சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Currency wars to intensify in 2013

2013ல் நாணயப் போர்கள் தீவிரமடையும்

Nick Beams
28 December 2012
use this version to print | Send feedback

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளிடையே அதிகரிக்கும் நாணயப் போர், வரும் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு இம்மாதம் முன்னதாக அதன் “நாணயப்புழக்கத்தை அதிகரிக்கும்” திட்டம் என அழைக்கப்படுவது தீவிரப்படுத்தப்படும் என்ற முடிவைத் தொடர்ந்து கணிசமாகச் தீவிரமடையும்.

புதிய ஆரம்ப முயற்சியின் கீழ் மத்திய வங்கிக் கூட்டமைப்பு நிதியச் சொத்துக்களில் தன் பங்கான அதன் தற்போதைய தரமான 2.9 டிரில்லியன் டாலர் என்பதை 2014 முடிவிற்குள் கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர் என்று விரிவாக்கும். இது அடைமான பின்னணியுடைய பத்திரங்கள் மற்றும் கருவூலப் பத்திரங்களைத் தொடர்ந்து வாங்குவதின் மூலம் நடைபெறும்.

இந்த நடவடிக்கைளின் விளைவு அமெரிக்க டாலர் மீது இன்னும் கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்கும் வகையில் இருக்கும். இது தவிர்க்க முடியாமல் மற்ற நாடுகளையும் தங்கள் நாணயங்களின் மதிப்பைக் குறைக்கத் தூண்டும். இதனாலேயே அவை சர்வதேச சந்தைகளில் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும். இந்நிலை ஒரு வெளிப்படையான நாணயப் போரைக் கொண்டுவரும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

இத்தகைய மோதலின் அடையாளங்கள் ஜப்பானில் புதிதாக வந்துள்ள பிரதம மந்திரி ஷின்சோ அபே Bank of Japan “வரம்பில்லாத” எளிதான நிதியக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும், அதையொட்டி பணவீக்கம் தோற்றுவிக்கப்பட்டு, பொருளாதாரம் தற்போதைய பகுதி நிரந்தர மந்தநிலையில் இருந்து வெளிவரும் என்று கோரிய நிலையில் ஏற்கனவே காணப்படுகிறது. இந்த பகுதி மந்தநிலை ஜப்பானை கடந்த 20 ஆண்டுகளில் கணிசமான காலத்தில் வாட்டியுள்ளது.

உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஒரு ஏற்றம் கொடுக்கும் என்ற நம்பிக்கையைத் தவிர, அபேயின் கோரிக்கைக்குப் பின் உள்ள முக்கிய உந்துதல் ஜப்பானிய யென்னின் மதிப்பைக் கட்டாயமாகக் குறைப்பது என்ற விருப்பமும் உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஒப்புமையில் அதிக மதிப்பைப் பெற்றுள்ள யென் ஜப்பானுடைய பெருநிறுவனங்களுக்கு, குறிப்பாக மின்னியல்கருவித் தொழிற்துறைக்கு கடந்த காலத்தில் கணிசமான வணிக இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஜப்பானைத் தவிர, பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளும் தொடர்ந்த தேக்க நிலையை முகம்கொடுக்கும் வகையில் தங்கள் “பணப்புழக்கத்தை அதிகரிக்கும்” வழிவகைகளை தொடர்கின்றன.

தன்னுடைய திட்டத்தை தீவிரப்படுத்தியதற்கு மத்திய வங்கிக் கூட்டமைப்பு கொடுக்கும் உத்தியோகபூர்வ நியாயப்படுத்துதல் அமெரிக்க பொருளாதாரத்தின் தொடர்ந்த நலிவான தன்மையும் உயர் வேலையின்மை விகிதங்களும் ஆகும். ஆனால் உண்மையான செயற்பட்டியலுக்கு இது ஒரு திரைமறைப்பாகும். உண்மை நோக்கம் வங்கிகளுக்கும் நிதிய நிறுவனங்களுக்கும் அவற்றின் நிதியச் சந்தைகள் செயற்பாட்டிற்காக மிகவும் குறைந்த எளிதான வட்டியில் நிதியை வழங்குதல் ஆகும். இதனால் அவை உண்மைப் பொருளாதாரத்தில் தொடர்ந்த தேக்கம் இருந்தாலும் இலாபங்களைத் தொடர்ந்து பெறமுடியும்.

ஆனால் இந்த நடவடிக்கைகளில் இருந்து நிரம்பி வழியும் விளைவுகள் (spillover effects ) என அழைக்கப்படுபவை உலகப் பொருளாதாரம் முழுவதையுமே உறுதிகுலைக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. ஏனெனில் மற்ற முக்கிய சக்திகளும் இவற்றின் விளைவுகளை எதிர்கொள்ள நடவடிக்கைகளை எடுக்கும்.

மத்திய வங்கிக் கூட்டமைப்பின் சமீபத்திய அறிவிப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு நியூயோர்க் பொருளாதாரக் குழுவிற்கு ஆற்றிய உரை ஒன்றில் ஓய்வு பெறும் Bank of England இன் ஆளுனர் மேர்வின் கிங் பெருகிவரும் உலகப் பொருளாதார அழுத்தங்கள் பற்றிச் சுட்டிக் காட்டினார். ஏப்ரல் 2009ல் லண்டன் நகரில் G20 உச்சிமாநாட்டிற்குப் பின், ஊக்க நடவடிக்கைகளை தொடருதல் என்று முடிவெடுத்த பின், பலபின்னோக்கிச் சென்றுவிட்டன”, உலகப் பொருளாதாரத்தை மீண்டும் எப்படிச் சமன்படுத்துவது என்பது குறித்த உடன்பாடும் இல்லை.

அடுத்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகக் கூடும். “2013 ஒரு சவால்மிக்க ஆண்டாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், உண்மையில் நாம் பல நாடுகள் தங்கள் பரிமாற்ற விகிதங்களைக் குறைக்க முயல்வதைக் காணலாம்.” என்றார் கிங். “இது கவலையை அளிக்கிறது. எத்தகைய வகையில் மற்ற நாடுகள் விளைவை எதிர்கொள்ளும்? என்ன ஏற்படும்? உள்நாட்டு நோக்கங்களுக்காக நாடுகள் தொடரும் கொள்கைகள் இவ்அழுத்தங்களைக் கூட்டாக அதிகரிக்கும்.”

செப்டம்பர் 2008ல் நிதிய நெருக்கடி வெடித்தபின் முக்கிய சக்திகள் கூடியபோது, அனைத்தும் 1930களின் தவறுகள் மீண்டும் வரக்கூடாது என்ற உறுதியைக் கொடுத்தன. அந்த நேரத்தில் கடுமையான காப்புவரித் தடைகள் தோற்றுவிக்கப்பட்டன. ஒவ்வொரு பெரிய நாடும் “உங்கள் அண்டை நாட்டை பிச்சைக்கார நாடாக்குக” என்ற கொள்கையைத் தொடர்ந்தது. இது உலகச் சந்தைகளின் சுருக்கத்தை விரைவுபடுத்தியது அக்காலத்தின் படிப்பினைகள் பின்னர் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டதாக அவை வலியுறுத்தின. ஆனால் உலகின் முக்கிய மத்திய வங்கிகள் வேறு ஒரு வகையில் பெருமந்த நிலைக்கால மோதல்களின் விளைவுகளை கொண்டுவரும் அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன.

சிறு நாடுகள், குறிப்பாக ஏற்றுமதிச் சந்தைகளை நம்பியிருப்பவை, ஏற்கனவே அவற்றின் நாணயங்களின் மதிப்பு உயர்வதை ஒட்டிப் பெரும் பாதிப்பைக் காண்கின்றன. மத்திய வங்கித் தகவல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரேசில், சிலி, கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை தங்கள் நாணயங்களின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் $135 பில்லியனை சர்வதேசச் சந்தைகளில் செலவழித்துள்ளன என்று கூறுகின்றன.

அந்நாடுகளின் மீது அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு மற்றும் பிற முக்கிய மத்திய வங்கிகள் தொடரும் கொள்கைகளின் தாக்கம் கௌரவமான வார்த்தைப் பிரயோகங்களால் குறிப்பிடப்பட்டாலும், ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் ஆளுனர் கிளென் ஸ்டீவன்ஸ் தாய்லாந்தில் இம்மாதம் முன்னதாக நிகழ்த்திய உரையில் அத்தாக்கம் எடுத்துக்காட்டப்படடுள்ளது. அவர் “அமைதியின்மையின் தரம்” உயர்ந்துள்ளது என்று எச்சரித்தார்.

“கொள்கை இயற்றுபவர்கள் தங்கள் மரபுசாராத கொள்கைகள்படி ஒரு விரிவாக்க விளைவு இருப்பதாக கூறிக்கொள்ள உரிமையிருந்தாலும்”, “அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றில் மீட்பு மிகவும் குறைவாக இருப்பது மற்றவர்களை முக்கிய நாடுகள் தங்கள் வலுவற்ற தன்மையை ஏற்றுமதி செய்வதைத்தான் அதிகம் நம்புகின்றனவோ என நினைக்க வைக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன். முந்தைய மீட்புகளை விட இதில் நலிவுத் தன்மைகள் அதிகமாக உள்ளன.” பொதுவாக மத்திய வங்கியாளர்கள் பயன்படுத்தும் எச்சரிக்கை நிறைந்த வார்த்தை பிரயோகங்களில், இது உத்தியோகபூர்வ நியாயப்படுத்துதல்களை நேரடியான சவாலுக்கு ட்படுத்துவதற்கு ஒப்பாகும்.

 அக்டோபர் 1971ல் ஜனாதிபதி நிக்சன் தங்கத்திற்குக் அமெரிக்க டாலரை மாற்றாக கொடுப்பதில் இருந்து அகற்றும் முடிவிற்குப் பின், அதனால் போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவ விரிவாக்கத்தின் அஸ்திவாரத்தை தோற்றுவித்த 1944 பிரெட்டன் வூட்ஸ் உடன்பாடு சிதைக்கப்பட்டபின், அமெரிக்க நிதி மந்திரி ஜோன் கோனலி ஐரோப்பிய நிதிமந்திரிகளிடம் “டாலர் எங்கள் நாணயம்; ஆனால் அது உங்கள் பிரச்சினை.”கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 ஆண்டுகளுக்குப் பின், இன்னமும் அது உலகப் பொருளாதாரத்தின் இருப்பு நாணயமாக உள்ள டாலரின் மதிப்பைக் குறைக்கும் மத்திய வங்கிக் கூட்டமைப்பின் கொள்கை பிரெட்டன் வூட்ஸ் உடன்பாடு முடிவிற்கு வந்தபோது ஏற்பட்ட நீண்டகால விளைவுகளுக்குச் சற்றும் குறையாத விளைவுகளைக் கொடுக்கும் என்ற அச்சுறுத்தல்தான் உள்ளது.

இன்று உலகப் பொருளாதாரம் அப்பொழுது இருந்ததைவிட மிக அதிகமாக பின்னிப்பிணைந்துள்ளது. நிதிய பங்குப்பத்திரங்களும் பிற சிக்கல் வாய்ந்த நிதியக் கருவிகளும் அப்பொழுது கிடையாது. அல்லது அப்பொழுதுதான் குறைந்த அளவில் தோன்றத் தொடங்கின. இப்பொழுது அவை உலக நிதிய அமைப்புமுறையில் முக்கியக் கூறுபாடுகளாக உள்ளன.

அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு மற்றும் பிற முக்கிய மத்திய வங்கிகளின் கொள்கைகள் பற்றிய உத்தியோகபூர்வ நியாயப்படுத்துதல் அவை 2008 நிதிய நெருக்கடியின் தொடரும் விளைவுகளை எதிர்கொள்ளத் தேவையாக உள்ளதாலாகும். உண்மையில் இவை பெரும் சக்திகளுக்கு இடையே உள்ள மோதல்களை ஆழப்படுத்துவதுடன், இன்னும் பெரிய நிதியப் பேரழிவுகள் வருவதற்கான சூழ்நிலையைத்தான் தோற்றுவிக்கின்றன.