சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Fed decision fuels global financial parasitism

பெடரல் தீர்மானம் உலகளாவிய நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தை தூண்டிவிடுகிறது

Nick Beams
24 December 2013

Use this version to printSend feedback

நிதியியல் சந்தைகளுக்குள் ஆண்டுக்கு 1 ட்ரில்லியன் டாலர் பாய்ச்சும் அதன்பணத்தைப் புழக்கத்தில் விடும்" (quantitative easing) திட்டத்தை "சுருக்குவதற்கான" அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆணையத்தின் தீர்மானம், வழக்கமான செலாவணி கொள்கையை நோக்கி இன்னும் அதிகமாக திரும்புவதற்கு சமிக்ஞை அளிப்பதாக கருதப்படலாம்.

இது உலகம் முழுவதிலும் பில்லியன் கணக்கான மக்களின் சமூக நிலைமைகளை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மோசமாக்கி இருந்த அதேவேளையில், பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டிற்கு வார்த்தையால் கூறமுடியாத செல்வ வளத்தை கொண்டு வந்து குவித்துள்ள நிதியியல் ஒட்டுண்ணித்தனத்திற்கு தீனிபோட, மிக மிக மலிவு பணத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கான ஒரு வாக்குறுதியாக அது மாறி இருந்தது.

இந்த முக்கிய தீர்மானமானது ஒரு மாதத்திற்கு 10 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்துவாங்கும் திட்டத்தைக் குறைப்பதல்ல. அந்த ஒரு நகர்வு வெகு குறைந்த விளைவை ஏற்படுத்தும் அல்லது எந்தவொரு விளைவையும் ஏற்படுத்த போவதில்லை. மாறாக பெடரலின் வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்தில் இருந்து 0.25 சதவீதத்திற்குள் வைத்திருப்பதிருப்பதென்ற பெடரலின் பொறுப்புறுதி தான் அங்கே முக்கிய முடிவாகும்.

அமெரிக்க வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.5 சதவீதத்திற்கு கீழே சென்றபோது, அதன் விகிதங்களைபிரதான வங்கிகளுக்கு அது வழங்கும் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதங்களைஉயர்த்த ஆலோசித்து வருவதாக அமெரிக்க மத்திய வங்கி முன்னதாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால் கடந்த புதனன்று வெளியிட்ட அதன் அறிக்கையில், "கடந்த காலங்களில் இருந்ததைப் போல" உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் அதே அளவிற்கு குறையும் வரையில்வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குறைந்தபட்சம் 2015 வரையில், அல்லது ஒருவேளை அதையும் கடந்து கிட்டத்தட்ட பூஜ்ஜிய வட்டிவிகிதத்தில் வங்கிகளுக்கு பணம் வழங்குவது தொடரும் என்பதை பெடரல் தெளிவுபடுத்தி இருந்தது.

அதற்கேற்றவாறு நிதியியல் சந்தைகள் அந்த முடிவை கொண்டாடின. வோல் ஸ்ட்ரீட்டின் S&P 500 குறியீடு இந்த ஆண்டில் இதுவரையில் 27 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளதோடு, இந்த வார இறுதியில் சாதனையளவு உயரத்தை எட்டியது.

பெடரல் கொள்கை நிஜமான பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவோ அல்லது அதன் உத்தியோகபூர்வ அறிவிப்பான வேலைகளை உருவாக்கவோ போவதில்லை என்பதை அந்த அறிவிப்பு தெளிவுபடுத்தியது. ஆனால் அதற்கு மாறாக உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒரு மத்திய உட்கூறாக மாறியுள்ள நிதியியல் ஒட்டுண்ணித்தனத்திற்கு நிதிகளைத் திருப்பிவிட்டுள்ளது. வெளியேறும் பெடரல் தலைவர் பென் பெர்னான்கே அவரது மணிக்கணக்கான பத்திரிகையாளர் கூட்டங்களில் பலமுறை கூறியுள்ளதைப்போல, பெடரல் "அதிகபட்சமாக இணங்கி" நிற்கிறது. அதாவது, வங்கிகள் மற்றும் பிரதான நிதியியல் அமைப்புகளின் கட்டளைகளுக்கு வேலை செய்யவே அது அங்கே இருக்கிறது.

எந்தளவிற்கு அது இணங்கி உள்ளதென்பதை பெடரலின் சொத்து கையிருப்பின் விரிவாக்கத்தில் காண முடியும். கடந்த வாரத்தில் மட்டும் அவை 14.1 பில்லியன் டாலர் அதிகரித்து, மொத்த கையிருப்பை 4 ட்ரில்லியன் டாலருக்கு எடுத்து சென்றது. 2008இல் இது 870 பில்லியன் டாலராக இருந்தது. நிதியியல் சொத்துக்களின் பெடரல் கையிருப்பு தற்போது மொத்த அமெரிக்க வரவு-செலவு கணக்கை விட அதிகமாக மற்றும் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகமாக உள்ளது.

பணத்தை புழக்கத்தில் விடும் தங்களின் சொந்த கொள்கைகளை கொண்டுள்ள ஜப்பானிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கி ஆகியவற்றின் கையிருப்புகளும் அதிகரித்து வருவதோடு சேர்ந்து, பெடரலின் இருப்புநிலை கணக்கு அறிக்கை வேகமாக விரிவடைவதானது, ஒரு புதிய நிதியியல் நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது. பெர்னான்கே அவரது பத்திரிகையாளர் கூட்டத்தின்போது இதைத்தான் குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறுகையில்,பெடரல் ரிசர்வின் இருப்புநிலை கணக்கு அறிக்கை பெருகி வருவதால், அந்த இருப்புநிலை கணக்கை நிர்வகிப்பதும், அந்த இருப்புநிலை கணக்கில் இருந்து வெளியேறுவதும், மிகவும் சிக்கலாக மாறி வருகிறது, என்றார்.

இது ஏனென்றால் நிதிய ஊக்கப்பொதியை கணிசமான அளவிற்கு குறைப்பது, மற்றும் அதன் விளைவாக வட்டிவிகிதங்கள் உயர்வதென்பது, மத்திய வங்கிகளிடம் உள்ள நிதியியல் சொத்துக்களின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை குறிக்கிறது. ஏனெனில் வட்டிவிகிதங்களும் பத்திர விலைகளும் எதிரெதிர் திசைகளில் நகர்கின்றன. இது குறிப்பிடத்தக்க அளவிற்கு இழப்புகள் ஏற்படும் அபாயத்தை முன்னிறுத்துகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்,சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு, அமெரிக்க பெடரலுக்கான இழப்புகள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக, ஜப்பானிய மத்திய வங்கியின் இழப்புகள் 7.5 சதவீதமாக மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கியின் இழப்புகள் 6 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக எடுத்துக்காட்டியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டத்தாலேயே உருவாக்கப்பட்டுள்ள நிலைமைகள், அதாவது ஒரு புதிய நிதியியல் நெருக்கடி, 2008 நிலைமுறிவையும் விட இன்னும் அதிகமான ஆழ்ந்த விளைவுகளைக் கொண்டிருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்ததைப் போல அல்லாமல், இந்த முறை உலகின் பிரதான மத்திய வங்கிகள் நேரடியாக பாதிக்கப்படக் கூடும்.

2008இல் தொடங்கிய உலக முதலாளித்துவத்தின் நிலைமுறிவு தீர்க்கப்பட்டு வருகிறதென்பதிலிருந்து வெகுதூரத்தில் இருந்து கொண்டு, ஆழமடைந்து வருகிறது என்பதையும் மற்றும் இன்னும் கூடுதலான வெடிப்பார்ந்த வடிவங்களை எடுக்கவும் சாத்தியக்கூறு உள்ளது என்பதையுமே பெடரலின் சமீபத்திய முடிவு தெளிவுபடுத்துகிறது.

இறுதி ஆய்வுகளில், அனைத்து நிதியியல் சொத்துக்களும் உலக பொருளாதாரத்தின் கீழ் இருக்கும் செல்வ வளங்களாகும். நிதியியல் சந்தைகளுக்குள் பணத்தைத் தொடர்ந்து பாய்ச்சும் நடவடிக்கையால் குறிப்பிட்ட காலத்திற்கு வேண்டுமானால் நிஜமான சூழ்நிலையை மறைக்க முடியும், அது அதிகரிக்கும் சொத்துக்களின் மதிப்புகள் மீதான ஊகவணிகத்தின் மூலமாக செல்வ வளத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் இறுதியாக, கார்ல் மார்க்ஸ் அதை குறிப்பிடுவதை போல, ஒரு வீடு வீழ்வதை நாம் காதுகளால் கேட்கும் போது ஈர்ப்புவிசை விதி எவ்வாறு தன்னைத்தானே உறுதிப்படுத்திக்கொள்கின்றதோ, அதை போலவே, முதலாளித்துவ பொருளாதாரத்தின் விதிகள் தம்மைத்தாமே உறுதிப்படுத்திக்கொள்கின்றன.

நிதியியல் சொத்துக்கள் பாரியளவிற்கு அளவில் பெருகி வருகின்ற அதேவேளையில் நிஜ பொருளாதாரம் கிட்டத்தட்ட விரிவாகவேவில்லை. அவ்வாறான விரிவாக்கம் முதலீட்டால் உந்தப்படுகின்றது. மூலதன முதலீடுகள் சந்தைகளில் ஒரு வளர்ச்சிக்கும் மற்றும் உற்பத்தியையும் அதிகரிக்கின்றன. ஆனால் நிதியியல் செல்வ வளம் தாவி பாய்ந்து சுழன்று அதிகரிக்கின்றது, முதலீடோ வீழ்ச்சி அடைந்து வருகிறது.

கடந்த ஜூலையில், பைனான்சியல் டைம்ஸின் Lex பிரிவு செய்திகள், உலகளாவிய பெருநிறுவன மூலதன செலவினங்களில் மந்த நிலை" என்று எதை அது அழைத்ததோ அதை குறிப்பிட்டு காட்டியது. சுமார் 4 ட்ரில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ள ரொக்க கையிருப்புகளை நிறுவனங்கள் கொண்டிருந்தாலும் கூட, நடைமுறையில் இந்த ஆண்டு மூலதன செலவினங்கள் வீழ்ச்சி அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது, மற்றும் 2014இல் 5 சதவீத அளவிற்கும் கூட வீழ்ச்சி அடையக்கூடும்.

இது எதிர்கால பொருளாதார விரிவாக்கத்திற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு பதிலாக, மூலதன செலவுகள் இப்போதிருக்கும் மூலதன கையிருப்புகளை மதிப்பு குறைப்புக்களை சமாளிக்கும் அளவிற்கு கூட இல்லை என்பதையே குறித்துக் காட்டுகிறது.

உலகின் பிரதான பெருநிறுவனங்களில் பெரும்பான்மையான மற்றும் தீர்க்கமான பங்குதாரர்களாக உள்ள வங்கிகள், தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் அதுபோன்ற செலவுகளுக்கு விரோதமாக உள்ளன, அந்த நடவடிக்கை இலாபங்களைக் குறைக்கும் என்றும் நிதியியல் தந்திரங்களின் மூலமாக அவற்றை சம்பாதித்து விடலாம் என்றும் அவை கருதுகின்றன.

இதன் விளைவாக, பெருநிறுவனங்கள் அவற்றின் ரொக்க கையிருப்புகளை முதலீட்டிற்காக பயன்படுத்துவதில்லை, மாறாக பங்கு பத்திரங்களை திரும்ப திரும்ப வாங்குவதற்கும், அதன் மூலமாக பங்கு விலைகளை உயர்த்துவதற்கும் மற்றும் பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலமாக அதிகப்படியான இலாபங்களைக் குவிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகின்றன. கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்க நிறுவனங்கள் 2008க்குப் பின்னர் இருந்து முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அவற்றின் சொந்த பங்குகளையே திரும்ப திரும்ப வாங்குவதில் அதிகமாக செலவிட்டு வருகின்றன.

உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியை தீர்க்காமல், பெடரலின் கொள்கைகள் ஒரு பெரிய பொருளாதார புற்றுநோயை வளர்த்து கொண்டிருக்கின்றன, அது உலக மக்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. அது ஒரு சோசலிச வேலைதிட்டத்திற்கான மற்றும் உலகப் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கா போராட்டத்தில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டின் மூலம் அறுவைச்சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும். ஒரு நிதியியல் பிரபுத்துவத்தின் பேராசைமிக்க தேவைகளுக்காக இல்லாமல், மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்புமுறையை ஸ்தாபிப்பதற்காக, இது பிரதான வங்கிகள், நிதியியல் அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்களை பறிமுதல் செய்வதிலிருந்து தொடங்குகிறது.