சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Biden-Xi meeting fails to resolve ADIZ crisis

ADIZ நெருக்கடியை தீர்ப்பதில் பிடென்-ஜி பேச்சுக்கள் தோல்வி

By John Chan and Peter Symonds 
5 December 2013

Use this version to printSend feedback

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று பெய்ஜிங்கில் பேச்சுக்களை நடத்தினார். ஆனால் கிழக்கு சீனக் கடலின் மிகவும் கொந்தளிப்புள்ள நிலைமையை தீர்ப்பதில் தோல்விகண்டனர். பெய்ஜிங் வான் பாதுகாப்பு அடையாளப் பிராந்தியம் (ADIZ) ஒன்றை நவம்பர் 23ல் அறிவித்துள்ளது. அதில் ஜப்பானுடன் முரண்பாட்டுற்குள்ளான டயோயு/சென்காகு தீவுக்கூட்டங்களும் அடங்கும்.

வாஷிங்டன் உடனடியாக டோக்கியோவிற்கு ஆதரவாக நின்று, அணுவாயுதம் ஏற்றிச்செல்லும் திறனுடைய B52 விமானங்களை இப்பகுதியில் பெய்ஜிங்கின் அதிகாரத்திற்குச் சவால்விடும் வகையில் பறக்க விட்டது. ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ ஏபேயை நேற்று பிடென் சந்தித்து ஒருவேளை சீனாவுடன் போர் ஏற்பட்டால் அமெரிக்கா ஜப்பானிடம் கொண்டுள்ள நட்பின் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினார். அமெரிக்காவும் ஜப்பானும் தொடர்ந்து சீன வான் பாதுகாப்பு அடையாளப் பிராந்தியத்தில் கடந்த வாரம் முழுவதும் போர் விமானங்களைப் பறக்க விட்டன. இதை எதிர்கொள்ளும் வகையில் சீனா போர் விமானங்களை அனுப்பிவைத்தது. இது ஒரு விபத்தினது அல்லது தவறான கணக்கீட்டின் ஆபத்தை அதிகரித்து ஒரு பரந்த மோதலை துரிதப்படுத்தக்கூடும்.

பெய்ஜிங்கில் நடந்த பேச்சுக்களில் அழுத்தங்கள் வெளிப்படையாக காணப்பட்டன. அது 45 நிமிடங்கள் மட்டுமே நடப்பதாக இருந்தது, ஆனால் இரண்டு மணி நேரம் நீடித்தது. டோக்கியோவில் பிடென், ADIZ பிரச்சினையை பெய்ஜிங்கில் “மிகவும் முக்கியத்துவத்துடன்” எழுப்புவதாக உறுதியளித்து, சீனா “இப்பிராந்தியத்தில் இருக்கும் நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதாக” குற்றமும் சாட்டினார். ஜியும் பிடெனும் கூட்டு அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. இரு தலைவர்களும் வான் பாதுகாப்பு பிராந்திய மோதல் குறித்து பகிரங்க கருத்து எதையும் வெளியிடுவதை தவிர்த்தனர்.

ஜி, பிடென் இருவருமே மோதலின் தீவிரத்தன்மையை குறைத்துமதிப்பிட முயன்றனர். சீனா, அமெரிக்க மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திடம் அதிகரித்துவரும் போர் ஆபத்தினை மறைப்பதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் மூடிய கதவுகளுக்குப்பின், தீவிர கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திருக்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயுறவுமில்லை. பெயர்குறிப்பிடாத அதிகாரிகள் செய்தி ஊடகத்திற்கு கூறிய கருத்துக்களில் அவ்வாறான கருத்துக்களின் மங்கிய பிரதிபலிப்பு காணப்பட்டது. 

வாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி, “துணை ஜனாதிபதி அமெரிக்காவின் எதிர்ப்புக்களை விரிவாக ஜியிடம் முன்வைத்தார். அதேபோல் ஜப்பான், தென்கொரியா நிலைப்பாடுகள் சீனாவின் வான் பாதுகாப்பு பிராந்தியம் பற்றியும் பிரச்சனைக்குரிய தீவுகள் குறித்தும் கூறினார்.” “சீனா சுமத்த இருக்கும் பறக்கும் தடைகளை அமெரிக்க நிர்வாகம் அங்கீகரிக்காது” என்றும் பிடென் வலியுறுத்தினார்.

ஜி “தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சீனாவில் டயோயு, ஜப்பானில் சென்காகு என்படும் தீவுகள் முழுஇறைமை கொண்ட சீனப் பகுதிகள் என்று வாதிட்டு,  இதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன என்றார்.” போஸ்ட்டின் கருத்துப்படி அமெரிக்கக் குழுவின் முக்கிய இலக்கு “சீனாவை வான் பாதுகாப்பு பிராந்தியத்தை ஆக்கிரோஷமாக செயல்படுத்த தேவையில்லை என்று வலியுறுத்துவது ஆகும்”. ஆனால் ஜி “பேச்சுக்களின் போது அத்தகைய உறுதி மொழி ஏதும் அளிக்கவில்லை.”

பெய்ஜிங்கில் சமாதானத்தை நாடுபவர் என்று பிடென் காட்டிக் கொள்ள முயன்றாலும், ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவிற்கு முன்னுரிமை வழங்குதல்” என்ற கொள்கை கடந்த நான்கு ஆண்டுகளில் பிராந்தியம் முழுவதும் அழுத்தங்களை வேண்டுமென்றே அதிகரித்துள்ளது. இது அமெரிக்கா சீனாவை இராஜதந்திர முறையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், அதை இராணுவமுறையில் சுற்றிவளைக்கவும் முற்படுகின்றது. வாஷிங்டனின் ஆக்கிரோஷ நிலைப்பாடு தொடர்ச்சியாக பதவிக்குவந்த ஜப்பானிய அரசாங்கங்களை சிறிய, ஆளில்லாத, பாறைகள் மிகுந்த சீன கடல் பகுதியில் உள்ள சென்காகு தீவுகள் மீது கட்டுப்பாட்டை வலியுறுத்த வைத்துள்ளது.

இந்த அழுத்தங்கள் அதிகமாவதற்கு முக்கியமான பொறுப்பை அமெரிக்கா கொண்டுள்ளபோதும், நாட்டின் பெரும் செல்வம் படைத்த முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சீன அரசு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தாழ்ந்த முறையீடுகள் மற்றும் பொறுப்பற்ற தீரச்செயல்கள் இணைந்த கலவை மூலம் தனது பிரதிபலிப்பை காட்டுகின்றது. உள்நாட்டு சமூக அழுத்தங்களை திசைதிருப்பும் வகையில் சீன தேசியவாதத்தை தூண்டும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,  பெய்ஜிங் டயோயு தீவுகள் பற்றிய மோதலை தேசிய கௌரவும் என்று மாற்றிவிட்டது. இதில் இருந்து  அது அரசியல்ரீதியாக பின்வாங்க முடியாதுள்ளது. இவ்வாறு செய்கையில் அது வாஷிங்டன் கரங்களில் நேரடியாக சிக்கியுள்ளது.

இந்த நெருக்கடியை பயன்படுத்தி பிடென் ஜப்பானில் உள்ள வலதுசாரி ஏபே அரசாங்கத்துடன் இராணுவ உறவுகளை மறுவலுப்படுத்தவும், உறுதிபடுத்தவும் பயன்படுத்தியுள்ளார். இதேபோல் சியோலுக்கு அவர் நாளை செல்லுகையில் தென் கொரியாவிலும் அதையே செய்ய முற்படுவார். பெய்ஜிங்கில் துணை ஜனாதிபதி ADIZ மோதலைப் பயன்படுத்தி அது ஆசியாவில் தொடர்ச்சியான அமெரிக்க மேலாதிக்கத்தை கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற தகவலை சீனத் தலைமைக்கு கொடுத்துள்ளார்.

அதே நேரத்தில் ஜி மற்றும் சீனப் பிரதமர் லி கேக்கியாங்கிடம் இருந்து எத்தகைய விட்டுக்கொடுப்புகளையும் பெற்றுக்கொள்ள பிடென் முற்படுகிறார். பிரதமரை அவர் இன்று சந்திக்கவுள்ளார். சீன ஜனாதிபதியுடன் நேற்றைய பேச்சுக்களில் சிலவிடயங்கள் குறித்து டைம்ஸ் அறிவித்துள்ளது. பிடென் சமீபத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உயர் கூட்டத்தில் அறிவித்துள்ள சந்தைசார்புடைய சீர்திருத்தங்களின் நீண்டகால விளைவுடைய தன்மையை “வரவேற்றுள்ளார்”. இது அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்கு பெரிய வணிக வாய்ப்புக்களை வழங்கும். பிடென் “திரு.ஜியிடம் சில சீர்திருத்தங்களை விரைவாக செயல்படுத்துமாறு அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது.”

வட கிழக்கு ஆசியாவில் உள்ள நிலைமை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு முன் 1914 இல் உலகப் போர் வெடிப்பதற்கு முன் இருந்த அச்சம்நிறைந்த நிலைமையைப் போல் உள்ளது. உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியால் உந்தப்பட்டு பெரிய சக்திகள் ஒரு தொடர் “போர் ஆபத்துக்களை” தோற்றுவிக்கும் இராஜதந்திர  சூழ்ச்சிகள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் இராணுவத் தலையீடுகளை அதிகமாக்குகின்றன. இறுதியில் பார்த்தால் அற்பமான நிகழ்வான ஆஸ்திரிய கோமகனின் கொலை, அடக்கி வைக்கப்பட்டிருந்த தேசியப் போட்டிகளையும் அழுத்தங்களையும் கட்டவிழித்துவிட்டு, முன்னொருபோதுமில்லாத வகையிலான படுகொலைகளை விளைவித்தது. இதன் கால் நூற்றாண்டிற்குப்பின் உலக முதலாளித்துவமும் அதன் திவாலாகிவிட்ட தேசிய அரசமைப்பு முறையும் மீண்டும் மனிதகுலத்தை ஒரு உலகப் போர் என்னும் பேரழிவில்  ஆழ்த்தின.

இன்று, 2008 உலக நிதிய நெருக்கடிக்கு ஐந்து ஆண்டுகள் பின்னர், உலக முதலாளித்துவம் மீண்டும் சரிவு, மந்தநிலையில் ஆழ்ந்துள்ளது. கடந்த மூன்று தசாப்தத்தில் சீனா உலகின் மிகப் பெரிய குறைவூதிய தொழிலாளர் அரங்காக மாறியிருப்பது அதை போட்டி நாடுகளின் மையமாக மாற்றியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் புதிய “ஆசிய நூற்றாண்டில்” தன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த தீவிரமாக உள்ளது. அது பொறுப்பற்ற முறையில் புதிய போருக்குத் தயாரித்து, சீனாவை தவிர்க்க முடியாத சவால் விடும் நாடு என்று காட்டி, ஜப்பான்  உட்பட அதன் ஏனைய சர்வதேச போட்டி நாடுகளுக்கு கட்டளையிட முற்படுகிறது.

கிழக்கு சீனக் கடலில் ஒரு வான் பாதுகாப்பு அடையாள பிராந்தியம் என்று சீனா விரைவாக அறிவித்துள்ளதன் மூலம் ஒரு வெடிப்புமிக்க போர்ப்பிராந்தியத்தை தோற்றுவித்துள்ளமை சீனா, அமெரிக்கா ஜப்பான் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுக்கு போர் ஆபத்து பற்றிய தீவிர எச்சரிக்கையாகும். முன்னுதாரணமில்லாத வகையில் முக்கிய பொருளாதாரங்களின் உலகளாவிய ஒருங்கிணைப்பு போரைத் தடுக்கும் என்று கூறுவோர்கள் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றுவதாகும். காலத்திற்கு ஒவ்வாததாகிவிட்ட தேசிய அரசமைப்பு முறைக்குள் கட்டுப்படுத்தி வைக்கப்படும் இந்த பொருளாதார பூகோளமயமாக்கல்தான் போட்டிகளையும் முரண்பாடுகளையும் எரியூட்ட வைக்கிறது.

போர் உந்துதலை நிறுத்த ஒரேயொரு வழி ஏற்கனவே இரு உலகப் போர்களை தோற்றுவித்துள்ள திவாலாகிப்போன இலாப அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்தான். முதலாளித்துவத்தை தூக்கிவீசும் திறனுடைய ஒரே சமூக சக்தி ஒரு திட்டமிட்ட உலகப் பொருளாதார, சோசலிச அமைப்புமுறையை உருவாக்கப்போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கம்தான்.