சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Christian Democrats, Social Democrats form new German grand coalition government

கிறிஸ்துவ ஜனநாயக வாதிகளும் சமூக ஜனநாயக வாதிகளும் புதிய ஜேர்மன் பெருங்கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றனர்

By Peter Schwarz 
17 December 2013

Use this version to printSend feedback

கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியத்துடன் (CDU/CSU) பெருங்கூட்டணி அமைப்பது பற்றிய வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்பட்டபோது சனிக்கிழமை பிற்பகல் சமூக ஜனநாயக கட்சியினரிடையே (SPD)  மகிழ்ச்சிப்புயல் ஒன்று எழுந்தது. வாக்கெடுப்பில் பங்கு பெற்ற 370,000 கட்சி உறுப்பினர்களில் 76% இனர் கூட்டணி உடன்பாட்டிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

“என் கட்சியைப் பற்றி இவ்வளவு பெருமைப்பட்டதில்லை. இந்நாள் ஜேர்மனியின் ஜனநாயக வரலாற்றில் ஒரு இடத்தை பெறும்” என்று சமூக ஜனநாயக கட்சித் தலைவர் சிக்மார் காப்பிரியேல் கூறினார்.

சமூக ஜனநாயக கட்சியும் காப்ரியேலும் விரைவில் ஜேர்மனியிலும் ஐரோப்பா முழுவதும் வெறுக்கப்பட உள்ள அரசாங்கம் பற்றி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.185 பக்கக் கூட்டணி உடன்பாடு என்பது, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவை ஒரு சமூகப்பேரழிவில் தள்ளி, ஜேர்மனியிலும் வறுமையில் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும்.

CDU, CSU, SPD ஆகியவை கடன் வரம்பை உறுதியாக செயல்படுத்துவதாகவும், மேலும் 2015க்குப் பின் எத்தகைய கடன் வாங்குதலையும் நிறுத்துவதாகவும் உறுதியளித்துள்ளன. ஐரோப்பிய மட்டத்தில் அவை “கடுமையான,  நிலைத்திருக்கக்கூடிய நிதிய உறுதிப்படுத்தலையும்” மற்றும் “போட்டித்தன்மையை அதிகரிக்க கட்டுமானச் சீர்திருத்தங்களை அதிகரிப்பதாகவும்” வலியுறுத்துகின்றன.

உடன்பாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மலர்ச்சியான உறுதிமொழிகள் அல்லாது மூன்று வழிகாட்டி நெறிகள் அரசாங்கத்தின் வருங்காலக் கொள்கைகளை நிர்ணயிக்கும். இது மேலும் அமைச்சர்களின் தேர்வில் உறுதியாகியுள்ளது; இன்று அவர்கள் பேர்லினில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுகின்றனர்.

பல துறைகளும் புதிய மந்திரிகளின் கீழ் இருக்கும் என்ற நிலையில் 71 வயது வொல்ப்காங் ஷொய்பிள (CDU) நிதி மந்திரியாக உள்ளார். இதனால் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் வலதுகரமான இவர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிக்கன ஆணைகளை செயல்படுத்துவார்.

ஷொய்பிள 41 ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். 1984ல் இருந்து பலமுறை மந்திரியாக இருந்துள்ளார். பெருவணிக நலன்களை இரக்கமின்றிப் பிரதிபலிக்கிறார் என்பதனால் இவர் மதிப்பிழந்துள்ளார். 1990ம் ஆண்டு உள்துறை மந்திரி என்னும் முறையில் அவர் முன்னாள் கிழக்கு ஜேர்மனியுடன் ஐக்கிய உடன்பாட்டிற்குப் பேச்சுக்களை நடத்தினார். இது மேற்கு ஜேர்மனிய வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் தங்கச் சுரங்கமாகியதுடன், கிழக்கு ஜேர்மனிய தொழிலாளர்களுக்கு ஒரு பேரழிவுமாகிற்று.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஷொய்பிளவின் பெயர் கிரேக்கத்தில் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுடன் தவிர்க்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது. அவர் இந்த நடவடிக்கைகளை தளர்த்தும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்துள்ளார். 2012ல் கிரேக்க அரசாங்கம் மக்கள் எதிர்ப்பை தாங்க முடியாத நிலையில், புதிய தேர்தல்களுக்கு முடிவு எடுக்கையில், ஷொய்பிள திமிர்த்தனமாக வெட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை, பேச்சுக்களுக்கு இடமற்றவை, மற்றும் “கிரேக்கர்கள் எப்படி வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும்” என்றார்.

மற்றொரு முடிவு, புதிய அரசாங்கத்தின் வலதுசாரித் தன்மையைக் காட்டுவது ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) யின் இயக்குனராக ஜோர்க் அஸ்முசென் இனை தொழிற்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமித்திருப்பதாகும். ஒரு சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அஸ்முசென் முன்னாள் SPD தலைமைச் செயலாளரும் புதிய தொழிலாளர்துறை மந்திரி அந்திரேயா நாலிஸ் கீழ் குறைந்தப்பட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தும் பொறுப்பைக் கொண்டிருப்பார்.

47வயதான நிதிய வல்லுனர் அஸ்முசென் வேறு எந்த ஜேர்மனிய அரசியல்வாதியையும்விட நிதிய மூலதனத்தின் நலன்களுக்கு மிகவும் ஆதரவான நிலைப்பாடு கொண்டுள்ளார். இவர் நிதி அமைச்சரகத்தில் ஒரு சிறப்பான உத்தியோகத்தை கொண்டிருந்தார். 1996இல் தியோ வைகல் (CSU) இன் கீழ், பின் அவருக்குப்பின் வந்தவர்களான ஒஸ்கார் லாபொன்டைன் (SPD), ஹான்ஸ் ஐஷல் (SPD), பீர் ஸ்ரைன்ப்ரூக் (SPD) மற்றும் வொல்ப்காங் ஷொய்பிள(CDU) வின் கீழ் இடைவெளி இன்றி பதவியிலிருந்தார். நிதியச் சந்தைகள் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுவதில், சொத்துக்களை பங்கு பத்திரமாக்குவது, தவணை குறித்த நிதிய பத்திரங்களை விரிவாக்கல் ஆகியவற்றில் ஒரு முன்னோடி என்று தன்னைச் சிறப்பாகக் காட்டினார்.

இத்தகைய முறைகளால் ஊகம்செய்த வங்கிகளின் நிர்வாக்ககுழுக்களிலும் அவர் இருந்தார். மற்றும் BaFIN எனப்படும் இவ்வாறான வர்த்தகத்தை கண்காணிக்கும் எனக்கூறப்பட்ட அமைப்பின் கண்காணிப்பு  அதிகாரியாகவும் இருந்தார்.

இதன் விளைவாக குறிப்பாக அஸ்முசென் பொறுப்பில் கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஜேர்மனிய வங்கிகள் 2007 நிதிய நெருக்கடியின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மத்திய அரசாங்கம் 130 பில்லியன் யூரோக்களை வழங்கி Hypo Real Estate Bank  உடையாமல் பார்த்துக் கொண்டது. ஒரு பாராளுமன்ற விசாரணைக்குழு அஸ்முசென் “தன் பாதுகாக்கும் கடமையை பெருமளவில் மீறினார்” எனக் கண்டது.

அஸ்முசென் SPD, CDU உடைய ஆதரவைக் கொண்டிருந்ததால், அவருக்கு எதிராக அக்குழு ஏதும் செய்ய முடியவில்லை. மாறாக அஸ்முசென் வங்கி மீட்பு நிதியான SoFFin இல் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்தார். அது நூற்றுக்கணக்கான பில்லியன் பொதுப்பணத்தை வங்கிகளுக்கு அளித்தது.

ஜனவரி 2012ல் வொல்ப்காங் ஷொய்பிளவின் முன்மொழிவானால்  அஸ்முசனை ஐரோப்பிய மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவிற்கு மாற்றியது. அங்கு அவர் தெற்கு ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களைக் கண்காணித்து, கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்திற்கு அவசரக்காலக் கடன்களை அளித்தார்.

சமூக ஜனநாயகக் கட்சி கூட்டணிப் பேச்சுக்களில் தன் பெரிய வெற்றி என்று பறைசாற்றும் குறைந்தப்பட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துவதற்கு அஸ்முசென்தான் பொறுப்பாக இருப்பார் என்னும் உண்மை, இந்த நடவடிக்கையில் இருந்து எத்தகைய முற்போக்கானதன்மையும் எதிர்பார்க்கப்படுவதற்கு இல்லை என்பதையை உறுதிப்படுத்துகிறது.

உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே ஒரு கட்டுரையில் காட்டியுள்ளபடி, சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியம் வருமானங்களை அதிகரிக்கவோ, வறுமையைக் குறைக்கவோ உதவாது. மாறாக அது ஊதியங்களின் பொது மட்டத்தை கீழிறக்கும் ஒரு நெம்புகோலாகச் செயல்படும். இதனூடாக, தொழிற்சங்கங்களையும் மற்றும் இடது கட்சியையும் பெரும் கூட்டணியில் ஈடுபாடு கொள்ளச் செய்யும். 

மிகப்பெரிய ஆச்சரியம், மந்திரிகள் பதவிப் பகிர்வில், ஊர்சுலா வொன் டெர் லையன் (CDU) பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டிருப்பதுதான். பயிற்சி பெற்ற டாக்டரும் ஏழு குழந்தைகளுக்கு தாயுமான இவர் முன்பு குடும்ப விவகாரங்கள் மந்திரியாக இருந்தபின் தொழிலாளர்துறை மந்திரியாக இருந்தார்.

அவர் சிறப்பு இராணுவ தகமை எதையும் நிரூபிக்கவில்லை என்பதால், பல செய்தி ஊடகங்கள் அவர் நியமனத்தை அங்கேலா மேர்க்கலுக்குப்பின் பதவிக்கு சான்ஸ்லராக வருபவர் என்று விளக்கம் கொடுக்கின்றன. இந்த அமைச்சரகத்தைக் அதன் பாரிய, கட்டுப்படுத்த கடினமான அமைப்பை கட்டுப்படுத்துவதில் அவர் வெற்றி அடைந்தால், ஜேர்மன் இராணுவத்தை மறுசீரமைப்பு செய்வதை முடிவிற்கு கொண்டுசென்று, குழப்பமான பாதுகாப்பு திட்டங்களை திறமையைகக் கையாண்டால் அவரும் சான்ஸ்லராக இருக்க பொருத்தமானவர் என்று அவை கூறுகின்றன.

இதுவும் உறுதியாக உண்மைதான். ஆனால் வொன் டெர் லையன் பாதுகாப்பு மந்திரிப் பதவிக்கு நகர்வது இன்னும் உடனடியாக, ஓர் அரசியல் காரணத்தைக் கொண்டுள்ளது. ஜேர்மனிய இராணுவம், இவர்தான் அதற்கு இப்பொழுது தலைமைத் தளபதி என்ற பதவியின் காரணமாக, பெருகிய முறையில் ஆக்கிரோஷ, ஏகாதிபத்திய இலக்குகளுக்கு பயன்படுத்தப்படும்.

ஜனாதிபதி கௌவ்க் சமீபத்தில் ஜேர்மனி மீண்டும் ஐரோப்பாவிலும், உலகிலும் அதன் அளவு, செல்வாக்கிற்கு ஏற்ப பங்கைக் கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளார். “நம் நாடு ஒரு தீவு அல்ல. அவர்களின் தீர்வுகளில் பங்கு பெறவில்லை என்றால் நாம் அரசியல், பொருளாதார, இராணுவ மோதல்களில் இருந்து தவிர்க்கப்பட வேண்டும் என்னும் நப்பாசைகளை கொள்ளக்கூடாது” என அவர் ஜேர்மன் ஐக்கியப்பட்ட தின உரையில் எச்சரித்தார்.

மேர்க்கெல், அவருடைய பின்தங்கிய பிராந்திய பின்னணியின் காரணமாக இப்பணியை செய்ய இயலுமானவர் என்ற நம்பிக்கை குறைந்துவருகிறது. பல செய்தி ஊடகக் கருத்துக்கள் அவர் பிரச்சினைகளுக்கு பதில் காண்கின்றாரே தவிர, அவரிடம் எதிர்காலம் குறித்த கண்ணோட்டம் அல்லது முன்னெடுப்பு முயற்சிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றன.

உதாரணமாக ஜேர்மனியத் துருப்புக்கள் அக்டோபர் மாதம் குண்டுஸில் இருந்து பின்வாங்கப்பட்டபின், Süddeutsche Zeitung பத்திரிகை பின்வருமாறு எழுதியது: “இராணுவம் உண்மையில் தலையிடும் ஒரு இராணுவமாக மாற்றப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் அளவுகோல்கள், இலக்குகள் மற்றும் அத்தகைய தலையீட்டின் நோக்கங்கள் வெளியுறவுக் கொள்கையின் தன்மையில் இல்லை.” தலையங்கம் “விரைவில் மந்திரிசபையில் ஒரு சிவப்பு அல்லது பசுமைக்கட்சிக்காரர் மேசையில் உட்கார்ந்து, சான்ஸ்லரை ஜேர்மனியின் பங்குகுறித்து நடவடிக்கையெடுக்க வைக்க வேண்டும்.” என்ற தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது.

ஊர்சுலா வொன் டெர் லையன் இப்பணியைச் செய்யமுடியும். அவர் ஓர் ஆக்கிரோஷ, நிறைவேற்றக்கூடிய அரசியல்வாதி எனக் கருதப்படுகிறார், சர்வதேச அளவில் நல்ல தொடர்புடையவர். அவருடைய தந்தையார் எர்னெஸ்ட் ஆல்ப்ரெட் 1976ல் இருந்து 1990 வரை லோயர் சாக்சனி மாநில பிரதமராக, CDU தலைமையில இருந்தவர். அவர் பிரபுக் குடும்பங்களுடன் தொடர்புடைய, வலதுசாரித் தீவிரவாதி ஆவார்.

அவருடைய மகள் ஊர்சுலா குறிப்பிட்டகாலம் பிரஸ்ஸல்ஸில் வளர்ந்தவர். இதய நோய் டாக்டரும் மருத்துவச்சோதனைகளை நடத்தும் நிறுவனத்தின் இயக்குனருமான ஹெய்கோ எஷ்டர் வொன் டெர் லையனை திருமணம் புரிந்த பின், அவர் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தார். பிரெஞ்சு, ஆங்கில மொழிகளை நன்கு பேசுபவர்.

அவருடைய இரண்டு சகோதரர்கள் மூலம் அவர் ஜேர்மனிய பெருநிறுவனங்களின் சர்வதேச விருப்புகளை நன்கு அறிந்தவர். ஒரு சகோதரரான ஹான்ஸ் ஹோல்கர் ஆல்ப்ரெட் Millicom International Cellular இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அது கைத்தொலைபேசி வலைப்பின்னலையும், இணைய தள சேவையையும் 15 ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு “டைகோ” என்ற பெயரின் கீழ் கொடுக்கிறது. இது தன் விற்பனையை 2017ல் $9 பில்லியன் என இருமடங்காக்கும் இலக்கு கொண்டுள்ளது. மற்றைய சகோதரரான டோனருஸ் ஆல்பிரெட் மூனிச் நகரை தளமுடைய நிறுவனமாக Aurelius உடைய குழு உறுப்பினராவார். இது உலகெங்கிலும் இயங்குவதுடன், 2012ல் 1.3 பில்லியன் யூரோக்கள் வியாபாரம் செய்துள்ளது.

பெரும் கூட்டணி சரிந்தால், ஊர்சுலா வொன் டெர் லையன் CDU-பசுமைவாதிகள் கூட்டணியின் உகந்த சான்ஸ்லர் ஆவார். அவர் பலமுறை தன் கட்சியின் வலதுசாரிகளுடன் எதிர்த்து நின்றாலும் குடும்பக் கொள்கையிலும், பல பசுமைவாதிகளின் இதயங்களையும் வென்றுள்ளார். பசுமைவாதிகள் மிகத் தீவிரமாக “மனிதாபிமான” இராணுவ நடவடிக்கைகளுக்கு வாதிடுபவர்கள் ஆவர். .அவர்கள் கூடுதலான லிபிய, சிரியப்போர்களில் ஜேர்மனிய ஈடுபாட்டை கோரினர்.