சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Detroit bankruptcy ruling

டெட்ராய்ட் திவால்நிலைமை மீது தீர்ப்பு

Jerry White
5 December 2013

Use this version to printSend feedback

செவ்வாயன்று டெட்ராய்ட் திவால்நிலைமை மீது வழங்கப்பட்ட தீர்ப்பானது அமெரிக்க வர்க்க உறவுகளில் ஒரு திருப்புமுனையாகும். அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய முனிசிபாலிட்டியின் திவால்நிலைமைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம், டெட்ராய்டின் பெடரல் நீதிபதி மிக முக்கியமாக பொதுத்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதிய உரிமை இல்லை என்ற தீர்ப்பை வழங்கினார்.

நீதிபதி ஸ்டீவன் ரோட்ஸை பொறுத்த வரையில், மிச்சிகனின் அரசியலமைப்பைப் போல ஒரு மாநில அரசியலமைப்பு நிதர்சனமாக தொழிலாளர்களின் ஓய்வூதியங்களைப் பாதுகாத்தாலும் கூட, தொழிலாளர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த அவர்களின் நலன்களை வெட்ட எந்தவொரு நகரமோ அல்லது மாநிலமோ பெடரல் திவால்நிலைமையை உபயோகப்படுத்த முடியும்.

இது தேசிய மற்றும் சர்வதேச தாக்கங்களோடு சேர்ந்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பாரிய சூழ்ச்சியாகும். அது ஒபாமா நிர்வாகத்தின் பங்களிப்போடும் ஆதரவோடும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

ஊடுருவி பரவி இருக்கும் தீர்ப்பின் வீரியம் ஏற்கனவே டெட்ராய்டிற்கு வெளியேயும் உணரக் கூடியதாக உள்ளது. நீதிபதி முடிவு தெரிவித்த ஒருசில மணி நேரங்களிலேயே, இலினோய் மாநில சட்டமன்றத்தின் இரண்டு அவைகளும் ஓய்வூதிய வயதை அதிகரித்தும், உயரும் வாழ்க்கை செலவுக்கான கூடுதல் தொகைகளைக் குறைத்தும் மற்றும் ஏனைய நலன்களை வெட்டியும் ஓய்வூதிய "சீர்திருத்த" மசோதாக்களை நிறைவேற்றின.

அந்த முடிவைக் கொண்டியதோடு, டெட்ராய்ட் நியூஸ் புதனன்று எழுதியது: நீதியரசரின் இந்த தீர்ப்பு "மிச்சிகனில் பொதுத்துறை ஓய்வூதியங்களின் கௌரவத்தின் மீதிருந்த 50ஆண்டு கால நம்பிக்கையை அகற்றி விட்டுள்ளது." அந்த செய்தித்தாள் தொடர்ந்து பின்வருமாறு எழுதியது: ஊதிப் பெருகி இருந்த ஓய்வூதிய கடன்களோடு திணறி வந்த நகரங்கள் மற்றும் பள்ளி மாவட்டங்களிடையே தேசியளவிலும், மற்றும் "பொதுத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் கடமைப்பாடுகள் எவ்வாறு பெடரல் திவால்நிலைமைக்குள் நிறைவேற்றப்படுமென்பதை" ஆராய்வதிலும் அந்த முடிவு நிச்சயம் எதிரொலிக்க உள்ளது."

டெட்ராய்ட் திவால்நிலைமையில் திருப்புமுனை" என்ற ஒரு தலையங்கத்தோடு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அந்த தீர்ப்பை வரவேற்றது. அந்த தீர்ப்பின் தொலைதூர சட்டரீதியிலான தாக்கங்களை ஒப்புக் கொண்ட விதத்தில் ஜேர்னல் தொகுத்து எழுதியது: டெட்ராய்ட் விவகாரமே அத்தியாயம் 9இன் முதல் விவகாரமாகும், அதில் தான் மாநில ஓய்வூதிய பாதுகாப்புகள் மீது பெடரல் திவால்நிலைமை சட்டத்தின் மேலாதிக்கம் தீர்க்கமாக சவால் விடுக்கப்பட்டுள்ளது மற்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது."

அந்நகருக்கு கடன் வழங்கி உள்ள வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பணம் செலுத்த, நகர சொத்துக்களை விற்பதற்கு அந்த தீர்ப்பு பாதை அமைத்து தருகிறது. ரோட்ஸ் தீர்ப்புக்கு மறுநாள், அவசரகால மேலாளர் Kevyn Orr எவற்றை விற்க திட்டமிடுகிறாரோ அந்த பொதுமக்களுக்கு சொந்தமான டெட்ராய்ட் கலைக்கூடத்தில் உள்ள அரிய படைப்புகளின் மீது அதன் முதல் மதிப்பீட்டை கிறிஸ்டியின் ஏல நிறுவனம் அறிவித்தது.

தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதை நன்கு அறிந்திருக்கும் அமெரிக்க ஆளும் மேற்தட்டு, தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட நலன்கள் மற்றும் உரிமைகளைச் சுதந்திரமாக கொள்ளையடிக்க முடியுமென கருதுகிறது. டெட்ராய்ட் தீர்ப்பால் அமைக்கப்பட்டுள்ள முன்னுதாரணம், மருத்துவ பராமரிப்பு (Medicare) மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற பெடரலுக்கு சொந்தமானவை வரை விஸ்தரிக்கப்படும்.

ஓய்வூதியங்கள், மருத்துவ நலன், பொதுக் கல்வி, வேலையிட பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தடைகள் என ஒவ்வொன்றும் நியாயமான வேட்டையாடலாக உள்ளன. நிதியியல் மேலாளர்களின் இலாபங்களில் கழிப்பதற்கு அங்கே நடைமுறையில் எதுவுமே இல்லை. ஒரு தொழிலாளி முதலாளிமார்களுக்கான சொத்துக்களை உற்பத்தி செய்யவில்லை என்றால், அவர் ஒன்றுக்கும் உதவாதவராக, சமூகத்திற்கு ஒரு சுமையாக" கருதப்படுகிறார். தொழிலாளர்கள் இறக்கும் வரையில் உழைத்த அல்லது அவர்களின் வறிய வீட்டில் இறுதி நாட்களைக் கழித்த அந்த "பழைய நன்னாட்களுக்கே" திரும்புவது சிறப்பாக இருக்கும் போலும்.

தற்போது தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால சமூக தேட்டங்களில் எதுவுமே அன்பளிப்பாக கூட விட்டு வைக்கப்படவில்லை. கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக திரும்பிய தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கும் ஒரு முயற்சியில் கொடூரம், ஜோடிப்பு மற்றும் வன்முறையில் தங்கியிருந்த ஆளும் வர்க்கத்தால் அவை பிழிந்தெடுக்கப்பட்டன. டொலிடோ, மினியாபொலிஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களின் புறப்பகுதிகள் முழுவதிலும் வேலை நிறுத்தங்கள் அதிர்வை ஏற்படுத்திய பின்னர் தான் சமூக பாதுகாப்பும், ஏனைய புதிய உடன்படிக்கை சீர்திருத்தங்களும் வழங்கப்பட்டன.

1940கள், 1950கள் மற்றும் 1960களுக்குள் தொடர்ந்த பரந்த தொழிலாள வர்க்க போராட்டங்களின் ஒரு விளைவாக ஓய்வூதியங்களும், மருத்துவ நலன்களும் ஸ்தாபிக்கப்பட்டன. குடியானவர் உரிமைகளுக்கான ஆபிரிக்க அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறையையும் மூடிய போர்குணமிக்க வேலைநிறுத்தங்களுக்கு விடையிறுப்பாக தான் 1960களின் Medicare, Medicaid மற்றும் இதர "சிறந்த சமூக" திட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

இன்றும் அதே போல, போர்குணமிக்க போராட்டத்திற்கு வளமான வரலாறையும் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சோசலிச பாரம்பரியத்தையும் கொண்டிருக்கும் ஒரு நகரமான டெட்ராய்டின் மீது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஆனால் திவால்நிலைமைக்கு பின்னால் இருக்கும் பெருநிறுவன மற்றும் அரசியல் சக்திகளை அம்பலப்படுத்த தங்களுக்குத் தேவையான தகவல்களை தொழிலாளர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு அதற்காக போராடுவதற்குரிய கருவிகளையும் தயாரிக்க வேண்டும்.

அதனால் தான் டெட்ராய்ட் கலைக்கூடம் மீதான தாக்குதல் மற்றும் டெட்ராய்டின் திவால்நிலைமை ஆகியவற்றைக் குறித்து சோசலிச சமத்துவ கட்சி 2014 பெப்ரவரி 15இல் வெய்னே மாநில பல்கலைக்கழகத்தில் தொழிலாளர்களின் விசாரணையை நடத்துகிறது. (பார்க்கவும்: detroitinquiry.org)

திவால்நிலைமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில் எவ்வித சட்டப்பூர்வதன்மையையும் இல்லை. இந்த ஒட்டுமொத்த நிகழ்முறையும் ஒபாமா நிர்வாகம் உட்பட குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓர் அரசியல் சதியாக உள்ளது.

மார்ச் 2011இன் தொடக்கத்தில், ஓய்வூதியங்களின் மீதுள்ள மாநில அரசியலமைப்பு பாதுகாப்புகளைத் தந்திரமாக வெல்வதற்காக பெடரல் திவால்நிலை நீதிமன்றங்களுக்குள் கொண்டு வரப்பட வேண்டிய நகரங்களின் செயல்திட்டம் ஜோன்ஸ் டே (Jones Day) திவால்நிலை நிறுவனத்தின் சட்ட வல்லுனர்களால் எழுதப்பட்டது. அவர்களின் கூட்டாளிகளில் ஒருவரான Kevyn Orr அவசரகால மேலாளராக, அதாவது நிதியியல் சர்வாதிகாரியும் வங்கிகளுக்கான முன்னிலை மனிதராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதிபதி தீர்ப்பில் வாய்மொழியாக அவரால் தொகுத்துக் கூறப்பட்டதில், டெட்ராய்டின் நிதியியல் நிலைமையை Orr பொய்மைப்படுத்தினார் என்ற ஆதாரத்தையும் மற்றும் திவால்நிலை தாக்கல் செய்வதற்குரிய ஒரு போலிகாரணத்தை வழங்க ஓய்வூதிய கடன் குறித்து உயர்த்தப்பட்ட புள்ளிவிவரங்களை வழங்கினார் என்ற நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆதாரத்தையும் நீதிபதி முற்றிலுமாக நிராகரித்து விட்டிருந்தார்.

மாநில அரசியலமைப்பில் உள்ள மிகத் தெளிவான வார்த்தைகளையும் ரோட்ஸ் புறக்கணித்தார், அதன்படி டெட்ராய்டிலும் அதை கடந்தும் ஓய்வூதியங்களை வெட்ட அனுமதி வழங்கும் போது, ஓய்வூதியங்களின் நிதி நிலைமை "பலவீனப்பட்டோ அல்லது சுருங்கியோ" இருக்கக் கூடாதென்று அது கூறுகிறது.

ஓய்வு பெற்றவர்களோடும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய கடன்வழங்குனர்களோடும் Orr "முழு நம்பிக்கையோடு" பேச்சுவார்த்தை நடத்தி இருக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்ட போதினும், திவால்நிலைமை வழக்கு "முழு நம்பிக்கையோடு" தாக்கல் செய்யப்பட்டதாகவும், Orr க்கு "வேறெந்த நோக்கமும்" இருக்கவில்லை என்றும் ரோட்ஸ் முடிவுக்கு வந்தார்.

இறுதியாக, ஒரு வாக்கெடுப்பில் மூலமாக வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட அந்த சட்டத்தை முக்கியமாக மாநில சட்டமன்றம் அவசரப்படுத்தியதென்பதை ஒப்புக் கொண்டதன் மூலமாக, மாநிலத்தின் அவசரகால மேலாளரின் ஜனநாயக விரோத சுபாவத்தோடு ரோட்ஸ் மௌனமாக உடன்பட்டார்.

இவை அனைத்தும் சாதாரணமாக ஒதுக்கிக் தள்ளப்பட்டன. ஆளும் வர்க்கத்தின் நலன்கள் சம்பந்தப்பட்டதென்றால், சட்ட முறைமை மற்றும் அரசியலமைப்பு தன்மை அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது. தொழிலாளர்களுக்கு ஒன்றுமே கிடைக்காத நிலையில், ஒவ்வொன்றையும் வங்கிகள் மற்றும் பணக்காரர்கள் பையில் போட முடியும் வரையில், எந்தவொரு குற்றத்திற்கும் அரசாங்கமும் நீதிமன்றங்களும் அதன் முத்திரையைக் குத்தும்.

நகரத்தை வறட்சிக்கு கொண்டு சென்ற பெருநிறுவனங்களும், வங்கிகளும் அவர்கள் உருவாக்கிய நெருக்கடிக்கு அவர்களே பணம் செலுத்த வேண்டுமென ரோட்ஸ் எங்குமே அறிவுறுத்தவில்லை. டெட்ராய்டை மையமாக கொண்ட வாகனத்துறை உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு இலாபங்களில் 12 பில்லியனுக்கு அதிகமான டாலர்களை ஈட்டினர், மேலும் பெரும்பாலும் ஒபாமாவின் 2009 வாகனத்துறை பிணையெடுப்பின் கீழ் தொழிலாளர்களின் மீது திணிக்கப்பட்ட கூலி மற்றும் சலுகைகளின் வெட்டின் காரணமாக, 2013இல் அவர்கள் முந்தைய இலாபங்களையும் கடந்து போய் கொண்டிருக்கின்றனர்.

ஓய்வூதியங்களை வெட்டுவதானது பரந்த துன்பங்களை உண்டாக்கும் என்பதை ஒப்புக் கொண்ட நீதிபதி, ஆனால் "நகரம் வெறுமனே பணத்தை அச்சடிக்க முடியாது" என்று கூறினார். ஆனால் நிதர்சனமாக பெடரல் ரிசர்வ் அதை தான் செய்து கொண்டிருக்கிறது, அது பங்குச்சந்தையின் ஆவேசத்திற்கு தீனிப்போட உதவும் வகையில் மாதந்தோறும் 85 பில்லியன் டாலரை அச்சிட்டு வருகிறது. டெட்ராய்ட் போன்று நிதியியல் முறிவால் நாசப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு எவ்வித பிணையெடுப்பும் வழங்க ஒபாமா நிர்வாகம் மறுத்து வருகின்ற வேளையில், நெருக்கடிக்கு பொறுப்பான கிரிமினல்கள் முன்பை விட சிறப்பாக செயல்பட அது உறுதியளிக்கிறது.

வங்கிகள் மற்றும் பிரதான கடன்பத்திரதாரர்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் இரத்து செய்வது மற்றும் வாகனத்துறை நிறுவனங்களின் மற்றும் வோல் ஸ்ட்ரீட் மோசடிக்காரர்களின் இலாபங்களைக் கைப்பற்றி திரட்டுவது இதுவே டெட்ராய்ட் மக்களின் தேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்க செய்ய வேண்டிய முதல்படியாகும். தொழிலாளர்களால் உருவாக்கப்படும் சொத்துக்கள் அத்தியாவசிய சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்துவதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும்.

டெட்ராய்ட் கலைக்கூடம் மற்றும் டெட்ராய்ட் திவால்நிலைமை மீதான தாக்குதலுக்காக நடத்தப்படும் பெப்ரவரி 15 தொழிலாளர்கள் விசாரணைக்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் வரவேண்டுமென சோசலிச சமத்துவ கட்சி அழைப்பு விடுக்கிறது. (பார்க்கவும்: detroitinquiry.org). அந்நகரத்தின் நிஜமான நிலைமையையும், திணிக்கப்பட்டு வரும் வெட்டுக்களின் விளைவுகளையும் மெய்பிக்க அந்த மகாநகர பகுதி முழுவதிலும் உள்ள நகர தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், சேவைத்துறை பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், வேலையற்ற தொழிலாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

டெட்ராய்டில் நெருக்கடியின் நிஜமான தோற்றுவாய்களை, தொழிலாள வர்க்க போராட்டங்களின் வரலாற்று படிப்பினைகளை, டெட்ராய்ட் கலைக்கூடத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு இடையிலான உறவுகளை, திவால்நிலைமைக்கு பின்னால் நிற்கும் சமூக நலன்கள் மற்றும் அரசியல் சக்திகளை, மற்றும் ஏனைய முக்கிய வினாக்களை நாம் விவாதிப்போம். அந்த விசாரணை ஊடகங்கள் மற்றும் அரசியல் அரசியலமைப்பின் பொய்களை எதிர்த்து நிற்கும்.

அந்த விசாரணையை ஆதரிக்கவும் மற்றும் அதற்கு ஆதரவாக சேதிகளை அனுப்பவும் உலகம் முழுவதும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்விதத்தில் அந்த தொழிலாளர்கள் விசாரணை டெட்ராய்டில் மட்டுமல்ல, அந்நாட்டிலும் மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எதிர்தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைக்கும்.