சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Union increases border controls against asylum seekers

ஐரோப்பிய ஒன்றியம் தஞ்சம் கோருவோருக்கு எதிராக எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கிறது

By Martin Kreickenbaum 
20 December 2013

Use this version to printSend feedback

தஞ்சம் கோருவோர் லாம்பேடுசா பெரும் துன்பியலை அடைந்ததற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் விடையிறுப்பு, மேலும் குடியேற்றக் கட்டுப்பாடுகளை தீவிமாக்குவதும் மற்றும் வரும் அகதிகளை தடுக்கும் பொறுப்பை, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத, இரக்கமற்ற வழிவகைகளுக்கு இழிபெயர் பெற்றுள்ள நாடுகளுக்கு அளித்திருப்பதும்தான்.

ஒரு சில நாட்களுள், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பாவிற்குள் அகதிகள் நுழைவதை இன்னும் திறமையுடன் தடுப்பதை இலக்காக கொண்ட மூன்று புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுதுருக்கியுடன் மறு இணைவு ஒப்பந்தம் ஒன்றை தொடக்கியுள்ளனர்; இது துருக்கியை போஸ்போரஸில் இருந்து ஐரோப்பாவிற்கு வரும் அகதிகளை மீண்டும் திரும்பப் பெறும் கட்டாயத்திற்கு உட்படுத்துகிறது. அவர்கள் ஒரு “குடியேறுதல் தொடர்பான கூட்டுக்கு திட்டமிட்டுள்ளனர்; இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அருகே உள்ள நாடுகளிடம்; அந்நாடுகளை குடியேறுதலைத் தடுக்க, அகதிகளை மீண்டும் பெறக் கட்டாயப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியம் இந்நடவடிக்கைகளை கண்காணிப்பதை இலகுவாக்க, Eurosur என்னும் கண்காணிப்பு முறையை நிறுவியுள்ளது.

டிசம்பர் 4ம் திகதி, ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை மற்றும் உள்துறை ஆணையர் Cecilia Malmström மற்றும் துருக்கிய வெளியுறவு மந்திரி Ahmet Davutoglu இருவரும் தஞ்சம் கோருவோரை மீண்டும் பெற்றுக் கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால பேச்சுக்கள் தீர்க்கப்பட்டதாக அறிவித்தனர். இதன் விளைவாக வந்த உடன்பாடு டிசம்பர் 16 அன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது.

இந்த உடன்பாடு, துருக்கிய எல்லைக்கூடாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இடம்பெயரும் அனைத்துத் தஞ்சம் கோருவோரையும் திரும்ப பெற்றுக்கொள்ளும் கட்டாயத்தை கொடுக்கிறது; இது முக்கியமாக, சிரியா, ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வந்த நூறாயிரக்கணக்கான அகதிகளை பாதிக்கும். இதற்கு ஈடாக ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளது; இது துருக்கிய குடிமக்கள் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு விசாக்கள் இல்லாமல் பயணிப்பதை எளிதாக்கும்.

ஐரோப்பிய ஆணையத்தின் இந்த இழிந்த அணுகுமுறை மூச்சுத்திணற வைக்கிறது. கெசி பூங்கா எதிர்ப்புக்கள் துருக்கியப் பொலிசால் மிருகத்தனமாக அடக்கப்பட்டபின், துருக்கி மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவது குறித்து துருக்கிய அரசாங்கத்துடனான விவாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைத்தது. வெறும் ஆறே மாதங்களுக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அதே அரசாங்கத்துடன் தஞ்சம் நாடுவோரை துருக்கிக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவைப்பதற்கான ஒரு உடன்பாட்டை முறையாக்குகிறது.

இவ்வாறு செய்கையில், திரும்பும் அகதிகளுக்கு துருக்கி ஒரு கௌரவமான வாழ்வை உருவாக்க வாய்ப்புத் தரும் என்பது ஒருபுறம் இருக்க, அவர்களை பாதுகாக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. துருக்கிய அரசு, தஞ்சம் நாடுவோரின் உரிமைகளை நிலைநிறுத்த முறையான சட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை., துருக்கி, அகதிகளை ஒருதலைப்பட்சமாக நடத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை முறையாகத் தெரிவித்துள்ளது; அவர்கள் ஒன்று அல்லது பல மாதங்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர், அல்லது முக்கிய பெருநகரங்கள் அனைத்தில் இருந்தும் தொலைவில் ஒதுக்கப்படுகின்றனர். அப்படியிருந்தும் ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி தஞ்சம் நாடுவோருக்கு பாதுகாப்பான உறைவிடமாக கருதுகிறது.

நூறாயிரக்கணக்கான அகதிகளின் விதி குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்படுத்தாத்தன்மை குறிப்பிடத்தக்க வகையில் குமட்டுகிறது; ஏனெனில் அகதிகளின் இந்த அலைபோன்ற பெருக்கெடுப்பு நேரடியாக அதன் கொள்கைகளில் இருந்துதான் விளைந்துள்ளது. தங்கள் நாட்டில் இருந்து 3 மில்லியன் மக்களை ஓடச்செய்துள்ள சிரிய உள்நாட்டுப்போர் முக்கிய ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவினால், அவற்றின் பேர்சிய வளைகுடா நாடுகளில் இருக்கும் முடியாட்சிகளுடன் சேர்ந்து வேண்டுமென்றே தூண்டப்பட்டது. ஜோர்டான், லெபனான், துருக்கி இன்னும் பிற அண்டை நாடுகளில் நூறாயிரக்கணக்கான சிரிய நாட்டு மக்கள் பயங்கரமான குளிர்கால சூழலில், மட்டமான முகாம்களில் அல்லது தெருக்களில் கூட வசிக்கின்றனர். மேலும் இந்நாடுகளில் அவர்கள், ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும் தற்காலிக பயணிகள் (Temporary Visitors) என்றே காணப்படுகின்றனர்.

சிரியா மீது சுமத்தப்பட்டுள்ள வணிகத் தடைகள், மில்லியன் கணக்கான சிரிய குடும்பங்களின் வாழ்க்கையை அழித்துவிட்டன. பிரித்தானிய செய்தித்தாள் Independent  செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், ஒருகாலத்தில் சிரியா கொண்டிருந்த மிகச்சிறப்பான சுகாதாரப் பாதுகாப்பு முறை, இந்த வணிகத் தடைகளால் முற்றிலும் உடைத்தெறியப்பட்டுவிட்டது என்று தகவல் கொடுத்துள்ளது. உணவு, வெப்பமூட்டும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் விண்ணைத்தொட்டுள்ளன, பெரும்பாலான மக்களால் அதற்கான செலவை தாங்கிக்கொள்ளவே முடியாதுள்ளது.

ஐரோப்பாவிற்கு செல்வது என்பதே, இப்பெரும் சோகத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று பலரால் காணப்படுகிறது. ஜேர்மனி சிரியாவில் இருந்து 10,000 பேரைத்தான் அனுமதிக்கும், உள்துறை மந்திரி ஹான்ஸ் பீட்டர் பிரெட்ரிக் இது ஒரு முன்னுதாரணமான செயல் எனச் சித்தரித்தார். அதே நேரத்தில் ஜேர்மனிய அரசாங்கம் அவர்களைத் தடுக்க மிக உயர்ந்த அதிகாரத்துவ தடைகளை நிறுவியுள்ளது; இதனால் ஒரு மிகச் சிறிய பிரிவினர்தான் ஜேர்மனிக்குள் வரமுடிந்துள்ளது.

லெபனான், ஜோர்டான் அல்லது துருக்கியில் இருக்கும் அகதிகள் தங்களின் பெருந்திகைப்போடு, எஞ்சியிருக்கும் நிதியை ஒன்றாகத் திரட்டி, மேலும் கொடூரமான முறையில் கடன்களைப் பெற்று, ஐரோப்பாவிற்கு அவர்களை அனுப்பவதற்கு கள்ளக் கடத்தல்காரர்களுக்கு கொடுக்கின்றனர். படகுகளின் மூலம் கிரேக்கத்திற்கு கடல் வழியே ஆபத்தாக செல்வது என்பதுதான் அவர்களுக்கான ஒரே கடைசி வழியாகும். இப்பொழுது “மீண்டும் ஏற்றுக்கொள்ளும் உடன்பாடு” என்பதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தை அடைந்தவர்கள் எல்லை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, மீண்டும் உடனடியாக துருக்கிக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியும் என்று அர்த்தமாகும்.

இப்புதிய உடன்பாடு, ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் கட்டுப்பாட்டு நிறுவனமான Frontex  ஐ விமர்சிப்பதை வசதியான முறையில் அகற்றுகிறது. Frontex அதிகாரிகள் பெரியளவில் மனித உரிமைகளை மீறுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு, குறிப்பாக துருக்கி, கிரேக்கத்திற்கு இடையே அவர்களுடைய நடவடிக்கைகள் குறித்து குவிப்புக் காட்டப்பட்டது. அகதிகள் அமைப்பான Pro Asyl, ஐரோப்பிய எல்லைப் பொலிசார் செய்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இது முகமூடி அணிந்த சிறப்பு அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளையும், அகதிகளை சிறைப்படுத்துவதையும் விவரிக்கிறது. கப்பல்கள் மூலம் வரும் களைப்படைந்துவிட்ட அகதிகள் எரிபொருளோ, உணவோ, நீரோ இன்றி துருக்கிய கடலில் கைவிடப்படுகின்றனர், அவர்களுடைய தஞ்சக் கோரிக்கை வழிவகைக்கு உட்படுத்துவது ஒருபுறம் இருக்க, பதிவுகூட செய்யப்படுவதில்லை.

அகதிகள் இப்பொழுது, மீண்டும் ஏற்கும் ஒப்பந்தத்தின் கீழ், துருக்கிக்குள் முற்றிலும் சட்டரீதியாக அனுப்பப்படலாம்.

அண்மையில் நடந்த ஒரு மாநாட்டில், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரி இதேபோன்ற உடன்பாடுகளை வட ஆபிரிக்கா, ஆசியாவில் உள்ள இடைத்தங்கல் நாடுகளுடன் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் Malmström, இந்நோக்கத்திற்காக எமக்கு ஒரு “நகரும் கூட்டு (mobility partnership) தேவை என்றார். இது, அவர் சமீபத்தில் துனிசியா, அஜெர்பைஜானில் நடத்திய பேச்சு வார்த்தைகளை ஒத்திருக்கும். அவருடைய பார்வை இப்பொழுது மொரோக்கோ, அல்ஜீரியா, லிபியா மற்றும் எகிப்தின் மீது விழுந்துள்ளது. அவர்களுக்கு சிறிய நிதி உதவி வழங்குவதற்கு ஈடாக, ஐரோப்பாவில் நுழைய முற்படும் அகதிகளுக்கு எதிராக இன்னும் ஆக்கிரோஷத்துடன் செல்படும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவர்.

நகரும் கூட்டுஎன்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால திட்டமான எல்லைக் கட்டுப்பாடுகளை ஐரோப்பா அல்லாத நாடுகளுக்கு கொடுக்கும் திட்டத்தின் அடுத்த கட்டமாகும். இத்திட்டத்தில் மீண்டும் திருப்பி அனுப்புதல் உடன்பாடுகள், “பிராந்தியப் பாதுகாப்பு திட்டங்கள்” நிறுவுதல் ஆகியவை அடங்கியிருக்கும்; இதன் பொருள் அகதிகள் முகாம்கள் கட்டுதல் சஹேல் பிராந்தியம் வரை செல்லும் என்பதாகும். மேலும் இந்நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மத்தியதரைக் கடலோரப் பகுதிகள் முழுவதும் அகதிகளைக் கண்டுபிடித்தலிலும் இருக்கும்.

Cecilia Malmström இந்த ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையான வெளியாருக்கு அகதிகள் நலன் பற்றிய பொறுப்பைக் கொடுத்தல் என்பது லாம்பேடுசா அகதிகள் பேரழிவு மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்ததற்கு விடையிறுப்பு என்று கூறுவது அப்பட்டமான திமிர்த்தனமாகும்; அந்த நிகழ்வில் 600 அகதிகளுக்கு மேற்பட்டவர்கள் சில நாட்களில் மூழ்கிப்போயினர். “இது ஐரோப்பிய ஒன்றியம், ஒருமைப்பாட்டு உணர்வு மற்றும் நடைமுறை மனிதாபிமான மதிப்புக்களை காட்டுவதற்கு ஒரு தனிப்பட்ட வாய்ப்பு” என அவர் அறிவித்தார்.

ஐரோப்பாவின் வெளிப்புற எல்லைக் கண்காணிப்பு முறை (Eurosur) டிசம்பர் 2 அன்று தன் செயற்பாடுகளை தொடங்கியுள்ளது. இது “ஐரோப்பியக் கோட்டை” கட்டமைப்பில் மற்றும் ஒரு முக்கிய கட்டிடம் எழுப்புவதை பிரதிபலிக்கிறது; இது உண்மையில், தஞ்சம் கோருவோர் கடக்க முடியாத தடையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்படுகிறது.

250 மில்லியன் யூரோக்கள் செலவில் (430 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஒரு கண்காணிப்பு முறை, ஐரோப்பிய எல்லைகளை “சட்டவிரோத குடியேறுவோருக்குஎதிராக பாதுகாக்கிறது. இதில் டிரோன்கள், செயற்கைக் கோள் தளம் கொண்ட ஆய்வு முறைகள், கடலோரக் கண்காணிப்புக் கருவிகள், பயோமெட்ரிக் உடற்கூறு அடையாளக் கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். தகவல் இணையத்தில் பங்கு பெறும் நாடுகளில் ஏற்கனவே மொரிடானியா, மொரோக்கோ, செனேகல், காம்பியா, கினி பிசாவ் மற்றும் கேப் வெர்டே ஆகியவை அடங்கும்; ஸ்பெயின்தான் தேசியக் கட்டுப்பாட்டு மையமாக செயற்படும். லிபியா, துனிசியா, அல்ஜீரியா, எகிப்து ஆகியவை விரைவில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Eurosur மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஐரோப்பிய எல்லைக் கட்டுப்பாட்டு மைய அமைப்பான வார்சோவில் இருக்கும் Frontex க்கு மாற்றப்படும்; இங்கு செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படும்; அதில் அகதிகள் கப்பல்கள் அவை ஐரோப்பிய நீர்நிலையை அடைவதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்படும், இதையொட்டி அவை தடுக்கப்பட்டு ஆபிரிக்காவிற்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்படும்.

ஆயினும்கூட, ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் Malström, Eurosur இன் பங்களிப்பு,அதிக நெரிசல், கடலுக்கு ஒவ்வாத கப்பல்களில் இருந்து அகதிகளை மீட்கும், இதையொட்டி மத்தியதரைக் கடலில் அகதிகள் பற்றிய சோகங்கள் தவிர்க்கப்படும்என்று அறிவித்தார்.

Pro Asyl இன் ஐரோப்பிய பிரதிநிதியான Karl Kopp, மக்களை கடத்துபவர்கள் கடுமையான கடல், கடலோரக் கண்காணிப்பிற்கு இன்னும் ஆபத்தான முறையில் விடையிறுப்பர், இன்னும் மரணம் நேரக்கூடிய ஆபத்தான வழிகளைப் பின்பற்றுவர் என்ற கருத்தைக் கொண்டுள்ளார். “அதன்பின் மக்கள் லாம்பேடுசாவிற்கு அருகில் இறக்க மாட்டார்கள், ஐரோப்பிய கடலுக்கு வெளியே இறப்பர்” என்றார்.

Eurosur இன் நோக்கம் கடலில் ஆபத்தில் இருப்பவர்களை மீட்பது என்று இல்லை; முற்றிலும் அகதிகளுக்கு எதிராக, எல்லைக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான்; மேலும் இது மத்தியதரைக் கடல் நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், கிரேக்கம் மற்றும் மால்டா ஆகியவை தஞ்சம் நாடுவோரை தீவிரமாக மீட்க தேவைப்படும் புதிய சட்ட பரிந்துரைப்புகளை ஏற்பதற்கு தயக்கம் காட்டுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு, ஏற்கனவே இன்னும் 50 மில்லியன் யூரோக்களை கூடுதல் எல்லைக்கட்டுப்பாட்டு செயல்கள் என Frontex செயல்படுத்துவதற்கு ஒதுக்கியுள்ளது. இந்த பணங்கள், மத்தியதரைக் கடலில் போர்க்கப்பல்களை நிறுத்துவதற்கு மற்றும் துருக்கிய எல்லை கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட இருக்கின்றன.

Malmström விளக்க முற்படுவது போல், இந்த அகதிகளின் பெரும் சோகம், கடலில் கப்பல்கள் திணறலுக்கு உட்படுவது குறித்த தகவல் இல்லாமற்போவதால் வருவதில்லை. இவை நடப்பதற்குக் காரணம் கப்பல் உடைந்து தத்தளிக்கும் அகதிகளை மீட்பதில் விருப்பமின்மை, அவர்களுக்கு உதவி செய்ய விருப்பமின்மை ஆகியவைதான் காரணம். இதை விளக்க இத்தாலிய செய்தியாளர் Fabrizio Gatti, லாம்பேடுசா பேழிவிற்கு ஒரு சில நாட்களின் பின் 260 அகதிகள் இறந்துவிட்டது, மிகப்பெருமளவில் சர்வதேச உத்தியோகபூர்வ கவனிப்பின்மையால் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

லிபிய கடலோரக் காவலர்கள் கடலில் அது செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் சுட்டபின் பிரச்சினைக்குரிய படகு அக்டோபர் 11 ம் தேதி தத்தளிக்க தொடங்கியது. இத்தாலிய கடலோர பாதுகாப்புக் கப்பல்கள் அருகில் இருந்தபோதிலும், முதலில் இத்தாலிய அதிகாரிகள் துணைக்கோள் மூலம் வந்த ஆபத்து செய்தியை புறக்கணித்து அதன் பின் செய்தியை மால்டாவிற்கு அனுப்பியது. இத்தாலியின் கடலோரப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குனர் இந்நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் அகதிகள் கப்பல் மால்ட்டா கடல் மீட்புப்பகுதியில் இருந்தது என்றார். பல மணி நேரத்திற்குப் பின் மால்டா இத்தாலிய கடலோரப் பிரிவிடம் இருந்து உதவியை நாடியது, ஆனால் மீட்புக் கப்பல் இறுதியில் வந்தபோது, நலிந்த கப்பலில் இருந்த 450 அகதிகளின் உயிர்களில் பாதியைக் காப்பாற்ற முடியாதுபோய்விட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தன தன்மை, அரசியல் தஞ்சம் கோருவோரை அது மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதில் அம்பலமாகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஐரோப்பிய எல்லைகளில் 25,000 அகதிகளின் மரணங்களுக்கு இதன் ஒரே பதில், அடக்குமுறை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்பதேயாகும்.  “நகரும் கூட்டு, “மீண்டும் ஏற்றுக்கொள்ளும் உடன்பாடு” மற்றும் “பிராந்திய பாதுகாப்புத் திட்டம்” என்ற சொற்றொடர்கள், ஓர்வெல்லியன் மொழியில் இருந்து நேரடியாக வருவது போல் உள்ளன, ஐரோப்பிய கோட்டையின் இரக்கமற்ற அரசியல் ஆயிரக்கணக்கானோரின் இறப்புக்களில் வெளித்தோன்றுகின்றது.