். விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலி            யான் அசான்ஜ் குறித்து சிலர் கேள்விபட்டிருந்தனர் என்றபோதினும், அவர்களில் பலர் ஸ்னோவ்டெனைக் குறித்து அறிந்திருக்கவில்லை. இருந்தபோதினும், ஸ்னோவ்டென் விவகாரம் மற்றும் அதன் சர்வதேச முக்கியத்துவம் குறித்து கூடுதலாக அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.