சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Pro-European Union protests mount in Kiev

கீவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சார்பான ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன

By Peter Schwarz 
3 December 2013

Use this version to printSend feedback

100,000க்கும் மேலான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாயிறன்று கீவில் உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் இராஜிநாமாவைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) இணைப்பு உடன்பாட்டை யானுகோவிச் கைவிட்டதை எதிர்த்தனர். இந்த உடன்பாடு லித்துவேனிய தலைநகரான வில்நியஸில் நடைபெறவுள்ள கிழக்கு பங்காளித்துவ மாநாட்டில் கையெழுத்திடப்படவிருந்தது.

சனிக்கிழமை அன்று ஒரு பொலிஸ் சிறப்புப் படைகள் பிரிவு மிருகத்தனமாக அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கிடையே தலையிட்டது. யானுகோவிச் பொலிஸ் தலையீட்டில் இருந்து பின்னர் தன்னை தொடர்பற்றவராக காட்டிக்கொள்ள முயன்றாலும் மற்றும் ஞாயிறு ஆர்ப்பாட்டங்களுக்கு தடையிருந்தபோதிலும் இது மத்திய கீவில் சுதந்திர சதுக்கத்தில் ஏராளமான எண்ணிக்கையினோர் கூடுவதற்கு காரணமாக இருந்தது.

முதலில் பொலிஸ் ஏதும் செய்யாத நிலையில், ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றது. ஆனால் மாலையில் பெரும் புதுப்பிக்கப்பட்ட மோதல்கள் ஏற்பட்டு 100 பேருக்கு மேல் காயமுற்றனர். இம்முறை தாக்குதல்கள் முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து வெளிப்பட்டது. அவர்கள் ஜனாதிபதியின் அலுவலகத்தைத் தாக்க முற்பட்டனர்.

கிட்டத்தட்ட 5,000 அரசாங்க எதிர்ப்பாளர்கள் இரவை கீவின் மையத்தில் கழித்ததுடன் முகாம்களையும் தடைகளையும் நிறுவியிருந்தனர். எதிர்த்தரப்பு தலைவர்களில் ஒருவரான விட்டாலி கிளிட்ஸ்கோ, நகரத்தின் மையக் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று அவர்களை வலியுறுத்தி, முக்கிய நிர்வாகக் கட்டிடங்களை தடைக்கு உட்படுத்துமாறும் கூறினார். “நாட்டில் ஒவ்வொருவரையும் நாம் அணிதிரட்ட வேண்டும், இந்த முன்னெடுப்பை கைவிட்டுவிடக் கூடாது” என்றார் அவர்.

முன்னாள் உலக குத்துச் சண்டை சாம்பியன் கிளிட்ஸ்கோவின் உக்ரேனிய சீர்திருத்தத்திற்கான ஜனநாயகக் கூட்டு (இச்சொற்களின் முதல் எழுத்துத் தொகுப்பு –UDAR- இன் பொருள் வேலைநிறுத்தம் ஆகும்),  சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் யூலியா தீமோஷெங்கோவின் தந்தை நாட்டுக் கட்சி மற்றும் அனைத்து உக்ரேனிய சங்கம் “ஸ்வோபோடா” (Svoboda) ஆகியவை ஆர்ப்பாட்டங்களை அமைத்தன. மூன்று கட்சிகளும் தேசிய எதிர்ப்பு செயற்குழுவை அமைத்துள்ளனர்.

UDAR மற்றும் தந்தை நாடு ஆகிய இரண்டும் பழைமைவாத ஐரோப்பிய கட்சிகளுடன் நெருக்கமான பிணைப்புக்கள் கொண்டவை. குறிப்பாக ஜேர்மனிய கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) உடன் நெருக்கமானவை. ஸ்வோபோடா  வெளிப்படையாக தீவிர வலது மற்றும் யூத எதிர்ப்பு நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கிறது. அவர்கள் நாஜி ஒத்துழைப்பாளரான ஸ்டீபன் பண்டேராவை தேசிய வீரர் எனப் பாராட்டுவதுடன் ஐரோப்பிய தேசிய இயக்கங்களின் கூட்டின்  உறுப்பினர்களும் ஆவர். இக்கூட்டு பிரெஞ்சு தேசிய முன்னணியின் அரசியல்வாதி ப்ரூனோ கோல்னிஷால் வழிநடத்தப்படுகிறது. அதில் ஹங்கேரியின் ஜோபிக் கட்சி மற்றும் பிரிட்டிஷ் தேசிய கட்சி ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன.

முக்கிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல் வாதிகளாலும் மற்றும்  ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவினாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆதரவளிக்கப்படுகின்றனர்.

போலந்து மற்றும் ஸ்வீடனுடைய வெளியுறவு மந்திரிகள் ராடோஸ்லாவ் சிர்கோவ்ஸ்கி மற்றும் கார்ல் பில்ட் இருவரும் தங்கள் ஒற்றுமையை ஒரு கூட்டறிக்கை மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் போலந்தின் பிரதம மந்திரியும் தேசிய பழைமைவாத கட்சியான PIS உடைய தலைவருமான யாரோசிலாவ் கஸின்ஸ்கி நேரடியாக கீவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றார்.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உக்ரேனின் ஜனாதிபதியை திங்களன்று அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை பயன்படுத்தப்படுவதற்கு எச்சரித்தார். பேச்சுரிமை மற்றும் அமைதியான எதிர்ப்பு நடத்தும் உரிமையை பாதுகாக்க அனைத்தையும் செய்யுமாறும் அவர் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டார். மேர்க்கெலின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் சீபேரட் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகின்றனர், “ஜனாதிபதி யானுகோவிச் இத்தகவலைப் புரிந்து கொள்ளுகிறார் என நம்புவோம்” என்றார் அவர்.

அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜேன் சாகி உக்ரேனின் தலைமையை கருத்து சுதந்திர உரிமையை காப்பாற்றுமாறு அழைப்பு விடுத்தார். “வன்முறையும் அச்சுறுத்தலும் இன்றைய உக்ரேனில் இடம்பெறக்கூடாது” என அவர் அரசாங்கத்திற்கு தெரிவித்தார். நேட்டோவின் பொதுச்செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசெனும் இதேபோன்ற கருத்துக்களைக் கூறினார்.

கிரேக்கம், ஸ்பெயின் அல்லது போர்த்துக்கல்லில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன ஆணைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மிருகத்தனமான நசுக்குவதற்கு இதே அரசியல்வாதிகள் வெளிப்படையான அல்லது அமைதியான ஆதரவுகொடுப்பதுடன் ஒப்பிட்டுபார்த்தால் இக்கருத்துக்கள் ஒருதலைப்பட்சமாக இருப்பது வெளிப்படை ஆகும்.

ஐரோப்பிய, அமெரிக்க செய்தி ஊடகம் கூற விரும்புவது போல் உக்ரேனில் இப்பொழுது நடப்பது சட்டத்தின் ஆட்சிக்கோ அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டமோ அல்ல. இது வெவ்வேறு உக்ரேனிய தன்னலக்குழுக்களுக்கு இடையேயான ஒரு போராட்டமாகும். ஐரோப்பா எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியும், ரஷ்யாவும் உக்ரேன் மீது கட்டுப்பாட்டை கொண்டுவருவதற்கான அதிகாரப் போராட்டம் ஆகும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2004ல் ஆரஞ்சுப் புரட்சி என விக்டர் யுஷ்செங்கோ மற்றும் யூலியா தீமோஷெங்கோ நடத்திய புரட்சிக்குப் பெரும் ஆதரவு கொடுத்தன. இது தேர்தல்களை மறுபடியும் நடத்தும் கட்டாயத்தை ஏற்படுத்தி, யானுகோவிச் பின்னர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சுதந்திரம், ஜனநாயகம் பற்றிய உறுதிமொழிகள் விரைவில் ஏமாற்றம் அளித்தன.  யுஷ்செங்கோ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று தீமோஷெங்கோவை பிரதமர் ஆக்கினாலும், தன்னலக்குழுக்களின் அதிகாரங்களில் கைவைக்க முடியவில்லை. மக்களின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்கள் தொடர்ந்து சரிந்தன, யுஷ்செங்கோ மற்றும் தீமோஷெகோவிற்கும் இடையே விரைவில் பிளவு ஏற்பட்டது. 2006ல் யானுகோவிச் மீண்டும் பிரதமரானதுடன், 2010ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யானுகோவிச் ஆரம்பத்தில் மாஸ்கோவின் நண்பர் போல் செயல்பட்டாலும், கிழக்கு உக்ரேனில் உள்ள டோன்ட்ஸ்க் தன்னலக்குழுக்களின் நலன்களை யானுகாவிச் பிரதிநிதித்துவப்படுத்துவது விரைவாக வெளிவந்தது. இக்குழு ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருக்கமான ஒத்துழைப்பில் அனுகூலங்களை கண்டது.

1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபின், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தில் இருந்து தன் செல்வாக்கிற்கு இழுக்கக் கடுமையாக முயல்கிறது. 1994ல் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுடன் ஒத்துழைப்பு, பங்காளித்துவ உடன்பாட்டை உருவாக்கியது. 1996ல் அப்பொழுது உக்ரைன் ஜனாதிபதியான லியோனிட் குச்மா ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய அட்லான்டிக் அமைப்புக்களுடன் ஒருங்கிணைதல் தன் நாட்டிற்கு ஒரு மூலோபாய இலக்கு என்றார்.

குச்மாவிற்குப் பின் பதவிக்கு வந்த யுஷ்செங்கோ காலத்தில் கூட்டுழைப்பிற்கும் சுதந்திர வணிக உடன்பாட்டிற்கும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன. யானுகோவிச் தலைமையில் இப்பேச்சுவார்த்தைகள் அவர் கடைசி நிமிடம் பின்வாங்கியதில் முடிவடைந்தன.

இதில் ரஷ்யாவின் அழுத்தமும் இருந்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பொருளாதாரத் தடைகளை அச்சுறுத்தி உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்றால் உக்ரேன் ஆயுத தயாரிப்பாளார்களுடன் ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்றார். ஜேர்மனிய நாளேடான Süddeutsche Zeitung  கொடுத்த விளக்கம் யானுகோவிச் பின்வாங்கியதற்கான காரணம், ஐரோப்பிய ஒன்றிய சார்பு எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்த முடியும், ஆனால் இன்னும் கூடுதலான பொருளாதாரச் சரிவால் ஆயிரக்கணக்கில் அதிகம் பேர் வேலையின்மையில் தள்ளப்படுவது, அவரின் அரசியல் விதியையே 2015 தேர்தல்களுக்கு முன் முடித்துவிடும்.

ஆனால் ரஷ்ய அழுத்தம் மட்டும் முக்கியமானதாக இருக்கவில்லை. எப்படியிருந்தபோதும் ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு உடன்பாடு ஒரு சமூகப் பேரழிவையே ஏற்படுத்தியிருக்கும். அந்த உடன்பாட்டின் நோக்கம் உக்ரேனை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு குறைவூதிய தொழிலாளர் அரங்காக மாற்றுவதாகும். நீண்டகால விளைவுடைய “சீர்திருத்தங்களுக்கான” கோரிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் ஏற்கனவே குறைந்த வாழ்க்கைத் தரங்களை இன்னும் பல வருடங்களுக்கு மேலும் குறைத்துவிட்டிருக்கும்.

ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் பிறீட்ரிஷ் ஏபேர்ட் அமைப்பு (Friedrich Ebert Foundation) நடத்திய ஆய்வு பின்வருமாறு கூறுகிறது: “சீர்திருத்தங்களுக்கு தைரியம், நேரம், விடாமுயற்சி ஆகியவை தேவை.” 2010ல் உக்ரேனிய அரசாங்கம் உடன்பட்ட “ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தங்களின் கீழ் ஏற்கப்பட்ட பேரவாமிக்க சீர்திருத்தங்களுக்கு அது பாராட்டுத் தெரிவித்தது. இவை அடிப்படையில் வரிவிதிப்பு முறை, ஓய்வூதியச் சட்டம் ஆகியவற்றை மாற்றி, தனியார்மயமாக்கலை அதிகரித்து, அரசாங்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உருக்குலைப்பதாக  இருக்கும்.”

ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்ப தரங்களை சமாளிக்கவும், உக்ரேனிய பொருட்களை ஐரோப்பிய சந்தையில் விற்கவும், உக்ரேனிய நிறுவனங்கள் பெரும் முதலீடுகளைச் செய்ய வேண்டும். பிரதம மந்திரி மைகோலா அஸாரோவ் இன் கணக்கீடுகளின்படி, 100 முதல் 160 பில்லியன் யூரோக்கள் 10 ஆண்டு காலத்திற்குத் தொழில்நுட்ப மாற்றம் காணத் தேவைப்படும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் 7 ஆண்டு காலத்திற்கு ஒரு பில்லியன் நிதி உதவிக்குத்தான் உறுதி கொடுத்தது.

இந்த மருவுகாலத்தில், உக்ரேனிய நிறுவனங்கள் ஐரோப்பிய நிறுவனங்களிடம் இருந்து பெரும் போட்டியை முகங்கொடுத்து உயிர்தப்பிக்கவே போரட வேண்டுயிருக்கும். இதன் விளைவு உற்பத்தித்தகமை, வேலைகள், வரிமூலமான வருவாய்கள் இவற்றில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டு ரஷ்யாவுடனான நாட்டின் தற்போதைய சுங்கவரிச் சலுகைகளை அகற்றுவதை அதிகரிக்க செய்திருக்கும்.

கடந்த பெப்ருவரி மாதமே ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோசே மானுவல் பரோசோ உக்ரேனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான ஒருங்கிணைப்பு என்பது ரஷ்யாவுடனான ஒரு சுங்கவரி விலக்கு ஒன்றியத்துடன் இயைந்து இருக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தினார். நாடு இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றார்.

பொருளாதார இலக்குகளைத் தவிர, ஐரோப்பிய ஒன்றியம் தெளிவாக பூகோள அரசியல் நோக்கங்களையும் ஒருங்கிணைப்பு உடன்பாட்டுடன் பின்தொடர்கின்றது. அதன பரந்த, செழிப்பான கிராமப் பகுதியுடன், அதன் 46 மில்லியன் மக்களும், அதன் மூலப்பொருட்கள் மற்றும் ஐரோப்பாவிற்கும் காகசஸிற்கும், ரஷ்யாவிற்கும் கருங்கடலுக்கும் இடையே உள்ள அதன் மூலோபாய இருப்பு ஆகியவற்றால் உக்ரேன் பலமுறையும் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் இலக்காக இருந்துள்ளது.

பிறீட்ரிஷ் ஏபேர்ட் அறக்கட்டளையின் மேற்கூறிய ஆய்வு வெளிப்படையாக தெரிவிக்கிறது: “ஐரோப்பிய முதலீட்டாளர்களுக்கு குறைந்த வளர்ச்சியுடைய சந்தையுடன் சாத்தியமான 45.7 மில்லியன் நுகர்வோர்களை கொண்டதும் மற்றும் அதிக திறனுடைய தொழிலாளர் தொகுப்பு என்பது பிராந்தியத்தின் மற்ற நாடுகளுடைய கதவுகளையும் திறக்கும்.” உக்ரேனுடன் பங்காண்மையில் வெற்றியை உறுதிப்படுத்த,  “ஐரோப்பிய ஒன்றியம் தன்னை ஒரு உலகளாவிய பங்குவகிக்க கூடியதாக காட்டவேண்டும்.” என அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

Frankfurter Allgemeine Zeitung இன் இணை ஆசிரியர் குந்தர் நொன்னன்மாகர் உம் கட்டளையிடும் குரல் உயர்த்துகிறார். உக்ரேனிய மக்கள் “ஒரு நவ-ஏகாதிபத்திய ரஷ்யாவுடனா அல்லது ஐரோப்பாவின் சுதந்திர நாடுகள் சமூகத்துடனா” தாங்கள் இருக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும் என்றார்.