சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

EU summit: Berlin calls for stricter budgetary discipline

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு: பேர்லின் கடுமையான வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாட்டிற்கு அழைப்பு விடுகிறது.

By Ulrich Rippert 
23 December 2013

Use this version to printSend feedback

கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவற்றை கொண்ட புதிய பெரும் கூட்டணி அரசாங்கத்தை பேர்லினில் நிறுவிய இரண்டு நாட்களுக்குள் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். தன்னுடைய வெளியுறவு மந்திரி பிரங்க் வால்டர் ஸ்ரைன்மையருடன் (SPD) ஐரோப்பிய ஒன்றியம் சமூகவிரோத சிக்கனக் கொள்கைகள் தொடர்தல், தீவிரப்படுத்துதல் இவற்றை புதிய ஜேர்மனிய அரசாங்கம் இதற்கு முன்னிருந்த அரசாங்கத்தைப்போல் கண்காணிக்கும் என்று தெளிவாக கூறினார்.

பல ஐரோப்பிய ஒன்றிய முடிவுகள் ஜேர்மனியில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை ஒத்திப் போடப்பட்டிருந்ததால், கடந்த வார ஐரோப்பிய உச்சிமாநாடு ஒரு முழு நிகழ்ச்சிநிரலை கொண்டிருந்தது. பொருளாதாரக் கொள்கையில் இன்னும் “சீர்திருத்தங்களுக்கு” உறுதியளித்தபின் உச்சிமாநாட்டில் ஒரு ஐரோப்பிய வங்கிகள் ஒன்றியம் அமைத்தல் மற்றும் வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கையில் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்த பேச்சுக்களும் முக்கியத்துவம் பெற்றன.

பாராளுமன்றத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையைக் கொண்டுள்ள புதிய ஜேர்மனிய பெரும் கூட்டணி, முந்தைய அரசாங்கத்திலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் இன்னும் ஆக்கிரோஷத்தை காட்டி, பிரான்ஸ், பிரித்தானியவுடன் மோதல்களை தூண்டுவதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளேயே முழுமையாக அழுத்தங்களை அதிகரிக்கும்.

கடந்த புதன் அன்று, சான்ஸ்ராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபின் முன்வைத்த முதல் அரசாங்க அறிக்கையில், மேர்க்கெல் ஐரோப்பிய ஒன்றியத்தை இன்னும் கூடுதலாக நெருக்கடியை தாங்கிக்கொள்ளக்கூடியதாக மாற்றவேண்டும் என்று அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவநாடுகள் “தாம் கட்டுப்பட்டுள்ள  சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த உறுதியளிக்க வேண்டும் என்று அவர் ஆணையிட்டார்.

அங்கத்துவநாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாட்டுப் பிரிவான ஐரோப்பிய ஆணையத்திற்கும் இடையேயான புதிய உடன்பாடுகள் தொழிலாளர் சந்தை, கல்வி, ஆய்வு, கண்டுபிடிப்புகள், பொது நிர்வாகம் மற்றும் சமூகப்பாதுகாப்பு முறையில் தொலை நோக்குடைய “சீர்திருத்தங்களை” உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று மேர்க்கெல் கூறினார்.

ஐரோப்பிய அரசாங்கங்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்துடன் பாரிய சமூக வெட்டுக்களைக் கொண்ட கட்டுப்படும் உடன்பாடுகளுக்கு உடன்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “சீர்திருத்தத்திற்கான” இக்கட்டாயங்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முழுக் கண்காணிப்பிற்கு உட்பட்டிருக்கும். ஐரோப்பிய ஆணையம் மதிப்பீடு செய்து ஒப்புதல் கொடுத்தபின்தான் அங்கத்துவநாடுகள் நிதிய உதவிக்குத் தகுதி பெறும்.

இத்தகைய கட்டுப்படுத்தும் உடன்பாடுகளின் கடுமையை சற்று குறைவாக காட்டும் முயற்சியில் மேர்க்கெல் பிரஸ்ஸல்ஸில் “சீர்திருத்தப் பங்காளித்துவம்” ஒரு “ஒற்றுமையான சமூகம்” போன்றவற்றைக் கூறினார். உண்மையில் அவருடைய திட்டங்கள் ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகள் விரிவாக்கப்பட வேண்டும் என்று குறிக்கின்றன. அவைதான் கிரேக்கத்தில் பரந்த மக்களிடையே சமூகப் பேரழிவை ஏற்படுத்தின. “போட்டித்தன்மையை” பாதுகாக்கும் பெயரில் ஐரோப்பாவில் பொதுநல அரசாங்கத்தில் எஞ்சியிருக்கும் அனைத்து நலன்களும் அழிக்கப்படுவதுடன், அதே நேரத்தில் ஐரோப்பிய பல மில்லியனர்கள், பில்லியனர்களுடைய எண்ணிக்கை விரிவுபடுத்தப்படும்.

பிரஸ்ஸல்ஸில் அதிகாரத்தை அதிகமாக மத்தியப்படுத்தும் மேர்க்கெலின் திட்டங்கள் உச்சிமாநாட்டில் எதிர்ப்புகளை சந்தித்தது. பெரும்பாலான அரசாங்க மற்றும் நாட்டுத் தலைவர்கள் பொருளாதார, சமூகக் கொள்கை பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய அரசாங்கங்களுடன்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் விளவாக “இருதரப்பு சீர்திருத்த உடன்பாடுகளை” இயற்றும் கால அவகாசம் ஜூன் 2014ல் இருந்து அக்டோபர் 2014க்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த ஒத்திவைப்பு “மேர்க்கலுக்கு ஒரு அடி” என்று ஜேர்மன் செய்தி ஊடகம் விவரித்துள்ளது (Süddeutsche Zeitung). ஆனால் அவருடைய பிரஸ்ஸல்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் சான்ஸ்லர் அமைதியாகத்தான் இருந்தார். கால அவகாசத்தைவிட முக்கியமானது பங்குபெற்றுவோர் அனைவரின் தொழிலாளர் சந்தை, கல்வி, பொதுநலம் பற்றிய “விரிவான சீர்திருத்தம்” குறித்த கருத்துக்கள் தவிர்க்க முடியாதவை என அவர் கூறினார். கோரப்படும் திருத்தங்களின் தேவை, அவசரத்தை இன்னும் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது அவற்றைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுபவர்கள் விரைவில் பொருளாதார உண்மைகளால் நம்பிக்கை பெறுவர் என்றார் அவர்.

Süddeutsche Zeitung  பத்திரிகையில் ஒரு வாசகர் கடிதம் மேர்க்கெலின் பிரஸ்ஸல்ஸ் கட்டளைகளை கீழ்க்கண்டவாறு சுருக்கிக்கூறியது: “மேர்க்கல் கோரும் ‘சீர்திருத்த உடன்பாடுகள்’ ஐரோப்பா முழுவதும் ஹார்ட்ஸு IV க்கு வகை செய்யும் என்பது மிகத் தெளிவு.” இங்கு வாசகர் தொழிலாளர் சந்தையிலும் பொதுநல முறையிலும் ஜேர்மனியில் முதலில் ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக-பசுமைக்கட்சி அரசாங்கம் பின்னர் தொடர்ச்சியான CDU தலைமையிலான கூட்டணி அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட  கடுமையான எதிர்ச்சீர்திருத்தங்களை குறிப்பிடுகிறார்.

உச்சிமாநாட்டில் பிற செயல்களும் மோதல்களுக்கு வழிவகுத்தன. புதிய அரசாங்கத்திலும் அதே பதவியில் இருக்கும் ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள (CDU), உச்சிமாநாட்டிற்கு முன்கூட்டியே பிரஸ்ஸல்ஸ் வந்து ஒரு வங்கிகளின் ஒன்றியம் நிறுவப்படுவது குறித்த ஜேர்மனிய நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தார்.

ஒரு ஐரோப்பிய வங்கிகள் ஒன்றியம் அமைக்கும் பிரச்சினை நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. 2008 நிதிய நெருக்கடி முதலே இது விவாதிக்கப்படுகிறது. ஆனால் பரந்தளவில் ஐரோப்பாவில் எந்த வங்கிகள் கண்காணிக்கப்படும், எவை திவால்தன்மைக்கு பொறுப்பு எனக் கூறப்படும் என்பது எப்பொழுதுமே சர்ச்சைக்கு உரியதாகத்தான் உள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் அடிப்படையில் வங்கிகள் ஒன்றியத்திற்கு ஆதரவு கொடுத்தாலும், அது ஒரு சில நூறு பெரிய வங்கிகளுடன் அதை நிறுத்திக் கொள்ள விரும்புவதுடன், ஜேர்மனிய வங்கிகளும் ஜேர்மனிய அரசாங்கமும் மற்ற நாடுகளின் பிணையெடுப்புக்களுக்கு நிதியளிக்கும் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகிறது.

2011ல் ஐரோப்பிய நிதிய மேற்பார்வையாளர்கள் அமைப்புமுறை நிறுவப்பட்டது. ஐரோப்பிய வங்கிமுறை அதிகாரம் (EBA),  ஐரோப்பிய காப்புறுதி மற்றும் தொழில் ஓய்வூதிய அமைப்பு (EIOPA),  மற்றும் ஐரோப்பியப் பாதுகாப்புப்பத்திரங்கள் மற்றும் சந்தைகள் அதிகாரம் (ESMA) ஆகியவை இவற்றில் உள்ளடங்கும். ஆனால் இந்த ஐரோப்பிய அதிகாரங்களின் இயலுமை ஒன்றுபட்ட மேற்பார்வைத் தரங்களை தோற்றுவிப்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வங்கிகளை மேற்பார்வையிடுவது முக்கியமாக ஒவ்வொரு தனிப்பட்ட நாடுகளின் தேசியக் கட்டுப்பாடு அமைப்புக்களின் பொறுப்பாக உள்ளது.

18 மாதங்களுக்கு முன்பு, ஸ்பெயின் வங்கி நெருக்கடி தீவிரமாகி மாட்ரிட்டில் உள்ள இன்னும் பல முக்கிய நிதிய அமைப்புகள் வீழ்ச்சியடைந்தபோது, சில ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத தலைவர் மானுவல் பரோசோவுடன் சதிக்கு ஏற்பாடு செய்தன. ஜேர்மனியை முன்கூட்டிக் கேட்காமல், ஒரு வங்கி மேற்பார்வை முறை ஐரோப்பிய மத்திய வங்கியுடன் கூடி நிறுவப்பட்டிருந்ததால் அவை உச்சிமாநாட்டின் முடிவான வங்கிகள் நிதிய உதவியை நேரடியாக ஐரோப்பிய உறுதிப்பாட்டு அமைப்பில் (ESM) இருந்து பெறுவதை செயல்படுத்தின. உச்சிமாநாடு ஐரோப்பிய ஆணையத்தை ஒரு பொருத்தமான அமைப்பு குறித்த திட்டத்தைக் முன்மொழியும்படி கேட்டுக் கொண்டிருந்தது.

ஜேர்மனியில் நிதியப் பொருளாதார வட்டங்களில் இந்தமுடிவு “யூரோ அமைப்புமுறையின் வங்கிகளுடைய கடன்களுக்கு கூட்டாக பொறுப்பேற்பதற்கான” ஒருபடி என்று கருதப்பட்டு, பரந்த அளவில் எதிர்க்கப்பட்டது. 200 பொருளாதார வல்லுனர்களின் அறிக்கை ஒன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் முடிவு அடிப்படையில் தவறு அது மாற்றப்பட வேண்டும் என அழைப்புவிடுத்தது. “ஐரோப்பாவில் நல்ல நிலையில் உள்ள நாடுகள்” “நெருக்கடி நாடுகளின்” கடனுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் பொறுப்பைப் பெறக்கூடாது என அவர்கள் வலியுறுத்தின்.

அப்பொழுது முதல் நிதி மந்திரி ஷொய்பிள ஒரு “பொறுப்பேற்கும் ஒன்றிய” திசையில் இருக்கும் ஒவ்வொரு ஐரோப்பிய ஆரம்ப முயற்சியையும் தடுத்துள்ளார். அதாவது ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடிக்கு உட்பட்ட வங்கிகளுக்கு இயல்பாக நிதிய உதவிக்கு  உறுதியளிப்பதை. பதிலாக அவர் ஒவ்வொரு நிதிய நெருக்கடியும் முதலில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

கடந்த வார உச்சிமாநாட்டில், ஷொய்பிள ஜேர்மனிய நலன்கள் பெரிதும்  பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த முடிந்தது. வியாழன் மாலை செய்தியாளர் கூட்டத்தில் அவர் தோன்றியபோது, குறிப்பான இழிவுடன் அவர் அவருடைய ஐரோப்பிய சக கூட்டாளிகள் சிலர் “என் முகத்தைப் பார்க்க முடியவில்லை” என்பது தெளிவு என்றார். ஆயினும் பின்வாங்கும் விருப்பம் தனக்குக் கிடையாது என்றார்.

உச்சிமாநாடு எடுத்துள்ள முடிவு அனைத்து நடவடிக்கைகளையும் 2016 வரை ஒத்தி வைத்துள்ளது. அதுதான் ஒரு வங்கி மீட்புமுறைக்கு முன்கூட்டி வரும் நாள் ஆகும், ஒரு தொடர் சீரான விதிகள், கட்டுப்பாடுகளை அடித்தளமாக கொண்டு, திவால் அடைந்துள்ள வங்கிகளை சீரமைப்பதை தொடக்கும். இம்முறை யூரோப்பகுதியில் உள்ள 6,000 வங்கிகளுக்கும் பொருந்த வேண்டும். ஆனால் 128 மிகப்பெரிய நிறுவனங்கள்தான் நேரடியாகப் பாதிக்கப்படும்.

வங்கிகள் 55 பில்லியன் யூரோக்கள் கொண்ட ஒரு தீர்வு நிதியை (a resolution fund) நிறுவும் கட்டாயத்தில் இருக்கும். 2016க்குப்பின், ஒரு வங்கி திவாலானால், அதன் பங்குதாரர்கள், கடன கொடுத்தவர்கள் முதலில் அதற்கு பணம் கொடுக்க வேண்டும், பின்னரே தேசிய அரசாங்கமும் இறுதியில் தீர்வு நிதியும் உதவியளிக்கும்.

ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் மார்ட்டின் ஷூல்ஸ் (SPD) திட்டத்தின் கால அவகாசம் மற்றும் தீர்வு நிதியின் அளவு இரண்டையும் குறைகூறியுள்ளார். இந்த நிதி முற்றிலும் போதாது என்றும் கூறியுள்ளார். பாராளுமன்றத்தின் எதிர்ப்பையும் அவர் அறிவித்துள்ளார். “ஒன்று முறையான வங்கிகள் ஒன்றியத்தை நிறுவவேண்டும் அல்லது எதையும் நிறுவத் தேவையில்லை.” என்று அரசாங்க தலைவர்களுக்கான  உரையில் அவர் கூறினார்.

பொது வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கையை பொறுத்தும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மத்திய ஆபிரிக்கக்  குடியரசில் நடத்தும் போர் முயற்சிக்கு ஐரோப்பிய நிதிய ஆதரவை கேட்டபோது, மேர்க்கெல் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். “முடிவெடுக்கும் வழிமுறைகளில் நாம் தொடர்பில்லாத நிலையில் அந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு நாங்கள் நிதியளிக்க இயலாது.” என்று அவர் அறிவித்தார்.

வருங்காலத்தில் பிரான்ஸ் வேறுவிதமாக நடந்து கொள்ளும் எனத் தான் எதிர்பார்ப்பதையும் மேர்க்கெல் தெளிவுபடுத்தினார். ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுத் தீர்மானத்தைப் பெற்றுச் செயல்பட்டால் மட்டும் போதாது என்றார் அவர். ஐரோப்பிய பொறுப்பில் பங்குபெற ஒருநாடு விரும்பினால் ஐரோப்பிய ஒன்றியப் பங்காளிகளுடைய உடன்பாட்டையும் பெறவேண்டும் என்றார் அவர்.

ஐரோப்பாவின் இராணுவ பலத்தை வலுப்படுத்தும் பிரச்சினையிலும் ஒற்றுமை இருந்தது. ஆனால் இங்கும் தேசிய முரண்பாடுகள் விவரங்கள் குறித்து வெளிப்பட்டன; எல்லாவற்றிற்கும் மேலாக நிதிப் பிரச்சினை எழுந்தது. உச்சிமாநாடு ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் பணிகள் குறித்து தெளிவற்றுத்தான் கூறுகிறது. 2020க்கும் 2025க்கும் இடையே ஆளற்ற விமானமான டிரோன் அபிவிருத்திசெய்வதில் ஒத்துழைப்பு வேண்டும். ஆனால் இது தேசிய அரசுகளுக்கு சொந்தமானதா அல்லது ஐரோப்பாவிற்கு சொந்தமான டிரோன்களுக்கா என்பது தீர்க்கப்படவில்லை.

ஆகாயத்தில் எரிபொருள் நிரப்புதல், துணைக்கோள் தொடர்பு முறை மற்றும் இணைய தள பாதுகாப்பு குறித்து ஒற்றுமை அடையப்பட்டது. ஆனால் விவரங்கள் வெளிவரவில்லை.

எவ்வாறாயினும், ஒரு பிரச்சினையில் உச்சிமாநாட்டில் பங்கு பெற்றவர்கள் ஏகமனதாக இருந்தனர். அந்த இயக்கத்தின் தலைமையில் தீவிர வலதுசாரிகளும் பாசிச அமைப்புக்களும் இருந்தபோதிலும்கூட ஒரு கூட்டு அறிக்கையில் அவர்கள் உக்ரேன் எதிரத்தரப்பிற்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்.