சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canada facilitated NSA spying on 2010 G8 and G20 summits

கனடா 2010 G8, G20 உச்சிமாநாடுகளில் வேவு பார்க்க NSA க்கு உதவியது

By Ed Patrick and Keith Jones 
3 December 2013

Use this version to printSend feedback

முன்னாள் உளவுத்துறை ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கசிய விடப்பட்ட ஆவணங்கள், உயர்மட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA), ஒன்ராறியோ மற்றும் டொராண்டோவில் 2010 ஜூன் நடைபெற்ற G8, G20 உச்சிமாநாடுகளில் ஒற்று வேலை பார்க்க கனடாவின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் அனுமதித்தது என்று கூறுகின்றன. மேலும் கனடாவின் சொந்த ஒட்டுக்கேட்டல் உளவுத்துறை நிறுவனமான CSEC எனப்படும் தொடர்புகள் பாதுகாப்பு நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்ப ஆதரவும் NSA க்கு வழங்கப்பட்டது.

கடந்த வாரம் கனடாவின் பொது ஒலிபரப்பு நிறுவனம் CBC வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, NSA, ஒட்டாவாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து இரண்டு உச்சிமாநாடுகளிலும் 6 நாட்கள் உளவு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

விளக்க குறிப்புகள், NSA செயற்பாடு “நெருக்கமாக கனேடிய பங்காளியுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்”, CBC உடைய குறிப்பான “CSES ஒத்துழைப்பு முற்றிலும் தொலைத்தொடர்பு முறைகளை அணுகுவதை உறுதிப்படுத்த தேவை என்றும் இது உச்சிமாநாடுகளின்போது உளவு இலக்குகளில் பயன்படுத்தப்படும்” “என்பதைத் தெளிவாக்குகிறது.”

குறிப்புக்கள் வெளிப்படையாக, இந்த “உளவு இலக்குகளை” பெயரிடவில்லை; ஆனால் அவற்றின் பொருளுரைகளும் முந்தைய NSA அரசாங்க அதிகாரிகள், உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள், ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் முதல் பிரேசிலின் ஜனதிபதி டில்மா ரௌசெப் வரை உளவு பார்த்துள்ளது, ஐயத்திற்கு இடமின்றி இரு உச்சிமாடுகளிலும் அரசாங்கத் தலைவர்கள், அவர்களுடைய மந்திரிகள், உதவியாளர்கள் என பங்குபற்றியவர்கள்  இலக்கு வைக்கப்பட்டிருந்தனர் என்பதை தெரிவிக்கிறது.

CSEC பல தசாப்தங்களாக, NSA இன் உலகளாவிய நடவடிக்கைகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இது உளவுத்தகவல் பகிர்ந்து கொள்ளுவதற்கும் அப்பால் செல்கிறது. CSEC, NSA கண்காணிப்புத் திட்டங்களை பயன்படுத்துகிறது மற்றும் Globe and Mail கடந்த சனி கொடுத்துள்ள அறிக்கை ஒன்றின்படி, NSA அதன் சட்டவிரோத, மொத்தக் கண்காணிப்பு என உலகத் தொடர்புகளை கொண்டிருப்பதின் மூலத் தகவல்களை அணுக முடியும். CSEC, NSA இரண்டும் வாடிக்கையாக ஊழியர்களையும் பரிமாறிக் கொள்கின்றன. பல நேரமும் CSES, NSA உடன் அதன் மிகவும் அரசியல் உணர்வு மிக்க ஒற்றுச் செயல்களில் சேர்ந்து கொள்கிறது.  

ஸ்னோவ்டென் கசியவிட்ட ஆவணங்களின் அடிப்படையில், முந்தைய அறிக்கைகள், CSEC லண்டனில் 2009ம் ஆண்டு G20 உச்சிமாநாட்டின்போது உளவு பார்த்த NSA க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் அரசாங்கத் தகவல் தொடர்புகள் தலைமையகத்திற்கும் (GCHQ) உதவியுள்ளது.

2010 NSA-CSEC உளவு நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் நெருக்க நட்பு கொண்ட நாடுகளின் உலகத் தலைவர்களை இலக்கு வைத்திருப்பது என்பது, மீண்டும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் செய்தி ஊடகம் இந்த நிறுவனங்கள் அமெரிக்க, கனேடிய மக்களை அல் குவேடா போன்ற அமைப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்காக உள்ளன என்னும் கூற்றுக்களில் இருக்கும் பொய்களை அம்பலப்படுத்துகின்றன.

மாறாக NSA மற்றும் CSEC, கனேடிய ஆளும் உயரடுக்குகள் –வெளி இராணுவத் தலையீடுகளுக்கு ஆதரவளித்தல், போட்டி அரசாங்கங்கள் மீது ஒற்று பார்த்தல், வணிக ஒற்று நடத்துதல், வட அமெரிக்க பெருவணிக நலன்களுக்கு விரோதம் உடையவற்றின் நடவடிக்கைகளைக் கவனித்தல் என்பதோடு கடைசியாக, ஆனால் சிறிதும் முக்கியத்துவம் குறையாது உள்நாட்டில் அரசியல் எதிர்ப்பு வளர்வதை எதிர்த்து போரிடவும் உதவுகின்றன.

NSA பற்றிய கருத்துக் குறிப்புக்கள், 2010 G8, G20 கூட்டங்களில் உச்சிமாநாட்டிற்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என உதறித்தள்ளுகிறது; “குறிப்பாக, நம்பகத்தன்மை உடைய தகவல்”, நிகழ்வை இஸ்லாமிய தீவிரவாதிகள் இலக்கு கொண்டுள்ளனர் என்பதற்கு” இல்லை. அவர்கள் அதன்பின் உச்சிமாநாடுகளில் விவாதிக்க இருக்கும் முக்கிய பிரச்சினைகள் பற்றி விரிவாகக் கூறுகின்றன; அனைத்தும் பொருளாதாரத் தொடர்புடைய கவலைகளாகும்.

குறிப்புக்கள் உளவு நடவடிக்கையின் இலக்கு “அமெரிக்க கொள்கை இலக்குகளுக்கு” ஆதரவு கொடுப்பது, “கொள்கை இயற்றுபவர்களுக்கு ஆதரவளிப்பது” எனக் கூறுகிறது. வேறுவிதமாகச் சொன்னால், NSA அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு மற்ற உச்சிமாநாட்டு பிரதிநிதிகள் குழுவின் நிலைப்பாடு, எதிர்விளைவு, பேர மூலோபாயம் ஆகியவை பற்றி உளவு அளிக்க வேண்டும் என்பதாகும்.

இந்த குறிப்புக்கள், CSEC  மற்றும் கனடிய அரசாங்கத்துடன் NSA உளவுத்தகவல் பகிர்ந்து கொள்ளுவது பற்றி ஏதும் கூறவில்லை; ஆனால் அத்தகைய பகிர்வு—மேலே குறிப்பிட்டுள்ளபடி—வாடிக்கையாகும். அக்டோபர் மாதம், ஸ்னோவ்டெனுடன் நெருக்கமாக ஒத்துழைத்த செய்தியாளரும், கடந்த வாரம் CBC அறிக்கையின் இணை ஆசிரியருமான  கிளென் கிரீன்வால்ட், CSEC பிரேசிலின் சுரங்க அமைச்சரகத்தை உளவு பார்த்துள்ளது என்று கூறியுள்ளார். சமீபத்திய வாரங்களில் கிரீன்வால்ட் பலமுறை ஸ்னோவ்டென் கசியவிட்டுள்ள கோப்புக்கள் CSEC தொடர்புடைய தகவல்களைக் கொண்டுள்ளன என்றும், சாதாரண கனேடியர்கள் CSEC தொடர்பு கொண்டுள்ள உளவு செயற்பாடுகளின் பரப்பு, அளவு பற்றி அதிர்ச்சி அடைவர் என்றும் தான் நம்புவதாக கூறியுள்ளார்.

ஜூன் மாதம் Globe and Mail  2005ல் இருந்து CSEC முறையாக கனேடிய மின்னஞ்சல் தொடர்புகளில் பெரும் தகவல்களை ஒற்றுக்கேட்பதாகவும் இதில் தொலைபேசி அழைப்புக்கள், பொருளுரை, மின்னஞ்சல் தகவல்கள், இணைய தள பயன்பாடு ஆகியவை அடங்கும் என்றும் கூறியுள்ளது. ஆனால் பெருநிறுவனச் செய்தி ஊடகமும் எதிர் கட்சிகளும், தொழிற்சங்கத் தளம் கொண்ட புதிய ஜனநாயகக் கட்சி (NDP) யும், இத்தகைய உளவுமுறை சட்டவிரோதம் அரசியலமைப்பிற்கு விரோதம் என்று அம்பலப்படுத்துவது ஒரு புறம் இருக்க, பொதுமக்களுக்கு மக்களுடைய ஜனநாயக உரிமைகள் பற்றி பெரும் அச்சறுத்தலைக் கொண்டுள்ளது எனக்கூட எச்சரிக்க மறுத்து விட்டன.

2010 உச்சிமாநாடுகளில் அதன் ஒற்று நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க அரசாங்கம் உளவுத்துறை நடவடிக்கைகள் பற்றி அதன் வாடிக்கையான மறுப்பை தெரிவித்துள்ளது. ஆனால் அறிக்கையின் உண்மைத்தன்மையை உட்குறிப்பாக ஒப்புக்கொள்ளும் வகையில், அது “கொள்கையளவில் நாம் அமெரிக்கா, அனைத்து நாடுகளும் சேகரிக்கும் வகையிலான வெளிநாட்டு உளவுத்தகவலை சேகரிக்கிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்.” என வலியுறுத்தியுள்ளது.

பிரேசிலிய அரசாங்கத்தின் மீது CSEC ஒற்று பார்த்துள்ளது என்ற வெளிப்பாட்டில் காட்டிய விடையிறுப்பு போலவே, கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பரின் அலுவலகம், 2010 ஒற்று நடவடிக்கை அறிக்கை பற்றி,தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் செயற்பாடு குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிப்பதில்லை” என்றது.

2001 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ், CSEC கனடாவில் எவர்மீதும் ஒற்று செய்வதில் இருந்து சட்டபூர்வமாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளும் உள்ளன. CSEC குறிப்பாக கனேடிய உளவுத்துறைப் பிரிவுடன் சேர்ந்து, ரோயல் கனேடிய குதிரைப் படைப் பொலிசுக்கு உதவ வேண்டும்; மற்ற பொலிஸ் பிரிவுகளுக்கும் தேசிய பாதுகாப்பு விசாரணைகளில் நீதிமன்றம் அனுமதிக்கும் கண்காணிப்பை நடத்த வேண்டும் என்கிறது. “வெளிநாட்டு அச்சுறுத்தலை” எதிர்த்தல் என்னும் பெயரில் அது கனேடியர்களின் தகவல்தொடர்புகளிலும் ஒற்றுப்பார்க்க முடியும்.

கடந்த வியாழன் அன்று NDP தலைவர் தோமஸ் முல்கேர்ரால்,G20 உச்சி மாநாட்டின் போது அமெரிக்கர்களுக்கு அனுமதி கொடுத்து உதவு முன், நம்மீது கனாடவில் எங்களுக்கு உளவு உதவுவதற்கு முன்" CSEC, நீதிபதியிடம் இருந்து இசைவைப் பெற்றதா என பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டபோது, பாதுகாப்பு மந்திரி ரோப் நிக்கல்சன் வினாவில் இருந்து நழுவிக்கொண்டார். அரசாங்கம் வாடிக்கையாக கூறும் வகையில், நிக்கல்சன் “இந்த அமைப்பு கனேடியர்களை இலக்கு கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. CSEC அதன் சர்வதேச பங்காளிகளை கனேடிய சட்டங்களை மீறும் செயல்களை அனுமதிக்காது.”

இது ஒரு அப்பட்டமான பொய். CSEC, கனேடிய மின்னணு தகவல் தொடர்புகளை பல ஆண்டுகளாக சேகரித்து பிரித்து வைத்துள்ளது. அரசாங்கம் இந்த முழு அந்தரங்க உரிமைகள் மீறப்படுவதற்கு இரகசிய அமைச்சரக இயக்க நெறிகளான ஒருதலைப்பட்ச பொதுத் தவகல்கள் விளக்கப்படுவது “அரசியலமைப்பு பாதுகாப்புத் தொடர்புகளோடு இருக்கும் எனக் கூற முடியாது” என்று சொல்லிவிட்டது.

ஆனால் NDP தலைவர் பிரச்சினையை எழுப்பவில்லை, CSEC பற்றி அரசாங்கத்தின் பொய் தகவல்களை தீவிரமாகச் சவால் விடவும் இல்லை. கடந்த 6 மாதங்கள் நடக்கும் பெரும் சட்டவிரோத நடவடிக்கைகள் CSEC உடைய நெருக்கமான பங்காளி NSA ஆல் நடத்தப்படும்போது NDP, கன்சர்வேட்டிவ் அரசாங்க முயற்சிகளுக்கு உதவியும் ஊக்குவிப்பும் அளித்துள்ளது, CSEC நடவடிக்கைகளை இரகசியத்தில் வைக்க உதவியுள்ளது. தன் ஆற்றல்களை செனட் செலவுகள் ஊழலில் குவிப்பு காட்டுகையில், அது பாராளுமன்றத்தில் சிறு அளவு வினாக்களைத்தான் CSEC பற்றிக் கேட்டது. மேலும் தாராளவாதிகள் போல்CSEC அதிகாரிகளை பெரிதும் விரிவுபடுத்தி வரவு-செலவுத் திட்டத்தையும் தாங்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தபோது செய்தவர்கள்--- CSECக்கு கனேடிய தொடர்புகளின் பொதுத் தகவல்களை பார்வையிட அனுமதித்தவர்கள்—இப்பொழுது CSEC பற்றிய தன் கருத்துக்களில், கனேடிய அரசாங்கத்திற்கு முக்கிய தூண் என்பதை NDP தெளிவுபடுத்தியுள்ளது. இதன் நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் சிலரால் “மேற்பார்வையிடப்பட வேண்டும்” என்றுதான் விரும்புகிறது (அதாவது சிறு துணைக்குழு, அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.)

ஹார்ப்பரின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம், டோரோன்டோ G20 உச்சிமாநாட்டை பரந்த அரசாங்க ஆத்திமூட்டலுக்கு இடம்போல் அமைத்து, கனடாவின் மிகப் பெரிய நகரத்தின் மையத்தில் பொலிசார் நிலைநிறுத்தப்பட்டனர்; வன்முறையும் ஏராளக் கைதுகளும் எதிர்ப்பாளர்களை நசுக்கப் பயன்படுத்தப்பட்டன. கடந்த வாரம் CSEC, NSA இரண்டும் கூட்டாக மிகவும் முக்கியமான ஒற்று நடவடிக்கைகளை நடத்திக் கொண்டிருக்கின்றன என அறிந்தோம். இது ஒரு பிற்போக்கு பங்காளித்தனத்தை அதிகப்படுத்தி, உலகின் தகவல் தொடர்புகள் முறையை, முறையாக கண்காணித்தல் என்று 20ம் நூற்றாண்டில் பொலிஸ் அரசுகள் கனவு காணக்கூடியதைத்தான் செய்கின்றன.