சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Congress Party humiliated in Indian state elections

இந்திய மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அவமானப்பட்டது

By Kranti Kumara and Keith Jones
10 December 2013

Use this version to printSend feedback

இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (UPA) மேலாதிக்கம் செலுத்தும் சக்தியான காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியான மாநில தேர்தல்களில் ஒரு திகைப்பூட்டும் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் தேசிய தேர்தலுக்கு வெறும் ஐந்து மாதங்களுக்கு முன்னால் அந்த கட்சியும், அரசாங்கமும் தீவிர நெருக்கடிக்குள் வீசப்பட்டுள்ளன.

ஞாயிறு மற்றும் திங்களன்று, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் மிஜோராம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான மற்றும் 180 மில்லியனுக்கும் மேலான மக்களின் தாய்மண்ணாக விளங்கும் தேசிய தலைநகர் டெல்லிக்குமான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ராஜஸ்தான் மற்றும் டெல்லியில், காங்கிரஸ் அரசாங்கங்கள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், அதன் பிரதான போட்டியாளர் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) அரசாங்கங்களை பதவியிலிருந்து இறக்க காங்கிரஸால் முடியவில்லை. நான்கு சட்டமன்ற தொகுதிகள் முழுவதிலும், அதன் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஏறத்தாழ பாதியளவிற்கு, 246இல் இருந்து 126 இடங்களாக, குறைந்து போனதைக் கண்டது. இந்தியாவின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமான ஒரு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட மிஜோராமில் மட்டும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வெற்றிபெற்று ஒரு வலுவான வெளிப்பாட்டைக் காட்டியது.

இந்தியாவின் ஆறாவது, எட்டாவது மற்றும் பதினாறாவது மிகப் பெரிய மாநிலங்களான முறையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் பிஜேபி தற்போது அரசை ஸ்தாபிக்கும் மற்றும் டெல்லியிலும் கூட. ஆனால் தேசிய தலைநகர் பிரதேசத்தில் பிஜேபி ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மையை வெல்ல தவறியது, அதாவது அதிகாரத்திற்கு வந்தாலும் அது பலவீனமாக இருக்கும். இது ஏனென்றால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் (AAP - சாமானிய மனிதனின் கட்சி) திடீர் வெளிப்பாட்டினால் ஆகும். 2012இல் ஊழலுக்கு எதிரான போராட்டங்களின் தலைவர்களால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் மீதிருந்த மக்கள் கோபத்தை ஈர்த்தும் மற்றும் கூடுதல் சமூக செலவினங்கள் செய்யப்படும் என்ற மட்டுப்பட்ட வாக்குறுதிகளை அளித்தும், டெல்லி சட்டமன்றத்தின் 70 இடங்களில் 28 இடங்களை வென்றதுஇது BJP'ஐ விட வெறுமனே மூன்று இடங்களே குறைவாகும்.

மாநில தேர்தல் முடிவுகள், 2004இல் இருந்து பதவியில் இருந்து வரும் UPAஇன் செயல்பாடுகளை மக்கள் நிராகரித்ததை எடுத்துக்காட்டுகிறது என்பதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் உடனடியாக மறுப்பதில் இறங்கினர். ஆனால் அரசாங்கத்தின் மற்றும் அதன் பெருவணிக திட்டங்களின் மீது மக்களின் கோபம் ஒரு சிதறிய விதத்தில் இருந்தது என்றபோதினும், அவை அதைத்தான் பிரதிபலிக்கின்றன என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை.

கூர்மையாக 5 சதவீதத்திற்கும் குறைவான வீழ்ச்சியை அடைந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கு, சமூக செலவினங்களை வெட்டியும், சந்தை சார்பு சீர்திருத்தங்கள் நடைமுறையைத் தீவிரப்படுத்தியும் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் விடையிறுப்பு காட்டி உள்ளது. இவற்றில் தனியார்மயமாக்கல் மற்றும் பொதுநிறுவனங்களில் முதலீட்டைக் குறைத்தல், பல பிராண்ட் சில்லறை அங்காடிகளை மற்றும் பொருளாதாரத்தின் ஏனைய துறைகளை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிட்டமை, மற்றும் எரிபொருள் மற்றும் உர விலைகளின் மானியங்களை வெட்டியமை ஆகியவையும் உள்ளடங்கும். சமீபத்திய மாதங்களில், சில்லறை வணிக பணவீக்கம் 10 சதவீதம் அல்லது அதற்கு மேலாக உயர்ந்துள்ள போதினும், அரசாங்கம் மேலும் கூடுதலாக எரிபொருள் விலை உயர்வுகளைத் திணித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில், UPA அரசாங்கம் பல ஊழல் மோசடிகளாலும் அதிர்ந்து போயுள்ளது, அவை காங்கிரஸ் பெருநிறுவனங்களுக்கு முழுமையாக அடிபணிந்து போயுள்ளதை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்ததின் மூலமாக இந்திய பெருநிறுவன அமைப்புகளின் வேகமான வளர்ச்சி எவ்வாறு தூண்டப்பட்டுள்ளது என்பதையும் அம்பலப்படுத்துகிறது. “ஊழலற்றவராக" கருதப்படும் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் கண்காணிப்பின் கீழ், பொது ஆதாரவளங்களை, நிலக்கரி வளங்கள் மற்றும் தொலைதொடர்பு அலைவரிசையில் இருந்து நிலங்கள் வரையில், தொடர்ந்து UPA அரசாங்கம் இந்திய பெருநிறுவன ஜாம்பவான்களுக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளது அல்லது கிடைத்த விலைக்கு விற்றுள்ளது.

தொழிலாள வர்க்க போராட்டங்களை ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி ஒடுக்கி இருந்த நிலைமைகளின் கீழ் மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை ஒரு மலிவுக்கூலி தயாரிப்பாளராக மாற்ற இந்திய மேற்தட்டின் இரண்டு தசாப்த கால நீண்ட உந்துதலை அது ஆதரித்திருந்த நிலைமைகளின் கீழ், அரசாங்கம் மற்றும் அதன் பெருவணிக நிகழ்ச்சிநிரலுக்கு எதிரான கோபத்தை வலதுசாரி சக்திகள் சுரண்டி வருகின்றன.

கடந்த ஆண்டில், பெருநிறுவன இந்தியாவின் பெரும்பாலானவை BJP'ஐ சுற்றி அணிதிரண்டிருந்தன, இது குஜராத் முதல் மந்திரியும் சுய-பாணியிலான இந்து "பலசாலி" நரேந்திர மோடியின் பெயரை, பிஜேபி அதன் தேசிய பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்க இட்டுச் சென்றுள்ளது. மோடிக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டதால் பெருவணிகங்கள் உற்சாகம் அடைந்துள்ளன, ஏனென்றால் சமூகரீதியில் தீமை உண்டாக்கும் வணிக சார்பு சீர்திருத்தங்களை தள்ளி செல்வதில் காங்கிரஸ் போதியளவிற்கு இரக்கமின்றி இருப்பதாக அவை கருதுகின்றன, மேலும் ஏனென்றால் நாடாளுமன்ற முறைமைகள் மற்றும் நடைமுறை விதிமுறைகள் மற்றும் அவற்றின் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துகையில் உருவாகும் மக்கள் எதிர்ப்புகளின் மீது தாறுமாறாக செயல்பட அவை அவரை எதிர்பார்க்கின்றன.

மாநில தேர்தல்களின் ஓட்டத்தின் போது, பெருநிறுவன ஊடகங்கள் மோடியின் மீது கவனத்தை வாரி வழங்கி இருந்தன. அவ்வாறு செய்ததன் மூலம், குஜராத்தில் 2002 முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டுவதில் அவருடைய பாத்திரத்தை மறைப்பதையும், அவரை மன்னிப்பதையும் தொடர்ந்தன, மேலும் குஜராத்தின் வேகமான சமூக-பொருளாதார "வளர்ச்சியின்" மீது தங்கியிருந்த மோடியின் வாதங்களைப் போலியாக்கும் பாரிய வறுமை மற்றும் ஒட்டுமொத்த சமூக சமத்துவமின்மையை புறக்கணித்தன.

மாநில தேர்தல்களில் BJPஇன் பலமான வெற்றிக்கு விடையிறுப்பாக திங்களன்று இந்தியாவின் பிரதான பங்குச்சந்தை குறியீடுகள் கூர்மையாக உயர்ந்தன. “தற்போதைய அரசாங்கத்தின் செயல்திறன் குறித்து வணிக சமூகம் மிகவும் எதிர்மறையான கண்ணோட்டத்தை எடுத்துள்ளன,” என்று மும்பை நிதியியல் நிறுவனத்தின் ஒரு மூத்த செயலதிகாரி நியூ யோர்க் டைம்ஸிற்கு கூறினார். அவர் கூறினார், “குஜராத்தில் அவர் எதை செய்து முடித்திருந்தாரோ அது காட்டுவதைப் போல, நரேந்திர மோடி முற்றிலும் வணிகத்திற்கு நேசமானவர் என்பது சந்தை அனுமானம்.” தேர்தல் முடிவுகளை வரவேற்று, இந்திய தொழில்துறைக்காக வக்காலத்துவாங்கும் அசோசெம் (ASSOCHAM - Associated Chambers of Commerce and Industry) குறிப்பிட்டது: “[மாநில] சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள், இறுதியில் அரசாங்கத்தின் பண்பு தான் விஷயத்திற்குரியதாக இருக்கிறது என்ற ஒரு தெளிவாக சேதியை வழங்கி உள்ளது.”

காங்கிரஸின் பொது கூற்றுகள் என்னவாக இருந்தபோதினும், மாநில தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் தலைமை தெளிவாக கலக்கமுற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் விருப்பத்தின் பேரில் பிரதம மந்திரியாக சேவை செய்துவரும் 81 வயதான தொழில்நுட்பவாத மன்மோகன் சிங்கை தேசிய தேர்தலுக்கு உடனடியாக முன்னரோ அல்லது பின்னரோ அது ஓரங்கட்ட திட்டமிட்டிருந்தது. இது மூன்று இந்திய பிரதம மந்திரிகளின் நேரடி வாரிசும், நேரு-காந்தி குடும்பத்தின் வழிதோன்றலுமான ராகுல் காந்தியை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை எடுக்க அனுமதிக்கும். ஆனால் காங்கிரஸ் தலைமையை ஏற்க அவர் "தயாராகி உள்ளாரா" என்ற ஓர் ஆழ்ந்த கேள்வி எழுந்திருந்த நிலையில், தோல்விகரமான காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பரிச்சயமான முகமாக இருந்தார்.

மோடி தலைமையிலான பிஜேபி'க்கு சவால் விடுக்க, "உள்ளடக்கிய வளர்ச்சிக்கான" கட்சி என்ற அதன் வாதங்களை தம்பட்டமடித்து காங்கிரஸ் கட்சி விடையுறுப்பு காட்டியது. ஆனால் ஒரு தசாப்தமாக அதிகாரத்தில் இருந்த பின்னர் மற்றும் சமூக சமத்துவமின்மை வேகமாக வளர்ந்துள்ள நிலைமைகளின் கீழ் மற்றும் உயர்ந்துவரும் விலைவாசிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மையால் உழைக்கும் மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய முதலாளித்துவத்தின் அந்த முன்னோடி கட்சியால் பாரம்பரியமாக கூறப்பட்டு வந்த அந்த ஆத்திரமூட்டும் வாதங்கள் தெளிவாக அவற்றின் பிரகாசத்தை இழந்துள்ளன.

ராஜஸ்தானில், அதன் ஐந்தாண்டு காலத்தை முடித்துக் கொண்டு, 199 சட்டமன்ற இடங்களில் காங்கிரஸ் வெறும் 22 இடங்களை மட்டுமே வென்றது. மத்திய பிரதேசத்தில், குவாலியர் அரச மாநிலத்தை ஆண்ட முன்னாள் ஆட்சியாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வழித்தோன்றலை அதன் முதல் மந்திரி வேட்பாளராக நிறுத்தியதன் மூலமாக பெரும் ஆதாயங்களைப் பெற முடியும் என்று காங்கிரஸ் நம்பியது. உண்மையில் அங்கேயும் காங்கிரஸ் இடங்களை இழந்தது. சத்தீஸ்கரில் மாவோயிச வன்முறையால் பாதிக்கப்பட்டதாக தன்னைத்தானே காட்டிக் கொண்டதன் மூலமாக பொதுமக்களின் அனுதாபங்களைப் பெற முயன்றது. (கடந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த கட்சியின் பல தலைவர்கள் மாவோயிச தாக்குதலில் கொல்லப்பட்டனர்.) ஆனால் அங்கே அது வெறும் இரண்டு கூடுதல் இடங்களை மட்டுமே பெற்றது.

18 மில்லியன் மக்கள்தொகை கொண்டிருக்கும் டெல்லி, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை விட மிகச் சிறியதென்ற போதினும், அது தேசிய தலைநகர் என்பதால் சிறப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லியில், 70 சட்டமன்ற இடங்களில் வெறுமனே 8 இடங்களை வென்று காங்கிரஸ் அரசாங்கம் படுதோல்விக்குள் தள்ளப்பட்டது. காங்கிரஸிடம் இருந்து பிஜேபி இடங்களைப் பறித்து கொண்ட போதினும், பெரும்பாலும் அதன் தோல்விகள் AAPக்கு வந்து சேர்ந்தன, மேலும் மத்தியதட்டு வர்க்கம் சூழ்ந்த பகுதிகளிலும் மற்றும் டெல்லியின் ஏழைகள் வாழும் நகரத்தின் உள்ளே உள்ள பகுதிகள் இரண்டிலுமே இது நிஜமாக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லியின் காங்கிரஸ் முதல் மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் தோற்று, அவரது சொந்த இடத்தைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனார்.

குடிநீர் மற்றும் மின்சாரத்தின் தனியார்மயமாக்கல் உட்பட மக்கள்விரோத பொருளாதார "சீர்திருத்தங்களைத்" திணிக்க முயன்றமைக்காக தீக்சித் பெருநிறுவன ஊடகங்களின் அன்புக்குரியவராக நீண்டகாலமாக இருந்துள்ளார்.

ஓய்வுபெற்ற இந்திய பொலிஸ் சேவை அதிகாரியும் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அதன் முதல் மந்திரி வேட்பாளராக ஆக்க விரும்பியவருமான கிரண் பேடியால் வழங்கப்பட்ட பிஜேபி உடன் கைகோர்ப்பதென்ற ஆலோசனையை நிராகரித்து, டெல்லியில் வரவிருக்கின்ற பிஜேபி அரசாங்கத்திற்கு ஒரு "விசுவாசமான எதிர்கட்சியாக" இருக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

இந்திய முதலாளித்துவத்தின் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி'க்கு தங்களின் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில், டெல்லியின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் பெரும்பாலான பிரிவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆம் ஆத்மி கட்சியை நோக்கி திரும்பின. எவ்வாறிருந்த போதினும், அது அவர்களுக்கு எந்தவொரு முற்போக்கான மாற்றீட்டையும் பிரதிநிதித்துவப்படுத்த போவதில்லை. அரசியல் ஊழலின் மீது அக்கட்சி தலைவர்களின் பிரத்யேக ஒருமுனைப்பு மற்றும் பெருநிறுவன நலன்களுக்கு அரசு அடிபணிவதற்கும் மற்றும் அரசியல் ஊழலுக்கும் இடையிலான தொடர்பைப் பெற முற்றிலுமாக மறுத்தமை மற்றும் முதலாளித்துவத்திற்கு தடுமாற்றமில்லாத பாதுகாப்பு ஆகியவையே, ஆம் ஆத்மி கட்சி எதில் இருந்து எழுந்து வந்ததோ, அந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களின் முக்கிய உட்கூறுகளாக இருந்தன.