சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Uttar Pradesh government sanctions mass expulsion of Muslim villagers

உத்தர பிரதேச அரசாங்கம் முஸ்லீம் கிராமவாசிகளின் பாரிய வெளியேற்றத்திற்கு அனுமதி வழங்குகிறது

By Kranti Kumara
14 December 2013

Use this version to printSend feedback

மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்து வகுப்புவாதிகளால் தாக்கப்பட்ட மற்றும் அவர்களின் கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட பத்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள், அவர்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாதபடிக்கு, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தால் (SP - சோசலிச கட்சி) சட்டவிரோதமாக தடுக்கப்பட்டு உள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த கிராமங்களுக்கு ஒருபோதும் திரும்ப முடியாதபடிக்கு, உடைமைகளைப் பறிகொடுத்துள்ள அந்த முஸ்லீம்களிடமிருந்து கட்டாய வாக்குறுதிகளைப் பெற சமாஜ்வாதி கட்சி அரசாங்கம், தங்களின் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள அந்த மக்களின் இயலாமையைச் சுரண்ட, துன்பியலான விதத்தில் போதுமானதாக இல்லாத ஒரு நஷ்டஈடு பேரத்தைப் பயன்படுத்துகிறது. இது முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு அரசின் ஆதரவு என்பதல்லாமல் வேறொன்றுமில்லை. இது (அவர்களின் மதத்திற்கு அப்பாற்பட்டு, உத்தர பிரதேசத்தின் முஸ்லீம்கள் இந்து குடியானவர்களுக்கு சமாந்தரமாக உள்ளனர் என்ற போதினும்) அரசாங்கத்தின் அணுகுமுறைகள் மற்றும் இன சுத்திகரிப்பு செய்வதற்கான அதன் தீர்மானம் இரண்டு விஷயத்திலுமே வெளிப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்" என்று கருதப்படும் ஒரு நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மை மதத்தினரின் அங்கத்தவர்களைப் பாதிக்கச் செய்யும் இந்த அப்பட்டமான பிரத்யேகவாத (exclusivist) மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கையைத் தடுக்க இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ (UPA) அல்லது இந்தியாவின் உச்சநீதிமன்றமோ தலையிடவில்லை.

தங்களின் சொந்த வீடுகளுக்குத் திரும்ப தடுக்கப்பட்டுள்ள, பெருமளவிலான ஏழைகள், அரசியல் ஆதரவில்லாமல், உள்நாட்டிற்கு உள்ளேயே இடம்பெயர்த்தப்பட்டுள்ள அந்த முஜாபர்நகர் முஸ்லீம்கள் இழிவார்ந்த முறையில் வெறும் பலவீனமான பிளாஸ்டிக் கூடாரங்களைக் கொண்ட அகதிகள் முகாம்களில் வாடும் நிலைக்கு விடப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநில மற்றும் இந்திய அரசாங்கங்களால் கைவிடப்பட்டிருக்கும், ஏறத்தாழ வெறும் உடுத்திய உடையோடு வெளியேறிய இந்த பாதிக்கப்பட்ட கிராமவாசிகள், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் உதவிகள் மற்றும் சமாஜ்வாதி அரசாங்கத்தால் வழங்கப்படும் அற்பமான அவசரகால உதவிகளில் உயிர்வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மிகக் குறைந்த உணவு, குடிநீர், மருத்துவ பராமரிப்போடு முறையான கழிவறை வசதிகள் கூட இல்லாமல், கடுங்குளிரில் இருத்தப்பட்டுள்ளதால், அந்த நிவாரண முகாம்கள் வியாதிகளை அடைகாக்கும் இடமாக மாறி வருகிறது. முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததால், குறைந்தபட்சம் 50 குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலர் படுமோசமான நிலைமையில் உள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு, முஜாபர்நகரில் அவர்களின் வீட்டைவிட்டு வெளியேற நிர்பந்தித்த அந்த வகுப்புவாத கலவரத்தை விட இன்னும் அதிக மரணகரமாக மாறி உள்ளன. ஜாட் மஹாபஞ்சாயத்தின் பிற்போக்கு தலைவர்கள்ஜாட் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் ஒரு ஜாதிய அமைப்பு, வரலாற்றுரீதியில் நிலவுடைமை கொண்ட ஒரு விவசாய குழுஜாட் சமூகத்தின் இரண்டு இந்து இளைஞர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று யாரை பொறுப்பாக்கினார்களோ அந்த "முஸ்லீம்களை" தாக்க ஆக்ரோஷமான குண்டர்களை திரட்டிய போது, செப்டம்பரின் தொடக்கத்தில் முதன்முதலில் பெரியளவிலான தாக்குதல்கள் நிகழ்ந்தன. இந்த குண்டர்கள் மூர்க்கத்தனமாக வன்முறையில் இறங்கி, எல்லா முஸ்லீம்களையும் அல்லது பெருமளவிலான முஸ்லீம்களை பல கிராமங்களை விட்டு விரட்டி அடித்தனர். குறைந்தபட்சம் 48 பேர் கொல்லப்பட்டனர், அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர், அதனோடு பல முஸ்லீம் பெண்கள் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டனர். இத்தகைய தாக்குதல்கள் 50,000த்திற்கும் மேலானவர்களை, பெரும்பாலான முஸ்லீம்களை, வீடற்றவர்களாக ஆக்கியது.

இந்து மேலாதிக்க அமைப்புகளின்பிஜேபி (பாரதீய ஜனதா கட்சி) மற்றும் அதன் "பங்காளிகளான" ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங், அல்லது தேசிய தன்னார்வ அமைப்பு), மற்றும் விஷ்வ இந்து பரீஷத் (உலக இந்து கவுன்சில்) ஆகியவற்றின்காரியாளர்கள் முஜாபர்நகரின் முஸ்லீம் கிராமவாசிகளுக்கு எதிராக பாரிய வன்முறையைத் தூண்ட உதவியமைக்கான நிறைய ஆதாரங்கள் அங்கே உள்ளன. சான்றாக, புது டெல்லியை ஆதாரமாக கொண்ட கொள்கை பகுப்பாய்வு மையம் (Center for Policy Analysis) பிஜேபி மற்றும் அதன் கூட்டாளிகளின் பாத்திரம் குறித்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகைய அமைப்புகள் வகுப்புவாத ஆதிக்கத்தைத் தூண்டிவிடுவதில் ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளன.

இந்த கொள்கை பகுப்பாய்வு மையமும் மற்றும் ஏனைய நம்பத்தகுந்த ஆதாரங்களும், முஜாபர்நகரில் வகுப்புவாத குழப்பம் வெடித்த போது சமாஜ்வாதி அரசாங்கம் பொலிஸ் தலையீடு செய்வதில் இருந்து அதை தடுத்து வைத்தது அதாவது முஸ்லீம்கள் மீது வகுப்புவாத தாக்குதல்கள் தொடர திட்டமிட்டு அனுமதித்தன என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்களையும் வழங்குகின்றன.

முஸ்லீம்கள் அவர்களின் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டு ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அக்டோபர் 28இல், முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசாங்கம் தங்களின் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தமைக்காக அவர்களுக்கு "நஷ்ட ஈடாக" இடம்பெயர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 500,000 (அண்ணளவாக 8000 அமெரிக்க டாலர்) வழங்கும் என்று அறிவித்தது.

அரசாங்க தகவல்களின்படி, இந்த நஷ்டஈடு 1,600 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

எவ்வாறிருந்த போதினும், இந்த சொற்ப தொகையைப் பெற, பாதிக்கப்பட்ட அந்த முஸ்லீம்கள் தங்களின் கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் அவர்கள் ஒருபோதும் திரும்ப மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்து ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

அந்த உறுதிமொழி பத்திரம் பின்வருமாறு அறிவிக்கிறது: “எங்கள் கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் எங்களின் வீடுகளையும், கிராமத்தையும் விட்டு வெளியேறி உள்ள நானும் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களும் எந்த சூழ்நிலையிலும் இப்போது முதல் எங்களின் சொந்த கிராமத்திற்கோ வீட்டிற்கோ திரும்ப மாட்டோம்.”

அவர்களின் கிராமத்தில் உள்ள சொத்துக்களுக்கு, அல்லது வேறு ஏதேனும் கூடுதல் நகரா சொத்துக்களுக்கு" வேறெந்த அரசாங்கம் வழங்கும் மானியங்களுக்காக முன்செல்வதிலும் கையெழுத்திட்டவர்களின் மீது உ.பி. அரசாங்கத்தின் இழப்பீடு நிபந்தனை விதிக்கிறது.

முஜாபர்நகர் முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்குகின்ற, உண்மையில், நிர்பந்திக்கின்ற அதேவேளையில், அவர்கள் பெயரில் இருக்கும் எந்தவொரு சொத்தும் அவர்கள் பெயரிலேயே இருக்குமென்றும், அதை விற்பதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ தடையேதுமில்லை என்றும் அரசாங்கம் எரிச்சலூட்டும் விதமாக வாதிடுகிறது. ஆனால் இதுபோன்ற நுட்பமான சட்ட குறிப்புகளுக்கு நடைமுறையில் அர்த்தமே இல்லை. அந்த கிராமவாசிகள் தங்களின் கிராமங்களுக்குள் காலடி எடுத்து வைக்கவும் கூட முற்றிலும் அஞ்சுகின்றனர். வியாபார பரிவர்த்தனைகளுக்காக அவர்கள் ஒருசில நாட்களுக்கு மட்டுமே வீடுகளுக்குத் திரும்பினால் கூட, மாநில அரசாங்கம் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் அவர்களைக் காப்பாற்றாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும், அதனால் இப்போதைக்கு அவ்வாறு செய்வது ஆபத்தாகும் என்பதால் அரசாங்கம் வழங்கும் சிறிய இழப்பீடு அவர்களைக் கவர்ந்திழுக்கிறது.

ஸ்ராலினிச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) இந்த பிற்போக்குத்தனமான, ஜாதிய அடிப்படையிலான கட்சியை ஒரு முற்போக்கான அரசியல் சக்தியாக மற்றும் மதசார்பின்மையின் வல்லமை பொருந்திய பாதுகாவலனாக ஊக்குவித்துக் கொண்டு, நீண்டகாலமாக சமாஜ்வாதி கட்சியுடன் நெருங்கிய அரசியல் உறவுகளைத் தக்க வைத்துள்ளது. சமாஜ்வாதி கட்சி UPA அரசாங்கத்தை "வெளியிலிருந்து" ஆதரித்து வருகின்ற நிலையில்வாஷிங்டனுடன் காங்கிரஸ் அதன் நெருக்கமான உறவுகளைத் தொடர அது சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியுடன் அதன் கூட்டணியை உடைத்துக் கொண்டபோது, முக்கியமான தருணத்தில் ஜூலை 2008 நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அது உயிர்பிழைக்க சமாஜ்வாதி கட்சி அதற்கு அவசியமான வாக்குகளை வழங்கியதுஸ்ராலினிஸ்டுகள் தற்போது அக்கட்சியை ஊக்குவித்து வருகின்றனர். அவர்களின் நம்பிக்கை என்னவென்றால் அடுத்த வசந்தகால பொதுத் தேர்தலில் ஒரு (காங்கிரஸ் மற்றும் பிஜேபி எதிர்ப்பு) மூன்றாவது முன்னணி கூட்டணியில் SP சேரும் என்பதாகும். இந்த இலக்கை அடைவதற்கு, அக்டோபர் 30 “மதசார்பின்மை மாநாட்டில்" பங்கெடுக்க சிபிஎம் சமாஜ்வாதி கட்சியை அழைத்திருந்தது. மேலும் முஸ்லீம்களுக்கு எதிரான மத-சுத்திகரிப்பிற்கு அது ஒப்புதல் வழங்கியதன் மீதும் ஒரு குற்றந்தோய்ந்த விதத்தில் மவுனமாக இருந்தது. (பார்க்கவும்: "இந்திய ஸ்ராலினிஸ்டுகள் இந்து-வகுப்புவாத அச்சுறுத்தலைத் தூண்டுகின்றனர்)

இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சியின் மாநில அரசாங்கம் இடம்பெயர்த்தப்பட்ட கிராமவாசிகளை மனித குப்பைகளையும் விட ஒருபடி மேலாக கருதுகின்ற நிலையில், அது அகதிகள் முகாம்களை மூடவும் முயன்று வருகிறது. இதுவே SP அரசாங்கத்தின் முழு நோக்கமாக உள்ளதென்பதை நிவாரண முகாம்கள் ஒன்றில் ஒரு சுய ஆர்வலரால் கண்டறியப்பட்டது. அவர் பத்திரிகைக்கு கூறுகையில், “மக்கள் தாசில் அலுவலகத்திற்கு (உள்ளூர் அரசு அலுவலகம்) அழைக்கப்பட்டு இந்த காகிதங்களில் கையெழுத்திட செய்யப்படுகின்றனர். அவர்களில் பல பேர் சுமார் ரூ. 10 இலட்சத்திற்கும் மேல் (1 மில்லியன் ரூபாய், ஏறத்தாழ 16,000 அமெரிக்க டாலர்) நிரந்தரமாக இழந்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு மிகவும் குறைவான தொகையில் கணக்குவழக்கு முடிக்கப்படுகிறது. அவர்கள் நிவாரண முகாம்களில் தங்கி இருப்பது நிர்வாகத்திற்கு தர்ம சங்கடமாக இருப்பதால் அது அவர்களை அங்கிருந்து வெளியேற நிர்பந்தித்து வருகிறது.”

முஸ்லீம் அல்லாத குடும்பங்களின் ஒரு சிறிய பிரிவும் அவர்களின் வீடுகளை இழந்திருந்தனர் என்ற உண்மைக்கு இடையில், சமாஜ்வாதி அரசாங்கம் அதன் அசல் அறிக்கையில், அந்த இழப்பீடு "பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு" மட்டுமே என்று குறிப்பிட்டு இருந்தது.

சில ஜாட் குடும்பத்தினரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சட்ட புகாரிற்கு விடையிறுப்பாக, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 22இல், மதரீதியில் சம்பந்தப்படுத்தாமல், அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உடன்பட்ட, இடம் பெயர்த்தப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் இழப்பீட்டை வழங்க வேண்டுமென்பதை வரையறுத்து அறிக்கையை மீண்டும் வெளியிடுமாறு SP அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

இதற்கு விடையிறுப்பாக, சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தின் வழக்கறிஞர் முஸ்லீம்களின் வெளியேற்றத்தைஅதாவது "மத சுத்திகரிப்பை"—தானாக முன்வந்து இடம்பெயரும் ஒரு திட்டமாகவும் அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலும் ஆதரவும் இருப்பதாகவும் காண்பித்தார். அரசு வழக்கறிஞர் கூறுகையில், “நிவாரண முகாம்களைப் பார்வையிட்ட குழு, முஸ்லீம்கள் மட்டுமே வேறு இடத்திற்கு செல்ல விரும்பினார்கள் என்று கருதியது. தற்போது அது, யாரெல்லாம் இடம்பெயர விரும்புகிறார்களோ, அனைவருக்கும் விரிவாக்கப்படும்,” என்றார். [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]

வெளிப்பார்வைக்கு இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்கும்நீதிமன்றமானது, வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ், அரசாங்க-நிர்பந்த வெளியேற்றத்திற்கு அது இழப்பீடு வழங்குகிறது என்ற உண்மையை அப்பட்டமாக புறக்கணிக்கிறது. அது வெறுமனே, இந்த குற்றத்தை தெளிவாக முஸ்லீம்களோடு மட்டுப்படுத்தி விடாமல் ஒரு "மதசார்பற்ற" வேஷத்தை வழங்குவதை உறுதிப்படுத்த விரும்பியது.