சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Hayao Miyazaki’s The Wind Rises: Blocking out the rest of the world

ஹயோ மியாசகியின் The Wind Rises: உலகத்தின் மீதமுள்ள பகுதியை தடை செய்தல்

By John Watanabe
7 November 2013

Use this version to printSend feedback

The Wind Rises (Kaze Tachinu) ஸ்டூடியோ Ghibli இனதும், பிரபல ஜப்பானிய திரைப்பட இயக்குனருமான ஹயோ மியாசகியின் (1941ல் பிறந்தவர்) சமீபத்திய உருவாக்கமாகும். அவரது பகிரங்க அறிவித்தலின்படி, இது இயக்குனரது கடைசி திரைப்படமும் கூட.

இந்த இயக்கமூட்டல் [animated] திரைப்படம் ஜப்பானில் ஜூலை மாதம் வெளியானது, நியூயோர்க் மற்றும் லொஸ் ஏஞ்ஜல்ஸில் நவம்பர் 8ல் வெளியாகும் என்பதால் இத்திரைப்படம் அகாடமி விருது பரிந்துரைகளுக்கு தகுதிபெற முடியும். பெப்ரவரியில் வட அமெரிக்காவில் பரவலாக வெளியிட திட்டமிடப்படுகிறது.

இந்த இயக்கமூட்டல் திரைப்படத்தின் கதை, பேர்ல் துறைமுகம் மீதான தாக்குதலிலும் பின்பு, தற்கொலை தாக்குதல் திட்டத்திலும் பயன்படுத்தப்பட்ட இரண்டாம் உலகப் போர் சகாப்தத்தின் Mitsubishi A6M Zero fighter இன் வடிவமைப்பாளரான, ஜிரோ ஹோரிகோஷியை மையமாகக் கொண்டது. இதே பெயரிலான டாட்ஸுவோ ஹோரி (1936-37) இன் நாவலையும் மேலெழுந்தவாரியாக அடிப்படையாகக் கொண்டது. அதற்கு பதிலாக பிந்தையதில், அதன் தலைப்பு 1920ல் போல் வலேரி எழுதிய ஒரு பாடலிலிருந்து (“Le vent se lève! … Il faut tenter de vivre!”) பெறப்பட்டது. (“காற்று உயர்கிறது !... நாம் வாழ முயற்சிக்க வேண்டும் !”)

இத்திரைப்படம் முழுக்க வலேரியின் வரிகள் வலியுறுத்தப்படுவதுடன் இதில் முற்றிலுமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓர் அர்த்தத்தில் ஊறிப்போயுள்ளதாகத் தெரிகிறது. எந்த வகையிலும் ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கின்ற வாழ்க்கையின் பரந்த நிலைமைகளை கருத்தில் கொள்ளாமல், ஒருவரது உடனடி சூழ்நிலைகளில் முடிந்த வரையில் வாழவும், செயல்படவும் வேண்டும் என்பதே அந்த அர்த்தம்.

ஹோரி (1904-53) ஓர் எழுத்தாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவர். ஒரு வர்ணனையாளரின் கூற்றுப்படி, இவரது ஆரம்பகால படைப்புகள்பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் உயிரோட்டத்தில்படைக்கப்பட்டவை. உதாரணமாக, மறைமுகமான இடதுசாரி சார்ந்த கதாப்பாத்திரங்கள்... பின் இவரது பிற்கால படைப்புகள்நவீனத்துவத்தை நோக்கியவையாக அதிகம் காணப்பட்டது. The Wind Rises, சானிட்டாரியம் எனப்படும் ஒரு மலைப்பகுதியில், “இறுதியாக இவரை அடிபணிய வைத்த, காச நோயுடனான இவரது (ஹோரி) உண்மையான போராட்டங்களை சித்தரிக்கும்ஒரு காதல் கதையாகும். மூலப் படைப்புக்கும் போர் விமான வடிவமைப்பாளர் ஹோரிகோஷிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது செருகல் முற்றிலுமாக மியசகியின் வேலையே.

ஜப்பானிய தேசியவாதிகள் மற்றும் இராணுவவாதிகளின் பெருமைக்கான ஒரு முக்கிய ஆதாரமாக Zero fighter இருந்தது. இரண்டாம் உலகப் போரில், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் ஆரம்ப கால வெற்றிகளின் சின்னமாக அவர்கள் இதனைப் பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 4இல், அசஹி ஷிம்பனுடனான ஒரு நேர்முகத்தில் மியசகி, “ஸீரோ (பெயரில் இருக்கும் பூஜ்ஜியம் என்ற வார்த்தை) நமது ஒருங்கிணைந்த மனநிலையை குறிக்கிறதுமேலும் ஜப்பானியர்களாகியநாம் பெருமைபடக்கூடிய சில விஷயங்களுள் ஒன்றையும் அந்த ஸீரோ குறிக்கிறதுஎன்றார்.

பறப்பது, அல்லது ஆகாய விமானங்களை தானாகவே வடிவமைப்பது போன்ற கனவுகளுடன் கூடிய ஒரு சிறுவனான ஜிரோ ஹோரிகோஷி (Jiro Horikoshi) உடன் இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது. அவன் டோக்கியோ பல்கலைக்கழகம் வரை தனது கனவினை பின் தொடர்கிறான், அங்கு அவன் ஒரு பெரும் நிலநடுக்கத்தை அனுபவிக்கின்றான் (1923இல் கண்டோவின் பெரும் நிலநடுக்கம் ஏற்படுகிறது). அதை தொடர்ந்த நீண்ட குழப்பமான நிலைமைகளின்போது, ஒரு பெண்ணும் அவளது காயமடைந்த வேலைக்காரியும் டோக்கியோவில் இருக்கும் ஒரு பெரிய மாளிகைக்கு திரும்ப அவன் உதவுகிறான். பின்னர் நன்றிக்காககூட காத்திருக்காமல், ஜிரோ அங்கிருந்து மறைந்து விடுகிறான்.

மிட்சுபிஷி போர்விமான வடிவமைப்பில் பணியாற்றும் ஜிரோ, மேதைத்தனத்தைக் காட்டி தனது சக பணியாளர்களைவிட அதிகமாக சக்தியை செலவிட்டு நிறுவனத்தின் உயர்நிலைக்கு செல்கின்றான். கருஸவாவின் உல்லாச நகரில், அவன் நில நடுக்கத்திற்கு பின்னர் உதவி செய்த பெண்ணான நாகோவை தற்செயலாக சந்தித்து இறுதியாக அவளுடன் திருமணத்தில் கை கோர்க்கிறான். ஆயினும், அவள் தீவிரமாக காசநோயால் பாதிக்கப்பாடிருக்கிறாள், அதுவே இத்திரைப்படத்திற்கு அதன் சோக அம்சங்களை வழங்குகின்றது.

The Wind Rises அதன் இரண்டு மணி நேர காலத்தில் மெதுவான வேகத்தில் பயணிக்கிறது. ஆயினும், இத்திரைப்படம் வேறு எவரைப் பற்றியும் குறிப்பிடாமல், பிரதான கதாப்பாத்திரங்களான ஜிரோ மற்றும் நாகோவைப் பற்றி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைவாகவே வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக, கதாப்பாத்திரங்களின் சூழ்நிலை பார்வையாளர்களிடம் சற்று சிறிதான உணர்ச்சிகரமான பிரதிபலிப்பையே உண்டாக்குகிறது.


The Wind Rises

ஜிரோ, நாகோவின் இறுதி விதி மற்றும் போரின் அழிவுக் காட்சிகள் இரண்டினையும் சகஜமாக எடுத்துக் கொண்டவனாக தெரிகிறான். அதே நேரம், போர் கிட்டத்தட்ட தவிர்க்கமுடியாதபடி ஓர்இயல்பானகுணாதிசயம் கொண்டது என்று கருதி, இந்த யுத்த அழிவு, முந்தைய நில நடுக்கம் போன்ற அதே வகையில் பெருமளவு சித்தரிக்கப்பட்டுள்ளது.

மியாசகி, (Princess Mononoke  [1997] மூலம் அமெரிக்காவில் பிரபலமாக அறியப்படும்) ஜப்பானிய சினிமா மற்றும் இயக்கமூட்டல் திரைப்படங்களில் அரை நூற்றாண்டு வரலாறு கொண்டவர். கருதத்தக்க அளவிலான இவரது திறமைகளை யாரும் மறுக்க முடியாது. The Wind Rises உயிரியக்கமுள்ள காட்சிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பதுடன் வரலாற்றுக் காட்சிகள் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு, கவனமாக மறு உருவாக்கமும் செய்யப்பட்டுள்ளன. அது டோக்கியோவின் ஒரு நாட்டுப்புறமோ, பரபரப்பான பெரு நகரமோ அல்லது நகோயா புறநகரின் தொழிற்துறைமயமாக்கலின் முயற்சிகளோ, எதுவாயினும் காட்சிகள் உண்மையை காட்சியளிப்பதுடன், பல மணிநேர உழைப்பின் வெளிப்பாடு என்பது தெளிவாகத் தெரிகிறது.

சில தருணங்களில் மியாசகி ஓர் அகன்ற உள்ளடக்கத்தையும் தருகிறார். ஒரு காட்சியில், ஜிரோவும் அவர் கூட்டாளி ஒருவரும், போருக்கான செலவினத்திலிருந்து எத்தனை பட்டினியாகக் கிடக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியுமென்று விவாதிக்கின்றனர். இன்னொரு காட்சியில் இரகசிய காவல்துறை பற்றிய மரியாதை குறித்து ஜிரோவின் முதலாளி அவனுக்கு எச்சரிக்கிறார். “மறைப்பதற்கு எதுவும் இல்லாத மூன்று பேரை ஏற்கெனவே அவர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.” அதில் ஒரு வெற்று பயமும் இருக்கிறது. ஆயினும், இதுபோன்ற காட்சிகள் குறைவாக இருப்பதுடன் அவற்றுக்கிடையே மிகுந்த இடைவெளியும் காணப்படுவதுடன் மீதமுள்ள கதையிலிருந்து இயல்பாகவும் நகர்த்திச் செல்லப்படவில்லை.

ஜப்பானின் பெருமளவிலான பொருளாதாரத்தை இன்றுவரை கட்டுப்படுத்தியிருக்கும் நம்பிக்கைக்குரியவைகளுள் ஒன்றான மிட்சுபிஷி கனரக தொழிற்சாலைக்காக ஜிரோ பணியாற்றினார் என்பது முக்கிய சமூக, பொருளாதார மற்றும் ஒழுக்க பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வழங்குகிறது. இவை தொடரப்படுவதில்லை என்பதுடன் இதற்கு திரைப்பட இயக்குனரின் பார்வையே காரணம்.

Asahi உடனான ஒரு நேர்முகத்தில் மியாசகி, ”எனக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் மட்டுமே நான் பயனுள்ள வகையில் இருக்க முடியும் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்... எனது தனிப்பட்ட மட்டுப்படுத்தல்களை நான் ஒத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. கடந்த காலத்தில், உலகிற்கோ அல்லது மனிதநேயத்திற்கோ எதாவது செய்ய கடமைப்பட்டவனாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் பல வருடங்களில் நான் அதிகம் மாறி இருக்கிறேன். நான் சோசலிச இயக்கத்தில் மூழ்கிக்கிடந்த காலமும் உண்டு, ஆனால் நான் முற்றிலும் சூதுவாதற்றவனாக இருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்.

மியாசகி சில நேரங்களில் ஒரு அமைதிவாதியாக கருதப்பட்டிருப்பதுடன், உண்மையில் இவரது ஆரம்ப காலகட்ட படைப்புகள் சில போர் மற்றும் பிற சமூக பாதிப்புகளின் அபாயங்கள் குறித்து எச்சரித்துள்ளன. ஆயினும், சந்தேகத்திற்கு இடமின்றி இவர் வலதுபக்கம் திரும்பியுள்ளார். The Wind Rises க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், உதாரணமாக, கூறப்படும் வகையில் ஜப்பானிய படைகள் ஒரு முறைகூட சுடவில்லை என்பதுடன் யாரும் பாதிக்கப்படவில்லை என்ற காரணத்தால், ஈரான் மற்றும் பாரசீக வளைகுடாவில், ஜப்பானியசுய பாதுகாப்புப் படைகளைஈடுபடுத்துவதற்கு மியாசகி ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட மட்டம் வரைபோர்த் தளவாடங்கள் தேவை என்று வாதிட்டும், சீனாவின்விரிவுபடுத்தல்குறித்து எச்சரித்தும், “சுவிட்சர்லாந்து அல்லது ஸ்வீடன் போன்ற நடுநிலையான நாடுகளுக்கானஅவரது முந்தைய பாராட்டுதல்களை இயக்குனர் மறுக்கிறார். தேசிய சுய-சார்பு நோக்கிலிருந்து உழைப்பின் சர்வதேசரீதியான பிரிவை இவர் கேள்விக்குரியதாக்குவதுடன், ஜப்பானில் சுமார்35 மில்லியன்கள்மக்கள் தொகைதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மீதமிருக்கும் 90 மில்லியன் மக்கள் தொகைக்கு என்ன செய்வது என்பது குறித்த விளக்கமும் கொடுக்காமல், போருக்குமிகை மக்கள் தொகையைகுற்றஞ்சாட்டுகிறார்.

நாம் அங்குலம் அங்குலமாக ஏழையாக வேண்டி இருக்கிறது. இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது, அதற்கு எதுவும் செய்ய முடியாதுஎன்று உள்நாட்டு விடயத்தில், விமர்சனத்திற்கு இடமின்றி பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை மியாசகி ஒப்புக் கொள்கிறார். “எதிர்காலத்திற்கான நம்பிக்கையை பெறுவதை விட, நண்பர்கள், குடும்பம், வேலை ஆகிய நிகழ்காலத்தில் ஒருவர் கவனம் செலுத்தவேண்டும், இறுதியாக, அப்படியென்றால், “கடந்த காலத்தில் கவலைகள் இல்லாமல் இருந்ததா?... நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் பணியிலும் இருந்தால், அதுவே போதுமானது. வேலை இல்லையென்றால், உங்களுக்கான சுயமான வேலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்என்று கூறி, இளைய தலைமுறையின் அதிகரிக்கும் கவலைகளை நிராகரிக்கிறார்.

ஏகாதிபத்தியம் மற்றும் போரை மியாசகி வெளிப்படையாக புகழவில்லை. ஆனால் Zero fighter மாதிரியான இராணுவ சின்னங்களை மேம்படுத்துவது, இரண்டாம் உலகப் போர் மற்றும் பொதுவாக போர் குறித்த அவரது தெளிவற்ற நிலைப்பாடு மற்றும் முற்றிலும் தனிப்பட்ட வாழ்வு, தன்னை சூழவுள்ள நிலைமை மீது கவனம் செலுத்துவது குறித்த இவரது கருத்துகள், அடுத்த பிராந்திய அல்லது இவரது சொந்த ஜப்பானையும் ஈடுபடுத்தும் உலக யுத்தம் போன்ற அபாயங்களின்போது, புறநிலையாக அவரது பார்வையாளர்களை நிராயுதபாணியாக்க உதவும்.  

தவிர்க்க முடியாத வகையில் இந்த அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள், கலைத்துறை கேள்விகளைப் பொறுத்தவரையில் அதிர்ச்சிகரமான நிலைப்பாட்டுக்கு வழி வகுக்கின்றன. அதே பேட்டியில், “உங்களது எல்லைக்கு அப்பால் நடக்கும் எதற்கும் நீங்கள் பொறுப்பாக முடியாது என்று சொல்கிறீர்கள், ஆனால் யதார்த்தத்தில் நீங்கள் உங்கள் திரைப்படங்கள் மூலமாக எண்ணற்ற மக்களை ஈர்க்கிறீர்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, மியாசகி, “நான் திரைப்படங்களை வியாபாரமாக எடுக்கிறேன், கலாச்சார முயற்சியாக அல்ல. எனது திரைப்படங்கள் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. நான் படைப்பதில் மக்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்திருந்தால், என் நிறுவனம் எப்பொழுதோ திவால் ஆகியிருக்கும்என்கிறார். இது உண்மையில் மிக மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாகும்.