சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Top Indian official declares relationship with China “adversarial”

சீனாவுடனான உறவுகள் "விரோதகரமாக" இருப்பதாக மூத்த இந்திய அதிகாரிகள் அறிவிக்கின்றனர்

By K. Ratnayake
18 December 2013

Use this version to printSend feedback

இந்திய தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஷ்யாம் சரண் புது டெல்லியின் ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில், கிழக்கு சீன கடலில் சீனாவின் ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டல (ADIZ) அறிவிப்பை ஓர் "ஒருதலைப்பட்சமான நடவடிக்கை" என்று விமர்சித்தார். இந்தியா ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் சூழ்நிலையை கையாள முற்படுவதாக ஷ்யாம் தெரிவித்தார். சீனாவை எதிர்கொள்வதற்காக ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்புகளை ஸ்தாபிப்பது குறித்து இந்திய ஆளும் வட்டாரங்களில் அதிகரித்துவரும் விவாதங்களையே அவருடைய குறிப்புகள் குறித்து காட்டுகின்றன.

சீனாவில் டயாவோயு என்றும் ஜப்பானில் சென்காகூ என்றும் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய தீவுகளை உள்ளடக்கி இருந்த ஒரு ADIZ குறித்த கடந்த மாத சீன அறிவிப்பை அமெரிக்காவும் ஜப்பானும் கடுமையாக எதிர்த்தன. விமானங்கள் குறித்த தகவலின்றி, ஒபாமா நிர்வாகம் அந்த பகுதிக்குள் B-52 குண்டுவீச்சு விமானங்களை பறக்க செய்து உடனடியாக சீனாவின் அதிகாரத்திற்கு சவால் விடுத்தது. அமெரிக்க கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவும் அதையே செய்தன, அது மிகவும் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது, அதில் ஏற்படும் ஒரு பிழையோ அல்லது ஒரு தவறான கணிப்போ ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

ஆயினும் சீனாவின் ADIZ மீது இந்தியா அதிகாரபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை, டிசம்பர் 6இல் 'இந்துஸ்தான் டைம்ஸால்' ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்ட தலைமைகளின் உச்சிமாநாடு ஒன்றில் வழங்கப்பட்ட சரணின் குறிப்புரைகள் சீனாவுடன் அதிகரித்துவரும் பதட்டங்களை சுட்டி காட்டின. அவர் கூறுகையில், “இந்தியா மற்றும் சீனா இடையிலான இன்றியமையா உறவின் இயல்பு என்ன என்று நீங்கள் என்னை கேட்டால், அது அடிப்படையில் ஓர் விரோதகரமான உறவாக இருக்கிறதென்பதை என்னால் மறுக்க முடியாது," என்றார்.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அல்லது வேறெந்த ஒரு நாட்டையும் கலந்தாலோசிக்காமல் சீனா தன்னிச்சையாக நடந்து கொண்டது என்று கூறி, புஷ் நிர்வாகத்தின் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ், சரணின் கூற்றையே எதிரொலித்தார். அவர் கூறினார், “இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள் ஒருங்கிணைந்து ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அருணாசல பிரதேசம் சம்பந்தமாக சீனா என்ன செய்துக் கொண்டிருக்கிறதோ அதை அமெரிக்கா அங்கீகரிக்காது மற்றும் ஆதரிக்கவும் செய்யாது.”

வட இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை நீண்ட காலமாக சீனா திபெத்தின் ஒரு பகுதியாக வலியுறுத்தி வருகிறது, அது எல்லை பதட்டங்களுக்கு எரியூட்டி வருவதோடு அவ்விரு நாடுகளுக்கும் இடையே 1962இல் யுத்தமாகவும் வெடித்தது. இந்தியாவுடனான பிரச்சனைக்குரிய எல்லைப் பகுதிகளின் மீது பெய்ஜிங் ஒரு வான் பாதுகாப்பு மண்டலத்தை அறிவிக்கக்கூடும் என இந்தியாவில் ஊடக விமர்சகர்கள் கவலைகளை உயர்த்தி வருகின்றனர், சீனா இதுபோன்றவொன்றை மறுத்துள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும் "ஒரு பலமான சேதியை [சீனாவிற்கு] அனுப்ப வேண்டும், என்று அறிவித்த பர்ன்ஸ் தொடர்ந்து கூறுகையில், இரு நாடுகளுக்கிடையே உறவை முன்னெடுத்து செல்ல புது "சக்தி" தேவைப்படுவதாக கூறினார்.

இதற்கு விடையிறுப்பாக, சரண் அறிவித்தார், ஒரு பொருளாதார மற்றும் இராணுவ சக்தியாக சீனாவின் எழுச்சியை "ஒருவேளை இந்தியா முழுமையாக புரிந்து கொள்ளவில்லை," என்றார். "அதன் எழுச்சியை எதிர்கொள்ள" இந்தியாவும் அமெரிக்காவும் வழிகளைக் கண்டறிய வேண்டி உள்ளதென கூறிய அவர் தொடர்ந்து கூறுகையில்: “இந்த புரிதல் இந்திய-அமெரிக்க மூலோபாய உறவின் ஓர் உள்ளார்ந்த பாகமாக உள்ளது," என்றார். சீனாவிற்கு இராஜதந்திர ரீதியில் குழிபறிக்கவும் மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைக்கவும் நோக்கங்கொண்ட அமெரிக்காவின் பரந்த "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக அமெரிக்கா இந்தியாவுடனான அதன் மூலோபாய கூட்டுறவை பயன்படுத்தி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார மற்றும் இராணுவ கூட்டை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் கிழக்கை நோக்கிய பார்வை (Look East) கொள்கையையும் சரண் உயர்த்திக் காட்டினார்.

ஜப்பானுடன் இந்தியாவின் நெருக்கமான தொடர்பை வளர்ப்பதில் சரண் ஒரு உத்வேகமான ஆதரவாளர் ஆவார். ஜூனில் Business Standardஇல் எழுதுகையில், 2005இல் அமெரிக்காவுடனான ஒரு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் அறிவிப்பு, "இந்திய வெளியுறவு கொள்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விஷயம் என்பதை நிரூபித்தது, [மேலும்] அதேபோல மே 2013இல் அவரின் டோக்கியோ பயணமும் அதேபோன்ற முக்கியத்துவத்தைப் பெறக்கூடும்," என்று எழுதினார்.

மன்மோகன் சிங் மற்றும் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேவால் மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையைக் குறிப்பிட்டுக் காட்டி சரண் இவ்வாறு எழுதினார்: "ஒரு மூலோபாயத்தை தழுவுவதில் இந்தியா மற்றும் ஜப்பானை ஒருங்கிணைக்கும் 'இரண்டு பெருங்கடல்களின் சங்கமம்' [பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்] என்ற பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் கருத்துருவோடு இந்தியா உடன்பட்டுள்ளது.” "இந்தியா எந்த நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புகிறதோ அதன் மீது சீனா ஒரு வீட்டோ அதிகாரத்தை கொண்டிருக்க முடியாது" என்று கூறி அவர் ஜப்பானைக் குறித்த சீனாவின் கவலையை நிராகரித்தார்.

சீனா அதன் கிழக்கு சீனக் கடல் ADIZ'ஐ அறிவித்த பின்னர், சீனாவை எதிர்கொள்வதற்காக ஜப்பானுடன் இந்தியாவின் உறவுகளை ஆழப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இந்திய விமர்சனங்கள் ஒருமுகப்பட்டுள்ளன. ஜப்பானும் இந்தியாவும் "இயல்பிலேயே கூட்டாளிகளாக" உள்ளன என்று பகுப்பாய்வாளர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளனர், அதாவது, மூலோபாய நலன்கள் முரண்படாமல் மற்றும் பொதுவான இலக்குகளைப் பகிர்ந்து கொள்வதில், அவ்வாறு உள்ளன.

Institute for Defence Studies and Analysis'இன் ஒரு பகுப்பாய்வாளரான அர்விந்த் குப்தா, சீனாவின் எழுச்சி, அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" மற்றும் தென்கிழக்கு மற்றும் கிழக்கு சீன கடல்களில் ஏற்பட்ட சமீபத்திய அபிவிருத்திகள் உட்பட, ஆசியாவின் அபிவிருத்திகள், "இந்திய மற்றும் ஜப்பானிய இராஜாங்க விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக்கு சவால்களை முன்னிறுத்துகின்றன,” என்று எழுதினார்.

"ஜப்பான் இந்தியாவில் அதன் பிரசன்னத்தை விஸ்தரிக்க ஒரு சிறந்த வாய்ப்பை" இழந்து விடக்கூடாது என வலியுறுத்தி குப்தா தொடர்ந்து எழுதினார்: "தெற்காசியாவில் சீனாவின் காலடித் தடம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது பல காலங்களாக கவலையை உண்டாக்கி உள்ளது. இருந்த போதினும், ஜப்பான் அதுபோன்ற எந்த தொந்தரவையும் எதிர்கொள்ளவில்லை. இந்தியாவிலும் மற்றும் தெற்கு ஆசியாவிலும் ஜப்பானுக்கு ஒரு நேர்மறையான பிம்பம் உள்ளது... அது இந்தியாவுடனும் மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடனும் அதன் தயக்கத்தை விடுத்து ஆழமாக ஈடுபட வேண்டும்.”

Diplomatஇல் எழுதுகையில், அனிக்தா பாண்டா குறிப்பிட்டார்: “2009இன் தொடக்கத்தில் சீன-ஜப்பான் உறவுகள் அவநம்பிக்கையோடு வளர்ந்த போது, இந்தியா அத்தருணத்தில் வெளிப்படையாக புறக்கணிக்கப்பட்டு இருந்திருக்கலாம். இன்று, டோக்கியோவில் உச்சத்தில் மீண்டும் ஷின்ஜோ அபே வந்தமர்ந்ததோடு, அந்த இரண்டு ஆசிய ஜனநாயகங்களுக்கு இடையிலான உறவுகள் புதிய உயரத்தை எட்டின... இந்தியா ஏதேனும் ஒரு நாட்டுடன் கூட்டணி அமைக்க ஒரு மூலோபாய பங்குதாரராக ஆக நுழைய முடிவெடுக்கும் என்றால், அது ஜப்பானாக தான் இருக்கும் என்று என்னால் பந்தயம் கட்ட முடியும், ஏனென்றால் அவற்றின் நலன்கள் 'ஒன்றுக்கு ஒன்று சமாந்தரமாக' உள்ளன."

பாண்டா தொடர்ந்து கூறுகையில், “ஒரு ஆக்ரோஷமான சீனாவின் எழுச்சிக்கு எதிராக இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான மூலோபாய ஒருங்கிணைவை ஒருவர் பரஸ்பர-ஆதாய வெளிப்புற சமநிலைப்படுத்தலின் ஒரு வடிவமாக வார்த்து காட்ட முடியும். இந்தியா மற்றும் ஜப்பான் இரண்டுமே சீனாவுடன் எளிதில் கையாள முடியாத எல்லை சச்சரவுகளைக் கொண்டுள்ளன," என்றார்.

ஜப்பான் இந்தியாவில் அதன் செல்வாக்கை அதிகரித்து வருகிறது. ஜப்பான் டைம்ஸ் குறிப்பிட்டதாவது, இந்தியாவுடன் மூலோபாய உறவுகளை அபிவிருத்தி செய்து கொண்டே, “சுமார் 1.26 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் பொருளாதார சாத்தியக்கூறுகளை ஜப்பான் தவற விட்டுவிடக்கூடாது ... சமீபத்திய ஆண்டுகளில், 100க்கும் மேலான ஜப்பானிய நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சந்தைக்குள் நுழைந்திருக்கின்றன. மொத்தமாக தற்போது இது ஏறத்தாழ 1,000 ஆகும்."

இந்தியாவில் ஜப்பானின் வெளிநாட்டு நேரடி முதலீடு 2012 இறுதி வாக்கில் 14.55 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருந்தது. டோயோடா, ஹிட்டாச்சி மற்றும் ஏனைய பெரிய பெருநிறுவனங்கள் சர்வதேச சந்தைகளுக்காக இந்தியாவில் அவற்றின் உற்பத்தியை மேம்படுத்தி வருகின்றன.

ஜப்பானின் சுய-பாதுகாப்பு கடற்படை (Maritime Self-Defence Force) மற்றும் இந்திய கடற்படை கூட்டு இராணுவ ஒத்திகையை நடத்தி உள்ளன. இந்தியா நிலத்திலும் நீரிலும் செல்லும் பதினைந்து அதிநவீன ஷின்மாய்வா US-2 விமானங்களை வாங்க ஜப்பானுடன் விவாதித்துள்ளது. ஜனவரியில், குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வரும், பிரதம மந்திரி அபேயின் இந்திய விஜயத்தை, உறவுகளை மேலும் ஊக்குவிக்கும் என்ற விதத்தில், இந்திய ஊடகங்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளன.

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை சீனாவை "ஓர் அச்சுறுத்தலாக" முத்திரை குத்துகின்ற நிலையில், ஆசியாவில் அதிகரிக்கும் பதட்டங்களுக்கான பிரதான பொறுப்பு ஒபாமா நிர்வாகத்தின் "முன்னெடுப்பில்" தங்கி உள்ளது. அமெரிக்கா அப்பிராந்தியத்தில் அதன் சொந்த இராணுவ ஆயத்தங்களில் மட்டும் ஈடுபடவில்லை, மாறாக அதன் பிரதான பங்காளிகள் மற்றும் மூலோபாய பங்குதாரர்களும் அதையே செய்ய ஊக்குவித்து வருகிறது.

கடந்த தசாப்தங்களில் அது மத்திய கிழக்கில் செய்ததைப் போல, ஆசியாவில் அதன் தொடர்ச்சியான ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் ஒரு முயற்சியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈவிரக்கமின்றி இராணுவரீதியில் அதன் பலத்தைப் பயன்படுத்தி வருவதோடு மோதலுக்கும் களம் அமைத்து வருகிறது.