சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

UN Syrian chemical weapons report exposes Washington’s lies

ஐநா'வின் சிரிய இரசாயன ஆயுதங்கள் அறிக்கை வாஷிங்டனின் பொய்களை அம்பலப்படுத்துகிறது

Patrick O’Connor
16 December 2013

Use this version to printSend feedback

"கிளர்ச்சி" படைகள் என்றழைக்கப்பட்டவர்களால் பல சரீன் வாயு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இரசாயன ஆயுத ஆய்வாளர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை, டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கூத்தாவில் ஆகஸ்ட் 21 இரசாயன குண்டுவீச்சிற்கு சிரிய அரசாங்கமே பொறுப்பு என்ற ஒபாமா நிர்வாகத்தின் பொய்களை கூடுதலாக அம்பலப்படுத்தி உள்ளது.

ஒரு திட்டமிட்ட குண்டுவீச்சு நடவடிக்கைக்கான மற்றும் சிரிய ஜனாதிபதி பஷீர் அல்-அசாத்திற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கான ஒரு மேலதிக உந்துதலுக்கு போலிக்காரணமாக வாஷிங்டன் அந்த சம்பவத்தை கைப்பற்றி இருந்தது.

கூத்தா தாக்குதலுக்கு சிரிய அரசும் இராணுவமுமே பொறுப்பு என்பதற்கு ஒபாமா நிர்வாகம் அதனிடம் ஆதாரம் வைத்திருப்பதாக பொய்யாக வலியுறுத்த, வேண்டுமென்றே அது உளவுத் தகவல்களில் மோசடி செய்ததாக குறிப்பிட்டு London Review of Booksஇல் புலிட்சர் விருது வென்ற புலனாய்வு இதழாளர் செமோர் ஹெர்ஷின் விரிவான கட்டுரையைத் தொடர்ந்து, கடந்த வியாழனன்று ஐநா அறிக்கை வெளி வந்துள்ளது.

கூத்தா தாக்குதலில் பயன்படுத்திய நரம்புசார் விஷவாயுவை அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற அல் நுஸ்ரா முன்னணி போராளிகள் தயாரிக்கவும் மற்றும் ஆயுதமாக பயன்படுத்தவும் திறமை பெற்றிருந்தனர் என்ற உளவுத்துறை அறிக்கையின் எச்சரிக்கைகளை ஒபாமா நிர்வாகம் மூடிமறைத்ததின் மீதும், ஆகஸ்ட் 21 தாக்குதல் குறித்த உளவுத் தகவல்களை திரித்தமையின் மீதும், ஹெர்ஷ் தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை ஆதாரமாக காட்டி இருந்தார்.

சிரிய அரசாலோ அல்லது அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் பிரெஞ்சு அரசுகளாலோ எங்கெல்லாம் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டனவோ அந்த பல்வேறு இடங்களிலும் பரந்த களப்பணி புலனாய்வு செய்த அடிப்படையில் அந்த 82 பக்க ஐ.நா. இரசாயன ஆயுத அறிக்கை அமைந்திருந்தது.

கூத்தா சம்பவத்திற்கு கூடுதலாக குறைந்தபட்சம் மேலும் நான்கு இடங்களிலும் சரீன் தாக்குதல்கள் "நடந்திருக்கலாம்" என்று அவர்கள் அந்த அறிக்கையில் தீர்மானித்திருந்தனர். அவற்றில் மூன்று தாக்குதல்களில் அந்த நச்சு வாயுவிற்கு சிரிய இராணுவ சிப்பாய்கள் பலியானார்கள், அதேவேளையில் நான்காவது ஒன்றில், பொதுஜனங்கள் பாதிக்கப்பட்டனர். உறுதி செய்யப்பட்ட அந்த இரசாயன தாக்குதல்களில் ஒன்றே ஒன்று கூட "கிளர்ச்சி" போராளிகளுக்கு எதிராக இருக்கவில்லை.

தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள அந்த இரசாயன தாக்குதல்களில் இரண்டு கூத்தாவில் விஷவாயு தாக்குதல் ஏற்பட்ட ஒருசில நாட்களுக்குள்ளேயே ஏற்பட்டவை ஆகும். ஆகஸ்ட் 24இல்கூத்தா சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், ஒபாமா அவரது "சிவப்பு கோட்டெல்லையை" சிரிய அரசு கடந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க இராணுவத்தை ஒரு தாக்குதலுக்கு தயார் செய்து கொண்டிருந்த வேளையில்டமாஸ்கஸின் புறநகரான ஜோபரில் சிரிய சிப்பாய்களுக்கு எதிராக சரீன் வாயு வீசப்பட்டது. “ஒப்பீட்டளவில் ஒரு சிறிய தாக்குதல்" என்று ஐநா அறிக்கை எதை வர்ணிக்கிறதோ அந்த தாக்குதலில், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனான நேர்காணல்கள் மூலமாகவும், சிரிய அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு ஐநா ஆய்வாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட சரீன் வாயு கலந்திருந்த இரத்த மாதிரிகள் மூலமாகவும் உறுதி செய்தனர்.

அந்த அறிக்கை அந்த சம்பவத்தைக் குறித்து கூறுவதாவது: “எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சில கட்டிடங்களைக் கைப்பற்றும் வேலை சிப்பாய்களின் ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஏறத்தாழ 1100 மணிநேரங்களுக்குப் பின்னர், எதிர்ப்பிடம் இருந்து வந்த துப்பாக்கி சூட்டின் தீவிரம் வற்றியவுடன், மறுதரப்பில் பின்வாங்குகிறார்கள் என்ற முடிவுக்கு சிப்பாய்கள் வந்தனர். சில சிப்பாய்களிடமிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில், மெல்லிய சத்தத்துடன் திடீரென வெடித்த ஒரு வெடிபொருள் மிகவும் மோசமான நாற்றத்தோடு ஒரு வாயுவை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. சுவாசிக்க சிரமப்பட்ட மற்றும் அதனோடு சேர்ந்து இன்னும் சில வித்தியாசமான அறிகுறிகளோடு 10 சிப்பாய்கள் கொண்ட ஒரு குழு, மருத்துவ களத்திற்கு ஆயுதமேந்தி செல்லும் பிரத்யேக வாகனங்களில் வெளியேற்றப்பட்டனர்.”

இந்த வாயு தாக்குதலுக்கு அடுத்த நாள், ஆகஸ்ட் 25இல், அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சோதனைச் சாவடியில் "கிளர்ச்சியாளர்களுக்கும்" மற்றும் துருப்புகளுக்கும் இடையே நடந்த மோதல்களின் போது, தெற்கு நகரமான அஸ்ராபியா சாஹ்னாயாவில் "சிப்பாய்களுக்கு எதிராக சிறியளவில்" மீண்டும் சரீன் பிரயோகப்படுத்தப்பட்டது. சிரிய அரசால் பெறப்பட்ட இரத்த மாதிரிகள் மற்றும் நேர்காணல்களின் மீது ஐநா மீண்டும் அதன் ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வாளர்கள் தாங்கள் உறுதிப்படுத்திய சரீன் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பாளி என்பதைத் தீர்மானிக்க கேட்டுக் கொள்ளப்படவில்லை என்பதால், அந்த விஷயத்தில் அந்த அறிக்கை மௌனமாக இருந்துவிட்டது. அனைத்திற்கும் மேலாக, அந்த அறிக்கை முழுவதுமாக மிகவும் எச்சரிக்கையான வார்த்தைகளோடு, அதனைஅதுவே விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் மீது மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டு மிருதுவாக இருந்தது.

அந்த ஆவணத்தின் உள்ளடக்கங்களில் ஏதாவதொன்று கண்டனத்திற்கு உரியதாக இருக்கிறதென்றால் அது இது மட்டும் தான். சிரிய சிப்பாய்கள் மற்றும் வெகுஜன மக்களுக்கு எதிராக இரசாயன தாக்குதல்களின் வடிவத்தில் நடந்த பல்வேறு யுத்த குற்றங்களுக்கு அமெரிக்க பின்புலத்துடனான இஸ்லாமிய செல்வாக்கு பெற்ற "கிளர்ச்சி" போராளிகளே பொறுப்பாக இருந்தனர் என்ற ஒரு முடிவுவை மட்டுமே அந்த அறிக்கையைக் கொண்டு எட்ட முடியும்.

அசாத் ஆட்சியை நசுக்கவும் மற்றும் அதிகாரத்தில் ஏகாதிபத்திய ஆதரவிலான எதிர்ப்பை நிறுவவும், லிபிய பாணியிலான அமெரிக்க-பிரிட்டிஷ்-பிரெஞ்ச் இராணுவ தலையீட்டைத் தூண்டிவிடவும் மற்றும் யுத்தகள இழப்புகளைத் திருப்பி போடவும் செய்யப்பட்ட ஒரு முயற்சியாக இவை செய்யப்பட்டன. எண்ணெய் வளம்மிக்க அப்பிராந்தியத்தின் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு இருந்ததாக உணரப்பட்ட மற்றொரு தடையைத் தூக்கியெறிய மற்றும் ஈரானுக்கு எதிரான ஒரு இராணுவ தாக்குதலின் சாத்தியக்கூறு முன்னால் வந்திருந்த நிலையில் ஈரானை இன்னும் மேற்கொண்டு தனிமைப்படுத்த ஒபாமா நிர்வாகம் ஆழ்ந்து எடைபோட்டு கொண்டிருந்த வேளையில், ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு கூத்தா தாக்குதல் குறித்து பொய் உரைத்தது.

இறுதியாக, மத்திய கிழக்கில் தூண்டுதலற்ற மற்றொரு யுத்தத்திற்கு அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் மக்களிடம் இருந்த அதிகப்படியான எதிர்ப்பாலும், சிரியாவின் கட்டுப்பாட்டை அல் கொய்தா ஆதிக்கம் செலுத்திய படைகளின் மீது ஒப்படைப்பதால் ஏற்படும் தாக்கங்கள் மீது அவரது நிர்வாகத்திற்குள்ளும் மற்றும் அமெரிக்க இராணுவ-உளவுத்துறை நிர்வாகத்திற்குள்ளும் இருந்த கூர்மையான தந்திரோபாய கருத்துவேறுபாடுகளுக்கு இடையில் ஒபாமா பின்வாங்கினார்.

சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான ரஷ்யாவின் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதன் மூலமாகவும், ஈரானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் திறந்துவிட்டதன் ஊடாக வாஷிங்டன் ஒரு தந்திரோபாய மாற்றத்தை வடிவமைத்தது. அமெரிக்க இராணுவத்தை "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்காகவும்" மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சர்வதேச விரோதியாக உயர்ந்துவந்த சீனாவிற்கு எதிராக ஒரு பிரதான யுத்தத்திற்காகவும் விடுவித்து வைக்கும் விருப்பமே இந்த மாற்றத்திற்கான பிரதான உத்வேகமாக இருந்தது.

சிரியா மீதான ஒபாமா நிர்வாகத்தின் பொய்கள் சம்பந்தமான சமீபத்திய வெளியீடுகள் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களின் அரசியல் ரீதியிலான குற்றவியல் பாத்திரத்தை இன்னும் கூடுதலாக அம்பலப்படுத்துகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் குறித்த புஷ் நிர்வாகத்தின் கட்டுக்கதைகள் ஸ்தாபன அச்சுக்களால் செல்லுபடியாகக் கூடியவையாக ஊக்கப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், உலக மக்கள் அனைவரும் ஏதோ மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் போல ஊடகங்கள் முன்சென்றன, போலி "உளவுத்தகவல்களும்" மற்றும் வெள்ளை மாளிகையிடம் இருந்து வந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களும் மீண்டுமொருமுறை முதல்பக்க செய்திகளிலும், தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளிலும் உலா வந்தன.

தற்போது இந்த பிராச்சார மதகு முற்றிலுமாக அம்பலப்பட்டுள்ள நிலையிலும், அதை மூடிமறைப்பது தொடர்கிறது. சிரியாவில் இரசாயன தாக்குதல் மீது ஐநா கண்டறிந்தவையும் மற்றும் ஹெர்ஷின் கட்டுரையும் இரண்டுமே முற்றிலுமாக குறைத்துக் காட்டப்படுகின்றன அல்லது இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

ஒபாமா நிர்வாகத்தின் யுத்த பிரச்சாரத்தை எவ்விதத்திலும் அம்பலப்படுத்துவதை ஒடுக்கும் இத்தகைய முயற்சிகளில் சர்வதேச போலி-இடது அமைப்புகளும் உடந்தையாய் இருந்து சேவை செய்துள்ளன. அமெரிக்காவில் பெயர்பொருத்தமற்ற சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO), பிரெஞ்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி ஆகியவை "கிளர்ச்சி" போராளிகள் ஒரு ஜனநாயக "புரட்சிக்கு" தாக்குமுகப்பாக உள்ளனர் என்ற நிலைப்பாட்டில் நின்றுகொண்டு, சிரிய ஆட்சிக்கு எதிராக அமெரிக்க தலையீட்டின் முன்னெடுப்பைத் தூண்டிவிட்டன.

ஆகஸ்டில் ஒபாமாவின் யுத்த தயாரிப்பு காலத்திலிருந்து இன்று வரையில், இத்தகைய மத்தியதட்டு, ஏகாதிபத்திய ஆதரவு அமைப்புகள் கூத்தாவிற்கு அசாத் அரசாங்கம் தான் பொறுப்பு என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு எவ்வித சவாலையும் முன்வைப்பதை நிராகரித்துள்ளனர்.

இதற்கு நேரெதிராக, கூத்தா குறித்த ஒபாமா நிர்வாகத்தின் மற்றும் அதனோடு அணிதிரண்டிருந்த சர்வதேச அரசாங்கங்களின் வாதங்களை உலக சோசலிச வலைத் தளம் உடனடியாக சவால்விடுத்தது. அந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் WSWS குறிப்பிட்டது: “பெரும் எண்ணிக்கையிலான வெகுஜன மக்களைக் கொன்ற டமாஸ்கஸிற்கு வெளியே நடந்த ஓர் இரசாயன தாக்குதலை ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் சிரிய ஆட்சியே நடத்தியதென்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், மேற்கத்திய தலையீட்டைக் கொண்டு வரும் நோக்கில் ஒரு படிப்படியான ஆத்திரமூட்டலுக்குரிய அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளது... இதுபோன்ற ஒரு குற்றத்திலிருந்து யார் பயனடைகிறார்கள் என்று ஒருவர் கேட்டால், தெளிவாக அது அசாத் ஆட்சி இல்லை, மாறாக அதை தூக்கியெறிய சண்டையிட்டு வரும் இஸ்லாமியவாத தலைமையிலான படைகளே ஆகும். இத்தகைய சக்திகள் அதிகரித்துவரும் நெருக்கடியையும் மற்றும் ஒரு தொடர்ச்சியான இராணுவ தோல்விகளையும் முகங்கொடுத்து வருகின்ற நிலையில், சிரிய அரசு மீதான யுத்த குற்றங்களின் குற்றஞ்சாட்டுக்கள் வருகின்றன,” என்று எழுதியது.

இதற்கு பின்னர் பல்வேறு கட்டுரைகளினூடாக மற்றும் விளக்க உரைகளினூடாக அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த பகுப்பாய்வு, முற்றிலுமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாக நிற்கிறது. ஏகாதிபத்திய யுத்தத்திற்கான எதிர்ப்பில் உலக சோசலிச இயக்கத்தின் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு அதிகாரபூர்வ குரலாக WSWS உள்ளது.