சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

US sends B-52s to China’s air defence zone

சீனாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு அமெரிக்கா B52 விமானங்களை அனுப்புகிறது

By John Chan 
27 November 2013

Use this version to printSend feedback

ஒரு வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் செயலில், நேற்று அமெரிக்கா இரண்டு B52 மூலோபாய குண்டு போடும் விமானங்கள், கிழக்கு சீனக் கடலில் பிரச்சனைக்குட்பட்ட சென்காக்கு தீவுகள் மீது (சீனாவில் டயோயு என அறியப்படுவது) பயிற்சிப்பணி நடத்தியதாக அறிவித்தது. இது இப்பகுதியை பெய்ஜிங் “வான் பாதுகாப்பு அடையாள மண்டலம்” (ADIZ) என அறிவித்த சில நாட்களுள் நடந்துள்ளது.

இது ஒரு வழமையான திட்டமிட்ட பணி என்னும் பென்டகனுடய கூற்றில் நம்பகத்தன்மை ஏதும் இல்லை. அங்கு பறந்தது சீனாவிற்கு சவால்விடுவதை நோக்கமாக கொண்டதுதான். இது அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி சக் ஹேகலின் அறிக்கையான அமெரிக்க விமானப் படை இப்பகுதியில் சீனாவின் விதிகளை சாதாரணமாக புறக்கணிக்கும் என்ற நிலைப்பாட்டிற்கு இணங்கியே உள்ளது.

அணுகுண்டுகளையும் அணு க்ருஸ் ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லும் வடிவமைப்பு கொண்ட இரண்டு B52 குண்டு போடும் விமானங்கள், குவாம் தளத்தில் இருந்து பறந்து வந்து திரும்பின. அது பசிபிக்கில் அமெரிக்காவின் முக்கிய தளம் ஆகும். இந்தப் பயணம் பெய்ஜிங்கிற்கு அச்சுறுத்தும் தகவல் அனுப்புவதை நோக்கம் கொண்டது. அதாவது சீனாவிற்கு எதிரான சென்காகுஸ் போரில் அமெரிக்கா ஜப்பானுக்கு ஆதரவு கொடுக்கும். தன் அறிக்கையில், ஹேகல் அமெரிக்க ஜப்பானியப் பாதுகாப்பு உடன்பாட்டிற்கு வாஷிங்டனின் பங்களிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை அறிவிக்கையில் சீனா இப்பகுதிக்கு மேலாக பறக்கும் எந்த வெளிநாட்டு விமானமும் தமது பறக்கும் பாதையை கொடுக்க வேண்டும், தங்கள் நாட்டைக் குறிப்பிட வேண்டும், மற்றும் வானொலித் தொடர்பு வேண்டும் என்று கூறியிருந்தது. இல்லாவிடின் அவை அவசரகால இராணுவ நடவடிக்கைகளை முகங்கொடுக்கக் கூடும் என்றும் கூறியது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் தளபதி ஸ்டீவ் வாரன் செய்தி ஊடகத்திடம் இரண்டு B52 விமானங்கள் வேண்டுமென்றே வான் பாதுகாப்பு விதிகளை மீறின என்றார். “நாங்கள் சென்காகஸ் பகுதியில் நடவடிக்கைகளை நடத்தியுள்ளோம். இயல்பான வழிவகைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுகிறோம். இதில் பறக்கும் பாதை பற்றி பதிவு செய்தல், முன்கூட்டி வானொலி மீது தகவல் கொடுத்தல், எத்தனை தடவை பறக்கின்றோம் என்பதை பதிவு செய்தல் முதலியவை கிடையாது.” இதற்கான சீன அரசாங்கத்தின் ஆரம்ப பிரதிபலிப்பு இந்நிகழ்ச்சியை முக்கியத்துவமற்றதாக காட்டும்வகையில், முழு பயணத்தையும் தான் கண்காணித்ததாக கூறியது.

இப்பகுதியின் மேலே B52 பறப்பதின் ஆபத்துக்கள் முற்றிலும் வெளிப்படையானவைதான். சீனா பதிலுக்கு தனது விமானங்களை பகுதிக்கு அனுப்பியிருந்தால், அமெரிக்க இராணுவம் அருகில் இருக்கும் ஜப்பானியத் தளங்களில் இருந்து போர் விமானங்களை அழைத்திருந்தால், நிகழ்வு வான் மோதல் நீண்டகால, பேரழிவுகரமான விளைவுகளுக்கு வழிவகுத்திருக்கும்.

ஆசியாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள், சீனாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை புறக்கணிக்கும் வாஷிங்டன் முடிவை ஆதரித்தன. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ ஏபே திங்களன்று பாராளுமன்றத்தில் பின்வருமாறு அறிவித்தார்: “சர்வதேச வான் பகுதியில் பறக்கும் சுதந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை சீனா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.”

பொதுவிமானங்களை ஆபத்திற்கு உட்படுத்தும் வகையில் ஏபேயின் அரசாங்கம் ஜப்பானிய விமானங்களின் பறக்கும் பாதைகளை பெய்ஜிங்கிற்கு கொடுப்பதை நிறுத்துமாறு தலையிட்டுக் கூறியுள்ளார். போக்குவரத்து மந்திரி ப்யூமியோ கிஷிடா : “நம் உறுதிப்பாட்டை சீனாவிற்குக் காட்டுவதில் பொது மற்றும் தனியார் பிரிவுகள் ஒத்துழைத்தல் முக்கியம் என்று நான் நம்புகிறேன்” என அறிவித்தார்.

தென் கொரியப் பாதுகாப்பு அமைச்சரகமும் அதன் விமானங்கள் சீன கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படியாது என்று குறிப்புக் காட்டியுள்ளது. ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப் சீனத்தூதரைத் தருவித்து வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை விமர்சிக்கும் வகையில் பின்வருமாறு தெரிவித்தார்: “ஆஸ்திரேலியா கிழக்கு சீனக்கடலில் இருக்கும் நிலையை மாற்றுவதற்கு கட்டாயப்படுத்தும் மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு தனது எதிர்ப்பை தெளிவாக்கியுள்ளது.”

வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை அறிவிக்கும் சீனாவின் முடிவும் ஆத்திரமூட்டும் தன்மை கொண்டது. ஓரளவிற்கு இந்த அறிவிப்பு ஒபாமா நிர்வாகத்தால் உத்வேகம்கொடுக்கப்பட்டு ஏபேயின் அரசாங்கத்தின கீழ் ஜப்பான் இராணுவத்தை மீண்டும் வலுப்படுத்துவதை எதிர்கொள்வதாகும். சென்காகு/டயோயூ தீவுகளில் பெருகும் அழுத்தங்கள், அவை டோக்கியோவால் கடந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டதை தொடர்ந்து வந்ததாகும். கடந்த இரண்டு மாதங்களாக குறிப்பாக அமெரிக்காவும் ஜப்பானும் அவற்றின் இராணுவ உடன்பாட்டை வலியுறுத்தியுள்ளன, இதில் ஜப்பானின் திட்டங்களான “முன்கூட்டிய” தாக்குதல்களின் திறன்கள், ஜப்பானில் அமெரிக்கா கூடுதல் போர் விமானங்களை நிலைநிறுத்துதல் ஆகியவை அடங்கும்.

அதே நேரத்தில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கீழ் இருக்கும் புதிய சீனத் தலைமை ஒரு வசதி படைத்த மத்தியதர வகுப்புக்களின் அடுக்குகள் இடையே உள்ள அதற்கு ஆதரவான தேசியவாத ஆதரவுப்பிரிவினரை திருப்திப்படுத்த முற்படுகிறது. ஜி தன்னை ஒரு “வலுவான தலைவர்”, வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு பணியாதவர் என்று சித்திரித்துக் கொள்ள முற்படுகிறார். சமூக அமைதியின்மையினால் அச்சம் கொண்டு, பில்லியனர்கள், பல மில்லியன் உடையவர்கள் என்னும் சிறு அடுக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்சி, வர்க்க வேறுபாடுகளை அடக்கவும் உழைக்கும் மக்கள் அதன் சந்தை ஆதரவு செயற்பட்டியலுக்கு காட்டும் எதிர்ப்பை அடக்கவும் சீன தேசியவாதத்தை சிந்தனைப்போக்கு வழிவகையென நம்புகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் பெரிய அளவில் சீன விமானப் பயிற்சிகள் பல டஜன் போர் ஜெட்டுக்களுடன் நடத்தியது பற்றி நேற்று சீன செய்தி ஊடகத் தகவல்கள் குறிப்பிட்ட பின்னரே B-52 தலையீடு வந்துள்ளது. அதே நேரத்தில், சீனக் கடற்படை அதன் லயனிங் விமானம் தாங்கி கப்பல் தென் சீனக்கடலில் பயிற்சி நடத்தும் என்றும் இதில் முதல் தடவையாக நான்கு போர்க்கப்பல்கள் ஈடுபடும் போரும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இரண்டு அமெரிக்க அணுசக்தியால் செயல்படும் விமானம் தாங்கி கப்பல்களான USS George Washingon, USS Nimitz மற்றும் அவற்றின் போர்க் கப்பல்களும் தென்சீனக் கடலில் உள்ளன. இது பிலிப்பைன்ஸுக்கு, சூறாவளி ஹையானுக்கு பின் மனிதாபிமான உதவி வழங்குவது என்ற பெயரில் நிறுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை சீனாவிற்கு எதிரான அவற்றின் ஸ்ப்ராட்லி மற்றும் தென்சீனக்கடல் மற்ற தீவுகள் மீதான உரிமைகளை உறுதிப்படுத்தும்படி அமெரிக்கா ஊக்கம் அளித்துள்ளது. அங்கு சீனாவும் ஒரு வான்பாதுகாப்பு பிராந்தியத்தை நிறுவ பரிசீலிக்கிறது.

சீனாவுடன் கிழக்கு சீனக் கடல் வான்பாதுகாப்பு பிராந்தியம் பற்றிய அழுத்தங்கள் குறித்த வாஷிங்டனின் மோதல் அதிகரிப்பு ஈரானுடன் சமீபத்திய அணுசக்தி உடன்பாட்டிற்கு முற்றிலும் எதிராக உள்ளது. இவ்வுடன்பாட்டை உலக சமாதானத்திற்கும் மற்றும் உறுதிப்பாட்டிற்குமான ஓரடி முன்னேற்றம் என அது கூறிக்கொள்கின்றது. உண்மையில், அமரிக்கா ஈரானுடன் உடன்பாட்டைக் காண விரும்புவதற்குக் காரணமே அதன் இராஜதந்திர, இராணுவ சக்தியை அதன் முக்கிய அக்கறையான “ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு” கவனம் செலுத்துவதற்குத்தான். இதன் மூலம் அதன் முக்கியப்போட்டித் திறனைக் கொண்ட சீனாவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்துவதுதான்.

செப்டம்பரில் தவிர்க்க முடியாத சிரியா மீதான தாக்குதல்களில் இருந்து பின்வாங்கும் அமெரிக்க முடிவு, அதைத்தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் மூடப்பட்டதை அடுத்து, அக்டோபரில் முக்கிய ஆசிய உச்சிமாநாடுகளில் ஒபாமா வராமல் இருந்தது, ஆகியவை இந்திய-பசிபிக் முழுவதும் அமெரிக்கா “முன்னிலைக்கு” கொண்ட உறுதிப்பாடு குறித்து கவலைகளை எழுப்பியது. இந்நிலைமை அமெரிக்க ஆளும் உயரடுக்குகளால் ஏற்கப்படவில்லை. இது இந்திய-பசிபிக் பிராந்தியத்தை 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதார அச்சு என்று அடையாளம் கண்டு, இப்பிராந்தியத்தில் தாங்கள் மேலாதிக்கம் செய்ய வேண்டும் எனக் கருதுகிறது.

துணை ஜனாதிபதி ஜோ பிடென் ஜப்பான், தென் கொரியா, சீனாவிற்கு அடுத்த வாரம் வருகை தர உள்ளார். பிராந்தியத்தில் உள்ள தன் முக்கிய நட்பு நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்க. ஒபாமாவே அடுத்த ஏப்ரல் மாதம் முக்கியப்பயணத்தை ஆசியாவிற்கு மேற்கொள்ளுவார். ஒபாமாவின் பயணத்தை கடந்த வாரம் அறிவிக்கையில் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சூன் ரைஸ் பின்வருமாறு அறிவித்தார்: “ஆசிய-பசிபிக்கை மறு சமச்சீர் தன்மைக்குக் கொண்டுவருவது ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியப் பகுதி ஆகும்... மற்ற இடங்களில் எத்தனை மோதலுக்கான இடங்கள் வெளிப்பட்டாலும், நாங்கள் தொடர்ந்து இந்த முக்கிய பிராந்தியத்தில் நீடித்த ஈடுபாட்டை ஆழப்படுத்துவோம்.”

நேற்றைய B52 விமானங்கள் பறந்து சென்றதைப் போல், ரைசின் கருத்துக்களும் அமெரிக்கா அதன் ஆசியா மீதான மேலாதிக்கத்தை தொடர அனைத்து வழிவகைகளையும் கையாளத் தயங்காது என்பதைக் காட்டுகிறது.