சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

For workers’ power in Egypt!

எகிப்தில் தொழிலாளர் அதிகாரத்திற்காக!

Johannes Stern and Joseph Kishore
30 January 2013
use this version to print | Send feedback

பெப்ருவரி 11, 2011-ல் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாராக் அகற்றப்பட்ட இரண்டாவது ஆண்டின் நிறைவு தினம் வருகையில் எகிப்திய தொழிலாள வர்க்கம் மறுபடியும் புரட்சிகர போராட்டத்துக்குள் ஈர்க்கப்படுகிறது. முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஜனாதிபதி முகமட் முர்சி தலைமையில், எகிப்திய இராணுவத்தின் சில பிரிவுகளும், பொலிஸும் கொலைக்காரத் தாக்குதல்களை நடத்துவதையும் மீறி எகிப்தின் நகரங்கள் முழுவதும் வெகுஜன எதிர்ப்புக்கள் அதிர்வைக் கொடுத்துள்ளன.

புரட்சிகர நிலைமை, எகிப்த்திய முதலாளித்துவம் மற்றும் அதன் ஆதரவான வாஷிங்டன், ஐரோப்பிய தலைநகரங்களை அச்சுறுத்துகையில், பாதுகாப்பு மந்திரி ஜெனரல் Abdul Fatah al-Sisi மிகவும் அப்பட்டமாக தற்போதைய எழுச்சி, அரசாங்கம் சரிவதற்கு வகை செய்யக்கூடும் என்றார்.

இராணுவம், எதிர்ப்பை நேரடியாக தலையிட்டு நசுக்கி அதை இரத்தத்தில் மூழ்கடிக்கும் நோக்கத்துடன் அச்சுறுத்தல் செய்கிறது.

ஆளும் வர்க்கம் ஆரம்பத்தில் காட்டிய ஜனநாயக உறுதிமொழிகள், 2011ல் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எழுச்சி அனுபவங்களால் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. புரட்சியின் அரசியல் அடிப்படைப் போக்கு, லியோன் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட அவரது புகழ்பெற்ற ரஷ்ய புரட்சியின் வரலாற்றில், சமூக நெருக்கடியில் இருந்து எழும் பிரச்சினைகளை ஒரு வர்க்கமாக உள்ளீர்த்து படிப்படியாக அதை புரிந்து கொள்வதில் இருக்கிறது பரந்துபட்ட மக்கள் அந்த முறையில் தகவமைத்துக் கொள்வதற்கூடாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்வர்

ஆரம்பத்தில், எகிப்திய இராணுவம் ஒரு மக்கள் இராணுவம் எனும் முறையில் தொழிலாளர்களுக்கு ஜனநாயக, சமூக உரிமைகளை வழங்கும் என்ற நம்பிக்கைகள் இருந்தன. அத்தகைய நம்பிக்கைகள் விரைவில் சிதைந்து போயின. வாஷிங்டனால் நியமிக்கப்பட்ட, இராணுவ உயர்மட்ட நலன்களைப் பிரதிபலிக்கும் இராணுவ ஆட்சிக்குழு முபாரக்கை தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் வேலை நிறுத்தங்களை தடை செய்யவும், எதிர்ப்புக்களை நசுக்கவும் ஆரம்பித்தது.

முபாரக்கின் வீழ்ச்சிக்கு பின் வந்த முதல் தேர்தல்கள் முஸ்லிம் சகோதரத்துவத்தை அதிகாரத்தில் இருத்தியது. ஆறே மாதங்களில் சகோதரத்துவத்தின் பிற்போக்குத்தன்மை எகிப்திய மக்களின் முன்னால் அம்பலமாயிற்று. அது கடந்த கோடையில் அதிகாரத்துக்கு வந்ததும் அதன் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகள், முபாரக்கின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கைகளையே தொடர்ந்தது. முர்சி, சர்வதேச நாணய நிதியத்துடன் உணவு, எரிபொருள் ஆகியவற்றின் மீதான உதவித் தொகைகளின் வெட்டுக்களுக்கு உட்பட்டு பேச்சுக்களை நடத்துகிறார், அது தொழிலாள வர்க்கத்தை பேரழிவில் தள்ளும். முஸ்லிம் சகோதரத்துவ அரசாங்கம் காசாவில் பாலஸ்தீனியர்களை அடக்குவதற்கும், சிரியாவில் அமெரிக்கத் தலைமையிலான பினாமி போருக்கும் ஆதரவைக் கொடுக்கிறது.

சகோதரத்துவத்திற்கு பெயரளவிலான எதிர்ப்பைக் காட்டும் ஆளும் வர்க்கத்தின் தாராளவாதப் பிரிவுகளின் தேசிய விமோசன முன்னணி (NSF) க்கு தலைமை தாங்கும் மொகமட் எல்பரடேயிடமும் மக்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை. முபாரக் காலத்து அதிகாரிகளான அம்ர் மௌசா மற்றும் வப்த், தகமுக் கட்சிகள் என்பன முபாரக்குடன் நெருக்கமாக உழைத்தன, இவைகளும் இதேபோன்றவையே.

எகிப்தில் உள்ள அரசியல் சக்திகளின் வரிசையை ட்ரொட்ஸ்கியின்  நிரந்தரப்புரட்சி தத்துவத்தின் மையக் கருத்தை உறுதிப்படுத்துகிறது பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள முன்னாள் காலனித்துவ நாடுகளிலுள்ள முதலாளித்துவத்தின் எந்தப்பிரிவும் பொதுமக்களின் பொருளாதார, சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதென்பது ஒரு புறம் இருக்க, அம் மக்களின் மிகவும் அடிப்படையான ஜனநாயகப் பணிகளை செயல்படுத்தும் திறனையோ அல்லது அதற்கான ஆர்வத்தையோ கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவ ஒழுங்கின் பாதுகாப்பிற்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து நடக்கும் முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவுகளும் சமூக எதிர்ப்பை அடக்குமுறை மற்றும் சர்வாதிகார முறையின் மூலம்தான் பதிலளிக்கின்றன.

இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் Egypt Independent-இன் பகுப்பாய்வு அமைந்துள்ளது. இதன் ஆசிரயர், அம்ர் அட்லி, எகிப்தின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு இந்நாடு வெளிநாட்டு நிதியை நம்பியிருப்பதால்தான் ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார், மேலும் முஸ்லிம் சகோதரத்துவ அரசின் ஆபத்தான நிலை பற்றியும் எழுதியுள்ளார் இருப்பினும், மிகப் பெரிய எதிர்த்தரப்புக் கூட்டணியான NSF நகர்ப்புற மத்தியதர மற்றும் உயர்மட்ட மத்தியதர வகுப்புக்களின் ஆதரவைப் பெரிதும் நம்பியுள்ளது. என்று அட்லி  கூறுகிறார், முன்னணியின் அரசியல் அரங்கு உண்மையான சமூக, பொருளாதார காரணிகளை அதிகம் கொண்டிருக்கவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.

சகோதரத்துவத்தின் இஸ்லாமியவாதத்தை மிகவும் ஒரு குழப்பமான எகிப்திய தேசியவாதத்துடன் எதிர்கொள்ளும் NSF-இடம் சுயாதீனமான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. சீர்குலைந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலமையைப் பொறுத்தவரை, முன்னணியின் நிலைப்பாடு பொதுவாகச் சந்தர்ப்பவாதம், குறுகிய நோக்குக்கு அப்பால் சிக்கன நடவடிக்கைகளுக்கு அதிக மாற்றீடுகளையும் கொண்டிருக்கவில்லை என்று அட்லி அவதானித்துள்ளார்.

எகிப்திய தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளுடனும் நேரடியான மோதலுக்கு வருகிறது, இம் முரண்பாடு வன்முறையின் பெரிய வடிவத்தை எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், இடது குட்டி முதலாளித்துவம் குறிப்பிடத்தக்க பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வகிக்கிறது.

முதலாளித்துவத்தை ஸ்தாபிக்கும் அமைப்புக்களின் சுற்றில், புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) முக்கியமான ஒரு கட்சியாகும். முதலில், இராணுவ யுந்தாவுக்கு ஒரு ஜனநாயகத் தளம் கொடுத்து பாராட்டியபின் RS முர்சியின் தேர்தலை எகிப்திய மக்களுக்கு உண்மையான வெற்றி எனப் பாராட்டியது. முர்சியின் எதிர்ப்புரட்சிப் பாத்திரம் நன்கு தெளிவானதும் RS தாராளவாத முதலாளித்துவ எதிர்ப்பு அணியான NSF-க்கு தாவி அதற்கு ஆலோசனை வழங்குகிறது

RS, சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நடைமுறை அரசியலை முற்றிலும் இடது சொல்லாட்சியைக் கொண்டு மறைக்கிறது, அது அதன் அடிப்படையான பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. சகோதரத்துவமும், முர்சியும் முபாரக்குடைய கொள்கைகளையே தொடர்வதாக குறை கூறியபின் பேரழிவுதரும் முறையில், முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு கொடுத்து வந்த அவர்களது சொந்த ஆதரவு அம்பலப்படுத்தப்பட்டபின் — RS, ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க ஆட்சிக்கான போராட்டத்திற்கு அதன் விட்டுக்கொடுப்பற்ற எதிர்ப்பை தெளிவாக்குகிறது.

சலுகைபடைத்த உயர் மத்தியதர வர்க்க தட்டின் சார்பில் பேசும் RS, முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. முஸ்லிம் சகோதரத்துவம், முபாரக்கின் கொள்கைகளை தொடர்வதற்கூடாக அது தன்னுடைய கல்லறையைத் தானே தோண்டுகிறது என்ற உண்மை குறித்து புலம்புகிறது.

துரதிருஷ்டவசமாக, NSF தமது பிரிவுக்குள் பழைய ஆட்சியின் எஞ்சிய பகுதிகளை சேர்த்துக்கொண்டதின் மூலம் பிழை செய்தது என அவர்கள் தொடர்ந்து எழுதுகின்றனர். இந்த எஞ்சிய பகுதிகள் [முபாரக் சர்வாதிகாரத்தின்!] அவர்கள் தமது சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புணர்வை புரட்சிக்குக் காட்டுவதின் மூலம் நன்கு அறியப்பட்டுள்ளனர். இந்தமுறையில்தான் RS, எகிப்திய ஆளும் வர்க்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக பல தசாப்தங்களாக நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான ஆட்சியில் பங்குபற்றியவர்கள் தொடர்பாக பேசுகிறது.

தமது முன்னோக்கை சுருக்கிக் கூறும் ஒரு பந்தியில், அப் பகுதியினரை (ranks) தூய்மைப்படுத்தும் போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் புரட்சிகர இளைஞர்களை ஈடுபடுமாறு நாம் அழைப்பு விடுகிறோம் என RS எழுதுகிறது. அதாவது, முதலாளித்துவக் கூட்டணிக்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே.

அதன் பின் அவர்கள் NSF-க்கு, எங்களுடன் பங்குபெற்றுங்கள், அனைத்து புரட்சியாளர்களுடனும், உண்மையான புரட்சிகர முன்னணியைக் கட்டுவதில் பங்கு பெறுங்கள், இது புரட்சியின் நோக்கமான ரொட்டி, சுதந்திரம், சமூக நீதி, மனித கௌரவம் ஆகிய இலக்குகளை சாதிக்கும் என்று அழைப்பு விடுகிறது.

RS, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்திற்காக வாதிடவில்லை, மாறாக முதலாளித்துவ அரசியல் மறு சீரமைக்கப்பட வேண்டும் என்கிறது. அவர்களுடைய வார்த்தைஜால அறிவிப்பில் சோசலிசம் பற்றிய எந்தக் குறிப்பும் கிடையாது, முதலாளித்துவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றோ அல்லது தொழிலாள வர்க்க ஆட்சிக்கான சுயாதீனமான அமைப்புகளுக்கான அழைப்போ கிடையாது.

நடைமுறையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் திவால்தன்மையின் தளத்திலும் இருப்பது இதுதான்: இவர்கள் புரட்சிக்கு சொற்களால் மரியாதை செலுத்திக்கொண்டு முதலாளித்துவ சொத்துரிமையில்தான் தம்மை அடித்தளம் இட்டுள்ளனர், அடிப்படை அரசியல் ஆட்சி வடிவங்களிலான மாற்றம் எதையும் விரும்பவில்லை. அவர்கள் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கை பாதுகாக்கின்றனர்.

இரண்டு அடிப்படைப் பணிகள் எகிப்திய புரட்சியின் சமூக, அரசியல் தர்க்கமாக வெளிப்படுகின்றன.

முதலாவது, தொழிலாள வர்க்க ஆட்சிக்கான சுயாதீனமான அமைப்புகள் நிறுவப்பட வேண்டும். இதில் மிகமுக்கியமான உதாரணம், தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்களுடைய போராட்ட அமைப்புகளான சோவியத்துக்களை ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஸ்தாபித்து, 1917 அக்டோபர் புரட்சியில் ஆட்சிக்கு வந்தது என்பதுதான். தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரசில் நம்பிக்கை வைக்க முடியாது. அது தன்னுடைய சொந்த அமைப்புகளை அபிவிருத்தி செய்யவேண்டும் அதுதான் ஆட்சி அதிகாரத்தின் வெற்றிக்கான தளமாகும்.

இரண்டாவது, புரட்சிகர தலமைக்கான அபிவிருத்தியில் தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஆட்சிக்கான மூலோபாய திசையை வளங்குவது அவசியமாகும்.

எகிப்திய புரட்சியின் முழு அனுபவமும், ஜனவரி 2011-ன் ஆரம்பத்தில் வெடித்தது முதல் இன்று ஒரு திருப்புமுனையில் அது நிற்கும் நிலைவரை, வீரத்தனமும், புரட்சிகர ஆர்வமும் மட்டும் தலைமை நெருக்கடியைக் கடக்க முடியாது என்பதை உறுதிபடுத்தியுள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்தக் கட்சியும் முன்னோக்கும் அவசியப்படுகிறது அது முஸ்லிம் சகோதரத்துவம், தேசிய விமோசன முன்னணி மற்றும் அவற்றின் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் ஆதரவாளர்களிடம் இருந்தும் சுயாதீனமாக இருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப எழுச்சி ஏற்பட்டதிலிருந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, எகிப்தின் தொழிலாள வர்க்கம், அரச அதிகாரத்தை கைப்பற்றினால் அன்றி அது தனது நலன்களையும் அபிலாஷைகளையும் அடைய முடியாது என்றும் பொருளாதார வாழ்க்கையை சோசலிச மறுகட்டமைப்புக்கு வெளியே ஸ்தாபிக்க முடியாது என்றும் வலியுறுத்தி வந்துள்ளது. இந்த முன்னோக்கு இப்பொழுது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. நாம் எகிப்தில் உள்ள தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் இன்றைய நாளின் இன்றியமையாத பணியை எடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுகிறோம்: அது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவை அங்கு கட்டியமைப்பதாகும்.