சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s minimum wage fraud

Inequality and the fight for socialism

ஒபாமாவின் குறைந்தபட்ச கூலி மோசடி

சமத்துவமின்மையும் சோசலிசத்திற்கான போராட்டமும்

Andre Damon
9 December 2013

Use this version to printSend feedback

கருத்துக் கணிப்புகளில் சரிந்துவரும் ஆதரவு விகிதங்களையும் பெருகிவரும் மக்கள் எதிர்ப்பையும் முகங்கொடுத்து வருகின்ற நிலையில், ஒபாமா நிர்வாகம் தன்னைத்தானே சமத்துவமின்மையின் ஒரு எதிர்ப்பாளராக காட்டிக்கொள்ள ஒரு மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.

வாஷிங்டன் DCஇல் புதனன்று பேசுகையில், வருவாய் சமத்துவமின்மையை "நம்முடைய காலத்தின் மிகப் பெரிய சவாலென்று" குறிப்பிட்ட ஒபாமா, "அடுத்த ஆண்டு வாக்கில் எனது மீதமுள்ள பதவிகாலத்தில்" "எங்களின் அனைத்து முயற்சிகளையும்" பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிளவைக் குறைப்பதில் நிர்வாகம் ஒருமுனைப்படுத்தும் என்று அறிவித்தார்.

அதன் வெற்று வார்த்தைஜாலத்திற்கு இணைப்பாக, குறைந்தபட்ச கூலியை மணிக்கு 7.25 டாலர் என்றிருக்கும் அதன் தற்போதைய அளவிலிருந்து 10.10 டாலர் என்று உயர்த்த காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட ஒரு முன்மொழிவிற்கு நிர்வாகம் அதன் ஆதரவை வழங்கி உள்ளதுஅடிப்படையில் இந்த முறைமை காங்கிரஸில் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு வெள்ளை மாளிகைக்கோ அல்லது பெருவணிக கட்சிக்கோ கிடையாது.

இதுபோன்ற ஓர் அற்பமான நடவடிக்கையானது நிஜமான வரையறைகளில் 1968இல் இருந்த குறைந்தபட்ச கூலியை விடக் குறைவாக வைத்திருக்கும் சமத்துவமின்மையை அக்கறையோடு எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு முயற்சியாக காட்டப்படுகிறது என்பதே பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையைத் தீர்க்க அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவிடமும் எந்தவொரு சீரிய யோசனைகளும் இல்லை என்ற உண்மையையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒபாமாவின் பேச்சு ஒருவரைத் துன்புறுத்திக் கேவலப்படுத்தும் பண்பு கொண்டதாகும், இது கருத்து கணிப்புகளில் அவரின் மதிப்பை உயர்த்த மற்றும் அவரது வலதுசாரி கொள்கைகளை மூடிமறைக்க வெளிப்படையாக திட்டமிட்டு செய்யப்பட்ட நகர்வாகும். வழக்கமான பாணியில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமன் மற்றும் ஏனைய இடங்களில் சட்டவிதிகளுக்குப் புறம்பான படுகொலைகளை மட்டுமே தொடர்ந்து வந்த, அவரின் சொந்த டிரோன் படுகொலை திட்டத்தை அவரே இந்த ஆண்டின் தொடக்கத்தில் விமர்சித்ததைப் போல, அவர் வெறுமனே ஒன்றும் அறியாத ஒரு பார்வையாளராக இருந்ததைப் போலவும் அவர் விமர்சிக்கும் ஒரு நிகழ்முறையில் அவருக்கு முற்றிலுமாக எந்த பாத்திரமும் இல்லாததைப் போலவும் அமெரிக்காவில் சமத்துவமின்மையின் வளர்ச்சியை அவர் கண்டித்தார்.

தன்னைத்தானே சமத்துவமின்மையின் ஒரு எதிர்ப்பாளராக காட்ட முயலும் ஒபாமாவின் முயற்சி, ஜனநாயகக் கட்சியின் சுற்றுவட்ட பாதையில் இயங்கும் நேஷன் இதழ் போன்ற பல்வேறு தாராளவாத அமைப்புகளாலும் மற்றும் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற போலி இடது அமைப்புகளாலும் ஆதரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குறைந்தபட்ச கூலியை அதிகரிக்க வேண்டுமென கோரிய வியாழக்கிழமை போராட்டங்களோடு அந்த உரை ஒருங்கிணைந்திருந்தது. சேவைத்துறை பணியாளர் சர்வதேச சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கத்தோடு இணைந்த அமைப்புகளால், அவர்களின் போலி-இடது கூட்டாளிகளோடு சேர்ந்து அந்த போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஒப்பீட்டளவில் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதினும், அந்த ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களால் பிரதானமாக எடுத்துக்காட்டப்பட்டதோடு, ஒபாமா நிர்வாக அதிகாரிகளாலும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சமூக சமத்துவமின்மையை தீர்ப்பதை நோக்கி ஒரு சைகை காட்ட நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக ஒபாமா உணர்வதானது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஆழ்ந்த பிளவு இன்னும் அதிக தெளிவாக அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் சமூக வாழ்வின் தீர்க்கமான உட்கூறாக உள்ளது என்ற உண்மையையே பிரதிபலிக்கிறது. சமத்துவமின்மை ஊடகங்களில் பொதுவாக புறக்கணிக்கப்பட்டுள்ளது அல்லது மூடிமறைக்கப்பட்டுள்ளது என்ற போதினும்உயரும் பங்குச்சந்தை குறித்தும் வரவிருக்கும் ஒரு "மீட்சி" குறித்தும் உற்சாகமாக எழுதப்படுவதற்கு இடையேஅமெரிக்காவிலும் உலகெங்கிலும் பரந்த பெரும்பான்மை மக்களிடையே அதுவே பிரதான எதார்த்தமாக நிலவுகிறது.

எவ்வாறிருந்த போதினும், சமூக சமத்துவமின்மை முதலாளித்துவ அமைப்புமுறையில் வேரூன்றி உள்ளதென்பதை அவர்களால் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது, மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமத்துவமின்மையின் அளப்பரிய வளர்ச்சி, அமெரிக்காவில் அதன் தலைமை அரசியல் பிரதிநிதி ஒபாமாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஆளும் வர்க்க கொள்கைகளின் உத்தேசிக்கப்பட்ட விளைவாகும்.

புதன்கிழமை உரையைச் சுற்றி வளைத்திருந்த சம்பவங்கள் ஒபாமா கூறிய குறிப்புகளின் போலித்தனமான குணாம்சத்தை அடிகோடிடுகின்றன. செவ்வாயன்று, திவால்நிலைமை மீதான ஒரு பெடரல் நீதிமன்ற நீதிபதி, வெள்ளை மாளிகையின் ஆதரவுடன், அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய மாநகராட்சி அதன் திவால்நிலைமையோடு முன்செல்ல டெட்ராய்ட் நகரத்திற்கு அனுமதி வழங்கினார், அது அமெரிக்கா முழுவதிலும் தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்களின் மீது தாக்குதலைத் தொடுக்க களம் அமைத்தது. அந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இலினோய் சட்டமன்றம் ஒரு சட்டமசோதாவை நிறைவேற்றியது, அந்த மசோதா 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மாநில ஓய்வூதிய நலன்களில் 160 பில்லியன் டாலரை வெட்டுக்கிறது.

குடியரசுக் கட்சியினர் உடன் ஒரு வரவு-செலவுத் திட்ட உடன்படிக்கையை எட்டுவதன் ஒரு முன்நிபந்தனையாக நீண்டகால வேலையின்மை சலுகைகளை அது நீடிக்கப் போவதில்லை என்று வெள்ளியன்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இது விடுமுறைக்குப் பின்னர் உடனடியாக 1.3 மில்லியன் மக்களுக்கான பெடரல் வேலையற்றோர் நலன்களை நீக்க களம் அமைப்பதோடு, 2014இன் முதல் அரையாண்டில் அதற்கும் கூடுதலாக 3.6 மில்லியன் மக்களையும் பாதிக்கிறது.

ஒபாமா பதவி ஏற்றதில் இருந்தே, அவர் செல்வ வளத்தைச் சமூகத்தின் பெரும்பான்மையினரிடம் இருந்து பெரும் பணக்காரர்களுக்கு கைமாற்றுவதில் அவரது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், சமூக சமத்துவமின்மை முன்னொருபோதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2009இல் இருந்து, அமெரிக்காவில் மத்தியதட்டு குடும்ப வருமானம் 4.2 சதவீதம் வீழ்ந்துள்ளது, அதேவேளையில் வருவாய் ஈட்டுவோரில் மேலே உள்ள ஒரு சதவீதத்தினர் வருவாய் ஆதாயங்களில் 95 சதவீதத்தைக் கைப்பற்றி உள்ளனர்.

செல்வ வளத்தின் பரந்த மறுபங்கீடு சர்வதேச அளவில் உள்ளது, மேலும்முடிவில்லா வங்கி பிணையெடுப்புகள் காட்டுமிராண்டித்தனான சிக்கன வெட்டு நடவடிக்கையோடு சேர்ந்துஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும் திரும்ப திரும்ப நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் பிரபுத்துவத்தின் சுய-செழிப்புக்கு, அத்தியாவசிய சமூக தேவைகள் கூட மிகப் பெரிய தடைகளாக நிற்கின்ற என்ற அளவிற்கு சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மிக கொடிய வடிவங்களை எடுத்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும், அரசுகள் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன, அவர்களின் நலன்களுக்காகவே அவை தரந்தாழ்ந்து சேவை செய்கின்றன.

இதன் விளைவாக, உலக பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 2009இல் இருந்து இரட்டிப்பாகி உள்ளதோடு, பில்லியனர்களின் மொத்த எண்ணிக்கை 1,360இல் இருந்து 2,170ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் பொருளாதார வெளியீட்டில் இருந்து தொழிலாளர்களுக்கு செல்லும் மொத்த பங்கு பல தசாப்தங்களாக உலகம் முழுவதிலும் வீழ்ச்சி அடைந்து வந்துள்ளன.

சமூகத்தின் மிகவும் உயர் மட்டத்தில் செல்வவளத்தின் இந்த முன்னொருபோதும் இல்லாத திரட்சியானது, NSAஇன் தலைமையில் உலகளாவிய உளவுக் கருவிகளினூடாக அம்பலப்பட்ட ஜனநாயக உரிமைகளின் அழிப்பில் இருந்து மற்றொரு உலகளாவிய யுத்தத்தைத் தூண்ட அச்சுறுத்தி வருகின்ற சர்வதேச கொள்ளைக்கூட்டத்தின் ஒரு வெளியுறவு கொள்கை வரையில், கொள்கையின் ஒவ்வொரு உட்கூறினோடும் இணைந்துள்ளது.

இந்த சர்வதேச நிகழ்ச்சிப்போக்கு, முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வி மற்றும் உலகின் பெரும்பான்மை மக்களின் அடிப்படை சமூகத் தேவையோடு அது பொருந்தியில்லை என்பதன் ஒரு வெளிப்பாடாகும்.

மத்தியதர தட்டின் மிகவும் சலுகைப் படைத்த பிரிவுகளின் நலன்களோடு தவிர்க்கவியலாதபடிக்கு பிணைந்துள்ள ஓர் அரசியல் முத்திரையாக விளங்கும்இனம், பாலினம் மற்றும் அடையாள அரசியலின் வேறு வடிவங்களின் மீது தங்களின் அரசியலை நிலைநிறுத்தி இருக்கும் போலி-இடது மற்றும் தாராளவாத அமைப்புகளின் ஒரு கூட்டத்திற்கு முரண்பட்ட விதத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சமூக சமத்துவமின்மையின் மையக்கருவை புரிந்துகொள்வதன் மீது தன்னைதானே நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிளவானது, இரண்டு பெரும் வர்க்கங்களுக்குள், அதாவது தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நிலவும் சமூக பிளவின் ஒரு வெளிப்பாடாகும்.

சமூக சமத்துவமின்மையின் மீதான வலியுறுத்தல், ICFIஇன் தேசிய பிரிவுகளின் பெயரிலேயே உட்கலந்துள்ளது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக், சோசலிச சமத்துவ கட்சியை ஸ்தாபித்த போது குறிப்பிட்டது: அரசியல் வாழ்வில் "மேலாதிக்கம் செலுத்தும் அம்சம் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் செல்வ வளத்தை அனுபவிக்கும் மக்கள்தொகையில் ஒரு சிறிய சதவீதத்திற்கும் மற்றும் பொருளாதார நிச்சயமற்றதன்மை, துன்பம் ஆகியவற்றை மாறுபட்ட அளவுகளில் கொண்ட உழைக்கும் மக்களின் பரந்த பெரும்பான்மைக்கும் இடையில் விரிவடையும் பிளவாக இருக்கும்என்று அது குறிப்பிட்டது.

இடைப்பட்ட 18 ஆண்டுகள் இந்த மதிப்பாய்வை உறுதி செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகள் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் ஆண்டுகளாக இருந்துள்ளன, மேலும் இந்த நெருக்கடிக்கான விடையிறுப்பு பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் ஓர் ஆளும் வர்க்கத்தின் சமூக நலன்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு நிஜமான போராட்டத்தின் அடித்தளமானது, பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் சொத்துக்களை அபகரித்து சமூகத்தின் மீது அதன் இரும்புப்பிடியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தோடு நடத்தப்படும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு தாக்குதலாகும்.

மிக அத்தியாவசிய சமூக தேவைகளின் பாதுகாப்பும் கூடஅதாவது வேலைகள், கண்ணியமான கூலிகள், ஓய்வூதியங்கள், கல்வி, கலாச்சாரத்தை அணுகுதல் ஆகியவைமுதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஐக்கியத்தின் தேவையை முன்னிறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதும், ஒரு புதிய அடித்தளத்தின் மீதுதனியார் இலாபத்தின் மீதன்றி சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகபொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைப்பு செய்வதுமே நோக்கமாக இருக்க வேண்டும்.