சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Unions suppress opposition to closure of Belgian Ford plant

பெல்ஜியத்தில் போர்ட் ஆலை மூடலுக்கான எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் நசுக்குகின்றன   

By Dietmar Henning and K. Nesan
14 February 2013

use this version to print | Send feedback

பெல்ஜியத்தில் ஜெங்க் நகரில் இருக்கும் போர்ட் கார்த்தயாரிப்பு ஆலையில் இருக்கும் மூன்று தொழிற்சங்கங்கள், ஆலை 2014ல் மூடப்படும் என்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாளின் பயனுள்ள எதிர்ப்புக்கள் எதையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த திட்டமிட்ட முறையில் முயன்று வருகின்றன.



பெல்ஜியத்தில் ஜெங்க்கில் போர்ட் ஆலை

ஆலையில் இருக்கும் 4,600 தொழிலார்கள் மற்றும் அத்துடன் இணைந்த விநியோக நிறுவனங்களில் பணியிலுள்ள 5,000 தொழிலாளர்கள் திட்டமிடப்பட்ட மூடல் செய்தி குறித்து சீற்றம் அடைந்தனர். ஆனால் தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆலை மூடல்களை ஏற்று, “செலவுமிக்க சமகத் திட்டம்” (தொழிலாளர்களுக்கு நஷ்டஈட்டை பெறும்) அடையவேண்டும் என்னும் தங்கள் நோக்கத்தை அறிவித்தன.

சமூக ஜனநாயகக் கட்சியின் தொழிற்சங்கக் கூட்டமைப்பான [பெல்ஜியத் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின்] ABVV –Metaal இன் பிராந்தியத் தலைவர் ரோனி ஷாம்பெயின்பேச்சக்களில் நம் தோலை அதிக விலைக்குத்தான் விற்போம்என்று உறுதியளித்தார். ஆனால் அங்கு விற்கப்படுவது தொழிலாளர்களின் தோல்தான், தொழிற்சங்க அதிகாரிகளுடையது அல்ல என்பது மிகவும் தெளிவு.

இத்தகைய காட்டிக்கொடுப்பினை ஒத்துக்கொள்ள பல தொழிலாளர்களும் மறுத்து, தன்னியல்பான வெளிநடப்புக்களை நடத்தினர். இதன்பின் தொழிற்சங்கங்கள் போர்ட் நிர்வாகத்துடன் தங்கள் ஒத்துழைப்பை தீவிரமாக்கின. ABVV உடன், கிறிஸ்துவ ACT (கிறிஸ்துவ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு), தாராளவாத ACLVB (பெல்ஜியத்தின் தாராளவாத தொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டமைப்பு) ஆகியவையும் ஜேங்கில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தொழிற்சங்கங்கள் உடனடியாக நிறுவனத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்து, தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கோரின. எவ்வாறாயினும், உற்பத்தியில் ஒரு தொடர் தன்னியல்பான எதிர்ப்புக்களும் குழப்பங்களும் இருந்து வந்தது.

இதன் பின் தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் கீழ்க்கண்ட வழிவகைக்கு உடன்பட்டன: முதல் கூட்டுக் கூட்டத்திற்கு பின்னர், பேச்சுக்கள் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அரசாங்க ஆதரவில் ஜேங்கில் நகரசபை தலைவரின் தலைமையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இன்னும் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை தடுப்பதற்கு, தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதம் முழுவதும் குறுகிய காலப் பணிநேரத்திற்கு ஒப்புக் கொண்டன. இதன் பொருள் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் 40% இழக்க வேண்டியிருக்கும்.

இதன்பின் தொழிலாளர் பிரிவினுள் தீவிர விவாதம் ஆரம்பித்தது. இதில் வேலைநிறுத்தத்தின் அவசியம், மற்றும்தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புஆகியவை மத்திய பிரச்சினைகளாக இருந்தன.

2012 இறுதியில் தொழிற்பிரச்சனை பற்றி வாக்களிக்குமாறு வேண்டப்பட்டிருந்த கடிதங்கள் தொழிலாளர்களுக்கு நடுவரிடம் இருந்து அனுப்பப்பட்டன.

தொழிலாளர்களுக்கு மூன்று விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டன. முதலாவது, வேலைநிறுத்தம் ஒன்றிற்காக, இரண்டாவது, நாள் ஒன்றிற்கு 1,000 கார்த் தயாரிப்பும் மற்றும் ஆலை இயங்கும்வரை 40% மேலதிக கொடுப்பனவும், மூன்றாவது ஒவ்வொரு நாளும் 950 கார்கள் தயாரிப்பும், மேலதிக கொடுப்பனவாக 25% வழங்கலும்.

இவற்றுடன் தொடர்ந்து வந்த கடிதத்தில் தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது என்று போர்ட் நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டனர். மேலும் தங்கள் சொந்த வேலைநிறுத்த நிதியில் இருந்தும் பணம் எதையும் எடுக்க முடியாது என்றும் கூறப்பட்டனர்.

தொழிற்சங்கங்கள் இக்கடிதத்திற்கு சவால் ஏதும் விடவில்லை. முழு வழிவகையும் நிறுவனம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய இருதரப்பினராலும் முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது வெளிப்படை. பல தொழிலாளர்கள் ஆத்தரமடைந்துள்ளனர். இத்தகைய அச்சுறுத்தல் வரும் என்பது ளிப்படை. வாக்களிக்கும் வழிமுறையும் திரித்தல், தவறு செய்யப்படல் ஆகியவற்றிற்கு ஒத்துப்போகக் கூடியதாக இருந்தது. சில தொழிலாளர்கள் தாங்கள் எந்த ஆவணங்களையும் பெறவில்லை என்றனர். வேறு சிலருக்குப் பல வாக்கு சீட்டுக்கள் கொடுக்கப்பட்டன.

வாக்கெடுப்பில் பங்கு பெறுவதற்கு ஜெங்க் தொழிலாளர்கள் ஆலையில் தங்களை அடையாளப்படுத்தி காட்டவோ அல்லது அவர்களுடைய ஆலை அனுமதிச் சீட்டையும் காட்ட வேண்டியிருக்கவில்லை. அவர்கள் வாக்குச்சீட்டை அஞ்சல் மூலம் அல்லது கையினால் ஆலையில் கொடுக்கமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மூன்று தொழிற்சங்கங்கள் அவை வேலைநிறுத்தத்தை எதிர்க்கின்றன என்பதை சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக்கின. அவற்றின் நோக்கம் இம்மோதலை ஆலையில் இருந்து நீதிமன்றத்திற்கு மாற்றுவது என இருந்தது. தொழிலாளர்கள் சட்ட முறையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்று இதற்காக அறிவித்தனர். போர்ட் ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்ற குற்றத்தை அவர்கள் சுமத்தினர்; ஏனெனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், போர்ட் ஊழியர்களுடன் ஆலோசிக்காமல் 2020 வரை வேலை உத்தரவாதங்களுக்கு ஈடாக 12 சதவிகித ஊதியக் குறைப்பிற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டிருந்தன.

ஜனவரி 7ம் திகதி வாக்கெடுப்பின் முடிவு தொழிலாளர்களின் எரிச்சலைத் தீவிரப்படுத்தியது. நிறுவனத்திடம் இருந்து வந்த இறுதி எச்சரிகைகையையும் மீறி, கிட்டத்தட்ட 47% தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதன்பின், தொழிற்சங்கங்கள் முடிவுகளுடன் வேறு இரண்டு விருப்பத் தேர்வுகளை சேர்ந்து, தொழிலாளர் தொகுப்பில் 53%  வேலையை மீண்டும் தொடர்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று கூறின.

சீற்றமடைந்துள்ள தொழிலாளர்களிடம் தொழிற்சங்க அதிகாரிகள் போலிவாக்கெடுப்பை ஒருஜனநாயக முடிவு”, அனைவராலும் ஏற்கப்பட வேண்டும் என்று கூறினர். இது இன்னும் கடுமையான எதிர்ப்புக்களைத் தூண்டியது: பல தொழிலாளர்களும் தங்கள் தொழிற்சங்க மேலங்கிகளை தொலைக்காட்சி காமெராக்கள் முன்பு எறித்தனர்.

பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களில் இருக்கும் தொழிலாளர்கள் தாங்கள் போர்ட் நிர்வாகத்தின் தயவில் விடப்பட்டதாக உணர்ந்தனர். போர்ட் தொழிலாளர்களின் சராசரி வயது 50 என்று இருக்கையில், பல ஆண்டுகள் ஊதிய வெட்டுக்களுக்குப்பின், விநியோகிக்கும் நிறுவனங்களின சராசரி வயது இன்னும் குறைவு ஆகும். இதைத்தவிர, விநியோகிக்கும் நிறுவனங்களின பல தொழிலாளர்கள் பரந்த பயிற்சி ஏதும் இல்லாமல் துருக்கி, மொரொக்கோ ஆகியவற்றில் இருந்து வருகின்றனர். வயதான போர்ட் தொழிலாளர்களுக்கான பணிநீக்க திட்டம் மற்றும் முன்கூட்டிய ஓய்வு மீது கவனம் செலுத்தும் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு விநியோகிக்கும் நிறுவனங்களில் இருக்கும் தொழிலாளர்களால் தீவிர விரோதப் போக்குடன் கருதப்படுகிறது.

போர்ட் தொழிலாளர்கள் மற்றும் விநியோகிக்கும் நிறுவனங்களின் ஊழியர்களுடைய இணைந்த நடவடிக்கைக் குழு ஜனவரி 9ம் திகதி முதல் வேலைநிறுத்த நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க முடிவெடுத்தது. இக்குழு மாவோயிச ஸ்ராலினிச தொழிலாளர் கட்சி (Partej van de Arbeid-PvdA) உடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. நடவடிக்கைகுழு விநியோகிக்கும் நிறுவனங்களிலும் போர்டிலும் பல ஆலை வாயிற்கதவுகளை தடைக்கு உட்படுத்தியது. அங்கு ஆதரவாளர்கள் பணிக்குச் செல்லும் தொழிலாளர்களுடன் மோதினர். இது ஜனவரி மாதம் கணிசமாக உற்பத்தி இழப்பிற்கு வகை செய்தது.

நாள் ஒன்றிற்கு 1,000 கார்கள் திட்டமிடப்பட்டபோதிலும் ஜனவரி மாதம் மொத்தமாக 8,000 கார்கள்தான் தயாரிக்கப்பட்டிருந்தன. நிர்வாகத்தின்மீது அழுத்தத்தை அதிகரிக்க, தொழிலாளர்கள் தயாரிக்கப்பட்ட 7,000 கார்களைப் காவல் காத்தனர். இது நடவடிக்கைக் குழு எழுப்பியிருந்த கோரிக்கைகளில் ஒன்றாகம்.

போர்ட் நிர்வாகமும் அரசாங்கமும் இதற்குப் பின் பொலிசைப் பயன்படுத்தி ஆலை வாயிற்கதவு ஆக்கிரப்புக்களையும், தடைகளையும் அகற்ற முற்பட்டன. தொழிலாளர்கள் ஆலைக்குள் நுழைவதைத் தடை செய்யும் மறியல்கள் 1,000 யூரோ அபராதங்களுக்கு (அமெரிக்க $1345) உட்படுத்துப்படும் என்னும் அச்சுறுத்தலும் வந்தது. செய்தி ஊடகம் மற்றும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பரித்தன.

இறுதியில், நடவடிக்கை குழுவின் தலைமையில் ஒரு சில நூறு  தொழிலாளர்கள் பங்கு பெற்ற தனிமைப்படுத்தப்பட்ட எதிர்ப்பு ஜனவரி 21ம் திகதி முடிவிற்கு வந்தது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் வேலைநிறத்தகால ஊதியம் மறுக்கப்பட்டு, பெரும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டனர். தொழிற்சங்க அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்கு எதிர்காலப் பேச்சுக்களில் விநியோகிக்கும் நிறுவனத் தொழிலாளர்களை சேர்த்துக் கொள்வதாக உறுதிமொழி கொடுத்தனர். விநியோகிக்கும் நிறுவனத் தொழிலாளர்களும் போர்ட் தொழிலாளர்களைப் போலவே பணிநீக்கத் திட்டத்தைப் பெறுவர் என்று கூறப்பட்டது.

எல்லா புறத்திலும் தாக்குதலுக்கு உட்பட்ட நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை முடிததுக்கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். அவர்கள் ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தின்போது இரண்டு விடுமுறை நாட்களையும் தியாகம் செய்ய நேர்ந்தது. வேலைநிறுத்தம் முடிந்தபின், போர்ட் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ஒடெல் சமூக, பணிநீக்கத் திட்டங்கள் பற்றிய பேச்சுக்களில் துணை ஒப்பந்த ஊழியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்ற உறுதிமொழியைக் கைவிட்டார்.

கடந்த மூன்றுமாதமாக ஜேங்க் போர்டில் நடக்கும் நிகழ்வுகள், தொழிலாளர்கள் உலக கார் கார்த்தயாரிப்பு நிறுவனங்களுடன் மட்டும் மோதவில்லை, தங்கள் சொந்த தொழிற்சங்கங்களுடனும் மோதுகின்றனர் என்பதை தெளிவாக்கியுள்ளது.

தொழிலாளர்கள் முக்கியமான அனுபவத்திற்கு உட்பட்டுள்ளார்கள். மோதல்கள்  தொழிலாளர்களுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையே வெளிப்படையான மோதலாக விரிவடையும் என்ற அச்சத்தைக் கொடுத்தபோது, PvdA இன் மாவோயிஸ்ட்டுக்கள் தலையிட்டனர். தொழிற்சங்கவாத வழிமுறைகளில், வரையறுக்கப்படாத, தனிமைப்படுத்தப்பட்டபோராட்டத்தை” அவர்கள் போற்றிப்புகழ்ந்தது, முற்றிலும் எழுச்சி செய்யும் தொழிலாளர்களை திசை திருப்பவும், மனத்தளர்ச்சிக்கு உட்படுத்தவும், தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்கள் மீண்டும் அடிபணிந்து நடப்பர் என்பதை உறுதிப்படுத்துவதற்குத்தான்.

தொழிற்சங்கத் தலைமைகளுக்கும் மாவோயிச ஆதரவாளர்களுக்கும் இடையே உள்ள ஒரே கணிசமான வேறுபாடு, ஆலை 2014 இறுதியில் மூடப்பட்டாலும் அனைத்து போர்ட் தொழிலாளர்களும் 2020 வரை ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்னும் மாவோவாதிகளின் கோரிக்கைதான். இச்சலுகை, போர்டிற்கு 2011ல் கிடைத்த இலாபத்தில் கால் பங்கு இழப்பையே ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர். வேறுவிதமாகக் கூறினால், அவர்கள் ஆலை மூடலை ஏற்கின்றனர், ஆனால் வெறுமனே போர்டிடம் இருந்து அதற்கு அதிக விலையைப் பெற விரும்புகின்றனர்.

நடவடிக்கை குழுவில் மாவோயிஸ்ட்டுக்களின் முயற்சிகள், இருக்கும் தொழிற்சங்கங்களுடன் ஒரு அரசியல் முறிவைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை. “தொழிற்சங்கப் பிரதிநிதிகள் [கண்காணிப்பாளர்கள்] தொழிற்சங்கங்களுக்கு வெளியே வேலை செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை” என்று உள்ளூர் PvdA அமைப்பின் தலைவர் Stany Nimmegeers, WSWS இடம் கூறினார். “ஆனால் அது ஒரு அபாயம்” என்றும் சேர்த்துக் கொண்டார்.

மற்ற PvdA உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் வடிவமைப்பிற்குள்தான் நடவடிக்கை எடுக்கத் தாங்கள் விரும்புவதாக வலியுறுத்தி, ஏனெனில் ஒன்றாக இருப்பதே நமக்கு வலிமை. என்கின்றனர். PvdA தடுக்கும் ஐக்கியம்என்பதின் பொருள், தொழிலாளர்கள் சங்கங்களுக்கு அடிபணிந்து நடப்பதும் தீவிரமாக ஜேங்க் தொழிலாளர்களை போர்ட் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து காட்டிக்கொடுப்பதுமாகும். இறுதியில் PvdA   உடைய பங்கு தொழிலாளர்களை அமைதிப்படுத்தி, மூன்று தொழிற்சங்கங்களும் நிலைமையை மீண்டும் கட்டுப்படுத்த அனுமதிப்பதாகும். இந்த முக்கிய இலக்கை அடைந்தபின், இப்போது நடவடிக்கைக் குழு கலைக்கப்பட்டுவிட்டது.