சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Afghan regime accuses US forces of torturing, murdering civilians

அமெரிக்கப் படைகள் பொதுமக்களை சித்திரவதை மற்றும் கொலை செய்வதாக ஆப்கானிய ஆட்சி குற்றம்சாட்டுகிறது

By Alex Lantier
25 February 2013

use this version to print | Send feedback

ஜனாதிபதி ஹமித் கர்சாய் தலைமையில் நடந்த ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புச் சபையின் (NSC) கூட்டம் ஒன்றில், இரண்டு வாரங்களுக்குள் வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களிலிருந்து வெளியேறிவிடுமாறு அமெரிக்கச் சிறப்புப் படைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது; இது அமெரிக்கத் துருப்புக்களானது ஆப்கானிய குடிமக்களை சித்திரவதையையும் கொலையையும் செய்தன என வந்த தகவல்களை NSC பரிசீலித்த பின் வந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் அதனுடைய கூட்டணி நாடுகளால் அங்கு நிறுவியுள்ள கைப்பாவை ஆட்சியான ஆப்கானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ ஆக்கிரமிப்பு குறித்த பெரும் குற்றச்சாட்டு இதுவாகும்; இப்படைகள் 13வது ஆண்டுகளாக இப்பொழுது அங்கு இருக்கின்றன.

முழு விவாதத்திற்குப் பின், வர்டக் மாகாணத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க சிறப்புப் படைகளை சேர்ந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் நிரபராதிகளான மக்களைத் துன்புறுத்துகின்றனர், தொந்திரவு கொடுக்கின்றனர், சித்திரவதை செய்கின்றனர், சில சமயம் கொலைகூடச் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது என்று அது குறிப்பிடுகின்றது. இம்மாகாணத்தில் சமீபத்திய ஒரு உதாரணமான சம்பவமாக, இச்சந்தேகத்திற்குரிய ஆயுதம் தாங்கிய நபர்களின் நடவடிக்கை ஒன்றில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர், மற்றும் ஒரு சம்பவத்தில் ஒரு மாணவர் அவரின் வீட்டிலிருந்து இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளார், பின்னர் அவருடைய உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரு நாட்களுக்குப் பின் பாலத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது.... இத்தகைய நடவடிக்கைகள் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் தூண்டியுள்ளன என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

தனித்தனி அறிக்கைகளின்படி, அமெரிக்க நடவடிக்கையில் காவலில் வைக்கப்பட்டவர், அவருடைய விரல்களும் தலையும் வெட்டுண்ட நிலையில் அந்த மாணவர் கண்டெடுக்கப்பட்டார்.

NSC அறிக்கையானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள மோசடித்தன ஆட்சிமுறை பற்றி தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது; இங்கு அமெரிக்க ஆதரவுடைய அதிகாரிகள் வாடிக்கையாக பெறுமதியான நிலங்களைத் திருடுகின்றனர். NSC ஆனது நில அபகரிப்புப் பிரச்சினையை கையாள ஒழுங்கான திட்டம் ஒன்றை வகுக்க உறுதியளித்துள்ளதாகவும், அதிகாரம் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தி சக்திவாய்ந்த தனிநபர்கள் சட்டவிரோதமாகப் பறித்துள்ள நிலங்களை மீட்கும்” என்றும் கூறுகிறது.

அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் 2014 க்குப் பின்னரும் இராணுவ நிலைகொள்ளல் தேவை என்று கூறுவதற்கான” பேச்சுக்களை காபூல் தொடரவுள்ளதாகவும் NSC அறிக்கையானது உறுதியளிக்கிறது.

காபூலில் ஒரு செய்தியாளர் மாநாட்டில், NSC அறிக்கை பற்றிக் கருத்துக் கூறிய ஆப்கானிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஐமல் பைசி, அமெரிக்க சிறப்புப் படைகளை வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு ஜனாதிபதி கர்சாய், பாதுகாப்பு அமைச்சரகத்தை உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கச் சிறப்புப் படைகளும், அவர்கள் உருவாக்கிய சட்டவிரோத ஆயுதமேந்திய குழுக்களும் பாதுகாப்பின்மை, உறுதியற்றதன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், இம்மாகாணங்களில் உள்ளூர் மக்களையும் துன்புறுத்துகின்றனர். இப்பிரச்சினை குறித்து நாம் பல புகார்களைப் பெற்றுள்ளோம் என்று கூறினார்.

அமெரிக்க நடவடிக்கைகளானது இந்த மாகாணங்களில் ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பை எரியூட்டுகின்றன, இது கர்சாய் ஆட்சிக்கு பெரும் கவலையாக உள்ளன என்று பைசி சேர்த்துக் கொண்டார். காபூலுக்கு தென்மேற்கேயும், தென்கிழக்கேயும் அடுத்துள்ள வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களானது காபூலிலிருக்கும் அமெரிக்காவின் கர்சாய் கைப்பாவை அரசாங்கத்தை தாக்குலுக்குள்ளாக்கும் தாலிபன் படைகளுக்கு முக்கிய இராணுவ நுழைவாயில்கள் ஆகும்.

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஆப்கானிய NSC யின் அறிக்கை மற்றும் பைசியின் செய்தியாளர் கூட்டம் தொடர்பாக கண்டுகொள்ளவில்லை. குற்றச்சாட்டுக்களைப் பற்றி கருத்துக் கூற மறுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதாவது இது ஒரு மிக முக்கியமான பிரச்சினை; ஆப்கானிய அதிகாரிகளுடன் முழுமையாக இது பற்றி விசாரிக்க உள்ளோம். ஆனால் இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் குடியரசின் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் இது பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கும் வரை, நாங்கள் வேறு கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

பைசி எழுப்பியுள்ள கொடுமைகளானது அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து இயங்கும் ஆப்கானியர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

முதலாளித்துவச் செய்தி ஊடகமானது அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தான் பற்றிய உண்மைகளை மறைக்கிறது என்ற திரையைக் ஆப்கானிய NSC அறிக்கையானது சுருக்கமாகக் கிழிக்கிறது. கர்சாய் ஆட்சி ஒப்புக் கொள்வது போல், அமெரிக்க மற்றும் நேட்டோப் படைகள் சித்திரவதை மற்றும் கொலைகளை பயன்படுத்தி ஆப்கானியக் குடிமக்களை அச்சறுத்துகின்றன; மக்களோ ஆக்கிரமிப்புப் படைகளை வெறுப்புடன் நோக்குகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர், ஒரு மிருகத்தன ஏகாதிபத்திய கொள்ளைப் போர் ஆகும். செப்டம்பர் 11, 2001ல் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின், அமெரிக்கா அந்நாட்டை ஆக்கிரமித்து அல் கெய்டா மீது முழு உலகளாவிய போரை நடத்த வேண்டும் என்ற இழிந்த அறிவிப்பின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு உந்துதல் கொடுக்கும் ஏகாதிபத்திய நலன்களாக இருப்பது, மத்திய ஆசியாவில் இராணுவக் காலடியை பதித்து, ஆப்கானின் 1 டிரில்லியன் பெறுமதியளவிலான தாதுப் பொருட் செல்வத்தைக் கட்டுப்படுத்தி கைப்பற்றும் முயற்சியானது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின், “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது உலகெங்கிலும் அமெரிக்க, நேட்டோப் போர்களை பெரும் விரிவாக்கம் செய்வதற்கான ஒரு போலிக் காரணம் என்ற பொய் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. லிபியாவிலும், சிரியாவிலும் அல் கெய்டா பிரிவுகளை பினாமிகளாக வாஷிங்டன் பயன்படுத்தியது: இதில் மிக முக்கியமான அல் நுஸ்ரா முன்னணி சிரியாவில் உள்ளது; அதே நேரத்தில் மாலி, நைஜர், மற்றும் பிற நாடுகளின் மீது அல் கெய்டாவுடன் போரிட படையெடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

12 ஆண்டு ஆக்கிரமிப்புக் காலம் முழுவதும், அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளன அதாவது CIA விசாரணையின் கீழ் Qala-i-Janghi  கோட்டையில் போரின் ஆரம்பத்தில் எழுச்சி செய்த போர்க் கைதிகள் ஏராளமானவர்களை கூட்டமாக கொல்லப்பட்டதிலிருந்து, வாடிக்கையாக பக்ரம் விமானத் தளத்தில் நடத்தும் சித்திரவதை வரை; அத்தோடு தொடர்ச்சியான வான் வழித் தாக்குதல்களிலிருந்து ஆப்கானிய மக்கள் மீது மற்றய வகைதொகையற்ற வடிவில் போர்முறைகளைக் கையாள்வது வரை.

ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் வான் தாக்குதல்கள் பயன்படுத்தப்படுவதும் இப்பொழுது இதில் அடங்கும்; இவைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் போருக்கு வெகுஜன எதிர்ப்பு விரிவடைந்திருந்தும் தொடர்கிறது. இரகசியமற்ற அமெரிக்க இராணுவப் புள்ளிவிபரங்களின்படி, 2009க்கும் நவம்பர் 2012க்கும் இடையே அமெரிக்க இராணுவம் கிட்டத்தட்ட 1,160 டிரோன் தாக்குதல்களை ஆப்கானிஸ்தானில் மட்டும் நடத்தியுள்ளது; ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் இவற்றினால் கொல்லப்பட்டனர். தரைப்படை நடவடிக்கைகளைப்போல் அதனுடைய ஆளுள்ள விமானத் தாக்குதல்கள் மூலமும் அமெரிக்க அரசாங்கம் இத்தாக்குதல்களில் கொல்லப்படும் ஆப்கானியர்களின் எண்ணிக்கையை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.

ஆனால் இப்பொழுது எழுந்துள்ள பிரச்சினைகள், 2014ல் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறும்போது எழும் விளைவுகளை கர்சாய் ஆட்சி கவனத்தில் எடுக்கிறது. ஆப்கானிய மக்களால் வெறுக்கப்படும் ஆப்கானிஸ்தானிலுள்ள 100,000 துருப்புக்கள் கொடுக்கும் பாதுகாப்பைத்தான் அது நம்பியுள்ளது. இப்பொழுது அது நேட்டோ படைகளின் அளவில் கணிசமான குறைப்பு ஏற்பட்டால் எந்த அளவிற்குத் தான் தப்ப முடியும் என்று கவலையுடன் தன்னையே கேட்டுக் கொள்கிறது.

ஆப்கானிஸ்தானில் மிகவும் வெறுக்கப்படும் அமெரிக்கக் கொள்கைகள் சிலவற்றைக் குறைகூற அது முற்பட்டுள்ளது; இதில் வாடிக்கையான வான் தாக்குதல்கள் மற்றும் குடிமக்களின் நட்பு படைகள் போல் காட்டிக் கொள்கின்ற சிறப்புப் படைகளால் குடிமக்கள் வீடுகளில் இரவு நேரத் தாக்குதல்கள் ஆகியவைகளாகும். கடந்த வாரம், ஒரு நேட்டோ வான் தாக்குதலில் ஒன்பது குடிமக்களைக் கொன்றதை அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளுடன் அவருடைய உறவைக் காயப்படுத்தியது என்று கர்சாய் கண்டித்தார்.

அமெரிக்க சிறப்புப் படைகளின் தாக்குதல், விமானத் தாக்குதல்கள் என ஆப்கானிஸ்தானில் நடத்தும் இரத்தம் சிந்தும் சான்றின் அம்பலமானது நைஜரில் படைகளையும் டிரோன்களையும் வாஷிங்டன் நிலைகொள்ளச் செய்திருப்பதின் குற்றத்தன்மையை உயர்த்திக்காட்டுகிறது. அல் கெய்டாவோடு போராடுவது என்னும் காரணத்தைக் கொண்டு வெள்ளியன்று அது அறிவிக்கப்பட்டது. நைஜர் ஒரு மூலோபாய அமைவிடத்தில் அமைந்துள்ள ஒரு நாடு; அங்கு பெரும் நைஜீரிய எண்ணெய் தொழிற்துறைக்கான எண்ணெய் குழாய் பாதைகள் அருகில் உள்ளன; அதைத்தவிர இது உலகின் மிகப் பெரிய சில யுரேனியச் சுரங்கங்களுக்கு தாயகம் ஆகும். கடந்த மாதம் பிரான்ஸ் அதன் அண்டை நாடான மாலியை அமெரிக்க ஆதரவுடன் படையெடுத்தது.

ஆப்கானிஸ்தானில் செய்வதைப் போலவே, இப்படைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டை எதிர்க்கும் ஆபிரிக்க குடிமக்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் படுகொலை செய்தல் என்பதை விரைவில் தொடங்கும்.