சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Commonwealth Conference 2013: pro-imperialist politics of the Tamil nationalist groups in Diaspora

பொதுநலவாய மாநாடு 2013: புலம்பெயர் தமிழ் தேசியவாத குழுக்களின் ஏகாதிபத்திய சார்பு அரசியல்

By Athiyan Silva 
16 December 2013

Use this version to printSend feedback

இலங்கையில், நவம்பர் மாதம் 15-17ம் திகதிகளில், பிரித்தானியா ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான அதன் முன்னாள் காலனித்துவ நாடுகளின் பொதுநலவாய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கனடா, பிரித்தானியா வகித்த பாத்திரம் தொடர்பாக, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் தேசியவாத குழுக்கள் அடைந்துள்ள புளகாகிதம், அதன் ஏகாதிபத்திய சார்பு அரசியலை மீண்டும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

இந்த அமைப்புக்களில் பிரதானமானவை, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்ச சொச்சங்களான பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பனவாகும். 2009க்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களாக அல்லது பிரதான செயற்பாட்டாளர்களாக இருந்த இந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், யுத்தத்தின் இறுதிக் கட்ட வேளையில் ஏகாதிபத்திய சக்திகளிடம் ஆதரவு தேடி நடந்த பிரச்சாரங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பின் பின்னர், ஒரே இரவில் வெளிப்படையாக ஏகாதிபத்தியங்களோடு இரண்டறக் கலந்துவிட்டனர்.

இந்த பிரிவுகளின் பிரதான  அரசியல் தளம் "சர்வதேச சமூகம்" என்று அழைக்கப்படும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளாகும். இவற்றின் அரசியல் நோக்கம், கொழும்பு அரசாங்கம் சார்ந்திருக்கும் சீன ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிராக, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு ஏற்ப, தமிழ் உழைக்கும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, அவர்கள் தமது நலன்களை ஏகாதிபத்தியங்களின் பின்னே அணிவகுப்பதன் மூலம் வென்றெடுக்க முடியும் என்ற பிரமைகளை விதைப்பதாகும். இறுதி ஆய்வுகளில் உலக ஒடுக்குமுறையாளர்களை உலகின் விடுதலையாளர்களாக காட்டுவதாகும்.

ஜனாதிபதி இராஜபக்ஷ தலைமையிலான இலங்கை ஆட்சியாளர்களால் 2009 மே மாதம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தில் சரணடைந்தவர்கள் உட்பட குறைந்தபட்சம் 40,000 பேர், பிரதானமாக பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை மதிப்பிட்டுள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமானதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உலகம் முழுவதும் ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் கொலையில் பங்கெடுத்த கனேடிய ஆளும் தட்டுக்கு, இலங்கையில் நடந்த அழிவு தொடர்பாக எந்தக் கவலையும் கிடையாது, கனேடிய ஆளும் தட்டின் பொருளாதார நலன்களுக்கு அதிகம் பங்களிக்காத இந்த பொதுநலவாய மாநாடு தொடர்பாக அதிகம் கவனம் செலுத்தாதது ஒன்றும் வியப்பானதல்ல.

ஸ்ரிபன் ஹார்ப்பரின் தலைமையில் கனேடிய ஆளும் தட்டின் அனைத்துப் பிரிவுகளும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில், அக்டோபர் மாதம் 28ஆம் திகதி ஒரு ஒன்றுகூடல் நடைபெற்றது. மூன்று இலட்சம் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசிக்கும் ஒருநாட்டில் 500 பேர்கூட பங்கெடுக்காத இந்த அவமானகரமான ஒன்று கூடலை கனேடிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பன ‘’கனேடிய தமிழர் சமூகம்’’ என்ற பெயரில் ஒழுங்குபடுத்தின. இந்த நிகழ்வில், கட்சி பேதமின்றி கனேடிய ஆளும் தட்டின் அனைத்து பிரதிநிதிகளும், பழமைவாதக் கட்சியின் நீதி அமைச்சர் பீட்டர் மக்கே, குடியுரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் உட்பட புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் லிபரல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

அதன் பின்பு, நவம்பர் 15ம் திகதி டொரன்டோவிலும் ஒன்று கூடினர். கனடா தமிழ் காங்கிரஸ் "அனைத்து தமிழ் கனேடியர்கள் சார்பில், நாம் எமது பிரதமரின் கொள்கைப்பிடிப்பான நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்" என்று ஒரு அறிக்கையையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் என்பவரின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர், “பொதுநலவாய மாநாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரதமர் ஸ்ரிபன் ஹார்ப்பரின் கனடா அரசாங்கம் வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்று இன்னுமொரு அறிக்கையையும் வெளியிட்டு, தமது வலதுசாரி நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அட்லான்டிக் கடந்து ஐரோப்பாவிலும் நிலைமை வேறுபட்டதாக இருக்கவில்லை. மாதக்கணக்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் மற்றும் காலனித்துவ மாநாட்டின் தலைவி எலிசபெத் மகாராணி்யார், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோர் இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்கு செல்லக் கூடாது எனக் கோரி பல ஊர்வலங்களை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்தது.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது முடிவில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. மாறாக 07-11-2013 அன்று, பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட லண்டனில் உள்ள இதர தமிழ் முதலாளித்துவப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய கமெரூன், இலங்கை செல்லும் தனது முடிவில் மாற்றமில்லை என்றும், தனது பயனத்தைபோர்க்குற்றம் தொடர்பாக கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க பயன்படுத்துவேன் என்றும் குறிப்பிட்டதாக கூறி, இதுநாள் வரையிலுமான தமது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக்கொண்டனர். கலந்துகொண்ட பிரதிநிதிகள், கமெரூனுடன் நடந்த கலந்துரையாடல்திருப்திகரமானது என ஊடகங்களுக்கு தெரிவித்தனர். கமெரூன், இராஜபக்ஷவின் யுத்தக்குற்றங்களை தண்டித்து, அப்பாவி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச்செய்யும் இரட்சகராக, புலம்பெயர் தமிழ் தேசியவாத குழுக்களாலும், செய்தி ஊடகங்களாலும் வாரக்கணக்காக சித்தரிக்கப்பட்டார்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே. இமானுவேல் பாதிரியார்: ‘’ஒரு காலகட்டத்தில் பிரித்தானியா இலங்கையில் ஆட்சிபுரிந்தது. பின்னர் அவர்கள் சுதந்திரம் வழங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினர். எனவே, தமிழ் மக்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய சரித்திரக் கடமை பிரித்தானியாவுக்கு இன்றும் இருக்கின்றது. இது விடயத்தில் இந்தியாவை விடவும் பிரித்தானியாவுக்கே பொறுப்பு அதிகம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்’’ எனக் குறிப்பிட்டு தனது காலனித்துவ அடிமைத்தனத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கை சென்று, இந்த பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட டேவிட் கமெரூன், யுத்தத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபின்பு, கொழும்பில் பத்திரிகையாளர்களை சந்தித்து இராஜபக்ஷவுக்கு பின்வருமாறு அழுத்தம் கொடுத்தார் ; ‘’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க நம்பகமான முறைமை வேண்டும், வருகின்ற மார்ச் மாதத்திற்கு முன்பு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளாவிட்டால், ஒரு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தனது அதிகாரத்தை பிரித்தானியா பயன்படுத்தும்’’.

பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உட்பட பொதுநலவாய நாடுகள், இராஜபக்ஷவின் யுத்தத்தை முழுமையாக ஆதரித்தன. இந்த நாடுகள் புலிகளை தடை செய்ததோடு அதன் நிதி மற்றும் ஆயுத வளங்களையும் தடுத்து ஒரு மூலைக்குள் முடமாக்கின. அதேநேரம், 2000 ம் ஆண்டுவரை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெறமுடியாமல் இருந்த இலங்கை இராணுவத்திற்கு சகல உதவிகளையும் வழங்கி இந்த போர்க்குற்றங்களுக்கு பங்களிப்பு செய்திருந்தன. கமெரூன் அரசாங்கம் இந்த ஆண்டில் மட்டும் 8.1 மில்லியன் பவுண்ட்டுகள் பெறுமதியான ஆயுதங்களை இலங்கைக்கு விற்றுள்ளதாக பிரிட்டிஷ் Independent பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் தத்தமது நலன்களுக்கேற்ப அவ்வப்போதுமனித உரிமைகள்” “போர்க்குற்றங்கள் பற்றி வஞ்சகத்தனமான அறிவிப்புக்களை விடுவது ஒன்றும் புதினமான ஒன்றல்ல. ஒருவர் லிபியா, சிரியா மற்றும் மிக அண்மையில் ஈரான், சீன அனுபவங்களை எடுத்துப் பார்த்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். நேற்றைய பயங்கரவாத ஆட்சியாளர்கள் இன்றைய நண்பர்களாகின்றனர். தெற்காசியப் பிராந்தியத்தில் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு ஏற்ப கொழும்பு ஆட்சி தன்னை மாற்றிக்கொள்ளுமாயின், செய்தி ஊடகங்கள் இராஜபக்ஷவைஜனநாயகத்தின் பாதுகாவலனாக புகழும் என்பதிலும்ஜனநாயகம் தொடர்பான விரிவுரைகளை வழங்க வெள்ளை மாளிகையாலும், டௌனிங் தெருவாலும் அழைக்கப்படுவார் என்பதிலும் எந்த சந்தேகமும் இருக்கப்போவதில்லை. தற்போதைய நிலையில் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக வெவ்வேறு நிலைப்பாடுகளை ஹார்ப்பரும், கமெரூனும் கொண்டிருந்தாலும், சீனாவின் பிடிக்குள் இருக்கும் இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மனித உரிமைகள் விவகாரத்தை சுரண்டிக்கொள்ளும் அமெரிக்க அணிக்கு பலம் சேர்ப்பதே அவர்களின் இலக்காகும்.

பொதுநலவாய மாநாடு நடைபெற்ற அதேகாலத்தில், பொதுநலவாய வர்த்தக மாநாடும் நடைபெற்றது. பொதுநலவாய கூட்டமைப்பில் அங்கத்துவமில்லாத சீனா, தனது 85 பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டதோடு, 1.3 பில்லியன் டாலர்களுக்கு தனது முதலீட்டை இலங்கையில் செய்து முதலாம் இடத்திலுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்ஹாங் இரண்டாம் மூன்றாம் இடங்களையும், 139 பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட பிரித்தானியா மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டின் பின்னே இருந்த வர்த்தக முரண்பாடுகள் பிரித்தானிய, இலங்கை அரச தலைவர்களின் பதட்டம் நிறைந்த பேச்சுக்களில் வெளிப்பட்டது. கமெரூன்சர்வதேச விசாரணை க்கு அழைப்புவிட்டு மிரட்டுகையில், இராஜபக்ஷகண்ணாடி கூட்டுக்குள் இருந்து கல்லெறியவேண்டாம் என திமிர்த்தனமாக பதிலளித்தார்

நவகாலனித்துவ யுத்தங்களை நடத்தி நாடுகளை ஆக்கிரமித்து, கொள்ளையடித்தும் மேலும் தமது சொந்த நாட்டுத் தொழிலாளர்களதும், இளைஞர்களதும் வாழ்க்கைத்தரம், கல்வி, சமூகநல பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்றவற்றை சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கைத்தர மட்டத்திற்கு அழித்தொழிக்கும் பிரித்தானிய, கனேடிய ஆட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக ஒழுங்குசெய்யப்பட்ட ஊர்வலங்களை இந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மையான புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும் நிராகரித்தது மிகவும் சரியானதே.

இருந்தபோதிலும் இந்த எதிர்ப்பை காட்டும் நடவடிக்கையால் மட்டும், யுத்தங்களை நிறுத்தி, உலகம் முழுவதிலும் அதேபோல இலங்கையிலும் நடைபெற்ற யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனையும் வழங்கிவிட முடியாது. புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்கள் தாம் வாழும் நாட்டு தொழிலாள வர்க்கத்தின் பாகமாவர். தமிழ் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பிரித்தானிய, கனேடிய தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டதல்ல.

ஐரோப்பியக் கண்டத்திலும், அமெரிக்க கண்டத்திலும் மீண்டுமொருமுறை தொழிலாள வர்க்கம் தமது நலன்களை காக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது நாளின் நடப்பாக உள்ளது. தேசிய விடுதலைப் போராட்டம் என்றழைக்கப்பட்டதின் பேரில் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களை ஏனைய தொழிலாளர்களோடு ஐக்கியப்படாது கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கட்டிவைத்திருந்த தட்டுக்கள் ஒவ்வொன்றும் இன்றைய வர்க்கப் போராட்டத்தின் மத்தியில் தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றது.

இராஜபக்ஷ ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் உட்பட, யுத்தங்களையும் சிக்கன நடவடிக்கைகளையும் நிறுத்தக்கூடிய ஒரேயொரு சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. இது, ஏகாதிபத்தியத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, உலக சோசலிசத்தையும் ஸ்தாபிக்கும். அட்லான்டிக்கின் இரு பக்கத்திலும், இந்தப் போராட்டத்திற்கான ஒரு சோசலிச சர்வதேசிய முன்னோக்கை வழங்குவது நான்காம் அகிலத்தின் பகுதிகளான, சோசலிச சமத்துவக் கட்சிகள் மட்டுமே ஆகும்.