சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan economists warn the government

இலங்கை பொருளியலாளர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தை எச்சரிக்கின்றனர்

By Saman Gunadasa
22 November 2013

Use this version to printSend feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் இலங்கை மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதர அபிவிருத்தி பற்றிக் கூறும் பிதற்றல்களை தூக்கியெறியும் வகையிலான கருத்தை, அண்மையில் நடைபெற்ற இலங்கை பொருளியலாளர்களது அமைப்பின் பொருளியலாளர்கள் பலரும் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 25-26ம் திகதிகளில் நடைபெற்ற அவ்வமைப்பின் வருடாந்த மாநாட்டில், இலங்கைப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் தீர்க்கமான நெருக்கடியின் பண்பையும், தீவிரமடையும் உலகப் பொருளளாதார நெருக்கடியின் மத்தியில் நாடு பொருளாதார வங்குரோத்து நிலைக்குள் விழக்கூடிய அபாயம் குறித்தும், அங்கு பிரதான விரிவுரை நிகழ்த்திய ஏ.டி.வி.டி.எஸ். இந்திரரட்ன, ஜி. உஸ்வட்டஆராச்சி ஆகியோர் கவலை தெரிவித்தனர்.

ஸ்திரமான அபிவிருத்தியை நோக்கிய பாதைஎன்ற தலைப்பில் தலைமையுரை நிகழ்த்திய ஏ.டி.வி.டி.எஸ். இந்திரரட்ன, இலங்கை கடந்த ஆண்டுகளில் அதிகம் கடன் பெற்றதனூடாகவே உயர்ந்த வளர்ச்சி வீதத்தை காட்டியது, அது நிரந்தரமான வளர்ச்சி அல்லாத அதேவேளை, 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் காணப்பட்ட நூற்றுக்கு 8 வீத வளர்ச்சி வேகமானது 2012ல் நூற்றுக்கு 6.4 வரை கீழிறங்கியுள்ளது, என்று தெரிவித்தார்.

அதிகரித்த கடன் பெறுவதால் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மேலும் விரிவடைந்ததோடு அது இறக்குமதி மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கும் காரணமாகியதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்த்திரமான அபிவிருத்திக்கு உள்ள தடைகள்என்ற தலைப்பில், மாநாட்டில் பிரதான விரிவுரை நிகழ்த்திய, கேம்பிறிஜ் பொருளியலாளரான ஜீ. உஸ்வட்டஆராச்சி, இலங்கை உள்ளடங்கலாக முன்னேற்றமடையாத நாடுகள், விசாலமான கடன் பெறுதலினூடாக, அக்கடன்களை முக்கியமல்லாத துறைகளில் பயன்படுத்தி, வெள்ளை யானைகளை வளர்ப்பதன் மூலம், தோன்றிய குமிழிகள் வெடித்து பொருளாதார நெருக்கடிக்கு வழியமைத்துள்ளதாக கூறினார். கடன் வழங்குபவர்கள், வட்டி வீதங்களில் சிறிய மாற்றங்களுக்கு கூட ஒளி வேகத்தில் பிரதிபலிப்பதனால், குறுகிய கால கடனை அடிப்படையாகக் கொண்டு அந்நிய செலாவனியை பராமரிக்கும் நாடுகள், தமது பொருளாதாரத்தை இயக்குவது சம்பந்தமாக கவனமாக இருக்க வேண்டும், என அவர் குறிப்பிட்டார். வர்த்தகக் கடனில் பெரிதளவும் தங்கியுள்ள இலங்கைப் பொருளாதாரம் பற்றியே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் உயர்ந்த பணவீக்க வீதம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் காணப்படும் நூற்றுக்கு 1.5 விகித பணவீக்க வீதத்தை விட அதிகமாக இருப்பதாகவும், திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளுக்காக குறுகியகால ஸ்திரமற்ற வெளிநாட்டுப் பணம் கிடைப்பதனால், அதன் மீது அரசாங்கம் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கம் அல்லது கூட்டுத்தாபனங்கள் கடன்களை மீளக் கொடுப்பதற்கு இயலுமை உடையனவா இல்லையா என்பதை பொருட்படுத்தாது, குறைந்தகால கடன் பெறுதலின் மீதே தங்கியிருந்தால், கடன் வழங்குநர்கள் நம்பிக்கை தகர்ந்து, களத்தில் இருந்தே காணாமல் போய்விடுவர், என உஸ்வட்டஆராச்சி விபரித்தார். இந்திரரட்ன, உஸ்வட்டஆராச்சி ஆகியோரின் கருத்துக்களில் வெளிப்படுவது என்னவெனில்,  முதலாளி வர்க்கத்தின் கனிசமான பிரிவினரிடையே, அரசாங்க கொள்கையின் காரணமாக வளர்ந்து வரும் அபாயம் பற்றி ஏற்பட்டுள்ள கவலை மற்றும் மகிழ்ச்சின்மையே ஆகும்.

சுயாதீனமான முதலாளித்துவ பொருளியலாளர்களான இவர்கள், இந்த தீர்க்கமான பொருளாதார நெருக்கடிக்கு சமர்ப்பிக்கும் தீர்வு, சர்வதேச நாணய நிதியமோ எகாதிபத்திய வங்கிகளோ முன்வைக்கும் யோசனைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. எனவே, இந்த நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதை இலக்காக கொண்ட யோசனைகளையே அவர்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறி வருகின்றனர்.

எந்தளவு மக்களின் வெறுப்புக்கு உள்ளாகினாலும், தகுந்த பொருளாதார சீர்திருத்தத்தை செய்ய வேண்டும் என உஸ்வட்டஆராச்சி கூறினார். செலவீனத்தை அதிகரிப்பதற்கு முன்னர், வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்றும், இன்று நடப்பது யாதெனில், ஏற்படப்போகும் விளைவைப் பற்றி கவனிக்காது, வெளிநாட்டு வர்த்தக சந்தைகளில் கடன்பெற்று செலவு செய்வதே என்றும் அவர் குறிப்பிடுகிறார். உழைக்கும் மக்கள் மீது மென்மேலும் வரிச்சுமையை சுமத்த வேண்டும் என்பதே இந்த விளக்கத்தின் அர்த்தமாகும்.

பேராசிரியர் இந்திரரட்னவின் யோசனையின்படி, அரசதுறை நிறுவனங்களின் முகாமைத்துவத்தை அபிவிருத்தி செய்து, செயற்பாட்டை உயர்த்தி, வீண் விரயம், ஊழல் மற்றும் மேற் பூச்சுக்களையும் நிறுத்தவேண்டும். வெளிநாட்டு முதலீட்டை வரவழைக்க, சமாதானம் மட்டும் போதாதுள்ளதுடன் நேர்மையான ஆட்சி, சட்ட ஆட்சி, தகவல் பெறும் உரிமை, செயற்பாடு, நேர்மையான மற்றும் சுயாதீனமான அரச நிறுவனங்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்கள், சரளமான வரி மற்றும் குடிவரவு குடியகல்வு விதிகளும் அவசியம் எனக் அவர் கூறினார். சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதில் ஏற்படும் பலவீனம் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்கு பாதகமாக விளங்குவதாகவும் உஸ்வட்டஆராச்சி கூறுகின்றார்.

செயல்திறனை உயர்த்தும் சாக்கில், அடிப்படை சம்பளத்தை உயர்த்தாமல் சுரண்டலை தீவிரமாக்க வேண்டும் என்று இந்த பொருளியலாளர்கள் பிரேரிக்கின்றனர்.

சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கு எதிராக எழுச்சியுறும் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் கட்டியெழுப்பி வரும் இராணுவ-பொலிஸ் ஆதிக்க ஆட்சியின் தேவையுடன், இந்திரரத்ன மற்றும் உஸ்வட்டஆராய்ச்சி பிரேரிக்கும் நீதி மற்றும் சமாதானத்தை பேணுவதும் நேர்மையான ஆட்சி மற்றும் நீதியின் ஆதிக்கமும் நேரடியாக மோதிக்கொள்கின்றன. தமக்கு சார்பான சட்டத்தரணியை முன்னிலைப்படுத்தி, நீதித்துறையை முழுமையாக அரசாங்கத்தின் கருவியாக்கிக் கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்க செயற்படுகின்றது. இலஞ்சம் மற்றும் வீண்விரயமும் அதன் அங்கமாக இருக்கும் அதேவேளை, இந்த நிலைமைகளின் கீழ் சுதந்திர ஊடகமும் சுயாதீன அரச நிறுவனமும் இயங்க முடியாது. ஆகையால், இராஜபக்ஷ அரசாங்கம் தொடர்பாகவும், பொதுவில் முதலாளித்துவ அமைப்பு எதிர் கொண்டுள்ள தீவிரமான நெருக்கடி தொடர்பாகவும் பார்க்கும்போது, உஸ்வட்டஆராய்ச்சியும் இந்திரரட்னவும் முன்வைக்கும் பிரேரணைகள் முரண்பாடானவையாகும். சுருங்கக் கூறின், நெருக்கடி மிக்க முதலாளித்துவ ஆட்சி, “நேர்மையான அட்சியாகவிளங்குவது சாத்தியமற்றதாகும்.