சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The fiscal cliff deal                          

வரவு-செலவுத் திட்ட வெட்டு உடன்பாடு

Barry Grey
3 January 2013
use this version to print | Send feedback

வரி அதிகரிப்புக்களைத் தவிர்த்து, செலவு வெட்டுக்களைக் கொண்டுவரும் காங்கிரஸ் இயற்றியுள்ள “வரவு-செலவுத் திட்ட வெட்டு” என அழைக்கப்படும் சட்டவரைவு இரு கட்சிகள் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகம் வயது முதிர்ந்தவர்கள், இயலாதவர்கள் மற்றும் வறியவர்களுடைய ஓய்வூதிய வருமானம், சுகாதாரக் காப்பு ஆகியவற்றை வழங்கும் சமூகநலத் திட்டங்கள் மீது பெரும் தாக்குதல்களை நடத்துவதற்கு அரங்கு அமைக்கிறது.

செவ்வாயன்று இயற்றப்பட்ட சட்டவரைவில் செய்யப்பட்டுள்ள உயர்மட்ட 0.7 சதவிகிதத்தினருக்கு வருமானவரியில் ஒரு சிறு அதிகரிப்பானது 1930 மற்றும் 1960களின் சமூகசீர்திருத்தங்கள் மீது தாக்குதலுக்கு ஒரு மூடிமறைப்பாக பயன்படுத்தப்படும். ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கும் ஜனநாயக, குடியரசு காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே செய்யப்பட்டுள்ள உடன்பாட்டின் விளைவு இரண்டு மாதங்களுக்கு இராணுவத்தில் 110 பில்லியன் டாலர்கள் வழங்குவது மற்றும் உள்நாட்டு செலவுக் குறைப்புக்களை தாமதப்படுத்துகிறது. இது மார்ச் மாதம் ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. இக்காலக்கெடு மத்திய அரசின் கடன் வரம்பை உயர்த்தும் சட்டபூர்வத் தேவையுடனும் மற்றும் அதேபோல் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கான “தொடர் தீர்மானம்” முடிவடைவதுடனும் இணைந்து நிற்கிறது.

வரவு-செலவுத் திட்ட வெட்டு சட்டவரைவில் வரி பற்றிய பிரச்சினைப் பகுதி தீர்க்கப்பட்ட நிலையில், பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் “கடன் வரம்பு வெட்டினையும்” சமூகநலச் செலவுகளில் பாரிய குறைப்புக்கள் மூலம், மருத்துவப்பாதுகாப்பு, மருத்துவ உதவி Medicare, Medicaid மற்றும் சமூகப் பாதுகாப்பு பிரிவுகளில் கொண்டுவருவதின் மூலம் தீர்க்கப்படலாம் எனக் கோரும்.

போலித்தன நெருக்கடிகளுக்கு செயற்கையான காலக்கெடுக்களை பயன்படுத்துதல், மக்கள் கருத்தை திரிப்பது ஆகியவை அரசியல் விவகாரங்களை நிர்வகிப்பதில் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்கு வழமையான செயல்களாகிவிட்டன. வரவு-செலவுத் திட்ட வெட்டு என்று கூறப்படுவது குறித்த விவாதம் ஆரம்பத்தில் இருந்தே இழிந்த, நாடகபாணியிலான முயற்சியாகத்தான் இருந்தது. இது பொதுமக்களுடைய பிரச்சனைகளை அரசியல் அமைப்புமுறையினால் தீர்க்க முடியாத நிலையையும் மற்றும் அது முற்றிலும் நிதியப் பிரபுத்துவத்திற்கு தாழ்ந்து நிற்பதைத்தான் பிரதிபலிக்கிறது.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பகுதி செய்தி ஊடகத்தால் செயற்கையாக “பொதுக் கருத்தை” தோற்றுவிப்பதில் உள்ளது. உண்மையில் மக்களுடைய அக்கறைகள், கருத்துக்கள் ஆகியவற்றுடன் அதற்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. புதன் கிழமை காலையிலேயே செய்தி நிகழ்ச்சிகள் காங்கிரஸ் “உண்மையான” பற்றாக்குறை குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூகநலத் திட்டங்களில் தீவிரக் குறைப்புக்களை காங்கிரஸ் இயற்றாதது குறித்து பரந்துபட்ட மக்களின் சீற்றத்தை பற்றிக் கூறின. பெரும்பாலான மக்கள் அத்தகைய வெட்டுக்களை எதிர்க்கின்றனர் என்று பலமுறை கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தபோதும் இவ்வாறு கூறப்பட்டது.

சட்டவரைவு, பிரதிநிதிகள் மன்றத்தில் இயற்றப்பட்டபின் ஜனநாயகக் கட்சியின் பாசாங்குத்தனத்திற்கு  செவ்வாயன்று இரவு பேசிய ஒபாமாவின் உரை விளக்கமாக அமைந்தது. “ஜனாதிபதிப் பிரச்சாரத்தின்போது என்னுடைய உறுதிகளின் மையமாக இருந்தது தொழில்புரியும் மத்தியதர அமெரிக்க வகுப்பினரின் இழப்பில் செல்வந்தர்களுக்கு சார்பாக இருந்த வரிமுறையை மாற்றுவது என்பதாகும். இன்று இரவு அதை நாம் செய்துவிட்டோம்.”

இது ஒரு பொய். உண்மையில் இச்சட்டவரைவு ஆண்டிற்கு $450,000 வருமானம் பெறுவோருக்கு ஒரு மிதமான உயர்வைத் தவிர புஷ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட செல்வந்தர்கள் மீதான வரிக் குறைப்புக்களை நிரந்தரமாக்குகிறது. மூலதன ஆதாயங்கள் மீதும் பங்கு இலாபங்கள் மீதும் இது நிரந்தரமாக 20% வரிவிகிதத்தை நிர்ணயிக்கிறது. தனிப்பட்ட நபர்கள் சொத்து வரி செலுத்துவதற்கு வருடாந்தம் $5மில்லியன் ஈட்ட வேண்டும், தம்பதிகள் 10 மில்லியன்கள் ஈட்ட வேண்டும் என்று கூறுகிறது.  பணவீக்கத்தினை ஈடுசெய்தல் என்பதன் மூலம் இக்குறைந்தப்பட்ச தொகையை இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் $15 மில்லியனாக உயர்த்திவிடும்.

இந்த விகிதங்கள் வரலாற்றுத் தரங்களின் படி மிகவும் குறைவாகும். பெரும்பாலானவற்றில் 2001க்கு முன்பு இருந்ததைவிடக் குறைவு ஆகும். இவை செல்வந்தர்களுக்கு ஒரு பெரிய புதையல் போல் ஆகும்.

அதே நேரத்தில், வரவு-செலவுத் திட்ட வெட்டு சட்டவரைவு 77% குடும்பங்களின் வரிகளை உயர்த்துகிறது. சமூகப் பாதுகாப்பிற்கு சம்பளத்தில் இருந்து குறைக்கப்படும் 2% காலாவதியாகிவிடும். $50,000 சராசரியாகச் சம்பாதிக்கும் ஒரு குடும்பம் 2013ல் மத்திய அரசின் வரிகளுக்குக் கூடுதலாக $1,000 கொடுக்க நேரிடும்.

Medicare, சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைத் திட்டங்களைத் தாக்கும் வகையில் ஒபாமா தன்னுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். Medicare “நம் பற்றாக்குறைக்கு மிகப் பெரிய காரணியாக உள்ளது” என்று கூறிய அவர் “அத்திட்டத்தைச் சீர்திருத்த” உறுதிகூறினார். “நாம் அகற்றக்கூடிய அரசாங்கத்தின் தேவையற்ற கூடுதல் செலவுகள்பற்றிப்” பேசுவோம் என்றார்.

காங்கிரசின் வரவு-செலவுத் திட்ட அலுவலகம் வரவு-செலவுத் திட்ட வெட்டு உடன்பாடு புத்தாண்டிற்கு அனுமதிக்கப்பட்ட செலவுக் குறைப்புக்கள் மற்றும் வரிவிதிப்புக்கள் நடைமுறைக்கு வந்திருந்தால் மத்திய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையில் அடுத்த தசாப்தத்திற்குள் $4 டிரில்லியனைச் சேர்க்கும் என மதிப்பிட்டுள்ளதாக ஒரு அறிக்கையை வெளிவிட்டு, இந்த “ஊதாரித்தனத்திற்கு” எவர் பணம் கொடுப்பது? எனக்கேள்வி எழுப்பியுள்ளது.

நியூ யோர்க் டைம்ஸ் வர்ணனையாளர் டேவிட் ப்ரூக்ஸ் திங்களன்று “மற்றொரு நிதிய நடவடிக்கை” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் சிந்தனையை தெளிவாக்குகிறது. அமெரிக்காவில் “நலன்புரி அரசு” என்பது இயலாததாகிவிட்டது என்று ப்ரூக்ஸ் கட்டுரையை ஆரம்பிக்கின்றார்.

இதற்கான குற்றத்தை அவர் ஓய்வூதியம் பெறுவோர்மீது சுமத்துகிறார். அவர்கள் அகந்தையுடன் கௌரவமான மருத்துவப் பாதுகாப்பு எதிர்பார்த்து நீண்டநாள் வாழப் பயன்படுத்துகின்றனர் என்கிறார். “முதியோருக்குச் செய்யவேண்டிய கடமைகள் இளைஞர்கள், தேவையானவர்களுக்கான திட்டத்தில் ஏற்கனவே குறைப்பை ஏற்படுத்துகின்றன” என்று கூறும் அவர், Medicare இல் “ஆழ்ந்த கட்டுமானச் சீர்திருத்தங்கள் தேவை என்றும்”  அதை பெற உரித்துள்ளவர்களை நன்கு பரிசீலிந்நு அது வறியவர்களுக்கான திட்டமாக மாற்றப்பட வேண்டும் என்கிறார்.

“இறுதியில், அமெரிக்க வாக்காளர்களைத்தான் நாம் குறைகூற முடியும்”; “இவர்கள்தான் தங்களுக்கு அதிகம் செலவழித்துக் கொள்ளவும் செலவுகளை அவர்களுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகள் மீது சுமத்த முடிவெடுத்துள்ளனர்.” இந்தப் பேராசையின் முக்கிய உதாரணம், “சராசரி மருத்துவப் பாதுகாப்பு உடைய தம்பதிகள், இவர்கள் இத்திட்டத்திற்குள் செலுத்துவதைவிட ‘$234.000’ பணத்தை செலவழித்துக்கொள்கின்றனர்  என்று அறிவிக்கிறார்.

அமெரிக்க மக்களுக்கு எதிரான இத்தகைய அவதூறு, கடந்த நூற்றாண்டின் சமூகச் சீர்திருத்தங்களை அகற்றி தொழிலாள வர்க்கத்தை வறுமையில் தள்ள முற்படும் அமெரிக்க பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பை வழங்குகின்றது.