சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Unemployed worker sets himself on fire outside job centre

பிரான்ஸ்: வேலையின்மையில் வாடிய தொழிலாளி வேலை கொடுக்கும் மையத்திற்கு வெளியே தனக்குத்தானே தீ வைத்துக் கொள்கிறார்

By Antoine Lerougetel
16 February 2013

use this version to print | Send feedback

புதன் பிற்பகல் ஜமெல் சாப் என்னும் 43 வயது வேலையற்ற அல்ஜீரியத் தொழிலாளி அரசாங்க வேலை கொடுக்கும் நிறுவனம் (Pôle emploi) மேற்கு பிரான்சில் நான்ந் அலுவலகத்திற்கு முன் தன்மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்; அந்த அலுவலகம் அவருடைய வேலையின்மை நலன் தகுதியை இரத்து செய்துவிட்டிருந்தது.

அதற்கு முந்தைய தினம் காலை 10 மணிக்கு அவர் உள்ளூர் நாளேடு Presse Océan க்கு நலன்பற்றிய தன் உரிமையை உறுதிப்படுத்தி ஒரு கடிதம் எழுதியிருந்தார்: “இன்று எனக்கு ஒரு பெரிய நாள்; ஏனெனில் நான் வேலை கொடுக்கும் நிறுவன அலுவலகத்தின் முன் என்னையே தீ வைத்துக் கொளுத்திக் கொள்ளப் போகிறேன். நான் 720 மணித்தியாலங்கள் உழைத்திருகிறேன்; சட்டப்படி 610 மணி நேரம் உழைத்திருந்தால் தகுதி உண்டு; வேலைகொடுக்கும் நிறுவனம் என் உரிமை கோரலை நிராகரித்துவிட்டது.”

அன்று ஒரு மணிக்கே அதே நாளேடு மற்றொரு மின்னஞ்சலைப் பெற்றது; அதில் கூறப்பட்டது: “நான் Pôle Emploi க்கு ஐந்து லிட்டர்கள் பெட்ரோலுடன் என்னையே எரித்துக் கொள்ளச் சென்றேன். ஆனால் அது மூடிக்கிடந்தது; எனவே இது நாளை 13ம் திகதி அல்லது 14ம் திகதி நடைபெறும்; ஏனெனில் இதை Pôle Emploi முன் செய்வதுதான் உண்மையில் சிறந்தது. உங்களுக்கு நன்றி.”

CGT எனப்படும் தேசியத் தொழிலாளர் கூட்டமைப்புச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Julian Chaillou விளக்கினார்: “அவர் பணி செய்த காலத்திற்கான வேலையின்மை நலனைப் பெற்றிருப்பார். உண்மையில் அவர் இரு விதங்களில் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார். தனக்கு உரிமை இல்லாத பணத்தை அவர் திருப்பித் தர வேண்டும்; அக்காலத்திற்கு அவருடைய உரிமைகளுக்கான நலன்களும் அங்கீகரிக்கப்படவில்லை.”

இறுதியில் சாப் அவருடைய தற்கொலை உறுதியை புதன் அன்று நண்பகல் 12 மணிக்கு நிறைவேற்றினார். அவர் Pôle Emploi அலுவலகத்திற்கு 50 மீட்டருக்குள் தனக்கே தீ வைத்துக் கொண்டு நுழைவாயிலை நோக்கி ஓடிவருவதைத் தவிர்க்கும் வகையில், ஒரு பாதுகாப்புக் காவலர் அங்கே போடப்பட்டிருந்தாலும், அவரால் சாப்பைக் காப்பாற்ற முடியவில்லை.

சாப்பிற்குத் திருமணமாகியுள்ளது, ஒரு 10 ஆண்டுக்கால வசிக்கும் உரிமை உள்ளது, எந்தவித குற்றத் தொடர்பும் இல்லை, சாதாரண வாழ்க்கையைத்தான் நடத்தி வந்தார் என்று பொலிசார் கூறினர். சமீபத்தில் அவர் ஒரு கொதிகலன் (boiler) உற்பத்தி பற்றிய பாடத்திட்டத்தை நிறைவு செய்திருந்தார்.

அவருடைய நோக்கங்களின் வெளிப்படையான அக்கறையை, மற்றும் எப்பொழுது, எங்கு, ஏன் அதை அவர் செயல்படுத்த உள்ளார் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, அதிகாரிகளால் ஏன் இச்சோகத்தை தவிர்க்க முடியவில்லை? எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒரு பெரும் திகைப்புடைய மனிதர் தன்னையே தீக்கிரையாக்கிக் கொள்வதை தடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச நடவடிக்கைகள் கூட இல்லை எனத் தோன்றுகிறு. AFP கூறுகிறது: “வேலை அளிக்கும் நிறுவனத்தின் கூற்றுப்படி, நிதிய உதவிக்கும் மற்றும் அவர் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தைச் சிறிது சிறிதாக கொடுப்பதற்கும் ஆலோசனை கூற அதிகாரிகள் அவரை மாற்றுத் தீர்வு காண்பதற்கு அழைத்தனர். ஆனால் புதன் காலை அவர் வாடகைக்கு இருந்த வீட்டில் பொலிசாருக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை. நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்ட தொலைபேசிகளுக்கும் விடை ஏதும் இல்லை.”

ஆனால் இந்தக் கருத்தை முரண்பாடாக்கும் வகையில், தேசிய அளவில் இந்த நிறுவனத்தின் பொது இயக்குனர் Jean Bassères கூறுகிறார்: “தன்னை அழித்துக் கொள்ளும் நோக்கம் பற்றி அவர் எங்களுக்கு தெரிவித்தவுடன், நாங்கள் பொலிசாருக்கும், தீயணைக்கும் படையினருக்கும் எச்சரிக்கை கொடுத்தோம். நாங்கள் அவருடன் தொடர்பு கொண்டோம், நிலைமை பற்றி அனைத்து வாய்ப்புக்களையும் பரிசீலனை செய்ய நேரம் கொடுத்தோம். ஆனால் அவர் வரவில்லை, இன்று காலை கூட நாங்கள் மீண்டும் தொலைபேசித் தொடர்பு கொள்ள முற்பட்டோம்.” “இங்குள்ள ஊழியர்கள் இச்சோகத்தைத் தவிர்க்க அனைத்தையும் செய்துவிட்டதாகத்தான் உணர்கின்றனர்” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஆயினும் கூட புதன் காலையில் சாப் ஒரு பேருந்தைப் பிடித்து, நிறுவனத்திற்கு 50 மீட்டர்கள் தொலைவில் அதில் இருந்து இறங்கி, தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தீயையும் வைத்துக் கொண்டு, தடையின்றி நுழைவாயிலுக்குச் செல்ல முடிந்தது. ஒரு செய்தி, Pôle Emploi அலுவலகத்திற்கு வெளியே ஒரு பாதுகாப்புக் காவலர்தான் இருந்தார் என்று கூறுகிறது. Bassères கட்டிடத்திற்குள் சிலர் இருந்தனர் என்று கூறுகிறார்.

வியாழன் அன்று தொழிலாளர் துறை மந்திரி மைக்கேல் சபான் நேரடியாக நான்ந்க்குப் பயணித்தார்; அங்கு அவர் நிருபர்களிடம் சாப்பின் தற்கொலையை தடுக்க அனைத்தும் செய்யப்பட்டது என்றார். “அவர்கள் செய்திருக்க வேண்டியதைத்தான் ஒவ்வொருவரும் செய்தனர்” என்றார் சபான். மேலும் “இறந்தவர் இருந்த நிலையில் எத்தகைய உதவும் கரமும் அவரை நிறுத்தியிருக்க முடியாது” என்றார். சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி Jean Marc Ayrault, நான்ந்தின் முன்னாள் துணை மேயர், நிலைமை குறித்து “பெரும் உணர்ச்சிகர நிலையை” வெளிப்படுத்தினார்.

இந்த அறிக்கைகளின் பாசாங்குத்தனம், அதுவும் அரசாங்கத்தின் பிரெஞ்சு வணிகப் போட்டியை அதிகரிக்க தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அழிப்பவர்கள், PSA Peugeot-Citroën, ரெனோல்ட் ஆகியவற்றில் ஏராளமான பணிநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்கள் மூலம் செலவுகளைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருந்து வரும்போது, மூச்சடைப்பைக் கொடுக்கின்றது.

இவர்கள் கடுமையான ஆதரவைக் கொடுத்துச் செயல்படுத்தும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன வேலைத்திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் சுருக்கம் அடைவதற்குக் கணிசமான அளிப்புக்களைக் கொடுத்துள்ளதோடு மேலும் மிக உயர்ந்த அளவு வேலையின்மைக்கும், குறிப்பாக கிரேக்கம் ஸ்பெயினில் ஏற்பட வழிவகுத்துள்ளன. பிரான்சின் வளர்ச்சி விகிதம் 2012ல் பூஜ்யம் என இருந்தது; வேலையின்மை விகிதம் 10.5%--அதாவது 3.13 மில்லியன் மக்களுக்கு வேலை ஏதும் இல்லை; பகுதி நேரக்காரர்கள் சேர்க்கப்பட்டால், அது 4.6மில்லியன் வேலையற்றவர்கள் என்று ஆகும்.

அரசாங்கத்தின் சிக்கன வேலைத்திட்டத்தின் ஒரு கூறுபாடு, தொழிலாளர்கள் தங்கள் வேலையின்மை நலன்களை அணுகுவது பெரும் இடர்களைக் கொண்டுள்ளது.

வேலையின்மையில் உள்ளவர்களுக்காக வாதிடுபவர்கள், மக்களை வறுமையில் தள்ளும் விதிமுறைகளைக் கண்டித்துள்ளனர்; “இவை தண்டனை கொடுப்பதுபோல்தான் உள்ளன, வேலையற்றோரை மேற்பார்வையிடவும், அவமானப்படுத்துவும்தான் உதவுகின்றன.”  எனக்கூறுகின்றனர். பல தகுதி உடையவர்கள் தங்கள் உரிமைகள் பற்றித் தெரியாததால் அல்லது அதைப்பெறுவதற்கான சிக்கல் வாய்ந்த வழிமுறைகளை வைப்பதால் அரசு 5 பில்லியன் யூரோக்களை சேமிக்கிறது. ஏராளமான பண இழப்புக்கள் முதலாளிகள் தங்கள் பங்களிப்புக்களை கொடுப்பதை தவிர்ப்பதாலும் ஏற்படுகின்றன.

வெள்ளியன்று, மற்றொரு வேலையில்லாத 40 வயதுத் தொழிலாளி, நலன்களுக்கு இனித் தகுதி பெற்றவர் இல்லை என்ற நிலையில், பாரிஸில் Seine-Saint-Denis க்கு அருகே ஒரு ஆரம்பப்பள்ளிக்கு பக்கத்தில் உள்ள தெருவில் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இப்பொழுது அவர் மருத்துவமனையில் உள்ளார்.

ஆகஸ்ட் 2012ல் ஒரு 51வயது மனிதர் பாரிஸில் இருந்து மேற்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள Mantes-la-Jolie நகரத்தில் பொதுநல நிறுவனத்தில் தன்னை எரித்துக் கொள்ள முற்படுகையில் ஏற்பட்ட காயங்களை ஒட்டி இறந்து போனார். சாப்பின் நிலைமையைப் போலவே, இவருடைய செயலும் பொதுநலன்கள் முடிவிற்கு வந்துவிடும் என்பதை அறிந்துவுடன் பெருந்திகைப்பால் ஏற்பட்டது என்று தோன்றுகிறது.

ஜமெல் சாப்பின் சோக முடிவு துனிசியாவில் டிசம்பர் 2010ல் Mohamed Bouazizi தற்கொலை செய்து கொண்ட நிகழ்வைத்தான் நினைவுபடுத்துகிறது; அந்நிகழ்ச்சி துனிசியப் புரட்சிக்கு ஊக்கம் அளித்தது.

Reims பல்கலைக்கழகத்தில் மனோதத்துவப் பேராசிரியராக இருக்கும் ஜெராட் ஸ்மித், சாப்பின் தற்கொலை வல்லுனர்கள் குறிப்பிடும் “அனைவருக்கும் பயன்படும் தற்கொலை” போல் உள்ளது என்றார்; இச்செயல் பாதிக்கப்படுபவருடைய தியாகச் செயல் என உணரப்படுகிறது. “வெளி ஆட்களுக்கு இது தனிப்பட்ட நபரின் செய்கள் போல் தோன்றலாம். ஆனால் அந்த நபர், மற்றவர்களுக்காக தான் ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்று வலுவாக நம்புகிறார்” என்றார் ஸ்மித்.