சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Union summit agrees on austerity budget

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு சிக்கன வரவு-செலவுத் திட்டம் குறித்து உடன்படுகின்றது

By Peter Schwarz
11 February 2013

use this version to print | Send feedback

வெள்ளியன்று, 26 மணிநேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாங்கங்களினதும் மற்றும் நாடுகளினதும் தலைவர்கள் 2014 முதல் 2020 வரை குறைந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு இன்னும் ஐரோப்பிய பாராளுமன்றத்தால் ஒப்புதல் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த உடன்பாட்டின்படி, ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் அடுத்த 7 ஆண்டுகளுக்கு 960 பில்லியன் யூரோக்களை (அதிகபட்சமாக) விட கூடுதலாக இருத்தல் கூடாது. அதாவது கடந்த ஏழு ஆண்டுகளின் வரவு-செலவுத் திட்டத்தைவிட 3% அல்லது 34 பில்லியன் யூரோக்கள் குறைவாக இருக்கவேண்டும்.

நவம்பர் 2012ல் ஒரு முதல் வரவு-செலவுத் திட்ட உச்சிமாநாடு தோல்வியுற்றது. அப்பொழுது ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு 973 பில்லியன் யூரோக்களுக்கு ஒரு வரைவு வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்தது.

960 பில்லியன் யூரோக்கள் என்பது ஒரு நிதிய உச்ச வரம்புதான். உச்சிமாநாடு 908 பில்லியன் யூரோக்களுக்கு மட்டுமே உண்மையான பண கொடுக்குமதி கடமைப்பாடுகளுக்கு ஒப்புக் கொண்டது. இந்த இரண்டு தொகைகளும், 908 பில்லியன் யூரோக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என விரும்பிய பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரோனின் கருத்திற்கும் 960 பில்லியன் யூரோக்கள் என மட்டுப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும் என விரும்பிய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டிற்கும் இடையேயான சமரசத்தின் விளைவு ஆகும்.

இந்த இரு தொகைகளுக்கிடையிலான இடைவெளி எவ்வாறு இட்டுநிரப்பப்பட உள்ளது என்பது ஒரு திறந்த வினாவாகத்தான் உள்ளதுடன், பல கணக்கிலடங்கா எதிர்கால ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்குரிய விடயமாகவும் இருக்கும்.

உச்சிமாநாட்டில் பங்கு பெற்றவர்கள் இது உண்மை என்பதைவிட ஒரு அடையாளத்திற்காவது ஒரு உடன்பாட்டை அடைய உறுதி கொண்டிருந்தனர் என்பது வெளிப்படை. இது, ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் குறித்த பிரச்சினையாக இல்லை. மாறாக சர்வதேச சந்தைகளின் அழுத்தங்களினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் அங்கத்துவ நாடுகளின் மீது ஆணையிடும் சிக்கன நடவடிக்களின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தேவையினாலுமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் மிருகத்தன சிக்கன வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளன. இதுவரை அவை சர்வதேச நிதியச் சந்தைகளை ஒப்புமையில் அமைதியாக வைத்துள்ளன. யூரோவிற்கு எதிரான ஊகம் வலுவிழந்து விட்டது. ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையே வெளிப்படையான மோதல் என்பது இதை விரைவில் மாற்றி, அதே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான சமூக எதிர்ப்பிற்கு புதிய உந்துதலை கொடுத்துள்ளது.

பல ஐரோப்பிய அரசாங்கங்கள் மிகவும் உறுதியற்ற நிலையில் உள்ளதால் இது இன்னமும் அதிகமாகவே உள்ளது. ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியானோ ரஜோய் ஊழல் சிக்கலில் அகப்பட்டுள்ளார். இத்தாலி பெப்ருவரி 24ல் தேர்தல்களை எதிர்கொள்கிறது. அது மரியோ மோன்டி  செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகள் தொடர்வதை அச்சுறுத்தலாம்; ஏனெனில் முன்னாள் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஆதரவைப் பெற்றுள்ளார்.

தன்னுடைய வரவு-செலவுத் திட்டத்திலேயே முதல் வெட்டு கொண்டுவருகையில், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிக்கனச் செயற்பட்டியலின் தொடர்ச்சி குறித்துத் தெளிவான அடையாளத்தை காட்டி உள்ளது. இதில் காமெரோனும் ஜேர்மனியச் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலும் ஹாலண்ட், ரஜோய் மற்றும் மோன்டியின் கருத்துக்களுக்கு எதிராக நின்றுள்ளனர். பிந்தைய மூவரும் பொருளாதார ஊக்கத் திட்டங்களை ஊக்குவிக்க வரவு-செலவுத் திட்டத்தில் அதிகரிப்பு தேவை என அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் முதலில் 1 டிரில்லியனுக்கும் மேலான வரவு-செலவுத் திட்டத்தை கோரியது. பின்னர் மேர்க்கெல் மற்றும் கமரோனின் அழுத்தத்தை ஒட்டிப் பின்வாங்கி விட்டது.

கிட்டத்தட்ட 1 டிரில்லியன் என்ற நிலையில் வரவு-செலவுத் திட்டத்தின் அளவு அதிகம் போல் தோன்றினாலும் ஏழு ஆண்டுகளுக்குப் படர்ந்துள்ளது என்ற நிலையில் இது ஆண்டு ஒன்றிற்கு 140 பில்லியன் என்றுதான் ஆகும். அதாவது ஐரோப்பாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%க்கும் குறைவாகவுள்ளது.

இதில் பெரும்பகுதி விவசாய மானிய உதவித்தொகைகளுக்குச் செல்லும் (421 பில்லியன் கடந்த ஏழு ஆண்டுகள் வரவு-செலவுத் திட்டத்தில் சென்றன). மற்றொரு பெரிய தொகை வறிய பகுதிகளுக்குச் செல்லும் (355 பில்லியன்). கல்வி, ஆராய்ச்சி, விஞ்ஞானம் ஆகியவற்றிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 92 பில்லியன் யூரோக்களை கடந்த 7 ஆண்டுகளில் செலவு செய்துள்ளது. நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைக்கு அது 57 பில்லியன் யூரோக்களை தலா செலவு செய்துள்ளது. உள்பாதுகாப்பிற்காக 12 பில்லியன் யூரோக்களைச் செலவிட்டுள்ளது.

2010ல் ஜேர்மனி மிக அதிக நிகர பங்களிப்பு நாடாக இருந்தது (9.2 பில்லியன்). இதைத் தொடர்ந்து ஐக்கிய இராஜ்ஜியம் (5.6 பில்லியன்), பிரான்ஸ் (5.5 பில்லியன்) என வந்தன. போலந்துதான் மிகப் பெரிய அளவிற்குப் பணத்தைப் பெற்றுள்ளது (8.4 பில்லியன்). இதைத்தொடர்ந்து ஸ்பெயின் (4.3 பில்லியன்) மற்றும் கிரேக்கம் (3.4 பில்லியன்) பெற்றுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 2004, 2007ல் சேர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அதிக நிதியை ஐரோப்பிய ஒன்றிய பிராந்திய வளர்ச்சி நிதிகளில் இருந்து பெற்றுள்ளன. இதில் பல உள்கட்டுமானத் திட்டங்களுக்கான நிதியும் அடங்கும். இந்நாடுகளில் சில ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்ட  குறைப்பு குறித்துக் குரல் எழுப்பியுள்ளன; ஆனால் மேர்க்கெல், கமரோன் மீது அழுத்தம் கொடுக்கும் வழிவகை அவற்றிடம் இல்லை. வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் ஏற்கனவே வறிய நிலையில் இருக்கும் இந்நாடுகளை இன்னமும் கடுமையாக பாதிக்கும்.