சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Global markets shudder at prospect of Fed pullback on dollar handouts to banks

வங்கிகளுக்கு டாலர் வழங்குவதை பெடரல் திரும்பப் பெறக்கூடிய சாத்தியக்கூறால் உலகளாவிய சந்தைகள் அதிர்கின்றன

Nick Beams
17 December 2013

Use this version to printSend feedback

புதனன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் செலாவணி கொள்கையை அறிவிக்கின்ற போது, "பணத்தைப் புழக்கத்தில் விடும்" திட்டத்தை (QE - Quantitative easing) அது "குறைக்க" முடிவெடுக்குமா என்பதைக் காண அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள். செப்டம்பர் 2008இல் உலக நிதியியல் நெருக்கடி வெடித்ததில் இருந்து அந்த திட்டம் தான் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சி உள்ளது.

இந்த வாரம் QE திட்டத்தின் ஐந்தாவது ஆண்டுநிறைவைக் குறிக்கிறது. பெருமளவில் அமெரிக்க கரூவூல பத்திரங்களை மற்றும் அடமான அடிப்படையில் கடன் பத்திரங்களை வாங்குவதோடு சம்பந்தப்பட்ட அத்திட்டம் தற்போது மாதத்திற்கு 85 பில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்கு 1 ட்ரில்லியனோடு ஓடிக் கொண்டிருக்கிறது, இதனோடு வங்கிகளுக்கு பெடரல் வழங்கும் பணத்திற்கான உத்தியோகபூர்வ வட்டி விகிதத்தின் பூஜ்ஜிய அளவிலான குறைப்பும் சேர்ந்துள்ளது.

யாருடைய குற்றஞ்சார்ந்த நடவடிக்கைகளால் நிதியியல் நெருக்கடி தூண்டிவிடப்பட்டதோ அதே வங்கிகள், ஹெட்ஜ் நிதியங்கள் மற்றும் ஏனைய நிதியியல் பார்வையாளர்களுக்கு எந்தளவிற்கு கையளிப்பு வழங்கப்பட்டதென்பது, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெடரலின் சொத்து கையிருப்பு விரிவடைந்திருப்பதில் வெளிப்படுகிறது. 2008இல் சுமார் 870 பில்லியன் டாலராக இருந்த பெடரல் கையிருப்பு, வரவிருக்கின்ற சில நாட்களில் 4 ட்ரில்லியன் டாலரை எட்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் மற்றும் அவர்களின் குடும்பங்களும், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, கூலி வெட்டுக்கள் மற்றும் சமூக சேவைகளின் வெட்டுக்களை அனுபவித்துள்ள நிலையில், நிதியியல் ஊக வணிகர்களோ செல்வச் செழிப்பை அனுபவித்துள்ளனர்.

டோச் வங்கி (Deutsche Bank) அதன் சமீபத்திய அறிக்கையில் ஒப்புக் கொண்டதாவது: “அமெரிக்காவிலும் தோற்றப்பாட்டளவில் அனைத்து அபிவிருத்தி அடைந்த சந்தைகளிலும் இதுவரையிலான பொருளாதார மீட்சிகளில் மிகவும் பலவீனமான ஒன்றாக இது இருக்கின்ற போதினும், எல்லா சொத்துக்களுக்கும் பெடரல் தோற்றப்பாட்டளவில் ஒரு பிரமாண்டமான மதிப்பை உருவாக்கி உள்ளதென்பதைக் நேர்மையாக கூற வேண்டி உள்ளது.”

QE நிகழ்முறையின் மையத்தில் இருக்கும் ஒட்டுண்ணித்தனம் குறிப்பாக ஐரோப்பாவில் வெளிப்படுகிறது, ஜேர்மனியைத் தவிர, அங்கே ஒவ்வொரு நாட்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007இல் எட்டிய அளவுகளை விட குறைவாக உள்ளது. ஐரோப்பாவின் உயர்-ஆதாய, அல்லது "அனாவசிய" (junk), பத்திரங்கள் மொத்தம் 150 சதவீத வருவாய்களை உருவாக்கி உள்ளன. ஒவ்வொரு தனிப்பட்ட ஊக வணிகர்களுக்கும் கிடைத்த நிஜமான வருவாய் கூட இந்த புள்ளிவிபரங்கள் காட்டுவதை விட அதிகமாக உள்ளன, ஏனென்றால் அவர்கள் விலைக்கு வாங்கும் சொத்துக்களின் மதிப்பை அவர்களால் "அதிகரித்து வைக்க" முடிகிறதுஅதாவது, மிக மிக குறைவாக, மலிவாக வாங்கிய பணத்தை அவர்களின் நடவடிக்கைக்கு நிதியாக பயன்படுத்துகின்றன.

அமெரிக்காவில், 2007க்கு முந்தைய போக்கை விட கணிசமான அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறைந்தும் மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நீண்டகால வேலைவாய்ப்பின்மையை அனுபவித்தும் வருகின்ற நிலையில், “மீட்சி" என்ற வாதங்களுக்கு இடையில், 2009 வசந்த காலத்தில் 666 குறியீட்டை எட்டிய ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் 500 பங்குச்சந்தை குறியீடு அதற்குப் பின்னரில் இருந்து ஏறத்தாழ அதன் மதிப்பில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

QEஇன் ஒரு விளைவாக நிதியியல் சொத்துக்கள் மதிப்பின் இந்த பெருக்கம், உலகின் பில்லியனர்கள் அவர்களின் செல்வ வளத்தை கடந்த நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாக்க உதவி உள்ளது.

நிதியியல் மூலதனத்திற்கு கணக்கிலடங்கா செல்வ வளத்தை வழங்கிய அதேவேளையில், QE திட்டம் ஒரு புதிய நிதியியல் நெருக்கடியின் எழுச்சிக்குரிய நிலைமைகளை உருவாக்கி உள்ளது. பணம் பாய்ச்சுவதைக் "குறைப்பதோ" (tapering) அல்லது அமெரிக்க வட்டி விகிதங்களில் அதிகரிப்போ "வளர்ந்துவரும் சந்தைகள்" என்றழைக்கப்படுபவைகளுக்கு பணம் பாய்வதைக் குறைக்கும் என்பது பிரதான கவலைகளில் ஒன்றாக உள்ளது. நிறைய நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் கொண்டுள்ள மற்றும் மூலதன வரவால் நிதியைப் பெறுகின்ற பிரேசில், இந்தியா, துருக்கி, இந்தோனேஷியா, தென் ஆபிரிக்கா போன்றவை உடனடியான ஆபத்தில் இருக்கும் நாடுகளில் உள்ளன.

இத்தகைய சந்தைகளில் இருந்து வெளியேறுவதற்கான அவசரம் 1997-98இன் ஆசிய நிதிய நெருக்கடியை விட பரந்தளவிலான ஒரு உலகளாவிய நிதியியல் நெருக்கடியை உண்டாக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது. அந்த 1997-98 நெருக்கடி தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் மந்தநிலைமை மாதிரியிலான கீழ்நோக்கிய திருப்பத்தை உருவாக்கி இருந்தது. என்ன நடக்கக்கூடும் என்பதற்கான ஒரு முன்னோட்டம் தான் கடந்த வசந்த காலத்திலும், கோடையிலும் ஏற்பட்டது, அப்போது பெடரலின் "பணப்புழக்க குறைப்பு" மீதான பேச்சுக்கள், அமெரிக்க வட்டி விகிதங்கள் உயர இட்டு சென்றதோடு, பணத்தை இன்னும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்கான அவசர பாய்ச்சலையும் உருவாக்கியது.

அதுபோன்றவொரு இயக்கம் ஒரு நிதியியல் நெருக்கடிக்குக் களம் அமைத்தால், அது 2008-2009இன் நிதிய உருகுதலை விட இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமையைப் போன்றில்லாமல், உலகின் பிரதான மத்திய வங்கிகள், அனைத்திற்கும் மேலாக பெடரல், மிக பலமாக தற்போது நிதியியல் சந்தைகளில் ஈடுபட்டுள்ளன, அவற்றின் கையிருப்புகளில் அவை குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

உலக பொருளாதாரமானது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துவரும் நிதியியல் செல்வ வளம் சுருங்கிவரும் நிஜமான பொருளாதாரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு, உலக பொருளாதாரத்தை அதிகளவில் ஒரு தலைகீழ் பிரமீடு போன்று மாற்றி வருகிறது.

நவம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு மாநாட்டிற்கு வழங்கிய ஓர் உரையில், முன்னாள் அமெரிக்க கருவூல செயலாளர் லோரன்ஸ் சம்மர்ஸ், உலக பொருளாதாரத்தில் "நீடித்த தேக்கநிலை"—அதாவது காலவரையின்றி தேவை பலவீனமாக இருக்கும் மற்றும் வளர்ச்சி குறைவோ அல்லது சுணக்கமோ கொண்ட ஒரு காலகட்டம்ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறு குறித்து எச்சரித்தார். பைனான்சியல் டைம்ஸின் பொருளாதார பிரிவு செய்தியாளர் மார்ட்டீன் வோல்ப் கூறுகையில், சம்மர்ஸின் குறிப்புகள் "நம்பிக்கையான பார்வையோடு யாராவது எஞ்சி இருந்தால் அவர்களையும் நடுங்க செய்தது," என்றார்.

நவம்பர் 25இன் பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், HSBC வங்கியின் தலைமை உலகளாவிய பொருளியல்வாதி ஸ்டீபன் கிங், “வளர்ந்த நாடுகள் முழுவதிலும் பொருளாதார நடவடிக்கையின் அளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாக" குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து எழுதி இருந்தார்: “மந்தநிலைமை மற்றும் மீட்சி போன்ற வார்த்தைகள் இனியும் பொருத்தமாக இருக்காது. மாறாக, நாம் நிரந்தர பொருளாதார மந்தநிலைமையை முகங்கொடுத்துள்ளோம். ஜப்பானிய பாணியிலான 'இழந்த தசாப்தத்திற்குள்' (lost decade) மேற்கு அபாயகரமாக நுழைகிறதோ என்று ஆச்சரியப்படுபவர்கள் விஷயங்கள் தெரியாமல் உள்ளனர். ஏற்கனவே நமது பொருளாதாரங்களைத் திணறடித்துக் கொண்டிருக்கும் அந்த இழந்த தசாப்தத்திலிருந்து நம்மால் தப்பிக்க முடியுமா என்பது தான் கேள்வியாக உள்ளது," என்றார்.

அவர் குறிப்பிட்டார், கூலிகள் மந்தமாக உள்ளன, வட்டி விகிதங்கள் அடிமட்டத்திற்கு உள்ளன, அரசு கடன் "நம்ப முடியாத அளவிற்கு பெருகி" உள்ளது மற்றும் உயர்ந்து வருகிறது, அதேவேளையில் நிறுவனங்கள் முதலீடு செய்வதை விட பணத்தைக் குவித்து வைப்பதையே விரும்புகின்றன. 2008 பொறிவு ஏற்பட்ட போது கொள்கை வகுப்பாளர்கள் ஒருவேளை ஒரு பெருமந்தநிலையை வேண்டுமானால் தவிர்த்திருக்கலாம், ஆனால் அவர்கள் "பெரும் தேக்கத்தைத்" தடுத்திருக்கவில்லை.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் "வழக்கமான" நடைமுறையாக ஒருகாலத்தில் எது கருதப்பட்டதோ அந்த நிலைமுறிவு, முதலீட்டு புள்ளிவிபரங்களில் காணக் கிடைக்கிறது. கடந்த காலத்தில், இலாபங்களும் முதலீடுகளும் பரந்தளவில் ஒன்றையொன்று பின்தொடர்ந்தன, 1980களின் இறுதியில் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 9 சதவீதத்தில் ஓடிக் கொண்டிருந்தது. சொத்து மேலாண்மை நிர்வாகி GMOஆல் வழங்கப்பட்ட ஒரு பகுப்பாய்வின்படி, அந்த காலக்கட்டத்தில் இருந்து, 2009க்குப் பின்னர் முதலீட்டிற்கும் இலாபத்திற்கும் இடையிலான உறவுகளில் இருந்த "தாறுமாறான ஓட்டத்தோடு" சேர்ந்து, அங்கே அதிகளவிலான மாற்று போக்கு இருந்துள்ளது. அமெரிக்காவில் வரிக்கு முந்தைய பெருநிறுவன இலாபங்கள் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 12 சதவீதத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன, ஆனால் நிகர முதலீடு 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.

ஏனைய புள்ளிவிபரங்களும் அதேபோன்ற போக்கையே குறிப்பிட்டு காட்டுகின்றன. பிரிட்டனில் உள்ள Socialist Economic Bulletin ல் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, அமெரிக்க பெருநிறுவனங்களின் முதலீட்டிற்கும் மொத்த செயல்பாட்டு உபரிக்குமான விகிதம் (இலாபங்களின் ஒரு பரந்த முறைமை) 2008இல் 56 சதவீதமாக இருந்தது, அது 1979இல் உச்சபட்சமாக இருந்த 69 சதவீதத்தில் இருந்து மிகவும் கீழிறங்கி இருந்தது. 2012இல், அது வெறும் 46 சதவீதமாகும். 1979இன் அளவுகளுக்கு அது திரும்ப வேண்டுமானால், முதலீடு 1.5 ட்ரில்லியன் டாலராக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.

இதே போக்கை யூரோ பகுதிகளிலும் காண முடிகிறது, அங்கே மிக சமீபமாக 2008இல் 53.2 சதவீதத்தில் இருந்த முதலீட்டு விகிதம் கடந்த ஆண்டில் வெறும் 47.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரிட்டனில், 1975இல் அதன் வரலாற்றின் உச்சத்தில் 76 சதவீதமாக இருந்ததில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சி அடைந்து, 2008இல் 53 சதவீதமாக இருந்த அந்த விகிதம், தற்போது வெறும் 42.9 சதவீதமாக உள்ளது.

பிரதான பெருநிறுவனங்கள் ஆலைகளை மூடி வருகின்ற நிலையில், சந்தைகளுக்காக மற்றும் இலாபங்களுக்காக இன்னும் தீவிரமான மோதல்களில் உலகளாவிய "மறுசீரமைப்பு" செய்யப்பட்டு வருகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் வறுமையே இத்தகைய புள்ளிவிபரங்களுக்குப் பின்னால் இருக்கும் சமூக எதார்த்தமாக உள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்த தீர்மானங்களை வரையறுத்து அவற்றின் மீது செயல்பட வேண்டும். உலக முதலாளித்துவ பொருளாதாரம் "மீட்சி" பெற போவதில்லை. அது முறிந்து போயுள்ளது. இந்த இலாப அமைப்புமுறை பில்லியன் கணக்கான மக்களை ஆழமடைந்துவரும் வறுமைக்குள் தள்ளிவிட்டு முன்னொருபோதும் இல்லாத பெரும் ஒட்டுண்ணித்தனத்தின் மற்றும் சீரழிவின் ஒரு சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளது. வங்கிகள் மற்றும் பிரதான பன்னாட்டு பெருநிறுவனங்களை பறிமுதல் செய்வதில் தொடங்கி, ஒரு திட்டமிட்ட சர்வதேச சோசலிச பொருளாதாரத்தைக் கொண்டு அது அகற்றப்பட்டு, மாற்றீடு செய்யப்பட வேண்டும்.