சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The unions and the Detroit bankruptcy

தொழிற்சங்கங்களும் டெட்ராய்டின் திவால்நிலையும்

Joseph Kishore
2 December 2013

Use this version to printSend feedback

டெட்ராய்ட் கலைக்கூடத்தின் கலைப்படைப்புகளை விற்பதற்கு அழுத்தம் அளிக்க மாநில மற்றும் உள்ளாட்சி அரசு தொழிலாளர்களுக்கான பிரதான அமெரிக்க தொழிற்சங்கத்தின் மிச்சிகன் கிளை, கடந்த வாரம் பெடரல் திவால்நிலை நீதிமன்றத்தில் ஒரு கூட்டு பிரேரணையைத் தாக்கல் செய்தது. துல்லியமான சட்டமொழியில் கூறுவதானால், தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்கு எதிராக வங்கியாளர்களின் சூழ்ச்சியில் தொழிற்சங்கங்கள் முழு பங்குதாரர்களாக இருப்பதை அந்த ஆவணம் அம்பலப்படுத்துகிறது.

AFL-CIO உடன் இணைந்த மாநில, உள்ளாட்சி மற்றும் நகரசபை பணியாளர்களின் அமெரிக்க கூட்டமைப்பு கவுன்சில் 25 (AFSCME), ஒரு பிரதான பத்திர காப்பீட்டு நிறுவனமான Financial Guaranty காப்பீடு நிறுவனத்தோடு சேர்ந்து (இங்கே காணக் கிடைக்கும்) அந்த தீர்மானத்தைத் தயாரித்தது. அந்த தீர்மானத்தில் FGIC மற்றும் AFSCME கவுன்சில் 25 உடன் ஏனைய பல வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களும் சேர்ந்திருந்தன.

டெட்ராய்ட் கலைக்கூடத்தின் கலைப்படைப்புகளைக் கொண்டு "பணம் திரட்டுவதை" மேற்பார்வை செய்ய தொழிற்சங்கங்கள் மற்றும் கடன்பத்திரதாரர்கள் மற்றும் பத்திர காப்பீட்டாளர்களின் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அமைப்பை ஸ்தாபிக்க, நகர கடன்வழங்குனர்களின் பெயரில், நீதிபதி ஸ்டீவன் ரோட்ஸிடம் அந்த பிரேரணை வலியுறுத்துகிறது. அவசரகால மேனேஜர் Kevyn Orr வழிகாட்டுதலின் கீழ், அந்நகரம் திவால்நிலையோடு மேற்செல்ல முடியுமா என்பதன் மீது ரோட்ஸ் நாளை தீர்ப்பு கூற உள்ளார்.

அந்த தீர்மானம், திவால்நிலை நிகழ்முறைக்கும் மற்றும் Orrஇன் நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கி தொடங்குகிறது. வங்கிகளின் நலன்களுக்காக டெட்ராய்டை மறுகட்டமைப்பு செய்ய Orr நிதியியல் ஜாரைப் போன்று நிறுவப்பட்ட ஒரு வோல் ஸ்ட்ரீட் திவால்நிலை வழக்கறிஞர் ஆவார். அந்த தீர்மானம் குறிப்பிடுகிறது, “சீரமைப்புக்குரிய ஒரு திட்டத்தை அந்நகரம் தாக்கல் செய்திருப்பதை உணர்ந்துநகரத்தின் இலக்குகளைப் புரிந்து கடன்வழங்குனர்கள் ஆதரவளிப்பார்கள்." எவ்வாறிருந்த போதினும், "முக்கியமாக நகரத்தின் மிக மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்றாக விளங்கும் கலை படைப்புகள் உட்பட, [டெட்ராய்டின்] அத்தியாவசியமல்லாத சொத்துக்களைக் கொண்டு நிதி திரட்டுவதில் தோல்வி அடைந்தால், (நகர தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ பராமரிப்பை வெட்டுவது உட்பட) Orrஇன் முன்மொழிவுகள் நீண்ட மற்றும் சர்ச்சைக்குரிய எதிர்போராட்டங்களை உண்டாக்கும்" என்பதில் அந்த தீர்மானம் அதன் கவலைகளை வெளிப்படுத்துகிறது.

திவால்நிலையை எதிர்ப்பதிலிருந்து வெகுதூரம் விலகி நின்ற தொழிற்சங்கங்களும் அதன் சக கடன்வழங்குனர்களும், "உரிய திட்டத்தை விரைவாக தாக்கல் செய்வதிலும், உறுதிப்படுத்துவதிலும் நகரத்தின் முயற்சிகள் வீணாகாமல் இருப்பதை உறுதிப்படுத்த" விரும்புவதாக அறிவித்தன.

"பில்லியன் டாலர்" மதிப்பிலான டெட்ராய்ட் கலைக்கூடத்தின் கலைத்துவம் மிக்க அரிய படைப்புகள் "எந்தவொரு முக்கிய சேவைகளை வழங்குவதோடும் இணைந்ததல்ல" என்பதால் அவற்றை கொண்டு "பணம் திரட்ட வேண்டுமென" அந்த தீர்மானம் வலியுறுத்தி செல்கிறது. அந்த கலை படைப்புகளின் மதிப்பை "பொருத்தமின்றி குறைமதிப்பீடு" செய்துவிடாமல் இருக்க AFSCME மற்றும் அதன் வோல் ஸ்ட்ரீட் பங்காளிகள் எச்சரிக்கின்றன.

அந்த மனுவின் 18 பக்க முக்கிய பகுதிகளில் "விஸ்தரிக்கவும்" என்ற சொல் (சாத்தியமான அளவிற்கு பண பட்டுவாடா செய்வதற்கு எனும் அர்த்தத்தில்) 19 முறை வருகின்றது. இதனோடு தொடர்புபட்ட விதத்தில், அந்நகரத்தால் சமர்பிக்கப்பட்ட திட்டம் "கடன்வழங்குனர்களின் சிறந்த நலன்களுக்கு உகந்த விதத்திலும்”, “எல்லா கடன்வழங்குனர்களுக்கும் இயலுமளவிற்கு கிடைக்கும் விதமாக கடன் வாங்கியவர்களின் சொத்துக்களில் இருந்து அதிகபட்ச பொருளாதார மீட்புக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கும் விதத்திலும்", “நகரத்தின் சொத்துக்களை ஈடுகொடுக்க வேண்டி இருந்தால், இழப்பீட்டு மதிப்பை விட அதிக தொகையை அது அளிக்கும் விதமாகவும்" இருக்க வேண்டுமென பெடரல் திவால்நிலை சட்டம் கோருவதாக அந்த தீர்மானம் குறிப்பிடுகிறது.

இது தான் நிதிய கழுகுகளின் மற்றும் திருடர்களின் மொழியாக இருக்கிறது. பிரச்சினைக்குள் சிக்கி உள்ள அந்த சொத்துக்கள் மக்களுக்கு சொந்தமானவையாகும், டெட்ராய்ட் கலைக்கூடமே கூட நகரத்தின் கலாச்சார ஆன்மாவாக உள்ளது, அதன் உள்ளடக்கங்கள் இளம் தலைமுறையின் கல்விக்குரிய மையப்பொருள்களாக உள்ளனஇவை முக்கியத்துவமற்று உள்ளன. கலை மற்றும் கலாச்சாரம் இரண்டுமே உழைக்கும் மக்களின் ஓர் உரிமை மற்றும் ஒரு தேவை என்ற கருத்து முற்றிலுமாக தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் அவற்றின் சக "கடன் வழங்குனர்களுக்கும்" அன்னியமாக உள்ளது.

இந்த சட்டபூர்வ நடவடிக்கையால், AFSCME தன்னைத்தானே ஒரு வியாபார ஸ்தாபனமாக வரையறுத்துள்ளது. வங்கிகள், கடன் பத்திரதாரர்கள், பத்திர காப்பீட்டாளர்கள் மற்றும் Quicken Loans நிறுவன தலைவர் டேன் கில்பெர்ட் போன்ற ரியல் எஸ்டேட் ஊகவணிகர்கள் தான் அதன் கூட்டாளிகள், தொழிலாளர் வர்க்கம் அல்ல. டெட்ராய்ட் தொழிலாளர்களை வறுமைக்குட்படுத்தி, டெட்ராய்ட் கலைக்கூடம் போன்ற பொது சொத்துக்களை விற்று, மற்றும் சமூக சேவைகளை வெட்டி வங்கியாளர்களின் சூழ்ச்சியிலிருந்து அதிகபட்சம் சாத்தியமான அளவிற்கு எச்சசொச்சங்களைப் பெறுவதே, இங்கே ஒருங்கிணைந்த ஆட்டோ தொழிலாளர்களுக்காக பேசும் AFSCME, Teamsters மற்றும் இதர பிற தொழிற்சங்கங்களின் ஒரே கவலையாகும்.

அங்கே AFSCME உறுப்பினர்களின் அல்லது பொதுவாக டெட்ராய்ட் தொழிலாளர்களின் தேவைகளைக் குறித்து அந்த ஆவணத்தில் ஒரேயொரு வார்த்தை கூட இல்லை. அதை குறித்து, மேலோட்டமாக கூட, அந்த தொழிற்சங்கத்திற்கு கவலை இல்லை. டெட்ராய்ட் கலைக்கூடத்தின் அரிய படைப்புகளை விற்பதன் மூலமாக நகர ஓய்வூதிய நிதிய சொத்துக்களின் குறைமதிப்பீட்டைக் குறைக்க AFSCME விரும்பக்கூடும், அது ஏனென்றால் ஓய்வுபெற்ற நகர தொழிலாளர்களின் நலன்களை அது தக்க வைக்க விரும்புகிறது என்பதற்காக இல்லை, மாறாக அதன் செயலதிகாரிகளின் ஆறு இலக்க சம்பளங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஓய்வூதிய நிதி சொத்துக்களோடு பிணைந்துள்ளது என்பதால் ஆகும்.

தொழிலாள வர்க்கத்தோடு அல்லது தொழிலாள வர்க்க போராட்டத்தின் பாரம்பரியங்களோடு ஏதேனும் தொடர்பு கொண்ட எந்தவொரு அமைப்பும் இதுபோன்ற அறிக்கைகளை உருவாக்காது. இந்த வெறுப்பூட்டும் தீர்மானத்தில் இணைந்ததன் மூலமாக, ஒட்டுமொத்தமாக தொழிற்சங்கங்களின் உருமாற்றத்திற்கு AFSCME வெளிப்பாட்டை கொடுத்துள்ளது.

"தொழிற்சங்கம்" என்ற சொல் இதுவரையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் ஐக்கியப்பட்ட அவர்களின் பிம்பத்தை எடுத்துக்காட்டுகிறது அல்லது வர்க்க போராட்டத்தின் முந்தைய பாரம்பரியத்தை நினைவூட்டுகிறதென்பதால், அதை பயன்படுத்துவதே ஏமாற்றுத்தனமாக ஆகிவிட்டது. தொழிற்சங்கங்கள் இத்தகைய மரபுகளை நீண்ட காலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்டன.

இத்தகைய அமைப்புகளின் உருமாற்றம் டெட்ராய்டை விட வேறெங்கும் தெளிவாக இருக்காது. டெட்ராய்டில் இருந்து பிளிண்ட் வரையில், தென்கிழக்கு மிச்சிகன், ஐக்கிய ஆட்டோ தொழிலாளர்களின் ஸ்தாபகத்திற்கு இட்டு சென்ற மிகப் பெரிய மோதல்கள் உட்பட 1930களின் தொழில்துறை தொழிற்சங்க இயக்கத்தின் இருதயமாக விளங்கியது. டெட்ராய்ட் கலைக்கூடத்தின் விஸ்தரிப்பு இந்த நிகழ்முறையோடு இணைந்திருந்தது, அது அந்த அருங்காட்சியகத்தின் நடுகூடத்தில் இருந்த டெய்கோ ரிவேராவின் ஆட்டோ தொழில்துறை சுவரோவியங்களில் பிரதிபலித்தது.

இந்த வரலாறு நிகழ்கால தொழிற்சங்கங்களுக்கு ஒவ்வாததாக உள்ளது. இத்தகைய அமைப்புகள் பெருநிறுவன சார்பு ஆட்சிக்குழுக்களாக மாறியதன் அடித்தளம், ஜனநாயக கட்சியுடன் அரசியல் கூட்டணி ஜோடிக்கப்பட்டதில், 1940கள் மற்றும் 1950களின் கம்யூனிச-விரோத துப்புரவாக்கலில், மற்றும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு மற்றும் தேசிய-அரசிற்கு அடிபணிய செய்யப்பட்டதில் என பல தசாப்தங்களுக்கு முன்னரே அமைக்கப்பட்டது.

1970களின் தொடக்கத்தில், தொழிற்சங்கங்கள் தங்களைத்தாங்களே பெருநிறுவன ஸ்தாபகம் மற்றும் அரசிற்குள் கூடுதலாக ஒருங்கிணைத்து கொண்டதன் மூலமாக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்குடெட்ராய்டிலும், நாடு முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும்விடையிறுப்பு காட்டின. டெட்ராய்ட் பகுதியில் நூறு ஆயிரக்கணக்கான வாகனத்துறை வேலைகளை அழிக்க UAW வசதி செய்து கொடுத்தது. கடந்த நான்கு ஆண்டுகளில், இளம் தொழிலாளர்களின் கூலிகளை, வாஸ்தவமான சொற்களில், 1920களில் மேலோங்கி இருந்த கூலிகளைவிட கீழாக குறைக்க அது ஒபாமா நிர்வாகத்துடன் வேலை செய்துள்ளது.

கலாச்சாரத்தின் மீதும் மற்றும் அவர்களைக் குறித்தும் சமூகத்தோடு அவர்களுக்கு இருக்கும் உறவுகளைக் குறித்தும் தொழிலாளர்களைச் சிந்திக்க வைத்து ஒரு பரந்த நனவை அபிவிருத்தி செய்யும் வேறு எந்தவொன்றின் மீதும், இத்தகைய ஸ்தாபனங்களை நடத்தும் பின்தங்கிய மற்றும் ஊழல்மலிந்த அதிகாரிகள் ஓர் ஆழ்ந்த விரோதத்தை கொண்டுள்ளனர். அதுபோன்ற ஒரு புரிதல் தான் சமூக போராட்டத்தின் ஒரு சக்திமிக்க உந்துசக்தியாக உள்ளது. தொழிற்சங்கங்களைப் பொறுத்த வரையில், நிதியியல் பிரபுத்துவத்திற்கு குறைவில்லாமல், டெட்ராய்ட் கலைக்கூடமானது செல்வவளத்தின் ஒரு ஆதார சாத்தியக்கூறு மட்டுமல்ல, மாறாக நேர்மறை போக்கைத் தூண்டக்கூடிய ஒரு தீங்காகவும் உள்ளது.

டெட்ராய்டின் தொழிலாள வர்க்கம் அதன் ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ பராமரிப்பை பாதுகாக்க, டெட்ராய்ட் கலைக்கூடத்தை பாதுகாக்க மற்றும் அதன் உரிமைகளைக் காப்பாற்றவும் மற்றும் விரிவாக்கவும் ஒரு பாதையை எதிர்நோக்கி வருகின்ற அதேவேளையில், திவால்நிலை நடவடிக்கைகளின் அனைத்து தரப்புகளும்—Orr மற்றும் மிச்சிகன் ஆளுநர் ரிக் சின்டெர், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர், கடன் பத்திரதாரர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளடங்கலாகவங்கிகள் மற்றும் கடன்பத்திரதாரர்களின் ஆதாயத்திற்காக நகரத்தைக் கொள்ளையடிப்பதை ஆதரிக்கின்றனர். அங்கே கருத்துவேறுபாடுகள் எதன்மீது உள்ளதென்றால், எச்சசொச்சங்களைப் பிரிப்பதன் மீது உள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நிராகரிக்கிறது. தொழிலாளர்கள் கலை வேட்கையை தியாகம் செய்ய வேண்டுமென்பதையும், டெட்ராய்ட் கலைக்கூடம் மற்றும் உழைக்கும் மக்களின் ஓய்வூதியங்கள் இரண்டையும் பேண அங்கே ஆதாரவளங்கள் இல்லை என்ற வாதங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். வோல் ஸ்ட்ரீட்டிற்கு மானியம் வழங்க பெடரல் ரிசர்வ் மாதந்தோறும் 85 பில்லியன் டாலர் அச்சடித்து கொண்டிருக்கின்ற வேளையில், பங்குச்சந்தைகள் சாதனை உயரத்திற்கு அதிகரித்து செல்கின்ற வேளையில், மற்றும் அமெரிக்காவில் 400 பெரும் பணக்காரர்களின் மொத்த செல்வவளம் 2 ட்ரில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ள ஒரு நேரத்தில், இதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கலாச்சார உரிமை உட்பட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் நிதிய பிரபுத்துவத்தின் செல்வவளத்திற்கும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கும் அடிபணிய செய்யப்படுவதை நாங்கள் நிராகரிக்கிறோம். அந்த காரணத்திற்காக, AFSCME மற்றும் UAW போன்ற தொழிலாள வர்க்க விரோத அமைப்புகளை நாங்கள் எதிர்ப்பதோடு, தொழிலாள வர்க்க போராட்டத்திற்கான புதிய, சுயாதீனமான மற்றும் ஜனநாயக அமைப்புகளை கட்டியெழுப்ப போராடுகின்றோம்.

கலாச்சாரம் மற்றும் மனிதயினத்தின் அனைத்து வெற்றிகளையும் பாதுகாப்பதற்கான சமூக ஸ்தாபகம் தொழிலாள வர்க்கமாகும். எவ்வாறிருந்த போதினும், அதன் நலன்களுக்காக போராட, தொழிலாள வர்க்கத்திற்கு சுயாதீனமான அரசியல் அமைப்பும், அதற்கு எதிராக செயல்படும் சமூக அரசியல் சக்திகளைக் குறித்த ஒரு நனவுபூர்வமான புரிதலும் இரண்டும் அவசியமாகும். இந்த அடிப்படையில் டெட்ராய்ட் கலைக்கூடத்தின் மீதான தாக்குதல் மற்றும் டெட்ராய்ட் திவால்நிலைக்குள் சோசலிச சமத்துவ கட்சி ஒரு தொழிலாளர்களின் விசாரணையை நடத்தி வருகின்றது. detroitinquiry.org தளத்தை பார்வையிடுவதன் மூலமாக இன்றே அதில் கலந்து கொள்ள திட்டங்களை வகுக்குமாறு டெட்ராய்ட் பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும், இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.