சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை களனி பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் படிப்பினைகள்

Chanaka De Silva and Kapila Fernando
2 November 2013

Use this version to printSend feedback

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், தம்மீது இடைவிடாமல் தொடுக்கப்படும் குண்டர் தாக்குதல்களை நிறுத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி முன்னெடுத்த போராட்டம், நீதிமன்ற உத்தரவின்படி முடிவுக்கு வந்துள்ளது. இது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒடுக்குமுறை பொலிஸ்-இராணுவ வழிமுறைகளின் எதிரில், இந்தப் போரட்டத்தை முன்னெடுத்த பெரிய மாணவர் சங்கத்தினதும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினதும் அரசியல் வங்குரோத்தை இரண்டாவது முறையும் நிரூபித்து, மாணவர்களை முட்டுச் சந்துக்குள் தள்ளியுள்ளது.

கடந்த வாரம் கன்னங்கர தங்குமிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர், பல்கலைக்கழகத்தின் மாணவர் நிலையத்தில் உள்ளமர்ந்துகொள்வதற்கு அங்கு தங்கியிருந்த மாணவர்களை வழிநடத்திய பெரிய மாணவர் சங்கம், “பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை மாணவர்கள் மீண்டும் தங்குமிடத்துக்கு செல்லமாட்டார்கள் என நிர்வாகத்துக்கு அறிவித்தது. எனினும், அக்டோபர் 4ம் திகதி விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் தங்குமிடத்துக்கு செல்வதைத் தவிர வேறு மாற்றீடுகள் இல்லாத நிலைக்கு இந்தச் சங்கம் மாணவர்களைத் தள்ளியது.

இலவசக் கல்வியை வெட்டிக் குறைத்தல் மற்றும் கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொடர்ந்தும் மேலோங்கி வரும் மாணவர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு, இராஜபக்ஷ அரசாங்கம் பொலிஸ் இராணுவ வழிமுறைகள் பக்கம் முழுமையாக திரும்பியுள்ள விதத்தை, களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் போராட்டத்தை நசுக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

களனி பெரிய மாணவர் சங்கத்தின்படி, 2010ல் இருந்து இதுவரை 100 முறைகள் அரசாங்கத்தின் பிரதேச அரசியல்வாதிகளின் குண்டர் கும்பல்கள் நடத்திய தாக்குதல்களுக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு இடையில் கடும் காயமடைந்த மாணவர்களும் உள்ளனர். மாணவர்கள் பொலிசில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவோ அல்லது விசாரணைகள் நடத்தப்படவோ இல்லை. கன்னங்கர தங்குமிடத்தில் இருந்த மாணவர்கள் மீது செப்டெம்பர் 17 நடத்தப்பட்ட தாக்குதலில் மாணவர்களின் ஏகப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதோடு பலர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் எதிர்ப்பு நாடு பூராவும் அபிவிருத்தியடையும் நிலைமையின் கீழ், களனி பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள், அக்டோபர் 4 அன்று நடந்த மாணவர் எதிர்ப்புப் போராட்டத்தை தடை செய்து, மஹர கடவத நீதவான் நீதிமன்றில் உத்தரவு ஒன்றைப் பெற்றுக்கொண்டனர். மக்களுக்கு தடங்கல் ஏற்படும் வகையில் மற்றும் மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுத்தல், ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடங்கல் ஏற்படுத்துவதை தடுத்தல், இரவு 8 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கக் கூடாது மற்றும் கன்னங்கர தங்குமிடத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகள் அந்த உத்தரவில் அடங்கும். எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர், ஒலி பெருக்கி மூலம் அந்த நீதிமன்ற உத்தரவை அறிவித்து பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட பயமுறுத்தலை அலட்சியம் செய்து, இந்த எதிர்ப்பில் 3,000 மாணவர்கள் வரை பங்கேற்றனர்.

எவ்வாறெனினும், நீதிமன்ற உத்தரவை மீறினர் என கூறிக்கொண்டு 23 மாணவர்களை பொலிசார் இந்த மாதம் 7ம் திகதி நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்ததுடன் அன்று மாலை வரை அவர்கள் நீதிமன்ற சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். “இப்போது என்ன சொல்கிறீர்கள், தங்குமிடத்துக்கு போகின்றீர்களா இல்லையா?” என அச்சுறுத்தி, அவர்களை பிணையில் விடுதலை செய்த நீதவான், இந்த மாணவர்கள் மத்தியில் இருந்த இரு மாணவிகளுக்கு எதிராக, ஆணாதிக்கவாத உபதேசம் செய்து, “இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெற்றோர்களுக்குத் தெரியுமா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நீதிமன்ற உத்தரவு, மாணவர்களின் அடிப்படை ஜனநயாக உரிமைகளுக்கு தொடுக்கப்பட்ட மிகக் கொடூரமான தாக்கத்தலாகும். இந்த உத்தரவின் மூலம், தமது உரிமைகளுக்காக முன்நிற்பதற்கும் எதிர்ப்பை காட்டுவதற்கும் மாணவர்களுக்கு உள்ள மிக அடிப்படையான ஜனநாயக உரிமைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எழும் எந்தவொரு எதிர்ப்புக்கும் இந்த முறையிலேயே பதிலளிக்கப்படும் என்பதை தொழிலாள வர்க்கத்துக்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்துகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் உயிருக்கு விடுக்கப்பட்டுள்ள குண்டர் அச்சுறுத்தல் சம்பந்தமாக எந்தவொரு விசாரணையும் நடத்துவதை அடியில் தள்ளிய நீதிமன்றம், கன்னங்கர தங்குமிடத்துக்குள் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதற்கும் கட்டளையிட்டது. இந்த பொலிஸ் காவலரண், மாணவர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்படுவது அல்ல, அவர்களை மேலும் ஒடுக்குவதற்கே என்பது மிகவும் தெளிவானது. இந்த ஒடுக்குமுறையின் பாகமாக, 2011ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவுகள் அனைத்தும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ‘ரத்ன லங்கா’ நிறுவனத்துக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டன.

மாணவர் ஒடுக்குமுறை களனிப் பல்கலைக்கழகத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. வசதிப் பற்றாக்குறை மற்றும் கல்வி தனியார்மயமாக்கத்துக்கு எதிராக போராட்டத்திற்கு வரும் ஜயவர்தனபுர, சபரகமுவ, ரஜரட, ருஹுனு மற்றும் பேராதனை உட்பட சகல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக அரசாங்கம் இந்த முறையிலேயே செயற்பட்டு வருகின்றது.

கடந்த ஜூலை மாதம் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் முன்னெடுத்த இரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீதிமன்ற உத்தரவுகளின் படி நிறுத்தப்பட்டதோடு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட காரணத்தால் முந்தைய சந்தர்ப்பங்களில் திணிக்கப்பட்ட பிணை நிபந்தனையை மீறி செயற்பட்டதாகக் குற்றம்சாட்டி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டார். இம்முறை அவரை விடுதலை செய்யும்போது  பல்கலைக் கழகங்களுக்குள் நுழையக் கூடாது என்ற இன்னொரு ஜனநாயக விரோத உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் கல்வி வெட்டு மற்றும் மாணவர் ஒடுக்குமுறையும் மொத்தத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது தொடுக்கப்படுட்டு வரும் தாக்குதல்களின் பாகமாகும். உலகம் பூராவும் உள்ள தனது சம தரப்பினரைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணித்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் அரசாங்கம், அதனால் வெடிக்கும் தொழிலாளர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக கொடூரமான தாக்குதல்களை தொடுக்கத் தயாராக உள்ளது என்பதை, சுத்தமான நீர் கேட்டு போராட்டம் செய்த வெலிவேரிய மக்கள் மீது நடத்திய மிலேச்சத்தனமான இராணுவத் தாக்குதலில் தெளிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

களனிப் பல்கலைக்கழகத்தின் அனுபவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது அரசாங்கத்தின் தாக்குதலின் கொடூரத் தன்மை மட்டும் அல்ல. முன்னிலை சோசலிசக் கட்சியின் (Frontline Socialist Party) கீழ் செயற்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழுத்தம் கொடுக்கும் மாணவர் பிரச்சாரங்களின் வங்குரோத்தும் பலம்வாய்ந்த முறையில் அம்பலத்துக்கு வந்துள்ளது. சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியில் (ஜேவிபீ) இருந்து அமைப்பு ரீதியாக பிளவுபட்டிருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதான பணி, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக மேலோங்கும் உண்மையான மாணவர் போராட்டத்தை திசை திருப்புவதே ஆகும்.

களனி மாணவர் போராட்டம் முழுவதும், அதன் பெரிய மாணவர் சங்கம் முன்னெடுத்த வேலைத் திட்டம், மேற்கூறிய விடயத்தை நிரூபித்துள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்யும் ஏனைய சகல எதிர்ப்பு நடவடிக்கைகளையும் போலவே களனி பல்கலைக்கழக போராட்டமும், அரசாங்கத்துடன் சமரசத்துக்குச் செல்வதன் மூலமே முடிவுக்கு வந்தது. கடைசியாக இடம்பெற்ற ஊர்வலம் கூட, ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு மனு ஒன்றைக் கையளிப்பதையே இலக்காக் கொண்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுடன் பேரம்பேசல் முடிவுக்கு வந்த பின்னர், மாணவர்கள் மீதான வேட்டையாடல் கடுமையாவதை தடுப்தற்காக எனக் கூறிக்கொண்டு மாணவர் சங்கம் மாணவர்களை மீண்டும் தங்குமிடத்துக்கு அனுப்பியது.

மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தமாக இந்த மாணவர் சங்கங்கள் கொண்டுள்ள அலட்சியம் எந்தளவுக்கு உள்ளதெனில், மாணவர் மத்திய நிலையத்தில் அமர்ந்திருந்த மாணவர்களை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்த பின்னர், எந்த சந்தர்ப்பத்திலும் குண்டர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய ஒரு இடமான ‘தெல் பெம்ம’ என்றழைக்கப்படும் இடத்தில் இரவைக் கழிப்பதற்காக மாணவர்களை அனுப்புவதற்கு இந்த சங்கங்கள் நடவடிக்கை எடுத்தன.

பல்கலைக்கழக நிர்வாகம், மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கமும் மாணவர்களை ஏமாற்றிவிட்டதாக ஒப்பாரி வைக்கும் பெரிய மாணவர் சங்கம், மாணவர்களை மேலும் பொறிக்குள் தள்ளும் இலக்குடன், கோரிக்கையை வெல்வதற்கான தமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை, என இப்போது கூறிக்கொள்கின்றது.

சகல போராட்டங்களதும் உச்சியில் அமர்ந்திருக்கும் மாணவர் அமைப்புக்களின் மற்றும் அவற்றின் வேலைத் திட்டங்களின் வங்குரோத்து நிலைமையே களனி மாணவர் போராட்டத்தின் மூலம் தீர்க்கமான முறையில் மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தின் அவசியத்தின்படி இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளையும், மற்றும் அதற்கு எதிராக வளரும் போராட்டங்களை நசுக்கும் இலக்கில் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்களையும், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் தோற்கடிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான ஒரு எதிர்த் தாக்குதலின் மூலமே இந்த தாக்குதல்களை தோற்கடிக்க முடியும். மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, அந்த வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தில் நின்று இந்த எதிர்த் தாக்குதலை தயரார்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்பும் போது, பிரதான தடையாக காணப்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியில் இருந்தும் மாணவர்களும் இளைஞர்களும் முறித்துக்கொண்டு வேறுபடுவது அவசியமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் மட்டுமே இந்த வேலைத்திட்டத்துக்காக போராடுகின்றன.