சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

As 2013 begins: A mood of anxiety in ruling circles

2013 ஆரம்பத்தில்”: ஆளும் வட்டங்களுக்குள் பயவுணர்வு பரவுகின்றது

By Nick Beams
3 January 2013
use this version to print | Send feedback

புத்தாண்டு ஆரம்பிக்கையில், உலகப் பொருளாதார நிலை குறித்தும், பூகோள-அரசியல் அழுத்தங்கள் மற்றும் பெரும் சமூகப் போராட்டங்களின் சாத்தியம் குறித்தும் ஆளும் வட்டங்களுக்குள் பயவுணர்வு பரவுகின்றது. பிரித்தானிய ஏடான க்கானமிஸ்ட் எழுதியுள்ளதுபோல், “ஈரானுடன் அதன் அணுசக்தித் திட்டங்கள் பற்றிய மோதல் என்பதில் இருந்து, யூரோப் பகுதியில் பேரழிவு தரக்கூடிய உடைவு வரை, உலகை 2013ல் தாக்கக்கூடிய பேரழிவுகள் பலவற்றைப் பற்றி நினைப்பது கடினம் அல்ல.”

உலக முதலாளித்துவ பொருளாதார நிலைகுறித்த கவலைதான் முக்கியமானதாகும். நிதிய நெருக்கடியின் முதல் அடையாளங்கள் தோன்றி கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பின், 2008 சரிவிற்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலான பின், உலகப் பொருளாதாரத்தில்மீட்புஎன்பது முன்னைக்காட்டிலும் தொலைத்தூரத்தில்தான் உள்ளது.

மீண்டும் க்கானமிஸ்ட்டின் சொற்களில்: “உலக நிதிய நெருக்கடி முதலில் வெடித்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் கீழ்நோக்குச் சரிவு நம்மை விட்டுப் பின்னே சென்றுள்ளது மற்றும் பொருளாதாரம் நல்ல முறையில் இயங்குகிறது என்று நீங்கள் நினைக்கக்கூடும். மாறாக, உலகின் பெரும் பகுதிகள் நீண்டகால மந்தநிலையுடன் ஜப்பானிய முறையிலான பரிசோதனையை மேற்கொண்டுள்ளன.”

யூரோப் பகுதிப் பொருளாதாரம் சுருக்கம் அடைந்துள்ளது. ஐக்கிய இராஜ்ஜியம்  இரட்டைச் சரிவு மந்தநிலையை அனுபவிப்பதுடன், 100 ஆண்டுகளுக்கு பின்னர்  அதன் மோசமானமீட்பிற்குப்பின்மீண்டும் சரியக்கூடும். ஜப்பான் கடந்த 15 காலாண்டுகளில் ஏழு காலாண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியைத்தான் கண்டுள்ளது. நெருக்கடியின் அளவை நமக்குக் கிட்டத்தட்ட தேக்கம் அடைந்துள்ள அமெரிக்கா காட்டுகின்றது. அங்கு வளர்ச்சி 2%ம்தான். இது பெரிய பொருளாதாரங்களிடையே ஒருஒளிவீசும் பகுதி என்பதுபோல் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் வளர்ச்சிக்கு ஒரு புதிய அரங்கை வழங்கும் என்று கருதப்பட்ட சீனா, இந்தியா இன்னும் பிறஎழுச்சி பெறும் சந்தைகள்”, கடந்த 12 மாதங்களில் பின்னடைவைக் கண்டுள்ளன.

உலகப் பொருளாதாரம் மற்றும் 2013க்கான சாத்தியங்கள் குறித்து கருத்து தெரிவித்த பைனான்சியல் டைம்ஸ் வளர்ச்சிக்கான போட்டியில் இரண்டு உயர்மட்ட இடங்கள், லிபியா மற்றும் தெற்கு சூடானால் நிரப்பப்படலாம் என்று கூறுகிறது. மூலப்பொருள்கள் அதிகம் உடைய மங்கோலியா மூன்றாம் இடத்திற்கு வரக்கூடும்.

தங்கள் சிந்தனையை உலக சோகத்தில் இருந்துவாசகர்கள் அகற்ற விரும்பினால், அவர்கள் மாக்கோவில் சூதாடு மையம் எதிர்பார்க்கும் 14% வளர்ச்சியை நினைக்கலாம் என்று க்கானமிஸ்ட் கூறுகிறது. இது விந்தையான கருத்து என்ற நோக்கத்தைக் கொண்டாலும்கூட, உலக முதலாளித்துவத்தில் ஊக வணிகம் கொண்டுள்ள மையப் பங்கைக் காணும்போது முற்றிலும் பொருத்தமானதே ஆகும்.

கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் 60% இற்கு மேலானவற்றைக் கணக்கில் கொண்ட அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் உள்ள மத்திய வங்கிகள், ஒன்றோடொன்று போட்டியிட்டுபணப்புழக்கத்தை அதிகரிக்கும் வழிவகையில்ஈடுபட்டன. இது உண்மையில் முடிவில்லாத பண விநியோகத்திற்கு அச்சடித்தல் என்னும் சூதாட்டம்தான். இது ஒரு நிதிய நெருக்டியை சற்றுத்தள்ளி வைக்கக் கூடும்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை மீட்பதற்குப் பதிலாக இன்னும் ஆழ்ந்த நிதிய நெருக்கடிகளுக்கான அடித்தளத்தைத்தான் கொடுத்துள்ளன என்பதுடன் உலக நாணயம் மற்றும் வணிக மோதல்களை தீவிரப்படுத்தும். அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பின் கொள்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் இவ்விதத்தில் கணிசமானவை ஆகும். உலக முதலாளித்துவத்தின் வரலாற்றில் இதற்கு முன் உலக நிதிய அமைப்புமுறைக்கு அடித்தளத்தை கொடுக்கும் இருப்பு நாணயத்தின் மத்திய வங்கி அந்த நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதே கிடையாது.

உலகப் பொருளாதாரத்தின் ழமடையும் பிரச்சினைகள் பூகோள-அரசியல் அழுத்தங்களை அதிகரிக்கும். பல வெடிப்புத் தன்மை உடைய இடங்கள் பெருகிவிட்டன. இவை பெரும் அரசியல், ஏன் இராணுவ மோதல்களைக் கூடத் தொடக்கிவிட முடியும்.

கடந்த ஆண்டு கிழக்கு ஆசியப் பிராந்தியம் முழுவதும் ஒபாமா நிர்வாகம்ஆசியாவில் முன்னிலைஎன்று கொள்கையின் மையப்படுத்திய அதன் சீன எதிர்ப்பு பிரச்சாரம் அழுத்தங்களை அதிகரித்ததை கண்டது. அமெரிக்காவினால் ஊக்கம் பெற்ற பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் இரண்டும் சீனாவிற்கு எதிராக தென்சீனக் கடலில் தங்கள் உரிமைகளை வலியுறுத்துகின்றன.

ஜப்பான் மற்றும் சீனா இரண்டு நாடுகளின் அரசியல் தலைமைகளும் மோசமான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ளும் வகையில், சமூக அமைதியின்மையை திசை திருப்பும் முயற்சியாக தேசியவாதத்தை கையாள்கின்றன. இந்த அழுத்தங்களின் குவிப்பு இப்பொழுது சேகாகு/டயோயு தீவுக்கூட்டங்கள் ஆகும். இரு நாடுகளும் இவற்றின் மீது உரிமை கொண்டாடுகின்றன. இதுவரை நேரடி இராணுவ மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளபோதிலும், குறிப்பாக ஜப்பானின் இராணுவப் படைகள்மீது தாக்குதல் நடந்தால் அதை ஆதரிக்கும் என்பதைத் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ள நிலையில் எந்த மோதலும் விரைவில் விரிவாக்கம் அடையும் சாத்தியத்தை கொண்டுள்ளது.

 வரலாற்று வெறுப்புக்கள்என்னும் பயங்கரத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் பைனான்சில் டைம்ஸ் சமீபத்தில்வடகிழக்கு ஆசியாவில் இத்தகைய அச்சுறுத்தல் பல ஆண்டுகளாக இருந்ததில்லைஎன்று எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய ஆதரவுடைய தாக்குதல் ஒன்று சிரியா மீது நடத்தப்படுகிறது. இது பிராந்தியம் முழுவதும் ழுத்தங்களை அதிகரிக்கும் என்பதுடன் உலகளாவிய விளைவுகளையும் கொடுக்கும். ஈரான் மீது நேரடித் தாக்குதல் திட்டங்களை இது துரிதப்படுத்தும். அது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவினால் அல்லது இரண்டுமே இணைந்து நடத்தப்படலாம்.

அதே நேரத்தில் ஆபிரிக்காவில் புதிய சலுகைகளுக்குப் பெரும் போட்டி உள்து. முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் கண்டத்தின் இருப்புக்களைத் தங்கள் மேலாதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்கும் மற்றும் சீனாவின் பெருகும் மூலோபாய செல்வாக்கிற்கு எதிராக செயல்படவும் முனைகின்றன.

எவ்வாறாயினும் வரலாறு வ்வாறே மீண்டும் நிகழ்வதில்லை. ஆனால் சில எதிரொலிப்புக்கள் இருக்கின்றன. தற்போதைய காலகட்டம் அதிகரித்தளவில் ஒரு நூற்றாண்டிற்கு முன் இருந்த நிலையை ஒத்துள்ளது. அப்பொழுது உலகப் பொருளதாரத்தில் பெரும் சரிவு, பெரும் சக்திகளுடைய பெரிய போட்டிகளுடன் இணைந்து 1914ல் முதல் உலகப் போர் வெடிக்க காரணமாயிற்று.

2013ம் ஆண்டு ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் நிலையின் மீது பெருகிய தாக்குதல்களின் விளைவாக பெரும் சமூக, வர்க்கப் போராட்டங்களையும் முன்கொண்டுவரும்.

பொருளாதார நிலைமுறிவைத் தீர்ப்பதற்கு ஆளும் வர்க்கங்களிடையே எவ்விதமான கொள்கைகளும் கிடையாது. ஆனால் சிறிதும் இரக்கமின்றி செயல்படுத்தும் ஓர் உறுதியான மூலோபாயத்தைக் கொண்டுள்ளன. அது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையை தாழ்த்துவதன் மூலம் இலாபமுறையின் இற்றுப்போன இரத்த நாளங்களில் புதிய செல்வங்களை உட்செலுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது.

அமெரிக்காவில்வரவு-செலவுத்திட்ட வெட்டு உடன்பாடு என்றாலும், ஐரோப்பாவில் பொருளாதாரச்சீர்திருத்தம்”, “மறு கட்டமைப்புஎன்றாலும், ஆஸ்திரேலியாவில்ஆசிய நூற்றாண்டின் சவால்களைச் சந்தித்தல்என்று எப்பெயரில் அது செயல்படுத்தப்பட்டாலும் ந்த மூலோபாயம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் கிடைத்த அனைத்துச் சமூக தேட்டங்களையும் அழிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

சமூகப் பேரழிவு மற்றும் அதைத் தொடரும் போரின் ஆபத்துக்கள் என இத்திட்டத்தின் கீழ் வருபவை அரைகுறை நடவடிக்கைள் மூலமோ அல்லது  பொருளாதார உயர்வு நிலைமையைச் சீர்திருத்தும் என்ற தவறான நம்பிக்கைகளாலும் தீர்க்ப்பட முடியாது. இது முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் எதிர்த்து போராடப்படவேண்டும்.