சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Munich Security Conference endorses US call for expansion of neo-colonial wars

முனிச் பாதுகாப்பு மாநாடு அமெரிக்காவின் நவ-காலனித்துவ போர்கள் விரிவாக்க அழைப்பிற்கு ஒப்புதல் கொடுக்கிறது

By Christoph Dreier
4 February 2013

use this version to print | Send feedback

கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்த ஆண்டு முனிச் பாதுகாப்பு மாநாடு மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை ஐரோப்பா மற்றும் தன் ஐரோப்பிய நட்பு நாடுகள் மறு-காலனித்துவத்திற்கு உட்படுத்தும் பின்னணியில் நடைபெற்றது. 20ம் நூற்றாண்டின் முதல் பாதிப் பகுதிகளில் அப்பட்டமான ஏகாதிபத்திய மேலாதிக்கம் இப்பிராந்தியங்களின் மீது இருந்ததை இது உறுதிப்படுத்தும் சான்றாக இருந்தது.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் பிரான்சில் முன்னாள் காலனித்துவப் பகுதியான மாலிக்கு வெற்றிக்களிப்பு பயணத்தில் இருந்தார்; பிரெஞ்சுத் துருப்புக்களும் போர் விமானங்களும் எழுச்சியாளர் வைத்திருந்த பகுதியைத் தொடர்ந்து தாக்கின; பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோன் ஐக்கிய அரசுடன் ஆதரவுடைய தலைவர்களுடன் அல்ஜீரியா, லிபியா நாடுகளில் பேச்சுக்களை நடத்தி வந்தார்.

மூன்று நாட்களுக்கு முக்கிய அரசியல், இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை தொழிலின் பிரதிநிதிகள் என்று பிரதான சக்திகளுடைய அதிகாரிகள், மற்ற நாடுகளில் இருந்து அழைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுடன் தற்போதைய மற்றும் வருங்கால செயற்பாடுகள் மற்றும் புவி மூலோபாயப் பிரச்சினைகளை பற்றி விவாதிக்கக் கூடினர்.

இதற்கான நிலைப்பாடு அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பிடெனால் முன்வைக்கப்பட்டது; அவர் ஒரு ஆக்கிரோஷ உரையாற்றி அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆக்கிரமிப்பு நடத்தக்கூடிய நாடுகளை, சிரியா, ஈரான், யேமனில் இருந்து சோமாலியா, மாலி மற்றும் வட ஆபிரிக்காவின் பிற பகுதிகள் வரை இலக்குகளாகக் காட்டினார்.

கிட்டத்தட்ட 90 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர். இது கடந்த 49 ஆண்டுகளாக முனிச்சில் Hotel Bayerischer ல் நடத்தப்படுகிறது. பங்கு பெறுவோரில் ஈரானிய வெளியுறவு மந்திரி அலி அக்பர் சலேகி மற்றும் முதல் தடைவையாக மேலை ஆதரவுடைய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளும் பங்கு பெற்றனர்.

அமெரிக்கா ஓர் உலக சக்தி என்பதை  மறு உறுதிப்படுத்த பிடென் இம்மாநாட்டைப் பயன்படுத்தினார். சனிக்கிழமை அவர் ஆற்றிய உரையில், “அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு பசிபிக் சக்தியாகும். உலகின் மிகப் பெரிய இராணுவக் கூட்டு [நேட்டோ] எங்களை ஒரு அட்லான்டிக் சக்தியாகவும் செய்கிறது. எங்கள் புதிய பாதுகாப்பு மூலோபாயம் தெளிவாக்குவது போல் நாங்கள் ஒரு பசிபிக் சக்தியாகவும், அட்லான்டிக் சக்தியாகவும் தொடர்வோம்.” என்றார்.

மேற்கத்தைய சக்திகள் ஏற்படுத்தியுள்ள சமூகப் பேரழிவை அமெரிக்க உப-ஜனாதிபதி போலிக் காரணமாகப் பயன்படுத்தி உலகில் புவி மூலோபாய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களில் இராணுவத் தலையீட்டுத் திறனை நியாயப்படுத்தினார். “இன்று, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் தீவிரவாதிகள் கீழ்க்கண்டவற்றை சுரண்ட முற்படுகின்றனர்: பெருகிய முறையில் நலிந்த எல்லைகள், ஆளப்படாத பெரிய பகுதி, உடனடியாகக் கிடைக்கும் ஆயுதங்கள்; திறனற்ற புதிய அரசாங்கங்கள், சில நேரங்களில் தீவிரவாதிகளுடன் போராடும் நிலையில் தேக்கம் அடைந்துள்ள பொருளாதாரத்தால் வருங்காலம் சிதைந்துள்ள அதிருப்தியுற்ற இளம் மக்களைக் கொண்ட பெருகும் தலைமுறை.”

இந்நிலைமைக்கு “ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது—நம்மால் இயலும் முழுக்கருவிகளையும் பயன்படுத்துதல்—நம் இராணுவம் உட்பட.” என்று அவர் தொடர்ந்து கூறினார். மாலியை பிரான்ஸ் படையெடுத்திருப்பது வரவிருக்கும் அதுபோன்ற பல நடவடிக்கைகளில் ஒன்றுதான். “எனவேதான் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற பங்காளிகளையும் மாலியில் நுழைந்துள்ளதற்கு ஆதரவு கொடுத்துப் பாராட்டுகிறது.”

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவிற்கு எதிரான மிருகத்தனமான போர்கள் பற்றியும் பிடென் அவை பெரும் வெற்றிகள் என்றும் வருங்கால முயற்சிகளுக்கு மாதிரிகள் எனவும் விவரித்தார். “அல் குவேடாவின் இணைப்பு அமைப்புக்கள் யேமனில் AQAP, சோமாலியின் அல்-ஷபாப், ஈராக்கிலும் சிரியாவிலும் AQI, வட ஆபிரிக்காவில் AQIM  போன்ற அமைப்புக்கள் காட்டும் வளரும் அச்சுறுத்தலைப் பற்றி அமெரிக்கா அறிந்துள்ளது என்றார்.

ஈரானைப் பற்றிக் குறிப்பிட்டு, ஜனாதிபதி வாஷிங்டனின் ஆக்கிரோஷக் குறிப்பை தொடர்ந்தார்; அமெரிக்க, ஐரோப்பிய கோரிக்கைகளான அதன் அணுச்சக்தி அடர்த்தித் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் தெஹ்ரான் இராணுவ அளவில் தாக்கப்படும் என மறைமுகமாக எச்சரித்தார். “இன்னும் அவகாசம் உள்ளது, இராஜதந்திர முறைக்கு இடம் உள்ளது, அழுத்தம் தொடர அவை வெற்றி பெறுவதற்கு” என அவர் அறிவித்தார். ஆனால் சம்பவங்கள் இதற்கு எதிரிடையாக நிகழ்ந்ததெனில் அமெரிக்கா மிக அதிக தொலைவான எதிர்காலத்தில் என்று இல்லாமல் ஒரு இராணுவ சக்தியை பயன்படுத்தத் தயாராக உள்ளது என்றார்.

ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை, ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு தேவையானவற்றை செய்தல் என்பதை பிடென் வலியுறுத்தினார்: இது அணுவாயுதம் உடைய ஈரானைத் தனிமைப்படுத்தி வலுவிழக்கச் செய்வதை விட -தெஹ்ரான் தான் அத்தகைய விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை மறுத்தே வந்துள்ளது- ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதை தடுப்பதே உகந்தது. “எங்கள் கொள்கை கட்டுப்படுத்துவது அல்ல” என அவர் அறிவித்தார்.

பிடென் ஒரு வினாவிற்கு விடையிறுக்கையில், ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நேரடி இருதரப்பு பேச்சுக்களைத் தள்ளிவிடவில்லை என்றார்; ஆனால் அத்தகைய பேச்சுக்களுக்கு முன்னிபந்தனை ஈரான் அமெரிக்க கோரிக்கைகளின் சாராம்சத்தை செயல்படுத்தத் தயாராக உள்ளது என்பதை குறிப்புக் காட்டுவதுதான் என தெளிவுபடுத்தினார். “வெறும் பயிற்சிக்காக நாங்கள் அதைச் செய்யத்தயாராக இல்லை” என்றார் அவர்.

பதவியில் இருந்து வெளியேறும் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் உண்டென்று வெளிப்படையாக மாநாட்டில் அவர் பேசுகையில் அச்சுறுத்தினார். அவர் அறிவித்தார்: “நாங்கள் அனைவரும் ஒன்றைத்தான் குறிப்பிடுகிறோம். அணுவாயுதம் கொண்ட ஈரானை ஏற்க முடியாது, இதைத் தடுக்க எந்த தேர்வையும் நாங்கள் வேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால் இஸ்ரேல் இதைப்பற்றித் தீவிரமாக உள்ளது, பிறரும் அவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.”

சிரியாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் பிடென் அமெரிக்காவின் கோரிக்கையான ஆட்சி மாற்றம் பற்றி மீண்டும் கூறினார். சிரிய ஜனாதிபதி அசாத் “ஒரு கொடுங்கோலர், அதிகாரத்தில் எப்படியும் நீடித்திருக்க விரும்புகிறார்”, “இவர் சிரிய மக்களுக்குத் தலைமை தாங்க இனியும் தகுதியற்றவர்”, “இவர் அகற்றப்பட வேண்டும்” என்றார். லண்டன் டைம்ஸில் வந்துள்ள தகவல் ஒன்றின்படி, அமெரிக்கா, சிரியா மீதான மேலும் வான் தாக்குதல்களுக்கு இஸ்ரேலுக்கு பச்சை விளக்குக் காட்டியுள்ளது; இது கடந்த புதன் அன்று சிரியாவில் உள்ள இலக்குகள் மீது டெல் அவிவ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்கிறது.

அமெரிக்க துணை ஜனாதிபதி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்க தலைமையிலான தாக்குதல் அப்பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கிற்கு எதிராக இயக்கப்படுகிறது என்ற உண்மையை ஒன்றும் இரகசியமாக வைக்கவில்லை;  இது ஒபாமா நிர்வாகத்தின் சீன எதிர்ப்பு அரசியல் மற்றும் தூதரகத் தாக்குதலுடன் பிணைந்துள்ளது, அதாவது அமெரிக்காவின் “ஆசியாவில் முன்னிலை” என்னும் கருத்துடன்.

ஐரோப்பிய சக்திகளின் பிரதிநிதிகள் தாங்கள் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்காவில் அமெரிக்க ஒத்துழைப்புடன் மறு-காலனித்துவ முறையில் பங்கு பெறுவதற்கு விருப்பம் உடையவர்கள் என்பதை தெளிவுபடுத்தினர். ஜேர்மனிய அரசாங்கம் தான் ஒன்றும் அருகே நின்று வேடிக்கை பார்க்காது என்பதைக் கூறியது. ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்ல மற்றும் பாதுகாப்பு மந்திரி தோமஸ் டு மைசீர இருவரும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சிரியாவில் மேற்கத்தைய தலையீடு மற்றும் மாலிப் போருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

அமெரிக்கா ஆதரவு கொடுத்துள்ள, சிரிய தேசிய கூட்டணி புரட்சி மற்றும் எதிர்த்தரப்பு சக்திகளின் தலைவர் முயஸ் அஹ்மத் அல்-கதிப்பிற்கு ஜேர்மனியின் “தீவிர ஆதரவை” உறுதியளித்தார். மைசீர, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜேர்மனிய அரசாங்கம் மாலியில் இருக்கும் பிரெஞ்சுத் துருப்புக்களுக்கும் ஆதரவை அதிகரிக்கும் என்று அறிவித்தார். ஜேர்மனிய இராணுவம் 40 துருப்பினரை மாலிய படைகளுக்கு பயிற்சி அளிக்க அனுப்பும் என்றும் பிரெஞ்சு விமானப் படைக்கு டாங்குகள் விமானத்தை அளிக்கும் என்றும் கூறினார்.

உலகின் முன்னாள் காலனித்துவ மக்களுக்கு எதிரான இந்த ஐக்கிய முன்னணியின் பின்னால், பிரதான சக்திகளுக்கு இடையேயான அழுத்தங்கள் தொடர்ந்து கட்டமைக்கப்படுகின்றன; இது கொள்ளையடித்தலை பகிர்ந்து கொள்ளவது பற்றியாகும். குறிப்பாக ஜேர்மனி, சீனா மற்றும் ரஷ்யாவுடன் மோதலில் அக்கறை கொள்ளவில்லை; ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் இதுதான் நடக்கிறது. எனவேதான் வெஸ்டர்வெல்ல பல முறை ரஷ்யாவுடனான பங்காளித்தனம் பற்றி வலியுறுத்தினார்.

ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ், அமெரிக்க நேட்டோ ஆதரவுடைய சிரிய எதிர்த்தரப்பின் அல் கதிப்புடன் பேச்சுக்களை நடத்த ஒப்புக் கொண்டாலும், பிடெனுடைய உரைக்கு விடையிறுக்கும் வகையில் அவர், ஈரானுக்கு எதிரான போர்தயாரிப்புக்களுக்கு எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தி, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான உந்துதலையும் எதிர்த்தார்.

ஈரானைப் பொறுத்தவரை, லாவ்ரோவ் ஈரானுக்கு தீவிரப் பேச்சுக்களில் ஈடுபட “ஊக்கங்கள் கொடுக்கப்பட வேண்டிய தேவை” குறித்துப் பேசினார். “இது ஆட்சி மாற்றம் குறித்த பிரச்சினை அல்ல என்று நாம் ஈரானை நம்பவைக்க வேண்டும்.” சிரியா குறித்து அவர் “தொடரும் துன்பியலின்” பிரதான காரணம், “ஜனாதிபதி அசாத்தை அகற்றுவதுதான் முன்னுரிமையில் முதலானது என தொடர்ந்து கூறுவதுதான்” என்றார்.