சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Hollande presses for major arms deals in India

பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் முக்கிய ஆயுத ஒப்பந்தங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்

By Kumaran Ira
19 February 2013

use this version to print | Send feedback

கடந்த மே மாதம் பதவியேற்றதில் இருந்து முதல் தடவையாக ஆசியாவிற்கு அரச விஜயத்தை மேற்கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் இந்தியாவிற்கு பெப்ருவரி 14-15ல் சென்றார். மந்திரிகள் மற்றும் 60 பிரெஞ்சு நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகள் குழுவுடன் இணைந்து சென்ற ஹாலண்ட், குறிப்பாக பெரும் ஆயுத விற்பனைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வணிக, மூலோபாய உறவுகளை வலுப்படுத்த முயன்றார்.

10 பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட மதிப்புடைய 126 Rafale போர் ஜெட்டுக்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதை முடிக்கும் உடன்பாட்டிற்கு ஹாலண்ட் முயன்றார். இந்த ஆண்டு நடுப்பகுதியில் கையெழுத்திடப்பட இருக்கும் இந்த உடன்பாடு, உலகின் மிகப் பெரிய அளவிலான போர் விமானங்கள் 15 ஆண்டுகளில் வாங்கப்படுவதாக இருக்கும். பிரான்ஸும் இந்தியாவும் 6 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய திட்டம் ஒன்றை, குறுகிய தொலைவிற்கு தரையில் இருந்து வானுக்குச் செல்லும் ஏவுகணைகள் குறித்த பேச்சுக்களையும் நடத்தின.

இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்தாகவில்லை என்றாலும், பிரெஞ்சு அணு சக்தி நிறுவனமான Areva வுக்கும் இந்திய அரசுக்கு சொந்தமான அணு சக்தி நிறுவனத்திற்கும் இடையே 9.3 மில்லியன் டாலர் மதிப்புடைய 9,900 மெகாவாட் அணு மின் ஆலை மகாராஷ்ட்டிர மாநில மேற்குப் புறத்தில் உள்ள ஜெய்த்தப்பூரில் கட்டமைக்கும் ஒப்பந்தமும் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் ஹாலண்ட் கூறினார், “நாங்கள், இந்தியாவும் பிரான்ஸும் பெரும் பங்காளித்துவத்தில் இருந்து வருகிறோம்; நாம் எப்பொழுதும் நம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்த வேண்டும். இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு, உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு, வளர்ச்சியுற்றுவரும் நாடு, உங்களுடைய சவாலில் பிரான்ஸ் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.”

தன்னுடைய பங்கிற்கு இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கூறினார்: “இந்தியா பிரான்ஸை அதன் மிக மதிப்புடைய மூலோபாயப் பங்காளி நாடுகளில் ஒன்றாகக் கருதுகிறது.”

ஹாலண்டின் இந்திய வருகை ஏகாதிபத்திய இராஜதந்திரத்தின் சிடுமூஞ்சித்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான தன்மைக்கு உதாரணம் ஆகும். கார்த்தயாரிப்பு நிறுவனங்களான ரெனோல்ட், Peugeot-Citroen இல்  பாரிய வேலை வெட்டுக்களையும் இன்னும் பல கடுமையான சிக்கன நடவடிக்கைகளையும் சுமத்தியபின், ஹாலண்ட் சுருங்கும் பிரெஞ்சுப் பொருளாதாரத்தை முட்டுக் கொடுத்து நிறுத்தும் வகையில் ஆசியாவில் ஆயுதப் போட்டிக்கு எரியூட்டும் ஒப்பந்தங்களை வெல்ல முற்படுகிறார்.

ஆழ்ந்த வெகுஜன வறுமை, நீடித்த பட்டினி இவற்றால் இன்னமும் பாதிக்கப்படும் நாடான இந்தியா, சீனாவையும் முந்திச்சென்று கடந்த 2010ல் மிக அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாகிவிட்டது என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது. இந்தியாவின் இராணுவச் செலவுகள், அணுவாயுதங்கள் நீங்கலாக, 44.28 பில்லியன் டாலர்களாகும். அடுத்த தசாப்தத்தில், இந்தியா 150 பில்லியன் டாலர்கள் நிதியை அதன் இராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்த, உயர்த்த, பராமரிக்க திட்டங்கள் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. IHS Jane’s போன்ற பாதுகாப்புத்துறை பகுப்பாய்வாளர்கள், இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஐக்கிய இராச்சியத்தையும் கடந்து இராணுவத்திற்காகச் செலவழிக்கும் உலகின் நான்காம் மிகப் பெரிய நாடாக 2020 ஐ ஒட்டி வந்துவிடும் என்றும் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கு அடுத்தாற்போல் இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் பாரக் ஒபாமா இருவரின் கீழும், பகிரங்கமாக இந்தியா “ஓர் உலக சக்தியாக” வர உதவும் என, தன் ஆர்வத்தை வெளிப்படுத்திய அமெரிக்கா இந்தியாவின் இராணுவக் கட்டமைப்பிற்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இது பல கூட்டுப் பயிற்சிகளை இந்தியாவுடன் நடத்தியுள்ளது; பல தொடர்ந்த ஆயுத உடன்பாடுகளுக்கான திட்டங்களை முன்வைத்துள்ளது, உலக அணு சக்தி கட்டுப்பாட்டு முறையில் இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்தை பேச்சுவார்த்தைகள் மூலம் கொடுத்துள்ளது—இந்தியாவிற்கு அணு எரிபொருள் கிடைப்பது, நவீன சிவிலிய அணு சக்தி தொழில்நுட்பம் கிடைப்பது, அவற்றை ஒட்டி புது டெல்லி உள்நாட்டு அணு சக்தி திட்டத்தில் குவிப்புக் காட்டி ஆயுதங்களையும் வளர்க்கலாம் என்பதாகச் செய்துள்ளது.

“எழுச்சி பெறும்” சீனாவைக் கட்டுப்படுத்தும் தன்முயற்சிகளில் இந்தியா “முன்னிலை” வகிக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது, இப்பொழுது இந்தியாவை இன்னும் பரந்த கூட்டில் சீனாவிற்கு விரோதப் போக்கு என ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கருதப்படும் நாடுகளுடன் சேர்க்க விழைகிறது. தன் பங்கிற்கு இந்தியா சீனாவுடன் 1962ல் எல்லைப் போர் நடத்தியது, பெய்ஜிங்கை அதன் முக்கிய போட்டி நாடு என இந்து சமுத்திரத்திலும் தெற்கு ஆசியாவிலும் கருதுகிறது. (சீனா, பாக்கிஸ்தானிய உயரடுக்கால் “எல்லாக் காலங்களிலும் உதவும்” நட்புநாடு என்று விவரிக்கப்படுகிறது.) மேலும், ஆசியாவின் இரண்டு முக்கிய எழுச்சி பெற்று வரும் நாடுகளும் எண்ணெய் இறக்குமதியைப் பெரிதும் நம்பியுள்ளன; கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதிகளிலும் எரிசக்தி இன்னும் பிற வளங்களுக்கு போட்டியிடும் முக்கிய போட்டியாளர்களாக எழுந்துள்ளன.

பிற இடங்களைப் போல் ஆசியாவிலும், ஹாலண்ட் தன்னுடைய முன்னோடியான நிக்கோலோ சார்க்கோசியின் பிரான்சின் வெளியுறவுக் கொள்கையை, வாஷிங்டனுடன் நெருக்கமாக இணைந்த வகையில் தொடர்கிறார். வாஷிங்டனைப் போலவே பாரிஸும், இந்திய முதலாளித்துவத்தை தன் ஏகாதிபத்தியப் போர்கள், நடவடிக்கைகளில் ஒரு முக்கிய நட்பு நாடாகத்தான் காண்கிறது.

அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பகுதியளவு 2014ல் வெளியேறும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸும் அமெரிக்காவும் இந்தியாவை ஆப்கானிஸ்தானில் பெரும் பங்கைக் கொள்ள ஊக்கமளிக்கின்றன. இதில் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கான பயிற்சியும் அடங்கும்.

பெப்ருவரி 15 அன்று டெல்லியின் நேரு நினைவு நூலகத்தில் ஆற்றிய உரை ஒன்றில், ஹாலண்ட் இந்தியாவிற்கு மாலியில் பிரான்ஸ் நடத்தும் போர் பற்றிய “புரிந்துணர்விற்கும் ஆதரவிற்கும்” நன்றி தெரிவித்தார். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போர் என்ற போலித்தனத்தில் நடத்தப்படும் இப்போரில், மாலியை பிரான்ஸ் படையெடுத்துள்ளது, அதன் முன்னாள் மேற்கு ஆபிரிக்க காலனிகள் மீது மீண்டும் தன் ஆதிக்கத்தை நிறுவும் முயற்சியாகும், இதையொட்டி பிரான்ஸ் அதன் புவி-மூலோபாய நலன்களை ஆபிரிக்காவில் போட்டியிட விரும்பும் நாடுகளில் இருந்து, குறிப்பாக சீனாவிற்கு எதிராக நலன்களைப் பெற முற்படுகிறது.

மாலியின் ஆதரவு தொடர்தல் குழுவில் (Support and Follow-Up Group -SFG) சேருவதாக உறுதியளித்தபின் இந்தியா செயலூக்கமுடைய பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்தில் மாலியின் இராணுவத்தை மேம்படுத்த 1 மில்லியன் டாலர்கள் நிதியை அது உறுதியளித்துள்ளது; மேலும் மோதல்கள் முடிந்த பின்னர் 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது. மாலிக்கு இந்தியாவின் ஆதரவு என்பது ஆபிரிக்காவில் அதன் பெருகும் புவி-மூலோபாய நலன்களில் வேர்களைக் கொண்டுள்ளது; மற்றும் சீனாவுடனான போட்டிகளை பெருக்கவும், அதன் முஸ்லிம் பாக்கிஸ்தானுடனான வரலாற்றுத் தன்மை வாய்ந்த விரோதப்போக்கை பெருக்கவும் வேர்களை கொண்டுள்ளது; பிந்தையதோ காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் இந்திய எதிர்ப்பு இஸ்லாமியவாதச் சக்திகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது.

இந்திய அதிகாரிகள் ஒரு வாரத்திற்றகு முன்பு பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர், புது டெல்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிடுகிறது: “நாம் ஏற்கனவே மாலியில் ஐந்து திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்; விவசாயம், எரிசக்தி மற்றும் உணவு பதனிடுதல் போன்ற வெவ்வேறு துறைகளில், இதற்கென சலுகைக் கடன்களை 150 மில்லியன் டாலருக்கும் மேல் வழங்கியுள்ளோம். மாலியில் மற்றும் ஒரு முக்கிய எரிசக்தி திட்டத்தை நிறைவேற்ற 100 மில்லியன் டாலர்கள் கடன்வசதியளிக்கும் திட்டத்திற்கும் நிதியளிப்போம்.”

மாலியில் இந்தியாவின் ஆதரவிற்கு பதிலாக, ஹாலண்ட் இந்தியா ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்னும் விழைவிற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இந்தியா ஒரு “சமாதான சக்தி” என்று அவர் அழைத்துள்ளார். மேலும் “தற்போதைய உண்மை நிலைமைகளை பிரதிபலிக்கும் வகையில் இன்று இந்தியா ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் ஒரு முழு உறுப்பினராக வேண்டும் என்று முறையீடு செய்கிறோம்.” என்று சேர்த்துக் கொண்டார்.

இந்தியாவை “ஒரு சமாதான சக்தி” என்று ஹாலண்ட் மெருகூட்டுவது—தன்னுடைய ஆயுதங்களை அங்கு விற்க வந்துள்ள நிலையிலும், பிராந்தியப் போட்டி நாடுகளான பாக்கிஸ்தான் சீனா இவற்றிற்கு எதிரான கட்டமைப்பிற்கு ஆதரவு கொடுக்கையிலும்— அப்பட்டமான அபத்தமாகும். இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே உறவுகள் மிகவும் அழுத்தத்தில்தான் உள்ளன; “ஒரு விரிவான சமாதான வழிவகை” 2008ல் இருந்து நடைமுறையில் தேக்கம் கண்டுவிட்டது; இரு சக்திகளும் ஒன்றையொன்று விரோத நோக்கம் உடையது எனக் குற்றம் சாட்டி, பிராந்தியத்தில் செல்வாக்கிற்குப் போட்டியிடுகின்றன. ஜனவரி மாதம் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் தொடர்ச்சியான இரத்தம் தோய்ந்த எல்லை மோதல்கள், மோதலுக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் நடந்தன, கடந்த வாரம் இந்தியப் படைகள், இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காஷ்மீரில் கவனக்குறைவாக எல்லையை கடந்து வந்த ஒரு பாக்கிஸ்தானிய சிப்பாயை கொன்றன.

ஹாலண்டின் வருகைக்கு முன் Le Monde முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியும், ஒரு புது டெல்லிச் சிந்தனைக் குழுவான Society for Policy Studies ல் ஆராய்ச்சியாளருமான உதய் பாஸ்கரைப் பேட்டி கண்டது. இந்தியா சீனாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாக பாஸ்கர் குறிப்பிட்டார்; மேலும் இந்தியாவின் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள கணிசமான இராணுவ, எண்ணெய் நலன்களையும் கோடிட்டுக் காட்டினார்.

இந்திய இராணுவத்தின் விரிவாக்கத்தில் முக்கியமான கூறுபாடு “நீல வண்ண நீர் கடற்படையின்” வளர்ச்சியாகும். இந்தியா, இந்து சமுத்திரத்தில் முக்கிய பங்கை கொள்ள விரும்புகிறது; இந்த விழைவுகளுக்கு வாஷிங்டன் ஊக்கமளிக்கிறது.

இந்து சமுத்திரம் பற்றி கேட்டபோது, பாஸ்கர் இந்து சமுத்திரத்தில் சீனாவின் பிரசன்னம் படிப்படியாக யதார்த்தமாகிக் கொண்டுவருகிறது என்றார். ஒரு சேஷல்ஸ், மாலைதீவு, பாக்கிஸ்தான், இலங்கை, பங்களாதேசம், அல்லது மியான்மர் உடன் வளரும் உறவுகளில் இதைக் காணலாம். இத்தாக்குதல்கள் ‘மலாக்கா சங்கடம்என  சீனர்களால் அழைக்கப்படுவதால் உந்துதல் பெறுகிறது; அதாவது அவர்களுடைய எண்ணெய் இறக்குமதிகளில் பாதிக்கும் மேலானவை இந்த ஜலசந்தி மூலம்தான் (மலாக்கா ஜலசந்தி மூலம்) நடைபெறுகிறது, அவையோ சீனாவிற்கு விரோதப் போக்கு உடைய சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனா அதன் கடல்வழிப்பாதைகள் ஆபத்திற்கு உட்படக்கூடும் என்பதால் அமெரிக்கா மற்றும் இந்தியா பற்றி கவலை கொண்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் பங்கிற்கும் பிரெஞ்சு ஆதரவை ஹாலண்ட் வெளிப்படுத்தி, இந்து சமுத்திர பாதுகாப்பை பராமரிக்க இந்தியாவிற்கு பிரான்ஸ் தனது பங்கை செய்யும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.