சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Libor swindle

லைபர் மோசடி

Andre Damon
22 December 2012
use this version to print | Send feedback

நிதியக் கட்டுப்பாடாளர்கள் வீரகாவியம் என வரையறை செய்யும் ஒரு பெரிய சர்வதேச வங்கியுடனான சமீபத்திய ஊடல்மிக்க உடன்பாடு, உலக நிதிய முறை என்றழைக்கப்படுவதன் ஊழலின் ஊற்றிடத்தின் மூடியை திறந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய வங்கியான UBS இந்த வாரம் லண்டன் வங்கிகளுக்கிடையிலான வட்டிவிகிதத்தில் (Libor-லைபர்) இல் வாடிக்கையாக மோசடி செய்வதை ஒப்புக் கொண்டுள்ளது. லைபர் உலக வட்டி விகிதத்தில் முக்கிய அடையாளக் குறிப்பு ஆகும். இதனுடன் நிதிய ஒப்பந்தங்களில் நூற்றுக் கணக்கான டிரில்லியன்கள் பிணைந்துள்ளன. அவ்வங்கி அவ்வாறு செய்ததற்கு காரணம் அதன் இலாபங்களை அதிகரிக்கும் அதன் நிதியப் பிரச்சினைகளை மறைப்பதற்கும் ஆகும்.

UBS உடைய செயல்கள் அடைமானங்கள், கடன் அட்டைகள், மாணவர் கடன்கள், கார் வாங்குவதற்கான கடன்கள் ஆகியவற்றிற்கு வட்டி கொடுக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை மோசடி செய்வதற்கு ஒப்பாகும். அதைத்தவிர நிறுவன முதலீட்டாளர்களான ஓய்வூதிய நிதிகள், மாநில, மத்திய அரசாங்கங்கள் மற்றும் கணக்கிலடங்காத மில்லியன் கணக்கான ஓய்வூதியம் பெறுவோர் ஆகிய பிரிவுகளும், நிலையான முதலீட்டில் இருந்து வரும் வருமானத்தை நம்பியுள்ளவர்களும் மோசடிக்கு உட்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளையை விவரிப்பதற்கு பெரும் திருட்டு என்ற சொல்கூட போதாது.

கடந்த ஜூன் மாதம் Barclays வங்கியுடன் இவ்வாறான உடன்பாட்டைக் கண்டபின் ஒரு சர்வதேச அளவிலான லைபர் மோசடி நடவடிக்கையில் ஒரு பகுதியாக இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள இரண்டாம் வங்கி UBS ஆகும். இதனால் தீவிர எதிர்விளைவுகளில் இருந்து முற்றிலும் தப்பி ஒரு நிதானமான அபராதக் கட்டணத்தை அது செலுத்துகிறது. இரண்டு விவகாரங்களிலும் எந்த மூத்த அதிகாரிகளும் குற்றம் சுமத்தப்படாததுடன், வங்கிகளும் எக்குற்றத்தையும் செய்ததற்குப் பொறுப்பை ஏற்க வேண்டியதும் இல்லை.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருக்கும் இன்னும் அரை டஜன் வங்கிகளும், தரகு நிறுவனங்களும் லைபர் மோசடிகள் மற்றும் இதை ஒத்த யூரிபோர், யென் லைபர் (Euribor, Yen Libor) ஆகியவை குறித்த மோசடிகளுக்காக விசாரணைக்கு உட்பட்டுள்ளன. இவற்றுள் ஜே.பி. மோர்கன் சேஸ், சிட்டிக்ரூப் மற்றும் பாங்க் ஆப் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

உலகின் மிகப் பெரிய வங்கிகள் ஈடுபட்டுள்ள முடிவில்லா, தொடர்ச்சியான ஊழல்களில் லைபர் மோசடி ஒன்று மட்டும்தான். பலதரப்பட்ட, சில்லறை வகை கணக்கு எழுதுவதில் மோசடிகள், உள்நபர் வணிகக் குற்றங்கள், அடைமான ஆவணங்களை போலியாகத் தயாரித்தல். அடைமான ஆவணப் பத்திரங்கள் ஆதரவு குறித்த மோசடி வெளியீடுகள் என்று நிதியச் சரிவை 2008ல் ஏற்படுத்திய செயல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த அமைப்புக்களுக்குத்தான் பொது நிதிகளில் இருந்து டிரில்லியன் கணக்கில் பிணையெடுப்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன், இன்றும் கூட இவற்றிற்கு கிட்டத்தட்ட வட்டி ஏதும் இல்லாமல் உதவி நிதி வழங்கப்படுகிறது. இதற்குத் துணை நிற்பவை உலகின் மத்திய வங்கிகள் ஆகும். இதனால் தேசிய அரசாங்கங்கள் திவாலாவதை தடுக்கப்படுவதற்கு சமூகநலத் திட்டங்கள் தகர்க்கப்பட வேண்டும் மற்றும் தொழிலாள வர்க்கம் வறிய நிலைக்குத் தள்ளப்பட வேண்டும் என்று கோருவதில் இவைதான் முன்னணியில் உள்ளன.

கடந்த வாரம்தான் பிரித்தானிய தளம் கொண்ட HSBC மெக்சிகன் நாட்டு போதைப்பொருள் கடத்தல் பிரபுக்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை பணச்சலவை செய்ததை ஒப்புக் கொண்டது. மீண்டும் அதிலும் எந்தக் குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை. இந்நடவடிக்கைகளோ மெக்சிகோவின் போதைப் போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மடியக் காரணமாக இருந்தன. மேலும் இவை அண்மையில் இருக்கும் அமெரிக்கா, பிற நாடுகளில் தொழிலாள வர்க்கப் பகுதிகளில் போதைப் பொருட்களை ஏராளாமாகப் புகுத்தின.

UBS லைபர் மோசடி விவகாரத்தில், அமெரிக்க நீதித்துறை வேண்டும் என்றே குற்றச்சாட்டுக்களை UBS க்கு எதிராகச் சுமத்த விரும்பவில்லை. மாறாக அது ஒப்புமையில் ஒரு சிறிய குற்றமான பண மோசடி ஒன்றில் வங்கியின் ஜப்பானிய பிரிவு பங்குபற்றியதற்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட அறிக்கையை  பெற்றுக்கொண்டது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளதுபோல், “நீதித்துறை அதிகாரிகள் சூரிச் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. ஏனெனில் அத்தகைய நடவடிக்கை அதன் ஸ்திரப்பாட்டிற்கு ஆபத்து கொடுக்கும் எனக் கருதினர்.”

இது பெரிய வங்கிகள் என்ன குற்றங்கள் இழைத்தாலும், அவை குற்றச்சாட்டில் இருந்து விலக்கு பெறும் என்பதை ஒப்புக் கொள்ளுவதாகும். நிதிய மாபியா அன்றாடம் ஒட்டுண்ணித்தனத்திலும், சமூக அளவில் அழிவு தரும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவை சட்டத்தை விட உயர்வானதாகக் கருதப்படுகிறது.

அதிகரித்தளவில் பிரபுக்களின் கொள்கைப்படியே சமூகம் வரையறுக்கப்படுகிறது. சாதாரண மனிதர்களுக்கு பொருந்தும் சட்டங்கள் எதுவும் நிதியப் பிரபுத்துவத்திற்கு பொருந்தாது. அமெரிக்காவும் அதேபோல் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் முன்னேற்றம் அடைந்த நாடுகள் அனைத்தும் பெயரளவிற்குத்தான் ஜனநாயக நாடுகள் ஆகும். ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிபிரபுத்துவ ஆட்சியை ( “plutocracy”), “செல்வந்தர்களின் ஆட்சிஎன்று வரையறை செய்துள்ளது. அமெரிக்காவிற்கு இந்த வரையறை பொருந்தும் என்பதை எவரேனும் தீவிரமாக மறுக்க முடியுமா?

UBS உடனான உடன்பாட்டை அறிவிக்கையில், நீதித்துறையின் குற்றப்பிரிவுத் தலைவர் லானி ப்ரூயர் இந்த உடன்பாட்டை வங்கிகளுக்கு ஒரு கடுமையான கண்டனம் என்று சித்தரிக்க முற்பட்டார். “வோல்ஸ்ட்ரீட்டில் தவறான  நடவடிக்கையை நாம் பொறுக்க முடியாது, பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்.” என்று அவர் அறிவித்தார்.

எத்தகைய கேலிக்கூத்து! லைபர் மோசடி வங்கிகளின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்தி உள்ளது என்பது மட்டுமின்றி, உலகம் முழுவதும் அரசாங்கங்கள், நிதியக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதனுடன் கொண்டுள்ள உடந்தை, தொடர்பு இவற்றின் பிணைப்பையும் அப்பட்டமாகக் காட்டியுள்ளது.

வங்கிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் நிறுவனங்களுக்கு இடையே உள்ள முறைகேடான உறவு பற்றி ஒரு சில உதாரணங்களை மேற்கோளிடுவது தகும்:

சுவிஸ் நிதியச் சந்தை மேற்பார்வை அதிகாரத்தில் வங்கி மேற்பார்வைக்குப் பொறுப்பாக இருக்கும் மார்க் பிரான்சன் UBS விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். ஏன்? ஏனெனில் UBS உடைய ஜப்பானியப் பிரிவிற்கு அது லைபர் மோசடி நடத்திய அதே ஆண்டுகளில், இப்பொழுது தவறு என ஒப்புக் கொண்டிருக்கும் அதே செயல்களுக்கு, அந்த வங்கியின் தலைவராக அவர் இருந்தார்.

அமெரிக்க பங்குப்பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற ஆணையத்தின் (SEC) செயலாக்கப் பிரிவின் இயக்குனரான ரோபர்ட் குஸாமி பல பில்லியன் டாலர் கணக்கு மோசடியை  Deutsche Bank நடத்தியது பற்றி SEC  நடத்தும் விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். ஏன்? இந்த SEC பதவிக்கு வருவதற்கு முன் குஸாமி அமெரிக்காவிற்கான Deutsche Bank ஆலோசகராக இருந்தார்.

ஒரு அரச வழக்குத்தொடுனர் என்னும் முறையில் இப்பொழுது பில்லியன் கணக்கான இழப்பை ஏற்படுத்திய விளக்கப்படாத, மறைக்கப்பட்ட ஊக இழப்புக்கள் தொடர்பாக ஜே.பி.மோர்கன் சேஸ் வழக்கை நடாத்தும் ஸ்ரெபான் கட்லர் SEC  யில் முன்னாள் செயலாக்கப்பிரிவின் தலைவராக இருந்தார்.

நியூ யோர்க் மத்திய வங்கியின் தலைவர் என்ற முறையில் டிமோதி கீத்னருக்கு 2007ம் ஆண்டிலேயே லைபர் மோசடி பற்றித் தெரியும். இது சமீபத்திய மாதங்களில் வெளிவந்துள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அப்படியும் அவற்றை நிறுத்த அவர் ஏதும் செய்யவில்லை. ஒபாமா கீத்னரை தன்னுடைய நிதி மந்திரியாக நியமித்தார். அவர் இன்னும் அப்பதவியை தொடர்ந்து வகித்து வருகிறார்.

• Bank of England இன் ஆளுனர் மெர்வின் கிங் மற்றும் அவருடைய உதவியாளர் பௌல் டக்கர் இருவரும் இதேபோல் லைபர் மோசடிச்செயல் பற்றி எச்சரிக்கப்பட்டனர் ஆனால் அவர்கள் வேறுபுறம் திரும்பி, ஏதும் செய்யவில்லை. கடந்த ஜூலை மாதம் ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரைலைபர் விகித நிர்ணயத்தில் நேர்மையற்ற தன்மை உள்ளது பற்றி எங்களுக்குத் தெரியாதுஎன்று பாராளுமன்றக் குழுவில் பொய் கூறியுள்ளார். டக்கர் தொடர்ந்து Bank of England இன் துணை ஆளுனராக இருக்கிறார்.

முன்னாள் வங்கி நிர்வாகிகள் நிறைந்துள்ள வங்கிக் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் வங்கிகளுடைய குற்றச் செயல்களுக்கு வசதிளிக்கின்றனவே ஒழிய அவற்றை நிறுத்த அல்லது தடுக்க முற்படவில்லை.

உலக நிதியப் பிரபுத்துவும் மோசடி, திருட்டு மற்றும் கொள்ளையை எந்த விளைவு பற்றிய அச்சமும் இன்றி செய்யலாம். அது மேலாதிக்கம் செலுத்தும், இலஞ்சம் கொடுக்கும் அரசியல் அமைப்புமுறை தன்னைக் காப்பாற்றும் என்பதை அது அறியும். முதலாளித்துவ நிதிய அமைப்புமுறையின் அன்றாடச் செயல்கள் மக்களுக்கு எதிரான ஒரு குற்ற சதிச்செயல் என்ற வடிவமைப்பை எடுத்துள்ளன.

இந்த அமைப்புமுறை  சீர்திருத்தத்ப்பட முடியாததாகும். இதன் அதிகரித்துள்ள குற்றத்தன்மைஒரு சில மோசமான நபர்களால் அல்ல”; அமைப்புமுறையிலேயே சட்டவிரோதம், ஊழல் ஆகியவை இயல்பாக இருக்கின்றன.

இந்த பல மில்லியன் உடைய நிதியாளர்கள், பொருளாதாரப் பெரும்புள்ளிகள் என்று பாராட்டவேண்டியவர்களல்ல. மாறாக இவர்கள் சிறைக்கு அடைக்கப்படவேண்டியவர்கள் ஆவர்இந்த நிலைமை மாற்றுவதற்கு ஒரே தீர்வு ஒரு புரட்சிகரத் தீர்வுதான். தொழிலாள வர்க்கம் தன் மகத்தான சக்தியைத் திரட்டி, வங்கிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்துகொண்டு அவற்றைப் பொது உடைமையின் கீழ் மக்களுடைய ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ், கொண்டுவரவேண்டும்.