சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Which way forward for Ukrainian workers?

உக்ரேனிய தொழிலாளர்கள் முன்னால் உள்ள பாதை என்ன?

Peter Schwarz
14 December 2013

Use this version to printSend feedback

கடந்த மூன்று வாரங்களாக உக்ரேனை அதிரச் செய்த கொந்தளிப்பான போராட்டங்கள் ஆழ்ந்த சமூக பதட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வலதுசாரிகளின் ஆதரவுக்கு கூடுதலாக, அந்நாட்டின் பொருளாதார சீரழிவால் ஏற்பட்டுள்ள அதிருப்தி, மாநில மற்றும் சமூகத்தின் உயர்மட்டங்களில் நிலவும் ஊழல்கள், பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் மீதான சீற்றம், மற்றும் ரஷ்ய பேரினவாதத்தின் மீதான அச்சங்கள் என இவை ஆயிரக்கணக்கானவர்களை வீதிக்கு இழுத்து வந்துள்ளது.

எவ்வாறிருந்த போதினும், இத்தகைய உணர்வுகளில் எவ்வித முற்போக்கான நிலைநோக்கும் இல்லை. ரஷ்யாவுடனான எரிவாயு வியாபாரத்தில் சொத்துக்களைக் குவித்தவரும், தற்போது உக்ரேனிய தேசியவாதத்தின் மீது சவாரி செய்துவரும் செல்வந்த பெண்மணி யூல்யா டிமோஷென்கோ மற்றும் பகிரங்கமாகவே ஒரு யூத-எதிர்ப்புவாதியும் பாசிசவாதியுமான மற்றும் அங்கேலா மேர்க்கெலின் பழமைவாத CDUஆல் ஆதரிக்கப்படும் தொழில்ரீதியிலான குத்துசண்டை வீரர் விடாலி கிலிட்ஸ்ச்கோ போன்ற பிற்போக்கான பிரபலங்களால் இந்த போராட்டங்கள் தலைமையேற்று நடத்தப்படுகின்றன. அந்நாட்டை கொள்ளையடித்து பில்லியன்களை குவித்துள்ளவையும் மற்றும் தற்போது தங்களின் செல்வங்கள் ரஷ்யாவுடனான சுங்கவரி ஒத்துழைப்பு ஒன்றியத்தைவிட (customs union) ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு கூட்டணியில் கூடுதல் பாதுகாப்பாக இருக்குமென்று தீர்மானித்துள்ள செல்வந்த தட்டுக்கள், பின்புலத்திலிருந்து ஆட்டி வைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்த போராட்டங்களின் உத்தியோகபூர்வ முழக்கங்கள் தவறாகவும், போலித்தனமாகவும் உள்ளன. தேசிய விடுதலை" என்றால் மாஸ்கோ மற்றும் கீவ்வில் உள்ள செல்வந்த தட்டுக்களின் அசுரத்தனத்தை, பிராங்பேர்ட், இலண்டன் மற்றும் நியூ யோர்க்கில் உள்ள நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கொடுங்கோல் ஆட்சியைக் கொண்டு மாற்றீடு செய்வதை அர்த்தப்படுத்துவதாக உள்ளது. "ஜனநாயகம்" என்றால் சர்வதேச நாணய நிதியத்தின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய செய்வதை அர்த்தப்படுத்துகிறது.

இராஜாங்க நெறிமுறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கவின் முன்னணி அரசியல் பிரபலங்கள் அங்கே அவர்களின் கரங்களைப் பலப்படுத்திக் கொள்வதோடு, எதிர்கட்சி தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் மற்றும் சூழ்ச்சிகள் செய்யவதற்கும் உக்ரேனிய அரசியல் வாழ்வினுள் இறங்கி உள்ளனர். அவர்களை எது கவர்ந்திழுக்கிறதென்றால் மலிவுக்கூலி உழைப்பு, ஒரு பெரிய உள்நாட்டு சந்தை மற்றும் பெரும் மூலோபாய முக்கியத்துவம் உள்ள ஒரு பிராந்தியத்தின் மீது கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு அங்கிருக்கும் வாய்ப்புகளே ஆகும். உக்ரேன் மீது அவர்களின் எதிர்கால திட்டங்களை மூடிமறைக்க அவர்கள் வெகு குறைவான முயற்சிகளே செய்கின்றனர்.

ஜேர்மன் பிரெடெரிக் நோமான் அமைப்பின்படி: சர்வதேச நாணய நிதியத்தோடு ஒத்துழைக்க விரும்பும் எதிர்கட்சிகள், ஏதேனும் ஒரு புள்ளியில் தேசிய செலாவணியின் மதிப்பைக் குறைப்பது, நுகர்வோருக்கான எரிபொருள் விலைகளை உயர்த்துவது மற்றும் கூலிகள் மற்றும் ஓய்வூதியங்களை சீராய்வு செய்வது போன்ற மக்கள் செல்வாக்கற்ற நடவடிக்கைகளை, மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டியதிருக்கும். அதாவது அது ஏற்கனவே மில்லியன் கணக்கான ஓய்வூதியம் பெறுவோரை மற்றும் வேலைவாய்ப்பற்றோரை துன்பியலான வறுமைக்குள் இழுத்துவிட்டுள்ள அதிர்ச்சி வைத்தியத்தின் மற்றொரு சுற்று என்பதாகும். உக்ரேனிய தொழில்துறையின் பெரும்பகுதிகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு கட்டுப்பாடற்ற வியாபார உடன்படிக்கை இல்லாமல் உயிர்வாழ முடியாது என்பதும் சாதாரண புரிதலுக்குள் உள்ளது.

இது பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு, குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் தலைவிதிகளைப் புறக்கணிக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு கூட்டு உடன்படிக்கை வழியாக தொழில் முன்னேற்றத்தைப் பார்க்கும் மத்தியதட்டு வர்க்கத்திற்குள் இருக்கும் அந்த உட்கூறுகளுக்கு தெரியும்.

அவர்கள் ஏதென்ஸிற்கு விஜயம் செய்ய வேண்டும். கிரீஸின் சமூக அழிவு காட்டியுள்ளதைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன ஆணைகள் மத்தியதட்டு வர்க்கத்தையும் விட்டு வைக்காது.

பெரும்பாலான தொழிலாளர்கள், குறிப்பாக அந்நாட்டின் கிழக்கில் உள்ள தொழில்துறை பகுதிகளின் தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டங்களில் இருந்து விலகி நிற்கின்றனர், அங்கே மக்களின் ஒரு சிறிய பகுதியினரிடம் மட்டும் தான் போராட்டங்களுக்கு ஆதரவு உள்ளது. அவர்களுக்கு எதிர்கட்சியின் மீதோ அல்லது அரசாங்கத்தின் மீதோ நம்பிக்கை இல்லை, ஆனால் அவர்களை எதிர்க்க அவர்கள் வசம் வேறெந்த வழியும் இல்லை.

தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான மற்றும் சுய-நனவுபூர்வமான சக்தியாக இல்லாமல் இருப்பதானது, ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் தங்களுக்கு சாதகமாக கையாள எதிர்கட்சி தலைவர்களையும் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களையும் அனுமதிக்கிறது.

உக்ரைனில் தான் ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் மோசமான வரலாற்று குற்றங்களில் சிலவற்றை செய்துள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கி 1939இல் எழுதினார், தடைகள், படுகொலைகள், ஒடுக்குமுறைகள் மற்றும் பொதுவாக அதிகாரத்துவ அட்டூழியங்களின் அனைத்து வடிவங்களையும், பெரும் சுதந்திரம் மற்றும் விடுதலை மீது உக்ரேனிய மக்களின் ஆழ்ந்து வேரூன்றியிருந்த ஏக்கங்களுக்கு எதிரான சண்டையில் உக்ரேனில் அவர்கள் செய்ததைப் போல அந்தளவிற்கு மரணகதியிலான பாய்ச்சலை வேறெங்கேயும் ஊகிக்க முடியாது."

1917இன் ரஷ்ய அக்டோபர் புரட்சியும் அதை தொடர்ந்து 1919இல் சோவியத் உக்ரேனின் ஸ்தாபகமும், தொடக்கத்தில் அப்போது போலாந்து ஆட்சியின் கீழ் இருந்த அதன் மேற்கத்திய பாகங்கள் உட்பட உக்ரேனின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் புத்திஜீவிகளை கவர்ந்திழுக்கும் ஒரு சக்திவாய்ந்த துருவமாக இருந்தது. இருந்தபோதினும், லெனின் எதை கடுமையாக எதிர்த்திருந்தாரோ அதே மகா ரஷ்ய பேரினவாதத்தை (chauvinism) ஸ்ராலினும் வளர்ந்துவந்த சோவியத் அதிகாரத்துவமும் புதுப்பித்த போது, தொடக்கத்தில் இருந்த உற்சாகம் ஒடுக்குமுறைக்கும் கொடுமைகளுக்கும் வழிவிட்டது.

குறிப்பிட்ட காட்டுமிராண்டித்தனத்தோடு உக்ரேனில் நடத்தப்பட்ட கட்டாய கூட்டுற்பத்தி முறையின் போது மில்லியன் கணக்கானவர்கள் பசியால் இறந்தனர். 1939இல் மேற்கு உக்ரேன் தானாக முன்வந்து சோவியத் ஒன்றியத்தில் இணையவில்லை, மாறாக அது இழிவார்ந்த ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கையின் ஒரு விளைவாக இருந்தது. ஸ்ராலினின் இரகசிய பொலிஸ் அப்போது ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளைக் கொன்றதோடு, மில்லியன் கணக்கானவர்களை சேர்பியாவிற்கு நாடுகடத்தியது.

1991இல் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, இறுதியாக அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சமூக உடைமையின் வடிவங்களை ஒழித்துக்கட்டியதன் மூலமாக அவற்றின் எதிர்-புரட்சிகர வேலையை முடித்தது.

அப்போது தோன்றிய உக்ரேனிய அரசு சுதந்திரமானதாகவும் இருக்கவில்லை, ஜனநாயகமாகவும் இருக்கவில்லை. அது ஈவிரக்கமின்றி அந்நாட்டை சூறையாட மற்றும் முன்னாள் ஸ்ராலினிச அதிகாரிகளை முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களுக்குள் மாற்ற வெறுமனே அவர்களுக்கான கட்டமைப்பை வழங்கியது. உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சி இந்த நிகழ்முறையை ஆதரித்தது. இன்று அது அந்நாட்டின் மிகப் பெரிய பணக்கார மனிதரான செல்வந்தர் ரினாட் அக்மெடோவ்வின் "டோனெட்ஸ் குலத்தை" (Donetsk clan) ஆதரித்து வரும் ஜனாதிபதி யானுகோவிச் முகாமின் பாகமாக உள்ளது.

இந்த வரலாற்றின் படிப்பினைகளும் மற்றும் ஸ்ராலினிசத்திற்கான, மார்க்சிச எதிர்ப்பை முன்வைத்தவருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும் தான் அரசியல் சம்பவங்களில் சுயாதீனமாக தலையீடு செய்ய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கை வழங்க முடியும்.

ஜனாதிபதி மாளிகையிலும் மற்றும் அரசாங்கத்திலும் உக்ரேனிய மற்றும் ரஷ்ய செல்வந்த தட்டுக்களின் கைப்பாவைகளாக அவர்கள் வேலை செய்து வருகின்ற நிலையில், உக்ரேனிய விடுதலை" என்ற பெயரில் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பிராங்பேர்ட் பங்குச்சந்தைக்கு மக்களை விற்க முயலும் அவர்களை, விடுதலை சதுக்கத்தில் காசுக்காக பேசும் வனப்புரையாளர்களைப் போல அதே விதத்தில் நிந்தனையோடு கையாள வேண்டும். தேசியத்தை தனியாக விலக்கி வைத்தல் என்ற விதத்தில் இல்லாமல், மாறாக சமூக விடுதலை மற்றும் சமத்துவம் என்ற நிஜமான விடுதலையானது, பரந்த பெரும்பான்மையினரை விலையாக கொடுத்து ஒருசிலர் மட்டும் கொழிக்கும் ஒரு சமூக அடித்தளத்தில் அல்லாமல் சமூக சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகும்.

உக்ரேனிய தொழிலாளர்களின் பங்காளிகளை கிரெம்ளினிலோ, வெள்ளை மாளிகையிலோ, பேர்லினில் உள்ள சான்சிலர் பதவியிலோ, அல்லது புரூஸ்ஸில் உள்ள பேர்லைமொன்ட் கட்டிடத்திலேயோ காண முடியாது, மாறாக ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலுமே காண முடியும். கிரீஸ், ஜேர்மன், அமெரிக்கா அல்லது சீன தொழிலாளர்கள் அனைவருமே இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஆழ்ந்த நெருக்கடியில் சிக்கி உள்ள முதலாளித்துவ அமைப்புமுறையின் சொந்தக்காரர்களான அந்த ஒரு நிதியியல் செல்வந்த தட்டால் நடத்தப்பட்ட ஒரேமாதிரியான தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர்.

வறுமை, பின்தங்கிய நிலைமை மற்றும் ஊழலின் முட்டுச்சந்தில் இருந்து வெளிவருவதற்கு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் பாகமாக ஒரு உக்ரேனிய தொழிலாளர்களின் குடியரசுக்கான போராட்டம் மட்டுமே ஒரு வழியாக உள்ளது.