சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain makes its own military push into Africa

ஆபிரிக்காவில் தன்னுடைய சொந்த இராணுவ முயற்சியை பிரித்தானியா மேற்கொள்கிறது

By Jean Shaoul
2 February 2013
use this version to print | Send feedback

பிரித்தானியா குறைந்தப்பட்சம் 350 இராணுவத்தினரை மாலிக்கும் மேற்கு ஆபிரிக்காவிற்கும் அப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த பிரான்ஸ் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஒரு நேரடிச் சவாலாக அனுப்ப இருக்கிறது.

அப்பகுதியில் இஸ்லாமியத் தீவிர வாதம் வளர்வது ஒரு “தலைமுறைப் போராட்டம்” என்று பிரதம மந்திரி டேவிட் காமெரோன் எச்சரிக்கை கொடுத்த சில நாட்களுக்குள் இது நடந்துள்ளது; ஆப்கானிஸ்தானத்தில் உள்ள முரண்பாடுகளை இணையாக இழுக்கவும், பல தசாப்தங்கள்போர் இருக்கும் என்னும் உட்குறிப்பையும் இது காட்டுகிறது.

துருப்புக்களை ஈடுபத்துவது குறித்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே, காமெரோன் அல்ஜீரியா, லிபியா மற்றும் லைபீரியாவிற்கு விஜயம் செய்யப் புறப்பட்டு விட்டார்.

சகாரா பாலைவனப் பகுதி முழுவதும் படர்ந்துள்ள இப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த அனைத்து பெரும் வல்லரசுகளின் தீவிரப்படுத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பாகமாக வட ஆபிரிக்கா மற்றும் சகேலில் செழிப்புடைய தாதுப் பொருட்கள் மற்றும் ஆற்றல் வளங்களில் தன் உரிமையை முன்வைப்பதற்கு பிரித்தானியா ஒருங்கிணைந்த முயற்சியைக் மேற்கொண்டுள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் முந்தய ஆக்கிரமிப்பும் மற்றும் சாத்தியமான வகையில் சிரியா மற்றும் ஈரான் மீதான தனது நவ காலனித்துவ முயற்சிகளும் அதிகமாக பரவிவிட்ட நிலையில்  கிடைத்த இடைவெளியை பிரான்சும் பிரிட்டனும் சுரண்டுவதற்கு முயற்சிசெய்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவ்வாறு செய்கையில், முன்னாள் காலனித்துவ சக்திகளுக்கு இடையேயும்  அதேபோல் புதிய அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயும் பழைய போட்டிகளும் பதட்டங்களும் மறுபடியும் தூண்டுவதற்கு அச்சுறுத்தலைக் கொண்டுள்ளனஇந்த அழுத்தங்கள் இப்பொழுது குறிப்பிடத்தக்கவகையில் தீவிரமாகியுள்ளன; அதுவும் வறிய ஆனால் வளம்நிறைந்த சாகேல் ஐரோப்பாவின் ஆற்றல் தேவைகளை அளிப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது.

பிரான்ஸ் இஸ்லாமிய எழுச்சியாளர்களை நாட்டின் வடக்குப் பகுதியிலுருந்த வலுவான நிலைகளிலிருந்து அகற்றியபின்னாரான நிலையில் பாதுகாப்பு மந்திரி பிலிப் ஹாமண்ட் செவ்வாயன்று பாராளுமன்றத்தில் நைஜீரியா அல்லது கானாவில்  200 துருப்புக்கள் நிலைகொள்வதற்கும் மாலியில் உள்ளூர் படைகளுக்கு பயிற்சியளிக்க உதவுதற்கும் அவர்களுடைய பங்கு இருக்கும் என்று கூறினார். பிரித்தானிய துருப்புக்கள் அவைகளுக்கு அவ்விடத்தில் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வதற்குமுன் பயன்படுத்திக்கொள்ளபட மாட்டாது, இதன் உட்குறிப்பு கூடுதல் படைகள் தேவை என்பதாகும்.

மற்றொரு 20 பேர், C17 இராணுவப் போக்குவரத்து விமானங்களை பிரெஞ்சு, ஆபிரக்கப் படைகளைக் கொண்டு சேர்க்கச் செயல்படுகின்ற நிலையில் மற்றொரு 40 துருப்புக்கள் கொண்ட ஒரு ஐரோப்பிய ஒன்றிய பயிற்சி தூதுக்குழு மாலியில் நடத்தும் செயல்களில் சேரும் என்றும் மேலும் 70 துருப்புக்கள் செனேகல்லில் இருந்து சென்டினல் ஒற்று விமானத்தில் கண்காணிப்பு, உளவுத் துறைப் பணிகளுக்காகப் பறந்து செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். துருப்புக்களையும், தளபாடங்களையும் ஆபிரிக்காவிற்கு அனுப்புவதற்கு பிரான்ஸூக்கு உதவும் வகையில் பிரிட்டன் பயணக்கப்பலை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 90 இராணுவத்தினர் போக்குவரத்து, கண்காணிப்பு விமானங்களை டாகர் என்னும் செனேகலின் தலைநகரத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா ஒரு பரந்த பூசலில் இழுக்கப்படுகிறது என வந்த குறைகூறல்களுக்கு விடையிறுக்கையில் ஹாமண்ட் “நடவடிக்கை நகர்வு” இருந்ததில்லை, இருக்கவும் இருக்காது என்று வலியுறுத்தினார். ஆனால் பாதுகாப்பு அமைச்சரக அதிகாரிகள் துருப்புக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படலாம் என்பதை ஒப்புக் கொண்டனர்.

பிரெஞ்சு நடவடிக்கைக்கு பிரித்தானியாவின் ஆதரவு 2010 லங்காஸ்டர் இல்ல உடன்பாட்டிலிருந்து (2010 Lancaster House agreement)   வருகிறது என பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அதில் இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று இராணுவ ஆதரவு அளிக்க உடன்பட்டுள்ளன. பிரித்தானியா ஒரு கூட்டுச் செயற்பாட்டுத் தலைமையகத்தை நிறுவ, பிரெஞ்சுத் துருப்புக்களையும் கருவிகளையும் மாலிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யவதற்கு வெளிப்படையாக முன்வந்துள்ளது. ஆனால் பிரான்ஸின் முன்னாள் காலனித்துவநாட்டில் ஒரு வலுவான இருப்பின் ஆதாயத்திற்கு லண்டனால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கும் அந்த வாய்ப்பை மறுத்ததுள்ளதும் பாரிஸ் இப்பொழுது இது எதற்கு என உணர்ந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்புதான் காமெரோன்  மாலியின் “தரையில் சப்பாத்துக் கால்கள் பதியாது” பிரித்தானியத் துருப்புக்கள் போக்குவரத்திற்கு பிரான்ஸுக்கு உதவுமே அன்றி போரிடுவதில் பங்கு கொள்ளாது என்று வலியுறுத்தியிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் பாதுகாப்புத் துறை வெட்டுக்கள் மாற்றப்படும் என்றும் காமரோன் அடையாளம் காட்டியுள்ளார்; சுகாதாரம், கல்வி, சமூகக் காப்பீடு இன்னும் பிற முக்கிய பணிகளில் வெட்டுக்கள் செய்யும் நிலையில் ஆயுதப் படைகளின் எண்ணிக்கை 2015 லிருந்து பணிவிகிதத்தைவிட அதிகமாக இருக்கும். பிரித்தானியா அடுத்த 10 ஆண்டுகளில் 160 பில்லியன் பவுண்டுகளை புதிய வாகனங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குத் தளவாடங்கள் வாங்குவதிலும் செலவழிக்கும். 35.8 பில்லியன் பவுண்டுகள் மூன்றுநிலை அணுவாயுத முறை (Trident nuclear system) க்கு மாற்றுவது உட்பட நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு செலவழிக்கப்படும் 18.5 பில்லியன் பவுண்டுகள் போர் விமானங்கள், டிரோன்களுக்கும், 17.4 பில்லியன் பவுண்டுகள் கப்பல்கள் மற்றும் விமானமேற்றும் கப்பல்களுக்கும் செலவழிக்கப்படும். தேசியத் தணிக்கை அலுவலகம் ஏற்கனவே இச்செலவுகள் பிரித்தானியாவில் பிற ஆயுத கொள்முதல் போல் அதிகமாகப் போகும் என்று எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து காமெரோன் மற்றொரு முன்னாள் பிரெஞ்சுக் காலனியான அல்ஜீரியாவிற்குப் பயணித்தார், கானாப் பயணம் அந்த பிராந்தியத்தில் பாதுகாப்புபற்றி கலந்துரையாடுவதற்கான அடுக்குகளில் திட்டமிடப்பட்டிருந்தது. தன்னை இப்பிராந்தியத்தில் இயல்பான தலைமை நாடு எனக் கருதிக் கொள்ளும் அல்ஜீரியாவானது பிரான்ஸை உணர்ந்து, மொரோக்கோ (ஒரு பிரெஞ்சு நட்பு நாடு), லிபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (பிரான்ஸின் மேலாதிக்கத்தில் உள்ளது) ஆகியவற்றை தன் நிலைக்கு அச்சுறுத்தல்கள் என்று கருதுகிறது. பிரான்ஸின் பார்வையில் இது எவ்வளவு எரியூட்டக்கூடியது என்பதை 1962ல் அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒரு பிரித்தானிய பிரதமர்  முதல்தடவை அங்கு வருகை புரிவது என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர் கிம் டாரோவும் அதே போல் நவம்பர் இறுதியில் வர்த்தகத் தூதுவர் எனும்  ஒரு பதவி உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள ரிஸ்பியும் காமெரோனுடன் செல்கிறார்கள். அவருடைய விஜயம் அல்ஜீரிய இராணுவம் இன் அமேனஸ் என்னும் எரிவாயு உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டுத் தாக்கிய இரண்டு வாரங்களுக்குப்பின் வருகிறது. இதில் BP,Statoil, Sonatrach ஆகிய நிறுவனங்கள் கூட்டாகச் செயல்படுகின்ன; இது தொழிலாளர்களை, முக்கியமாக வெளிநாட்டினரை, ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகள் பிடித்து வைத்திருந்து, ஒரு கைதியை விடுவிக்கவும் அண்டை மாலியில் பிரான்ஸின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் நடத்தப்பட்ட தோல்வியுற்ற முயற்சியாகும். ஆறு பிரித்தானியர்கள் உட்பட 38 சாதாரண மக்கள், 29 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டனர்.

அல்ஜீரியப் பிரதமர் அப்தெல்மலெக் செல்லலைச் சந்தித்தபின், இரு நாடுகளும் எல்லை மற்றும் வான்வழிப் பாதுகாப்பு மற்றும் வணிகம், முதலீடு மற்றும் கல்வித் துறைகளில் கூட்டு நடவடிக்கை உட்பட ஒரு பாதுகாப்புப் கூட்டாண்மைக்கு உடன்பட்டுள்ளன என காமெரோன் அறிவித்துள்ளார். இரு நாடுகளும் சகாராப் பாலைவனம் வட ஆபிரிக்கா மற்றும் சாகேலில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் இன்னும் பரந்த அளவில் கவனிக்கும்.

நெருக்கடி நிலைமகளை எதிர்கொள்ளுவதில் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கூட்டு அவசரக்காலத் திட்டப் பயிற்சியில் பங்கு பெறமாறும் அல்ஜீரியாவை பிரித்தானியா அழைத்துள்ளது. அது அல்ஜீரியா பிரித்தானியாவிற்கு ஜனவரி மாதம் பிணைக்கைதிகளை விடுவிக்கும் திட்டம் பற்றி கூறாதது பற்றிய குறிப்பு அடங்கும்; அதேபோல் பிரித்தானியா கொடுக்க முன்வந்த உதவியும் ஏற்கப்படவில்லை. லண்டன் ஒரு படையை உதவிக்கு அனுப்பி வைத்திருந்தது.

டோனி பிளேயரின் இப்பொழுது இகழ்வுற்றுவிட்ட லிபிய முயம்ர் கடாபியுடனான உடன்பாட்டைப் போல், காமெரோன் இப்பகுதியில் மிக மிருகத்தன ஆட்சிகளுள் ஒன்றுடன் உறவை நாடுவதில் மன உளைச்சல் எதையும் காட்டவில்லை. 1990களில் அல்ஜீரியா ஒரு தேர்தல்முடிவை இரத்து செய்துவிட்டது; அது ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்திருக்கும்; பின்னர் அது கிட்டத்தட்ட 200,000 உயிர்களின் இழப்பில் இஸ்லாமியவாத எழுச்சியை அடக்கியது.

இதன் பணயத்தில் இருப்பது பிரித்தானியாவின் அல்ஜீரியா மற்றும் சகாராவில் உள்ள இழிந்த பெருநிறுவன மற்றும் மூலோபாய நலன்கள் ஆகும். அல்ஜீரியா உலகில் 10வது மிகப் பெரிய எரிவாயு இருப்புக்களைக் கொண்டுள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதிலும் உலகத்தில் 10வது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் நைஜீரியாவின் எரிவாயுவை குழாய்த்திட்டம் மூலம் ஐரோப்பாவிற்கு கொண்டுவருவதில் முக்கியப் பங்கைக் கொண்டிருக்கிறது. ஆபிரிக்காவின் மிகப் பெரிய இராணுவ பட்ஜெட், 2011ல் $8.6 பில்லியனைக் கொண்டுள்ளது என்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.

தெற்கு அல்ஜீரியாவில் ஏராளமானவற்றில் வசதிகள்கொண்டிருக்கும் இன் அமெனஸ் எரிவாயு ஆலையில் BP  யின் பங்கானது பிரித்தானியாவிற்கு எரிபொருள் தேவைகளில் 5%ஐ வழங்குவதுடன் கிட்டத்தட்ட 450 பிரித்தானியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது  இந்தப் பணம் பிரித்தானியாவின் வடக்குக் கடல் அளிப்புக்கள் தொடர்ந்து குறைகையில், அதிகரிக்கப் பயன்படுத்தப்படும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வணிகம் 2011ல் கிட்டத்தட்ட இருமடங்காக $2 பில்லியனை எய்திவிட்டது. அல்ஜீரியாவுடன் 2009ம் ஆண்டு பிரித்தானியா ஒரு பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டது; ஒரு செயல்படும் பிரித்தானிய அல்ஜீரிய வணிகக் குழுவை நிறுவியுள்ளது, 2011ல் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேகை அல்ஜீரியாவிற்கு அனுப்பி வைத்தது.

பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக லிபியத் தலைநகரான திரிப்போலிக்கு காமெரோன் திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடாபி ஆட்சிக்கு எதிரான எழுச்சி தொடங்கியதில் இருந்து திரிப்போலி மற்றும் பெங்காசியிலிருந்து பிரித்தானியர்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தனர் என்பதுடன் தன்னளவிலான பெருகியமுறையில் லிபியாவுடன் தொடர்பற்ற நிலையிலிருந்ததைத்தான் காணமுடிகிறது. “ஆபிரிக்காவில் ஒரு புதிய போட்டி” தொடங்க இருக்கையில்,  அதன் ஆயுதப் படைகளின் நேரடித் தலையீட்டுக்கு “பாதுகாப்பு” என்பதை பிரித்தானியா ஒரு போலிக்காரணமாக பயன்படுத்துகிறது.